Sunday, June 19, 2011

வி.ஐ.டி.யில் கிராமபுற மாணவர்கள் 62 பேருக்கு ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் இலவச கல்வி.


தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் வி.ஐ.டி.யில் பொறியியல் கல்வியை இலவசமாக பயிலுவதற்காக ஸ்டார்ஸ் எனும் திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3இடங்கள் பெறும் ஒரு மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு வி.ஐ.டி.யில் இலவசமாக பொறியியல் கல்வி பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களிலிருந்து 62 பேருக்கு வி.ஐ.டி.யில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.20லட்சம் வீதம் ரூ.1 கோடியே36 லட்சம் வி.ஐ.டி. நிர்வாகத்தில் செலவழிக்கப்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 190 மாணவ-மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு வி.ஐ.டி.யில் இலவச கல்வி பயிலுவதற்காக மாணவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கோவை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 மண்டலங்களில் கடந்த 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது.

இதையடுத்து ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் வி.ஐ.டி.யில் இலவச உயர்கல்வி பயிலுவதற்காக சேர்க்கை சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழை வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார். வி.ஐ.டி.துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.சம்பத், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், ஸ்டார்ஸ் திட்ட அலுவலர் தமிழ்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: