
இந்தியாவில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ்.
மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கிய இடத்தை இந்நிறுவனம் பிடித்திருக்கிறது.
ஜூலை2, 1981-ம் ஆணடு நாராயணமூர்த்தியால் இந்நிறுவனம் தொடங்கப் பட்டது.
தற்பொழுது இன்போசிஸ் நிறுவனதலைவர் நாராயணமூர்த்தி பதவிக்காலம் முடிவடைகிறது.

இதனால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பெங்களூரில் இன்போசிஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்நிர்வாக்குழு ஆலோசனை கூட்டத்தில் அடுத்த இன்போசிஸ் தலைவராக கே.வி.காமத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நாராயணமூர்த்தி, கே.வி.காமத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இன்போசிஸ் துணை தலைவராக கிருஷ் கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்போசிஸ் புதிய நிர்வாக குழு ஆகஸ்ட் 21ஆம் தேதி பொறுப்பேற்கிறது.
No comments:
Post a Comment