Sunday, July 3, 2011

கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரி ஏற்றி கொலை.

கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் லாரி ஏற்றி கொலை


கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் மீது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை நடந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி தாலுகாவில் போக்குவரத்துப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார்(52). இவர் இன்று அதிகாலை சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கிரானைட் கற்களை ஏற்றிய லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சைகை காட்டினார். ஆனால் லாரியை ஓட்டிய டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக வந்து சிவக்குமார் மீது மோதினார்.

இதில் சம்பவ இடத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். இப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை சிறிது தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் சிவப்பா என்பதும் ஆந்திரா மாநிலம் குப்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டரின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கொலையுண்ட சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் டாக்டருக்கு படித்து முடித்து விட்டார். இன்னொருவர் டாக்டருக்கு படித்து வருகிறார். 3-வது மகன் அங்குள்ள கல்லூரி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது.



நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தயாரிப்பாளர் செல்வராஜ், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ரூ. 90 லட்சம் மோசடி செய்து விட்டார் என்று சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

இந்தப்புகாரின் அடிப்படையில் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவிடம் கடந்த 2 நாட்களூக்கு முன்பு சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் ரூ. 90 லட்சம் மோசடி செய்த புகாரின் அடிப்படையில் சக்சேனா கைது செய்யப்பட்டார்.

சேலம் உருக்காலையில் ரூ.1 கோடி மோசடி ! சி.பி.ஐ விசாரணை ! முதன்மை மேலாளர் பணிநீக்கம் !

சேலத்துக்கு அடைமொழியாக இருக்கும், சேலம் உருக்காலை, இந்தியாவில் மிக முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும். நம் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படும் பீரங்கி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், சாமானிய மக்கள் பயன்படுத்தும் சில்லறை காசுகள் வரை நாட்டிற்கு மிக முக்கியமான பொருட்கள் அனைத்தும் இந்த சேலம் உருக்காலையில் இருந்து உற்பத்தியாவதுதான்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலகத்தரம் மிகுந்தாது, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பபடும் பிளேடுகள், கத்தி, கத்தரி, ஊசி மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த இடத்துக்கு வைக்கப்படும் பிளேட்டுகள் என பல்வேறு மருத்துவ கருவிகள் இந்த ஆலையின் உருவான தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்படுகிறது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த உருக்காலைக்குள் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை விசாரிக்க சென்னையிலிருந்து மத்திய புலணாய்வு துறை அதிகாரிகள் வந்துள்ளனர், அதை தொடர்ந்து சேலம் உருக்காலையில் முதன்மை மேலாளர் அன்பானந்தன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வருடத்துக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கும் இந்த ஆலையில். வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தணிக்கை நடக்கும்.

கடைசியாக நடந்த தணிக்கையில், உருக்காலைக்கு மூலப்பொருட்கள் வாங்கியதில், ஒரே பொருளுக்கு இரண்டு முறை பணம் கொடுத்து. மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன் மூலம், முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் 99, லட்சத்து 66,ஆயிரத்தி 722,ரூபாய் கையாடல் செய்துள்ளதுள்ளனர் என்பதை தணிக்கையாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்..

இந்த மோசடிகள் குறித்து செயில் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியது தணிக்கைத்துறை. அதன் எதிரொலியாக நிதி மற்றும் பொதுக்கணக்கு மேலாளர் ஈஸ்வரன் சென்னை சி.பி.ஐ அலுவலகத்தில் சேலம் உருக்காலையில் மோசடி நடந்துள்ளது பற்றி புகார் கொடுத்தார்.

புகாரை பதிவு செய்த மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆறு பேர் நேற்று, சேலம் உருக்காலைக்கு வந்துவிசாரணை நடத்தினார்கள்.

அடுத்த கட்டமாக சேலம் உருக்கலையின் நிர்வாகம், மற்றும் பணிப்பிரிவு பொது மேலாளர் மஜூம்தார், அவருக்கு கீழ் பணியாற்றும் முதன்மை மேலாளர் அன்பானந்தனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது பற்றி உருக்காலையின் ஊழல் கண்காணிப்பு பிரிவு அலுவலர்களும் தனியே விசாரணை நடத்துகிறார்கள்.

இடைநீக்கம் செய்யப்பட்ட அன்பானந்தனின் பெயர், பதவி, பணிநீக்கம் செய்யப்பட்ட காரணம் போன்ற விபரங்களை முறையாக உருக்காலையின் அறிவிப்பு பலகையில் அதிகாரிகள் இன்னும் ஒட்டவில்லை.

அதனால், இன்னும் சிலர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார்கள் சேலம் உருக்கலையின் உழியர்கள்.

நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்… திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது!



நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் முன்னணி நடிகருமான கார்த்தியின் திருமணம் இன்று கோவையில் சிறப்பாக நடந்தது.

தமிழர் மரபுப்படி திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருவாசகம் என தமிழ் மறைகள் முழங்க, திரு.பழ.குமரலிங்கம் நடத்தி வைத்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.35 மணிக்கு நடிகர் கார்த்தி மணமகள் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டியதும் அங்கு குவிந்திருந்த முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.






நடிகர்கள் பிரபு, ராஜேஷ், பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சித்தார்த், சரவணன், நடிகைகள் ராதிகா,நக்மா, பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி . உதயகுமார், ஹரி, சங்கர் தயாள், மனோபாலா, பாலா, சுசீந்திரன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி சுசித்ரா, பாரதி வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், டாக்டர். தங்கவேலு, கோவை மணி, திருப்பூர் பாலு ஆகியோர் வாழ்த்தினார்கள்.







மரக்கன்றுகள்…

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தாம்பலத்துடன் வாகை, செண்பகம், துளசி ஆகிய மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.





திருமணத்துக்கு வந்தவர்களை நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, மற்றும் மணமகள் ரஞ்சனியின் பெற்றோர் சின்னசாமி – ஜோதி மீனாட்சி ஆகியோர் வரவேற்றனர்.



முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமக்களை நடிகர் சத்யராஜ், அவரது மகன் நடிகர் சிபி, நடிகை நக்மாவின் தங்கை ரோஷினி, டைரக்டர் சுராஜ், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி, பொதுச் செயலாளர் ஈஸ்வரன், சூலூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ., பனப்பட்டி தினகரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, உள்ளிட்டோர் வாழ்த்தினார்கள்.

நன்றி - www.vanakkamindia.com

823 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம் : இந்த மாதத்தில் 5 வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமை .

823 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்: இந்த மாதத்தில் 5 வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமை


இன்று 3-ம் தேதி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். வரும் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதேபோல, இந்த மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் 5 வெள்ளிக்கிழமைகளும், 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 5 சனிக்கிழமைகளும் வருகின்றன.

இப்படி ஒரே மாதத்தில் 5 வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வருவது அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டுள்ளது. 823 ஆண்டுக்கு ஒருமுறை தான் இது போன்று 5 வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவது நிகழும் என்று ஜோதிடர்களும், எண்கணித ஜோதிடர்களும் தெரிவிக்கின்றனர்.

கணித ரீதியாக காலெண்டரில் இப்படி வருவது அரிதானது என்றாலும், ஜோதிடத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது என்று எண் கணித ஜோதிடரான சஞ்சய் ஜுமானி தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் மக்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் ஆகும். அவர்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும், அதே சமயத்தில் இந்தாண்டு செலவுகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.