Sunday, August 7, 2011

விலைவாசி உயர்வை எதிர்த்து 3 லட்சம் பேர் திரண்டனர் ; இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் .

விலைவாசி உயர்வை எதிர்த்து இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம்;    3 லட்சம் பேர் திரண்டனர்

இஸ்ரேல் நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் குறைந்து விட்டது. எனவே, அன்றாட வாழ்க்கையை நடத்த பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று போராட்டம் தீவிரம் அடைந்தது. தலைநகர் டெல்அவிவ், ஜெருசலேம் மற்றும் பல நகரங்களில் நேற்று பொது மக்கள் திரண்டனர். வீதிகளில் இறங்கி பேரணி நடத்தினார்கள். டெல்அவிவ் நகரில் 2 லட்சம் பேரும், ஜெருசலேமில் 30 ஆயிரம் பேரும் பங்கேற்றனர். இவை தவிர மற்ற நகரங்களிலும் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

நாடு முழுவதும் மொத்தம் 3 லட்சம் பேர் திரண்டு போராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே விலை வாசியை குறைக்க தீவிர நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு உறுதி அளித்துள்ளார். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேலிலும் பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் புயல் அபாயம் : 2 லட்சம் மக்கள் வெளியேற்றம் .

சீனாவில் புயல் அபாயம்: 2 லட்சம் மக்கள் வெளியேற்றம்

இந்த ஆண்டு இதுவரை 8 புயல்கள் சீனாவை தாக்கியுள்ளன. இந்த நிலையில் “மியூபா” என்ற 9-வது புயல் உருவாகி மிரட்டி வருகிறது. இது ஷிஜியாங் மாகாணத்தை தாக்கும் அபாயம் உள்ளது. இப்புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது கரையை கடக்கும்போது பலத்த காற்றுடன் மழை பெய்யும். இதனால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

இதனால் ஷிஜியாங் மாகாணத்தில் தாழ்வான இடங்களில் தங்கி இருக்கும் 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஷிஜியாங் மாகாணத்தின் கம்யூனிஸ்டு கட்சியின் கமிட்டி தலைவர் ஷவோ ஹோங் சூ தெரிவித்துள்ளார்.

மேலும் ஷிஜியாங் மாகாணத்தில் கடற்கரை சுற்றுலா நகரங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குயின்ஷான் அணுமின் நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சீனாவின் 10 மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் இறக்குமதியால் இரட்டிப்பு வருவாய் அடையும் மத்திய அரசு.மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதியமைச்சர் அமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள தேவையால் அதிகரித்து வரும் இறக்குமதியின் காரணமாக, இறக்குமதித் வரி மூலம் இந்திய அரசுக்கு கிடைத்து வரும் வருவாய் கிட்டத்தட்டஇரட்டிப்பாகியுள்ளது என்றார்.

மேலும் ,2009-10ஆம் ஆண்டில் தங்கம் இறக்குமதியின் மீது விதிக்கப்பட்ட சுங்கத் வரியால் ரூ.1,567.64 கோடி வருவாய் கிடைத்தது என்றும், 2010-11ஆம் ஆண்டில் இது ரூ.2,553.52 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகத் தங்கப் அமைப்பின் மதிப்பீட்டின் படி, சீனாவிற்குப் பிறகு இந்தியாவே அதிகமாக தங்கம் இறக்குமதி செய்வதாகவும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்த விலையை விட, தங்கத்தின் விலை 78.11 விழுக்காடு உயர்ந்துள்ளது என்றும், வெள்ளியின் விலை இதே காலகட்டத்தில் 152.79 விழுக்காடு உயர்ந்துள்ளது அதே போல், 2008 ஏப்ரல் 1ஆம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.11,656 ஆக இருந்தது.

2011 மார்ச் 31ஆம் தேதி ரூ.20,760 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

ஒரு மரம் 20 கிலோ கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கி அழிக்கிறது - அப்துல்கலாம் .

கடல் பாசிகளில் இருந்து பயோடீசல் தயாரிக்க வேண்டும்:    அப்துல்கலாம் யோசனை

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கல்வி நிறுவனங்கள் மாணவ,மாணவிகளின் ஆராயும் மற்றும் சிந்திக்கும்திறனை வளர்க்க வேண்டும். நாம் எல்லோரும் உழைப்பின் மூலம்தான் நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும்.

ஒரு மரம் 20 கிலோ கார்பன்டை ஆக்ஸைடை ஓராண்டுக்கு உள்வாங்கி அழிக்கிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் 10 மரங்கள் நட்டு அதைப்பாதுகாத்தால், 10 பில்லியன் மரங்களை நாம் நடுவோம் என்ற இலங்கை வெகுவாக அடைய முடியும். அவ்வாறு 10 பில்லியன் மரங்களை நாம் நட்டால் மாறி வரும் தட்ப வெப்ப சூழலை சமாளித்து நமது எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த இயலும்.

தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான டன் நிலக்கரியை கொண்டு இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் அதிகம் உள்ளன. தூத்துக்குடி பகுதி சூரிய ஒளி மின் தயாரிப்புக்கு ஏற்ற இடம். எனவே இங்கு சூரிய ஒளி மின்சார பூங்கா அமைக்க வேண்டும்.

கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்த வேண்டும். கடல் பாசிகளில் இருந்து பயோ டீசல் தயாரிக்க வேண்டும். இவற்றின்மூலம் கார்பன் சமநிலை பகுதியாக இப்பகுதியை மாற்ற முடியும் என்றார்.

பாதஹஸ்தாசனம், பரிவர்த்தன திரிகோணாசனம், வீராசனம்.

பாதஹஸ்தாசனம்.
பாதஹஸ்தாசனம்

செய்முறை:

நேராக நிமிர்ந்து நில்லுங்கள். இரண்டு கால்களும் சேர்ந்திருக்கட்டும். இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கி, அப்படியே குனிந்து தரையை தொடுங்கள். முழங்கால்கள் வளையலாகாது. உங்களின் தலைப்பகுதி, இலகுவாக தொங்கட்டும். இப்படியாக இயல்பான சுவாசத்தில், 5 தடவை செய்யவும்.

பயன்கள்:

* இடுப்பு, மூத்திரக்காய்கள், சிறுகுடல், பெருங்குடல், விந்துப்பை போன்றவை நன்கு இயங்கி, நோய்களை விரட்டும்.

* பெண்களுக்கு மாதவிடாய் தொல்லை, கர்ப்பப்பை கோளாறு நீங்கும். கால்கள் பலம்பெறும்.

* இடுப்பின் மேற்புற பகுதி பாதியாய் மடங்குவதால் இருதயம், நுரையீரல், தலை உறுப்புகளுக்கு, குறிப்பிடத்தக்க பலன் கிட்டும்.


பரிவர்த்தன திரிகோணாசனம்.
பரிவர்த்தன திரிகோணாசனம்

செய்முறை:

இரு காலையும் பக்கவாட்டில் 3 அடி தூரம் அகட்டி வையுங்கள். இரு கைகளையும் தோள் பட்டைக்கு முன்பாக உயர்த்தவும். அப்படியே முன்னோக்கி குனிந்து, வலதுகையால் இடதுகால் கட்டைவிரலைத் தொடவும். இப்போது உங்களின் இடதுகை செங்குத்தாக மேல்நோக்கி உயர்ந்திருக்கட்டும்.

தலையை அப்படியே பின்னோக்கி திருப்பி, இடதுகை கட்டைவிரலை பாருங்கள். அடுத்தபடியாக-இடதுகையால், வலது காலின் விரல்களைத் தொடவும். இப்போது உங்களின் கண்கள், வலதுகை கட்டைவிரலை பார்த்திருக்கட்டும்.

பயன்கள்:

கால் நரம்புகள் வலுப்பெறும். ஊளைச்சதை குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அகலும். பக்கவாதம் பக்கத்தில் வராது. உடம்பு கட்டுறுதியாகும். செரிமானகோளாறு நீங்கும். மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.


வீராசனம்.
வீராசனம்

செய்முறை:

வலதுகாலை 2 அடி தூரம் முன்னோக்கி வையுங்கள். இதில் உங்களின் ஒட்டுமொத்த உடல் எடையும் குவிந்திருக்கட்டும். இரு கைகளும் தலை மேல் குவிந்திருக்கும் நிலையில், உடம்பை மட்டும் அப்படியே முடிந்தவரையில் பின் னோக்கி சாய்க்கவும். பின்னங்கால்கள் வளையலாகாது. அடுத்தபடியாக இடதுகாலை முன் வைத்து, இதேபோல செய்யவும்.

பயன்கள்:

தொடைச்சதை குறையும். அடிவயிறு வலுப்பெறும் ஜனன உறுப்புகள் நன்கு இயங்கும். பெண்களுக்கு, மகப்பேறுக்கு பின் வரும் அடிவயிற்று சதை குறையும். செரிமான கோளாறு, மலச்சிக்கல் நீங்கும். ஆண்களுக்கு விந்து கெட்டிப்படும். உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.

மருந்து-மாத்திரை தேவையிராது. நீடித்த- திருப்தியான தாம்பத்திய உறவை கைவரப் பெறுவீர்கள். ஓட்டப்பந்தய வீரர்களுக்கு தேவையான நீண்டநேர உழைப்புத்திறனை பெற வீராசனம் உதவும்.