Sunday, June 19, 2011

வி.ஐ.டி.யில் கிராமபுற மாணவர்கள் 62 பேருக்கு ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் இலவச கல்வி.


தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் வி.ஐ.டி.யில் பொறியியல் கல்வியை இலவசமாக பயிலுவதற்காக ஸ்டார்ஸ் எனும் திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3இடங்கள் பெறும் ஒரு மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு வி.ஐ.டி.யில் இலவசமாக பொறியியல் கல்வி பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களிலிருந்து 62 பேருக்கு வி.ஐ.டி.யில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.20லட்சம் வீதம் ரூ.1 கோடியே36 லட்சம் வி.ஐ.டி. நிர்வாகத்தில் செலவழிக்கப்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 190 மாணவ-மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு வி.ஐ.டி.யில் இலவச கல்வி பயிலுவதற்காக மாணவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கோவை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 மண்டலங்களில் கடந்த 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது.

இதையடுத்து ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் வி.ஐ.டி.யில் இலவச உயர்கல்வி பயிலுவதற்காக சேர்க்கை சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழை வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார். வி.ஐ.டி.துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.சம்பத், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், ஸ்டார்ஸ் திட்ட அலுவலர் தமிழ்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட எல்.கே.ஜி. பள்ளிகள்.

சென்னையில் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட எல்.கே.ஜி. பள்ளிகள்

சென்னையில் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் எல்.கே.ஜி.க்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகள் பட்டியல் :-

1. சன் ஷைன் மாண்டிசோரி நர்சரி-பிரைமரி பள்ளி, வேளச்சேரி-சீதாபதி நகர்- ரூ. 24 ஆயிரம் (முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்தும் பள்ளி)

2. செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்- ரூ. 10950. (எம்.ஏ.எம்.ராமசாமி நடத்தும் பள்ளி)

3. பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி, மயிலாப்பூர்- ரூ. 10600

4. ஸ்ரீசங்கர சீனியர் செகண்டரி பள்ளி, அடையார்-ரூ. 10950

5. எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக்குலேஷன் பள்ளி, அண்ணா நகர் மேற்கு-ரூ. 15,400

6. பாம்பின்ட் கல்வி அறக்கட்டளை-ரூ. 15,400

7. டி.ஏ.வி. மெட்ரிக்குலேஷன் பள்ளி, சூளைமேடு- ரூ. 17150.

8. பரணி மெட்ரிக்குலேஷன் பள்ளி, சென்னை-1- ரூ. 13,950

9. ஹாரிங்டன் ஹவுஸ் நர்சரி-பிரைமரி பள்ளி, எழும்பூர்-ரூ. 20 ஆயிரம்

10. ஸ்பிரிங்பீல்டு மெட்ரிக் பள்ளி, கே.கே.நகர்- ரூ. 10,200

11. கிட்ஸ் சென்டர் நர்சரி பிரைமரி பள்ளி, கோட்டூர்புரம்- ரூ.19,450

12. செயின்ட் மார்க்ஸ் நர்சரி பள்ளி, காந்திநகர், அடையார்-ரூ. 10,000

13. செயின்ட் சேவியோ மெட்ரிக்குலேஷன் பள்ளி, தண்டீஸ்வரர் நகர்-ரூ. 11,500

14. ஏ.எம்.எம். மெட்ரிக் பள்ளி, கோட்டூர்புரம்- 20,150

15. வானவாணி மெட்ரிக் பள்ளி, ஐ.ஐ.டி. வளாகம், அடையார்-ரூ. 11,500

16. டான்போஸ்கே மெட்ரிக் பள்ளி, எழும்பூர்- 10,650

17. செயின்ட் மெக்னிகல் அகாடமி மெட்ரிக் பள்ளி, காந்திநகர்- ரூ. 10,300

18. பெத்தேல் மெட்ரிக் பள்ளி, வேளச்சேரி-10,000

19. குட்ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளி, கல்லூரி சாலை-ரூ. 13,700

20. ஸ்ரீசங்கர வித்யாஷ்ரமம் மெட்ரிக் பள்ளி, திருவான்மியூர்-ரூ. 14,100

21. ஆல்பா மெட்ரிக் பள்ளி, மேற்கு சி.ஐ.டி. நகர்- ரூ. 11,050

22. லேடி ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் பள்ளி, சேத்துப்பட்டு-ரூ. 16,450

23. ஷர்னாலயா நர்சரி பிரைமரி பள்ளி, மகாலிங்கபுரம்-ரூ. 14,950

24. தெரபந்த் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சவுகார் பேட்டை-ரூ. 10,300

25. டவுட்டன் மெட்ரிக்குலேஷன்பள்ளி, வேப்பேரி-ரூ. 11,850

26. வேலம்மாள் மெட்ரிக் குலேஷன் பள்ளி, பொன்னேரி, பஞ்செட்டி-ரூ. 10,550 27.

27.டி.ஐ. மெட்ரிகுலேஷன் பள்ளி, அம்பத்தூர்-ரூ. 11,600

28. எஸ்.பி.ஓ.ஏ.மாடல் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்-ரூ. 16,400

29. டி.ஏ.பி. மெட்ரிக் பள்ளி, முகப்பேர்கிழக்கு- ரூ. 15,350

30. கவிபாரதி வித்யாலயா, திருவொற்றியூர்-ரூ.12,300 31.

31.வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி, முகப்பேர் மேற்கு- ரூ. 10,600

32. கேம்பஸ் நர்சரி பிரைமரி பள்ளி, கிழக்கு தாம்பரம்-ரூ. 12,050

33. ஹெட்ஸ்டார்ட் நர்சரி பிரைமரி பள்ளி, கொட்டிவாக்கம்-ரூ.17,300

34. தி லார்டு இண்டர்நேஷனல் நர்சரி பள்ளி, மேற்கு தாம்பரம்-11,950 35.

35.ஸ்ருஜன மாண்டி கோரி நர்சரி பள்ளி, பள்ளிக்கரணை-ரூ.14,050 36.

36.ஆல்பா மெட்ரிக்பள்ளி, செம்பாக்கம், தாம்பரம் கிழக்கு-ரூ. 12,550

37. சீக்ரட்ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சோழிங்கநல்லூர்-ரூ. 10,300

சென்னையில் எல்.கே.ஜி.க்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகள்.

1. செயின்ட் பிரான்சிஸ் சேவியோ மெட்ரிக்குலேஷன் பள்ளி, நாகேந்திரா நகர், வேளச்சேரி-ரூ. 1150

2. சென்னை துறைமுக கப்பல் செப்பணிடும் கல்வி அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளி, தண்டையார் பேட்டை-ரூ. 1250

3. ஸ்ரீபாரதி நர்சரி பள்ளி, காந்தி நகர், கோடம்பாக்கம்,-ரூ.1500

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜெயலலிதா - படங்கள்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தலில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, ஜெயலலிதா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள் கிறார். இதற்காக இன்று (19.06.2011) காலை ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றார்.







ரெங்கா ரெங்கா கோபுரம் வழியே வந்த ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கார்த்திகா சன்னதி, கருடாழ்வார் சன்னிதி சென்ற ஜெயலலிதா, பின்னர் கோவிலுக்குள் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டு வேட்டியை பெருமாளுக்கு சாத்துமாறு அய்யர்களிடம் கொடுத்தார்.



ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரூ. 10 லட்சத்தில் 11 பேர், 6 பேர் செல்லும் இரண்டு பேட்டரி காரை சொந்த செலவில் ஜெயலலிதா தானமாக வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் ஆலயத்தை சுற்றிப் பார்க்க பேட்டரி கார் பயன் படுத்தப்படும்.

பின்னர் கார்த்திகா சன்னதியில் இருந்து உடையவர் சன்னதிக்கு பேட்டரி கார் மூலம் வந்தார். அந்த காரில் கொஞ்ச தூரம் சென்ற அவர் பின்னர் இறங்கினார். பின்னர் வெள்ளை கோபுரம் வழியாக சங்கம் ஓட்டலுக்கு சென்றார்.








நன்றி - நக்கீரன்

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து காரில் கட்டுக்கட்டாக ரூ.9 கோடி கடத்தல் : வாகன சோதனையில் சிக்கியது.

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து காரில் கட்டுக்கட்டாக ரூ.9 கோடி கடத்தல்: வாகன சோதனையில் சிக்கியது

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து ஆசிரம உறுப்பினர் ஒருவர் காரில் பணம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசிரமம் உள்ள அனந்தபுரம் மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

அங்குள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓடிகொண்டா சோதனை சாவடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது புட்டபர்த்தி சத்யசாய் அறக்கட்டளைக்கு சொந்தமான குவாலிஸ் கார் ஒன்று சிக்கியது. அந்த காரில் சோதனை நடத்தியபோது 2 பைகளில் கட்டுக்கட்டாக ரூ.9 கோடி பணம் இருந்தது.

இதையடுத்து டிரைவர் ஹரிஷ்நந்தாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சத்யசாய் டிரஸ்ட்டை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் 2 பைகளை கொடுத்து பெங்களூரில் சென்று ஒப்படைக்கும்படி கூறினார்.

புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் பிரசாந்தி நிலையத்தின் அருகே உள்ள கேண்டீனில் வைத்து இந்த 2 பைகளையும் அவர் கொடுத்தார். பெங்களூர் சென்றதும் ஒரு நம்பரை கொடுத்து போன் செய்ய சொன்னார். போனில் பேசுபவர் எங்கே வரச்சொல்கிறாரோ? அங்கே போய் பணத்தை கொடுத்துவிடு என்று அவர் கூறியதாக தெரிவித்தார்.

அந்த உறுப்பினரின் பெயரை அவர் சொல்லவில்லை. மேலும் அந்த பையில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது என்றும் கார் டிரைவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கார் டிரைவர் ஹரிஷ்நந்தாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள அவரது அறையில் சமீபத்தில் ரூ.100 கோடி பணம், 450 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் இருப்பதாக தகவல் பரவியது.

ஆனால் அங்கு அவ்வளவு நகை, பணம் இல்லை. ரூ.11.56 கோடி பணமும், 98 கிலோ தங்க நகைகளும், 307 கிலோ வெள்ளி நகைகளும் மட்டுமே இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் வைரம், வைடூரியம் உள்ளிட்ட நகைகள் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

சாய்பாபாவுக்கு 180 நாடுகளில் பக்தர்கள் உள்ளனர். அவர்கள் ஏராளமான வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளனர். அந்த பணம் ஏதும் கணக்கில் வரவில்லை. இந்தநிலையில் தான் காரில் கடத்திய ரூ.9 கோடி பணம் சிக்கியுள்ளது.

இதனால் சத்யசாய் அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை அபகரிக்க சிலர் திட்டமிட்டிருக்கலாம் என்று பக்தர்கள் சந்தேகிக்கிறார்கள்.

கிழித்து, படிக்கக் கொடுக்கும் 5000 ஆசிரியர்கள்.



ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடபுத்தகத்தில் சில பக்கங்களை கிழித்தும், சிலவற்றை அடித்தும், மறைத்தும் அழிக்கும் பணியில் 5000 ஆசிரியர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பிர்க்கு பின்னர், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி பாடபுத்தகம் வழங்க அரசு உத்திரவிட்டது.

இந்த புத்தகங்களில் தமிழ், சமூக அறிவியல் பாடங்களில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், குறிப்பிட்ட சிலரின் கவிதைகள், செம்மொழி மாநாட்டு இலச்சினை படம் ஆகியவற்றை நீக்க வேண்டும். என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எனவே இப்பகுதிகளை முழுமையாக நீக்குவதுடன், சில பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து, சில வரிகளை மார்க்கர் மூலம் அழித்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் 69, 70, 79, 80ம், ஆங்கில புத்தகத்தில் 53, 54 ஆகிய பக்கங்கள் கிழிக்கப்படுகின்றன.

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் 56ம் பக்கத்தில் கவிஞர் அப்துல்ரகுமான் எழுதிய தாகம் என்ற புதுக் கவிதையை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்படுகிறது. 129ம் பக்கத்தில் தைத்தமிழ் புத்தாண்டே வருக என்னும் பாடத்தில் 129, 130 ஆகிய பக்கங்களை முழுமையாக அகற்றி விடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 5000 ஆசிரியர்கள் இப் பணியினை செய்து வருகின்றனர்.

மனுஷ்யபுத்திரனுக்கு கனடா நாட்டின் விருது.



எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்புக்கு, கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.

உயிர்மை பத்திரிகை ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி என பன்முக முகங்களை கொண்டவர் மனுஷ்ய புத்திரன். இவர் 20 ஆண்டுகளாக இலக்கியப் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றார்.

இவரது அதீதத்தின் ருசி என்ற கவிதைத் தொகுப்பின் சில பகுதிகள், ஈழப்போர் படுகொலை கோரங்களை நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதில், எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரை தொகுப்புகளை மனுஷ்ய புத்திரன் வெளியிட்டுள்ளார்.

மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புகளுக்கே, கனடா நாட்டின் தமிழ் இலக்கியத் தோட்ட விருது கிடைக்கிறது. அந்த வகையில், சர்வதேச அங்கீகாரம் மனுஷ்ய புத்திரனுக்கு கிடைத்துள்ளது. இந்த விருதுடன், ரொக்கப் பரிசு 23 ஆயிரம் ரூபாயும் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

சிகிச்சையளிக்க தனது கருவியைக் கொண்டு வந்த அரசு மருத்துவர் - கண்காணிப்பாளருக்கும், செவிலியருக்குமிடையே மோதல்!

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1400 படுக்கைகள் உள்ளன. இங்கு 1200 பேர் உள்நோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மருத்துவமனையில் புகார்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள எலும்பு சிகிச்சை பிரிவு வார்டில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள அறுவை சிகிச்சைஅரங்கில் நோயாளிகளுக்குத் திறம்பட சிகிச்சையளிக்க மருத்துவர் ஒருவர் தனது கிளினிக்கிலிருந்து ஒரு கருவியைக் கொண்டு வந்துள்ளார். அந்தக் கருவி மூலம் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமானோர் பலன் பெற்றுள்ளனர்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அரங்கில் தவறான சிகிச்சையளித்ததால் அவர்களின் நிலை கவலைக்கிடமானது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனை அறுவை அரங்கில் வெளியிலிருந்து கருவிகள் கொண்டு வருவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் வெளியிலிருந்து கருவி கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிப்பது மருத்துவக் கண்காணிப்பாளர் ஜிம்லா பாலச்சந்திரனுக்குத் தெரியவந்தது. இதனால் அங்கு பணியாற்றிய செவிலியர்கள் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கு செவிலியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இன்று காலை செவிலியர்கள் சங்க மாநில செயலாளர் லீலாவதி மற்றும் நிர்வாகிகள் நெல்லை அரசு மருத்துவனைக்கு வந்தனர். அவர்கள் மருத்துவக் கண்காணிப்பாளர் ஜிம்லா பாலச்சந்திரனைச் சந்தித்து செவிலியர் துறை மாற்றத்திற்கு விளக்கம் கேட்டனர்.

இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதுகுறித்து மாநில செயலாளர் லீலாவதி கூறுகையில், ''வெளியிலிருந்து உபகரணம் கொண்டு வந்ததாகக் கூறி 2 செவிலிய இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளரிடம் கேட்ட போது எங்களை அவமரியாதையாக நடத்தினார். நாங்கள் கேட்ட விளக்கத்திற்குப் பதிலளிக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்போம். இது குறித்து சுகதாதரத்துறை செயலாளர், அமைச்சர், மருத்துவக்கல்லி இயக்குநர் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளோம்" என்றார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜிம்லாபாலச்சந்திரனிடம் கேட்ட போது, ''மருத்துவமனைக்கும் வெளி உபகரணங்கள் கொண்டு வர அனுமதியில்லை. இதை கண்காணிக்க வேண்டியது செவிலியரின் கடமை. எனவே தான் நடந்த சம்பவத்தை மருத்துவக்கல்வி இயக்குநரிடம் தெரிவித்து அவரது ஒப்புதலின் பேரிலேயே 2 செவிலியரையும் பணியிட மாற்றம் செய்துள்ளேன். விசாரணையின் போது தங்கள் தரப்புள்ள நியாயத்தை அவர்கள் தெரிவிக்கலாம்" என்றார்.

நெல்லை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளருக்கும், செவிலியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலின் மகள் நடத்தும் காஸ்ட்லியான நர்சரி ஸ்கூல்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை நடத்தும் நர்சரி ஸ்கூல்தான் சென்னையிலேயே மிகவும் காஸ்ட்லியானது என்ற பெயரைப் பெற்றுள்ளது.

சென்னை வேளச்சேரியில் முன்பு ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த வீட்டை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலிசெய்து விட்டார். தற்போது அந்த வீட்டில், அவருடைய மகள் செந்தாமரை நடத்தும் சன்ஷைன் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூல் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது.

நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி பரிந்துரைத்துள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தில், இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வருடத்திற்கு ரூ. 24,000 கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு.

சென்னையில் உள்ள நர்சரி பள்ளிகளிலேயே மிக அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக செந்தாமரையின் பள்ளிக்கூடம் இதன் மூலம் உருவெடுத்துள்ளது. காரணம், வேறு எந்தப் பள்ளிக்கும் இவ்வளவு அதிக கட்டணம் பரிந்துரைக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துக் கூறிய தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், அதேசமயம், சிலபெரிய தனியார் பள்ளிகளுக்கு, உயர் நிலை வகுப்புகளுக்கு வெறும் ரூ. 4050 கட்டண உயர்வைத்தான் ரவிராஜ பாண்டியன் கமிட்டி அளித்துள்ளது.

ஒரு நர்சரிப் பள்ளிக்கு ரூ. 24,000 கட்டண உயர்வை அளித்துள்ள இந்தக் கமிட்டி, உயர் நிலை வகுப்புகளுக்கு ரூ. 4050 என கட்டணம் நிர்ணயித்திருப்பது மிகவும் பாரபட்சமானது. இது போக்கப்பட வேண்டும் என்றார்.

ஜெயலலிதா டில்லிக்கு அனுப்பிய மெசேஜ் !



தி.மு.க.வை மத்திய அரசிலுமிருந்து எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் அடுத்த மூவ். இதற்கான முன்னேற்பாடுகளில் ஒரு டீம் இறக்கிவிடப்பட்டுள்ளது.

“மத்திய அரசுக்கு, தமிழகத்திலிருந்து தேவையான சப்போர்ட்டை நாங்கள் செய்யத் தயாராக உள்ளோம். இனி, தி.மு.க.வின் உறவு உங்களுக்கு எதற்கு?” என்பதுதான், இந்த டீமுக்கு சென்னையிலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ள கோஷம். டில்லியில் காங்கிரஸ் புள்ளிகளைச் சுறுசுறுப்பாகச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது இந்த டீம்.

அ.தி.மு.க. தமிழகத்தில் என்னதான் சட்டசபைத் தேர்தலில் வாரிக் குவித்தாலும், டில்லியில் மத்திய அரசில் செல்வாக்கு இல்லாவிட்டால் அரசியல் செய்ய முடியாது என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். மத்திய அரசில் செல்வாக்கு என்பதை, ஆட்சியில் பங்கு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது, அ.தி.மு.க. வுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும்.

இதற்கு, மத்திய அரசிலிருந்து தி.மு.க.வை கழட்டிவிட வேண்டும். தி.மு.க.வை கூட்டாளியாக வைத்திருப்பதால், தமக்கு எதிர்காலத்தில் பெரிதாகப் பலனில்லை என்பதை, மத்திய அரசை உணர வைக்கவேண்டும்.

இதை, சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அ.தி.மு.க. டீம் எப்படிச் செய்யப் போகின்றது?

நாடாளுமன்றத்தில் தற்போது அ.தி.மு.க.வை விட, தி.மு.க.வே அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சி. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை இந்த எண்ணிக்கையை ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், ராஜ்யசபாவைப் பொறுத்தவரை, கதை அப்படியல்ல.

ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.யை நியமிக்க மாநில அளவில் 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. 23 எம்.எல்.ஏ.,க்களை மாத்திரமே பெற்றுள்ளது. இதை வைத்துக்கொண்டு, ஒரு ராஜ்யசபா எம்.பி.யைக்கூட டில்லிக்கு அனுப்ப முடியாது.

தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க., மூன்று எம்.எல்.ஏ.,களை வைத்திருக்கிறது. தனித்து இந்த மூன்று பேரையும் வைத்துக்கொண்டு, ராஜ்யசபாவில் செடிக்குத் தண்ணீர் வார்க்க ஒரு தோட்டக்காரரைக்கூட அனுப்ப முடியாது. தமிழக காங்கிரஸின் கதியும் அதுவே.

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க. தனது கூட்டணிக் கட்சியினரான காங்கிரஸ், பா.ம.க., எம்.எல்.ஏ.களை சேர்த்தால் கூட ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்வு செய்ய முடியாது.

ராஜ்யசபாவுக்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகன் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த இளவரசன், மைத்ரேயன் ஆகியோரின் பதவிக்காலம் 2013ல் முடிகிறது.

2014ல், தி.மு.க.வைச் சேர்ந்த அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசை சேர்ந்தவாசன், ஜெயந்திநடராஜன், மார்க்சிஸ்ட்கட்சியைச் சேர்ந்தடி.கே.ரங்கராஜன் ஆகியோருடன், அ.தி.மு.க.வை சேர்ந்த, பால் மனோஜ் பாண்டியனின் பதவிக் காலமும் முடிகிறது.

இதற்கான தேர்தல்களில், அ.தி.மு.க. முன்னிறுத்தும் வேட்பாளர்களே வெற்றி பெற முடியும். தி.மு.க., எவரையும் தனித்து வெற்றி பெறச் செய்ய முடியாது.

தமிழகச் சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில், அந்தக் கட்சி தற்போதைக்கு டில்லி ராஜ்யசபாவை மறந்துவிட வேண்டியதுதான். பாவம், டாக்டர் ராமதாஸ். அவரும் தனது இளவல் அன்புமணியை டில்லிக்கு அனுப்புவது பற்றி கனவுகூட காண முடியாது! (மகனுக்காக அ.தி.மு.க.வுக்கு தூதுவிட மாட்டாரா வைத்தியர் ஐயா?)

ராஜ்யசபா நிலைமை இப்படியிருக்க, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுகூட, தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி கிடைப்பது குதிரைக் கொம்புதான். மாநிலத்தில் ஆட்சியும் கையில் இல்லாமல், ஊழலில் பெயரும் கெட்டுப் போயிருக்கும் அந்தக் கட்சி, இனி தமிழகத்தில் மீண்டும் தலையெடுப்பது என்றால், ஏதாவது அதிசயம்தான் நடக்க வேண்டும்.

இதைத்தான் எடுத்துச் சொல்கிறது, ஜெயலலிதாவால் டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ள டீம்.

எவ்வளவு பேரைச் சந்திக்க முடியுமோ, அவ்வளவு காங்கிரஸ் பிரமுகர்களைச் சந்திக்குமாறு கூறப்பட்டே, இந்த டீம் டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களும் தங்களால் முடிந்தவரை காங்கிரஸ் முக்கியஸ்தர்களைச் சந்திக்கத் தொடங்கி உள்ளனர்.

காங்கிரஸ் பிரமுகர்களிடம் நிலைமையை விளக்கிவிட்டு, கடைசியாக இவர்கள் விடும் அஸ்திரம் என்ன தெரியுமா? இதோ, இதுதான்:

“அம்மா இப்போது காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிவரும் மனநிலையில் இருக்கிறார். அதை இப்போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து தி.மு.க.வுடன் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் எங்களிடம் வராதீர்கள். ஏனென்றால், அப்போது அம்மாவின் மனநிலை எப்படி இருக்குமென்று சொல்ல முடியாது!”

போட்டிருக்காங்க சார், செமையான ஒரு தூண்டில்!