Thursday, April 21, 2011

திபெத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஆபரேஷன் நடந்துள்ளது.

திபெத்தில் நடந்துள்ளது    2900 ஆண்டுகளுக்கு முன்பே   மூளை ஆபரேஷன்

திபெத்தில் 1998-ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்தது. அந்த மண்டை ஓட்டை பிளந்து ஆபரேஷன் செய்ததற்கான அடையாளங்கள் இருந்தன. மண்டை ஓட்டை பிளந்து ஆபரேஷன் செய்வது என்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது.

ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தபோது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிந்தது. அதாவது அந்த காலத்திலேயே ஆபரேஷன் நடந்து இருக்கிறது.

இப்போது திபெத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஆபரேஷன் நடந்ததற் கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. பழங்கால புத்தகம் ஒன்றை ஆய்வு செய்தபோது இந்த தகவல் கிடைத்து உள்ளது.

திபெத்தில் உள்ள லசா பல்கலைக்கழக பேராசிரியர் கர்மா டிரின்லி இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். அப்போது மூளை ஆபரேஷன் நடந்ததை இந்தியாவில் இருந்து தசோக்யெல் என்ற டாக்டர் பார்வையிட வந்திருந்ததாகவும் அதில் குறிப்புகள் உள்ளன.

“தெய்வத்திருமகன்” பெயரில் தயாராகும் விக்ரம் படத்தை தடை செய்யவேண்டும்; கருணாநிதியிடம் சிவசேனா கட்சி மனு.

“தெய்வத்திருமகன்” பெயரில் தயாராகும் விக்ரம் படத்தை தடை செய்யவேண்டும்; கருணாநிதியிடம் சிவசேனா கட்சி மனு

தமிழ்மாநில சிவசேனாகட்சி தலைவர் எம்.திரவியபாண்டியன் இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

இரும்பு மனிதர் என்றால் வல்லபாய் பட்டேல். வங்கத்து சிங்கம் என்றால் நேதாஜி, பேரறிஞர் என்றால் அண்ணா, மூதறிஞர் என்றால் ராஜாஜி, புரட்சித்தலைவர் என்றால் எம்.ஜி.ஆர்., கர்மவீரர் என்றால் காமராஜர், சட்டமேதை என்றால் அம்பேத்கார், கலைஞர் என்றால் கருணாநிதி. இப்படி ஒவ்வொரு தலைவர்களுக்கும் அடைமொழி கொடுத்து அழைப்பது மக்களுக்கு விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது.

அப்படித்தான் “தெய்வீகத்திருமகன்” என்றும் “தெய்வத்திருமகன்” என்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மக்கள் நேசத்துடன் அழைத்து வருகிறார்கள். தேவரைக் கடவுளுக்கு இணையாக வணங்கி வருகிறார்கள். தேவர் இறந்தபோது அனைத்து சாதியினரும் துக்கம் மேலிட மொட்டையடித்து கொண்டனர். இன்றைக்கும் அவரது ஜெயந்தியன்று இந்த நிகழ்வைப் பார்க்க முடியும்.

ஒரு மனநலம் குன்றிய கதாபாத்திரமாக படத்தின் கதாநாயகர் சித்திரிக்கப்பட்டு அதற்கு “தெய்வத் திருமகன்” பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம், இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை. இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசியமும், தெய்வீகமும், இரு கண்கள் எனச்சொன்ன பசும்பொன் தேவரை இழிவுபடுத்தும் வகையில் இந்த சினிமாவுக்கு பெயர் சூட்டியிருப்பதை பொறுத்து கொள்ள முடியாது.

“ஒச்சாயி” என்ற படத்தின் பெயரை தமிழ்ப்பெயரா எனக்கேள்வி எழுப்பி, அந்தபடத்துக்கு கேளிக்கை வரி ரத்து செய்ய அதிகாரிகள் மறுத்தார்கள். முதல்-அமைச்சர் தலையிட்டு ஓச்சாயி திரைப்படத்திற்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப் படுத்துகிறோம்.

அரசியலிலும், ஆன்மீகத்திலும் கொடிகட்டிப் பறந்த பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் புகழை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு விக்ரம் நடித்து விரைவில் வெளிவரக்கூடிய “தெய்வத் திருமகன்” திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என தமிழ் மாநில சிவசேனா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளது.


மி‌ன்வெ‌ட்டு 3 ம‌ணி நேரமாக அதிகரிப்பு : தமிழ்நாடு ‌மி‌ன்சார வா‌ரிய‌ம்.

‌மி‌ன்வெ‌ட்டு  3 ம‌ணி நேரமாக அதிகரிப்பு :தமிழ்நாடு ‌மி‌ன்சார வா‌ரிய‌ம்

பல மா‌நில‌த்‌திலு‌ம் ‌மி‌ன்சார‌ம் ப‌ற்றா‌க்குறையாக இரு‌ப்பதா‌ல் போதுமான மி‌ன்சார‌ம் பெ‌ற‌ முடிய‌வி‌ல்லை.

இதனால் தமிழகம் முழுவதும் வீடுகளு‌க்‌கான பக‌ல் நேர ‌மி‌ன்வெ‌ட்டு 2 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இரு‌ந்து 3 ம‌ணி நேரமாக அ‌திக‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக த‌மிழக ‌மி‌ன்சார வா‌ரிய‌ம் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை மாநக‌ரி‌ல் இ‌னி பக‌லி‌ல் ஒரு ம‌ணி நேர‌ம் ‌மி‌ன்வெ‌‌ட்டு செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌‌ன்று‌ம் ‌மி‌ன்சார வா‌‌ரிய‌ம் கூ‌றியு‌ள்ளது.

நாளொ‌ன்று 50 கோடி‌க்கு ‌மி‌ன்சார‌ம் வா‌ங்‌கியு‌ம் ‌நிலைமையை ச‌ரி செ‌ய்ய முடிய‌வி‌ல்லை எ‌ன்று‌ம் ‌மி‌ன்சா‌ர வா‌‌ரிய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கா‌ற்றாலை மூல‌ம் ‌மி‌ன்சா‌ர‌ம் பெற‌ப்படு‌ம்போது ‌நிலைமை ‌‌‌சீரடையு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு ‌‌மி‌ன்சார வா‌ரிய‌ம் கூ‌றியு‌ள்ளது.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான்டேவிட், சிவகங்கையில் பாதிரியாராக உள்ளாரா? உளவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற  ஜான்டேவிட், சிவகங்கையில்  பாதிரியாராக உள்ளாரா?; உளவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஜான்டேவிட்டுக்கு கடலூர் செசன்சு கோர்ட்டு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்தது.

மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைக்கும்படியும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஜான்டேவிட்டை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமறைவாகிவிட்ட ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்று விட்டதாகவும், அங்கு அவர் பாதிரியாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தலைமறைவாக இருக்கும் ஜான்டேவிட் சிவகங்கை மாவட்டத்தில் பதுங்கி இருந்து பாதிரியாராக இருப்பதாக உளவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நேற்று உளவு பிரிவு போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் சல்லடை போட்டு தேடிபார்த்தனர். அவர் எந்த ஊரில் உள்ளார்? எங்கு பாதிரியாராக பணியாற்றி வருகிறார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தமிழக சட்டசபை தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை முறையில் மாற்றம். - முடிவுகள் தாமதமாக வெளியாகும்.

தமிழக சட்டசபை தேர்தல்:   ஓட்டு எண்ணிக்கை   முறையில் மாற்றம்;   முடிவுகள் தாமதமாக வெளியாகும்

தமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந்தேதி நடந்த தேர்தலில் 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 91 மையங்களில் வைத்து எண்ணப்படுகிறது.

ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 22 நாட்கள் உள்ளதால் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும், ஒரு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில்தான் எண்ணப்படும். இதற்காக 234 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஓட்டு எண்ணிக்கையை நெறிப்படுத்துவார்கள்.

ஓட்டு எண்ணிக்கையில் இந்த தடவை புதிய முறை கடைபிடிக்கப்பட உள்ளது. கடந்த தேர்தல்களில் ஓட்டு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக முடிய, முடிய அதன் விபரம் வெளியிடப்பட்டு விடும். இதனால் உடனடியாக முன்னணி நிலவரம் தெரிந்து விடும்.

ஆனால் இந்த தடவை ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கப்படும். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகே, ஓட்டு விபரத்தை வெளியிட முடியும். ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் தலா 14 மேஜை மீது வைத்து எண்ணப்படும்.

ஒவ்வொரு பகுதி மின்னணு எந்திரங்களை 14 மேஜைகளிலும் வைத்து எண்ணுவார்கள். 14 மேஜை ஓட்டுக்களும் எண்ணி முடித்த பிறகே அந்த சுற்று ஓட்டு விபரத்தை பார்வையாளர் வெளியிடுவார். இந்த புதிய நடைமுறையால் ஓட்டு முன்னணி விபரம் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படலாம்.

தேர்தல் பார்வையாளர் ஒப்புதல் கொடுக்காமல் அடுத்த சுற்று ஓட்டுக்களை எண்ண முடியாது என்பதால் மதியத்துக்கு பிறகே தெளிவான நிலை தெரியவரும் என்று கூறப்படுகிறது.

ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு : மக்கள் அதி்ர்ச்சி.


டோக்கியோ, ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப் பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப் பட்டது.

அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் பருவ நிலைக்கு ஏற்றவாறு இடம் பெயரும். அவ்வாறு ஜப்பானில் கதிர்வீச்சுள்ள மீன்கள் வேறு இடத்திற்கு வருகையில் பிடிக்கப்பட்டால் அதன் மூலம் மனிதனுக்கு பரவும். இதனால் கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல் - வீடியோவுடன்.ரஷியாவின் பனி படர்ந்த சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உறை பனிக்குள் ஒரு வேற்று கிரகவாசியின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை 2 பேர் பார்த்ததாகவும் பரவிய செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ இண்டர்நெட்டில் சக்கை போடு போட்டு வருகிறது.

2 அடி உயரமே உள்ள அந்த உடல் பாதி எரிந்து, அழுகிய நிலையில் காணப் படுவதாகவும், அதன் வாய் திறந்தபடி உள்ளதாகவும், அதன் வலது காலை காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் உள்ளதாகவும் இருவரும் கூறியதாக அந்த வீடியோ தெரிவிக்கிறது.

இந்த அயல் கிரகவாசி விபத்தில் இறந்து போய் இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதே இர்குட்ஸ்க் பகுதியில் தான் கடந்த மாதம் வேற்று கிரக விண்கலம் ஒன்று தரையிறங்கியதாகவும் பரபரப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இது உடல் அல்ல. ஏதோ ஒரு ரப்பர் பொம்மை. அதை கொஞ்சம் சிதைத்து பனிக்குள் புதைத்து வைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பீதியைக் கிளப்புகின்றனர் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்க விசா மோசடியின் 'தலைநகர்' ஹைதராபாத் ! - விக்கிலீக்ஸ்.


இந்தியாவில் அமெரிக்க விசா மோசடியில் ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத் தான் தலைமையிடமாக விளங்குவதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

அமெரிக்காவிற்கான போலி விசா தடுப்பு மையம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த மையம் 2009ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் விசா மோசடியில் ஹைதராபாத்துக்கு அடுத்தபடியாக குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளன. போலி ஆவணங்களை தாக்கல் செய்து விசா பெற முயற்சிப்போரின் எண்ணிக்கையில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கிடைத்த இந்த 'அனுபவத்தை' வைத்து உலகம் முழுவதுமே மோசடியாக விசா பெற முயல்வோரைத் தடுப்பதில் அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.

உலகில் மிக 'பிஸியான 'அமெரிக்கத் தூதரகங்களில் இந்தியத் தூதரங்களும் அடக்கம். 2008ம் ஆண்டில் மட்டும் 7.8 லட்சம் விசா விண்ணப்பங்களை இந்தத் தூதரகங்கள் பெற்றன. அதில் 3,083 பேர் மோசடி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பி1, பி2 விசா பெற மோசடி ஆவணங்கள் தருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. போலியான 'எக்ஸ்பீரியன்ஸ்' கடிதங்களைத் தருவது, உறவினர்களின் போலியான பாஸ்போர்ட் நகலைத் தருவது, போலியான நிதி ஆதார ஆவணங்களைத் தருவது, போலி 'அபிடவிட்கள்' தருவது ஆகியவையும் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்காவில் கல்வி பயில விசா பெற வரும் மாணவர்கள் போலியான வங்கி 'ஸ்டேட்மென்ட்களை' தருவதும், போலியான சொத்துப் பத்திரங்களைத் தருவதும் அதிகமாகி வருகிறது.

கொல்கத்தா தூதரகத்தில் இரு புத்த பிட்சுக்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் திருட்டு பாஸ்போர்ட்தைத் தந்து விசா கோரியதும் நடந்தது. இன்னொரு புத்த பிட்சு தான் சாராத ஒரு புத்த மத மையத்தின் போலி கடிதத்தை உருவாக்கி அதை சமர்பித்தார்.

அமெரிக்காவுக்கு சமையல் வேலைக்கும், சிறிய கூலி வேலைகளுக்கும் செல்ல முயன்ற சிலர் தங்களை பூசாரி என்று கூறிக் கொண்டும், அங்கு கோவில்களில் பணியாற்றச் செல்வதாக ஆவணங்களைத் தந்து விசா கோரினர்.

ஒரே நபரைத் திருமணம் செய்துள்ளதாகக் கூறி பல பெண்கள் எச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்பதும் உண்டு. இந்தப் பெண்களிடம் பல லட்சம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக அழைத்துச் செல்ல அந்த ஆண்கள் முயல்கின்றனர்.

அதே போல திருமணத்தை மறைத்துவிட்டு அல்லது போலியாக திருமணம் செய்து கொண்டவர் காட்டிக் கொண்டு, குழந்தைகளின் வயதை பொய்யாக மாற்றித் தந்து என பல வகையான மோசடி முயற்சிகளும் நடக்கின்றன. இந்த திருமண விவகார மோசடிகளில் முன்னணியில் உள்ளது கேரள மாநிலம் தான்.

ஆனால், பெரும்பாலான போலி ஆவணங்கள் வந்தது ஹைதராபாத்திலிருந்து தான். விசா கோரியவர்களுக்கு 'எக்ஸ்பீரியன்ஸ்' லெட்டர்கள் தந்த 150 ஹைதராபாத் நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தியபோது அதில் 77 நிறுவனங்கள் சந்தேகத்துக்குரியவை என்று தெரியவந்தது.

ஹைதராபாத்திலிருந்து வரும் விசா விண்ணப்பங்களை சென்னை தூதரகம் தீவிரமாக சோதிப்பது தெரியவந்தவுடன் பலர் பெங்களூர் அல்லது புனேவில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் காட்டி மும்பை தூதரகத்தில் விசா பெற முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறு விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

thatstamil.oneindia.in

அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் : மருத்துவ சிகிச்சைக்கு இந்தியா செல்லாதீர்கள்.


வாஷிங்டன், குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் அதிகமாகும். இதனால் அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சை குறைவாக உள்ள இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர், அமெரிக்காவிலேயே தரமான சிகிச்சை தனது குடிமக்களுக்குக் கிடைக்க வழி ஏற்படுத்தித் தரப் போவதாகக் கூறினார்.

வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் அவர் இவ்விதம் கூறியவுடன் அதை பலத்த கரகோஷத்துடன் மக்கள் வரவேற்றனர்.

அமெரிக்காவில் மருத்துவ கட்டணங்கள் உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டதற்கு, ஒபாமா இவ்விதம் பதில் அளித்தார். குடிமக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு திட்டமிடும்போது, மக்கள் வேறு நாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்வது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். உள்நாட்டிலேயே உயர்தர சிகிச்சை பெறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

மருத்துவ கவனிப்பு என்பது ஆரம்பம் முதலே தொடங்கப்பட வேண்டும். இது எவ்விதம் செயல்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்படும். இங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும், அனைத்து டாக்டர்களும் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கின்றன. இருப்பினும் மருத்துவ செலவு அதிகரிப்பது குறித்து கவனத்தில் கொண்டு அதை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மருந்து, மாத்திரைகளின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் நீங்கள் அளிக்கும் பணத்துக்கு உரிய மருந்துகளை வாங்கியுள்ளீர்கள் என்பதை உணரலாம். ஆனால் கனடா மற்றும் மெக்ஸிகோவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் தொகை செலவிட வேண்டியிருக்கும் என்றார்.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் விலை பிற நாடுகளைவிட இங்கு அதிக விலைக்கு விற்பனையாவது ஏன் என்பது புரியவில்லை. இதற்கு இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்தான் காரணம். வெளிநாடுகளில் இதுபோன்ற நிலை கிடையாது. இதற்கு இங்குள்ள வரி விதிப்பு காரணமா அல்லது இதனால் அரசின் வரி வருவாய் குறையுமா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஒபாமா.

இன்று இரவு எரிகற்கள் மழை !


புது தில்லி, வானியல் ஆர்வலர்கள் வியாழக்கிழமை இரவு எரிகற்களை பார்த்து மகிழும் வாய்ப்பைப் பெறலாம்.

இந்தியாவில் இம்மாதம் 21 மற்றும் 22-ம் தேதி இவை விண்ணிலிருந்து பூமியை நோக்கி ஈட்டியைப் போல பாயும் என்று வானியல் ஆராய்ச்சியாளர் மிலா மித்ரா தெரிவித்துள்ளார். மணிக்கு இரண்டு கற்கள் வீதம் புவியில் விழுந்தவண்ணம் இருக்கும். இந்த விண்கற்கள் மிகுந்த ஒளியுடனும் புழுதியைக் கிளப்பியபடி விண்ணிலிருந்து கீழே பாயும். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் சில விநாடிகளில் இது மறைந்துவிடும்.

இது இம்மாதம் 26-ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒளி வெள்ளம் இல்லாத பகுதியிலிருந்து பார்க்க முடியும். மாலையிலேயே எரிகற்கள் விழுவது ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


போலீஸ் ஜீப்பில் தப்பியோடிய வடிவேலு : பிரசார கலாட்டா .தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, தி.மு.க., தலைமையால் முக்கியத்துவம் தரப்பட்டு, பிரசாரத்தில் களமிறக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு. இவர் பேச்சைக் கேட்க திரண்ட கூட்டமும், தன் பாணியில் அவர் செய்த பிரசாரமும், தி.மு.க.,விற்கு பெரிய பலமாக அமைந்தது.

"குழந்தைகள் முதல், பெரியவர் வரை எல்லா கட்சியிலும் உங்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அரசியல் பிரசாரம் செய்யப் போய், ரசிகர்களை இழந்து விடாதீர்கள்' என, நெருங்கிய நண்பர்கள் அறிவுறுத்தியும், வடிவேலு தேர்தல் களத்தில் குதித்தார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கும், வடிவேலுவுக்கும் நடந்த மோதல் தான், அவரை அரசியல் பக்கம் தள்ளிவிட காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மத்திய அமைச்சர் அழகிரியின் தேர்வாக வடிவேலு அமைந்தது தான், கட்சியில் அவருக்கு பெரிய முக்கியத்துவத்தை பெற்றுத் தந்துள்ளது என்கிறது, தி.மு.க., வட்டாரம்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் தன் பிரசாரத்தை துவக்கிய வடிவேலு, தி.மு.க., கூட்டணிக்காக பத்து நாட்கள் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை வெளுத்து வாங்கி, தி.மு.க., தலைமையிடம், "சபாஷ்' பெற்றுள்ளார்.

அவரது பிரசாரம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்:

வடிவேலுவின் பிரசார பயணத்தில், ஒரு மேனேஜர் தலைமையில், இரண்டு இணை இயக்குனர்கள், நான்கு உதவியாளர்கள், பாதுகாப்புக்கு, 12 பேர் கொண்ட குழுவும் சென்றது.

மார்ச் 31ம் தேதி, சென்னையிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிரசாரத்தை வடிவேலு துவங்கினார். முதல் கூட்டத்திலேயே, எம்.ஜி.ஆர்., திரைப்படப் பாடல்களை பாடியும், விஜயகாந்த் தன்னை சங்கடப்படுத்தியதை, "சென்டிமென்ட்' ஆகவும் பேசி, மக்களிடம் கைதட்டு வாங்கினார்.

போடிநாயக்கனூரில், வேனில் பேசிவிட்டு புறப்படும் போது, "இன்னும் பேச வேண்டும், இங்கிருந்து போகக் கூடாது' என்று சொன்ன ரசிகர்கள், திடீரென்று, பிரசார வேனை பின்னோக்கி இழுத்துச் செல்ல, பாதுகாப்பு குழுவினரால் தடுக்க முடியாமல் போனது. வேனும், முன்னோக்கிச் செல்ல முடியாமல் பழுதடைந்து நின்றுவிட்டது.

பயந்து போன வடிவேலும், மேனேஜரும் சற்று தொலையில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பில் ஏறி தப்பினர். "கொஞ்சம் அசந்திருந்தால் மக்கள் என்னோட காலு, கை, கண், காது மூக்கை பிச்சுக்கிட்டு போய் வீட்டில வச்சு, இது தான் வடிவேலுவின் மூக்கு, வாய், கை, தலைன்னு காட்டிக்கிட்டிருந்திருப்பாங்க. மக்கள் இவ்வளவு பிரியம் வைத்திருப்பாங்கன்னு நான் நினைக்கவேயில்லை' என்று, உதவியாளர்களிடம் பின்னர் சொன்னார் வடிவேலு.

புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பிரசாரம் செய்த போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு சளி தொல்லையால், மூச்சுவிட முடியாமல் திணறிய வடிவேலுக்கு, டாக்டர் வரவழைக்கப்பட்டு இரண்டு ஊர்களில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

காலை, மாலை, இரவு என, மூன்று வேளைகளிலும், இந்த உணவு மட்டும் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்காமல், கொடுத்த உணவை சாப்பிட்டார். காலையில் டிபனோடு மட்டன், சிக்கன் அயிட்டங்களையும் ஒரு பிடி, பிடித்தார். அவர் சாப்பிடும் அனைத்து அயிட்டங்களையும், தன் உதவியாளர்களுக்கும் கொடுக்கச் சொன்னார்.

மூன்றாவது நாள் பிரசாரத்தின் போது, வடிவேலுக்கு தொண்டை புண்ணாகி, பேச சிரமப்பட, பசும்பாலில் மஞ்சள், மிளகுத் தூள் கலந்து கொடுத்தனர். அதில், தொண்டை சரியாகியது. "பிரசாரம் முடியும் வரை, இதே கலவை பால கொடுத்து விடுங்கள்' என்று கேட்டு வாங்கி குடித்தார்.

நன்றி - vizhiyepesu.blogspot.com

ஐ.ஐ.டி. நிலம் டாடாவுக்கு தாரை வார்ப்பு?


சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் அந்த நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டாடா குழுமத்துக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தமிழகஅரசு நீண்ட காலக் குத்தகைக்கு விட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த இடத்தில் தற்போது பல்வேறு நவீன அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், வணிக வளாகமும் கட்டப்பட இருக்கின்றன.

கடந்த 1993-ம் ஆண்டு சென்னை கிண்டியிலுள்ள ஐ.ஐ.டி. பெயரில் தரமணியில் உள்ள 40 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை தமிழக அரசு தன்னிச்சையாகக் கையகப்படுத்தியது. பிறகு ஐ.ஐ.டி.யின் கோரிக்கையை ஏற்று ஆராய்ச்சிப் பூங்கா அமைப்பதற்காக சுமார் 11 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனத்துக்கே திருப்பி அளித்திருப்பதாகத் தெரிகிறது.

கையகப்படுத்தபட்ட 40 ஏக்கர் நிலமும் உண்மையில் தங்களுக்கே சொந்தமானது என ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கே தெரியாது என்கிற அதிர்ச்சிகரமான தகவலும் அம்பலமாகியிருக்கிறது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் எம்ஜிஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டது. மீதி நிலம் காலியிடமாகக் கிடந்தது.

இந்த நிலையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பூங்கா அமைப்பதற்கான முயற்சியில் ஐ.ஐ.டி. ஈடுபட்டது. இதற்காக சுமார் 10 ஏக்கர் இடம் தேவை என்று கடந்த 2001-ம் ஆண்டில் தமிழக அரசுக்கு ஐ.ஐ.டி. சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.

ஐ.ஐ.டி. கேட்ட நிலம் அந்த 40 ஏக்கர் நிலத்துக்குள்தான் வருகிறது. இந்த விவரமும் ஐ.ஐ.டி.க்குத் தெரியாது.

கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரலில் அந்த 40 ஏக்கரில் அடங்கிய 24.78 ஏக்கரில் பல்வேறு ஆய்வுப் பணிகள், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு பயன்படும் வகையில் எம்.ஜி.ஆர். அறிவுப் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இது எம்ஜிஆர் திரைப்பட நகரை ஒட்டி அமைந்திருக்கிறது. இதில்தான் சுமார் 10 ஏக்கர் நிலத்தை ஐ.ஐ.டி. கேட்டது.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர். அறிவுப் பூங்கா தொடர்பாக அரசு அறிவிப்பாணை வெளியிடப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு, நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். நில ஆவணங்களின் படி கனகம் கிராமத்தில் உள்ள அந்த 40 ஏக்கர் நிலமும் ஐ.ஐ.டிக்கு சொந்தமானது என்பதை தனது கடிதத்தில் அவர் குறிபிட்டிருக்கிறார்.

ஐ.ஐ.டிக்கு தெரியாமலேயே இந்த நிலம் எப்படி குத்தகைக்கு விடப்பட்டது என்றும் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அந்த நிலத்தில் 10 ஏக்கரை ஐ.ஐ.டியின் பயன்பாட்டுக்கு ஒதுக்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் தரமணியில் இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. முன்பு சென்னையின் ஒதுக்குப்புறமாக இருந்த இந்த இடம் இப்போது கிழக்குக் கடற்கரை சாலை பகுதி அடைந்துள்ள பிரமாண்ட வளர்ச்சியால் சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

வருவாய்த் துறையின் ஆவணப் பதிவுகளின்படி கனகம் கிராமத்துக்கு உள்பட்ட இந்த நிலம் இப்போது வரை சென்னை ஐஐடி-க்கு சொந்தமானதாகவே இருக்கிறது. ஆனால் அரசு அதனை தன்னிச்சையாக கையகப்படுத்தியுள்ளது. வேடிக்கை என்னவென்றால் அது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று ஐஐடி நிர்வாகத்திற்கே தெரியாமல் இருந்ததுதான்.

இந்த நில விவகாரம் தொடர்பாக ஐஐடி நிர்வாகம் 2001 ஆகஸ்டு முதல் 2007 அக்டோபர் வரை அரசுக்கு பலவேறு கடிதங்களை எழுதியுள்ளது.

கிடைத்திருக்கும் ஆவணங்களின்படி, சுமார் 11 ஏக்கர் நிலத்தை பெறுவதற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் 6 ஆண்டுகள்வரை போராடியிருப்பதாகவும் தெரிகிறது. இறுதியாக கடந்த 2007-ம் ஆண்டில்தான் ஐ.ஐ.டி.க்கு அந்த நிலம் கிடைத்திருக்கிறது. அந்த இடத்தில்தான் 12 மாடிகளைக் கொண்ட 3 கட்டடங்களுடன் கூடிய போஷ் ஆராய்ச்சிப் பூங்காவை ஐ.ஐ.டி நிறுவியிருக்கிறது.

அந்த 40 ஏக்கரில் சுமார் 25.27 ஏக்கர் நிலம் டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ரியால்டி அண்ட் இன்ட்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்தின் ராமானுஜம் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டத்துக்காக 99 ஆண்டு குத்தகைக்கு விட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த இடத்தில் பிரமாண்டமான 150 குடியிருப்புகள், 2.5 லட்சம் சதுர அடி பரப்புள்ள வணிக வளாகம், 100 சேவைக் குடியிருப்புகள், 1500 பேர் அமரக்கூடிய சர்வதேச மையம் ஆகியவை அமைக்கப் பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டி.க்கு தனக்கு சொந்தமான நிலம் எது என்பது தெரியாமல் ஒருபுறம் இருக்கட்டும். சென்னை ஐ.ஐ.டிக்கு சொந்தமான இடத்தைத் தமிழக அரசு, ஐ.ஐ.டி.யின் ஒப்புதல் பெறாமலே, 25.27 ஏக்கர் நிலத்தை டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ரியால்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு ராமனுஜம் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 99 ஆண்டு குத்தகைக்கு எப்படி வழங்கியது?

24.27 ஏக்கர் நிலம் என்பது 460 கிரவுண்டு. தரமணியில் இன்று ஒரு கிரவுண்டு நிலத்தின் சந்தை விலை குறைந்தது 3 கோடி ரூபாய். அப்படிப் பார்த்தால் இடத்தின் மதிப்பு மட்டுமே ஏறத்தாழ 1380 கோடி ரூபாய்!

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்த்திடும் விசித்திரம் சென்னையில் தமிழக அரசால் அரங்கேற்றப்பட்டிருக்கும் அதிர்ச்சி தரும் செயலை இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.

நாங்கள் ஐ.ஐ.டி மாணவர்கள் என்று பெருமை தட்டிக்கொள்பவர்கள் பல பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்களே, தங்களது கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடம் தனியாருக்கு குடியிருப்புகளும் வணிக வளாகமும் கட்டி கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக தாரை வார்க்கப்பட்டிருக்கிறதே, இதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவார்களா?

இந்தப் பிரச்னை இப்போதாவது வெளிவந்திருக்கிறதே, ஐ.ஐ.டி. நிர்வாகம் தங்களுக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக தமிழக அரசு தனியாருக்குக் கொடுத்திருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு வாங்குமா?

இன்றைய சந்தை விலையில் அந்த இடம் விற்கப்படுமேயானால், இரண்டு மூன்று ஐ.ஐ.டி.களை உருவாக்கலாமே, அதைப்பற்றி யாராவது கவலைப்படப் போகிறார்களா?

இந்த தாரை வார்ப்பு முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது அதிகாரிகள் மட்டும் தானா, இல்லை அரசியல்வாதிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் கூடவா?


இலங்கை அரசைக் கண்டித்து 25-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் : வைகோ.


இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஏப்ரல் 25-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் ஐ.நா. மூவர் குழு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் இந்தியா தோற்கடித்தது. ஆனால், இலங்கையில் அமைதியை நிலைநாட்டியதாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வெற்றி பெறச் செய்தது.

கூண்டில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளியான ராஜபட்சவை திரும்ப திரும்ப இந்தியாவுக்கு அழைத்து கொண்டாடுகிறது. இது தொடர்ந்தால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு இந்தியாவும் பங்காளி என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வலியுறுத்தியும், ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை உலகத்துக்கு காட்டவும் ஏப்ரல் 25-ம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

ஜான் டேவிட் - தகவல்களை சேகரிக்க, இரண்டு தனிப்படைகள்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு. இவரை, 1996ல், சகமாணவர் ஜான் டேவிட் கொலை செய்தார். கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில், ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


ஜான் டேவிட், ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ததன் பேரில், விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. தற்போது, கடலூர் செஷன்ஸ் கோர்ட் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தது.


இது குறித்து கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் கேட்டபோது, "இந்த வழக்கில் ஜான் டேவிட்டிற்கு கடலூர் கோர்ட் அளித்த தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதற்கான உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை.

இருந்தாலும் ஜான் டேவிட் தற்போது எங்குள்ளார் என்பது குறித்த தகவல்களை சேகரிக்க அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


கோர்ட் உத்தரவு கிடைத்த பின் ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

உச்சநீதி மன்ற மேல்முறையீட்டிற்கு இடைப்பட்ட காலத்தில்
செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்பின் அடிப்படையில் பாஸ்போர்ட் பெற்று ஜா‌ன்டே‌வி‌‌ட் ஆஸ்திரேலியா சென்று விட்டதாக கூறப்படுகிறது.

நக்கீரன்

ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருக்கும் ஜான்டேவிட் கைதில் சிக்கல்?


1996-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்ற மாணவன் நாவரசு. அவனது சீனியரான ஜான்டேவிட் என்ற மாணவன் நாவரசுவை ராகிங் செய்து, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு படுகொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான்டேவிட் கைது செய்யப்பட்டான்

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றம் அன்று வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

மாணவ‌ர் நாவரசு கொலை வழ‌க்‌கு விசாரணையில் செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌தி ம‌ன்றத்தின் செய‌ல்பாடு குறித்து உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌‌ நீ‌திப‌திக‌ள்அ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்தனர்.

வழ‌க்கை ச‌ரியாக ‌விசா‌ரி‌க்காம‌‌ல் செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது. எ‌ன்று‌ம் ஜா‌ன்டே‌வி‌ட்டு‌க்கு கடலூர் நீதிமன்றம் விதித்த இர‌‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை செ‌ல்லு‌ம் எ‌னவும் தீர்ப்பளித்தனர்

இ‌‌ட்டை ஆயுளை, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்ததை ஏ‌ற்க முடியாது எ‌ன்று‌ம் ‌‌நீ‌திப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

மேலும் ஜா‌ன்டே‌வி‌‌ட் உடனடியாக கடலூர் சிறைச்சாலை கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைய வே‌ண்டு‌ம் எ‌ன்று்ம் உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

இத் தீர்ப்பினை அடுத்து ஜா‌ன்டே‌வி‌‌ட்டை பிடிக்க கடலூர், சிதம்பரம் போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

ஜான்டேவிட் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாக தெறியவருகிறது.

உச்சநீதி மன்ற மேல்முறையீட்டிற்கு இடைப்பட்ட காலத்தில்
செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்பின் அடிப்படையில் பாஸ்போர்ட் பெற்று ஜா‌ன்டே‌வி‌‌ட் ஆஸ்திரேலியா சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அங்கு அவன் கிறித்துவ மதபோதகராக பணியாற்றி வருகிறான். என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக போலீஸ் ஜான்டேவிட்டின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கவும், எந்த நாட்டு விமான நிலையத்தில் அவன் இறங்கினாலும் கைது செய்திடவும், இன்டர்போல் போலீஸ் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.