Saturday, March 19, 2011

திமுக தேர்தல் அறிக்கை.


திமுக தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் சனிக்கிழமை தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதி வெளியிட்டு அதனை வாசித்தார்.

அதன் முக்கிய அம்சங்கள் :

* கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்துவோம்.


* கிராமத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடத்த அனுமதியோம்.

* படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

* அரசு கல்லூரிகளில் படிக்கும் பி.சி., எம்.பி.சி. எஸ்.சி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

* தரமான இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

* அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீறுடை.

* அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை அறிமுகம் செய்து, கல்வித் தரத்தை உயர்த்துவோம்.

* தமிழகத்தில் பல்கலைக்கழகமே இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை எட்டுவோம்.

* தமிழகத்தில் வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தர ஏற்பாடு.

* மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துவோம்.

* வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களை குறிப்பிட்ட காலங்களுக்கு பொருளாதார ஏற்றம் பெற நடவடிக்கை.

* மகளிர் சுய உதவி கடன் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இதில், ரூ.2 லட்சம் மானியம்.

* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.

* கலைஞர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம் தொடரும்.

* தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

* பரம ஏழைகளுக்கு ரூ.1 அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு உள்ளூர் பேருந்தில் கட்டணமில்லா பயணம்.

* முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிக்கு மாத உதவித் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.

* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.

* மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு கிடைத்து வருகின்ற வரி வருவாய் நியாயமான முறையில் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி வர்த்தகர்கள் ஈடுபட அனுமதி இல்லை.

* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.

* திருக்குறளை தேசிய நூலாக்க பாடுபடுவோம்.

* மாநகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோவை, மதுரை நகரில் புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை.

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்போம்.

* புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.

* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.

* விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு செல்லாத வகையில் பாதுகாப்போம்.

* நகர்புறங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும்.

* திருச்சி, மதுரையில் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* மதுரையில் காசநோய் மருத்துவமனை.

* மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.

* எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள்.

* நடக்க முடியாத முதிய நோயாளிக்கு வீட்டிலேயே மருத்துவர் மூலம் சிகிச்சை பெற சிறப்பு நடவடிக்கை.

* மீனவர் நலனுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும்.

* தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காண மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

* சேது கால்வாய் திட்டத்தை முடிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

* முல்லைப் பெரியாறு, காவிரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு கண்டு தமிழக உரிமைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்.

* ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் ஆட்சியில் பங்கு கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தக் கூறுவோம்.

* தலித் கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர் பிரிவில் இடம்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி.

* திருநங்கைகள் சுய உதவிக் குழு அமைக்கப்படும்.



தீர்ப்புகள் விற்கப்படும் - ஊழல் மலிந்து விட்ட நீதித் துறை.


இந்தியாவில் அதிக அதிகாரம் படைத்த அமைப்புகளில் நீதிமன்றங்களும் அடக்கம். 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு மற்றும் மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் குறித்த வழக்குகளில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்ததே நீதிமன்றங்களின் அதிகாரத்திற்குச் சான்றாகும். இருப்பினும் சில நீதிமன்றங்களில் நீதி விற்கப்படுவதாக வெளியான செய்தியால் நீதித் துறையிலும் ஊழல் மலிந்து விட்டது எனச் சமீபகால நிகழ்வுகள் வலுப்படுத்துகின்றன.

அண்மையில் தெஹெல்கா பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாந்திபூஷனின் மகன் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 16 பேரில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று தெரிவித்துள்ளார். பிரசாந்த் பூஷன் மீது உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் பிரசாந்த் பூஷனின் தந்தை சாந்திபூஷன் தம்மையும் அந்த வழக்கில் இணைத்துக் கொள்ளுமாறு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மேலும் 8 ஊழல் நீதிபதிகள் குறித்த ஆதாரங்களையும் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார். இதிலிருந்து நீதித் துறையின் நம்பகத்தன்மையை நாம் எடை போட்டுக் கொள்ளலாம்

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா : 1984இல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான ஆய்வுக் கமிஷனின் தலைவராயிருந்தபோது காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தார். அதனாலேயே மக்களவை உறுப்பினராக்கப் பட்டார் (1990).

நீதிபதி கமல்நாரயண் சிங் : இறக்குமதிக்குத் தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்துகொள்ள ஜெயின் நிறுவனத்துக்கு ஆதரவாகப் பல உத்தரவுகள் பிறப்பித்தார். ஜெயின் நிறுவனத்துக்கு 5கோடி சுங்கவரி விதிக்கப்பட்டதை குறைத்து ஒரு சொற்பத் தொகையாக்கினார் (நவம்பர்-டிஸம்பர் 1991).

நீதிபதி அஹமதி: போபால் விஷவாயு வழக்கில் முதல் தீர்ப்பை மாற்றி, யூனியன் கார்பைடுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தார். பலனாக, அதன் அறக்கட்டளைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் (1994-1997).

நீதிபதி எம்.எம். பூஞ்சி: குற்றம் உறுதிசெய்யப்பட்ட ஒருவரின் வழக்கில், சட்டத்துக்கு எதிராக "சமரசம் ஏற்பட்டுவிட்டது" எனக்கூறி விடுதலை செய்தார் (ஜனவர்-அக்டோபர் 1990

நீதிபதி ஆனந்த்: ஜம்மு-கஷ்மீர் ஓட்டல் ஒன்றின் முதலாளி வழக்குக்கு இவர் 'உதவியதற்காக' ஓட்டல்காரருக்குச் சொந்தமான லட்சக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை ஆயிரக்கணக்கில் ஆனந்தின் மகன் விலைக்கு வாங்கினார் (1998-2001).

நீதிபதி சபர்வால்: சீல் வைக்கப்பட்ட டெல்லி வணிக வளாக வழக்கில், அதன் உரிமையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததற்காக டெல்லியின் நடுவில் அமைந்துள்ள கட்டடங்கள் சபர்வாலின் மகன் பெயருக்குக் குறைந்த விலையில் கைமாறின (2005-2007).

"உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 16பேரில் சரிபாதியினர் ஊழல் பேர்வழிகள்" என்று பிரஷாந்த் பூஷன் ஓர் ஆங்கில நாளிதழில் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். இவர், 1977-1979வரை நம் நாட்டின் சட்ட அமைச்சராகப் பதவி வகித்த சாந்தி பூஷனின் மகனாவார். "ராய்பரேலியில் இந்திரா காந்தி ஜெயித்தது செல்லாது" என்ற தீர்ப்பைப் பெறுவதற்கு வாதாடியவர் சாந்தி பூஷன்.

டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் டெல்லியின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவருமான விஜேந்தர் ஜெயினிடம் தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காக ஒருவர் ரூ 9 கோடி கொடுத்ததாக ஏர் இந்தியாவின் முன்னாள் தலைவர் சுனில் அரோரா, அரசியல் தரகர் நீரா ராடியாவிடம் கூறிய உரையாடலும் தற்போது வெளிவந்துள்ளது. பணம் பத்தும் செய்யும்; பணத்தால் எதையும் வாங்கலாம் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பணத்தைக் கொண்டு தீர்ப்பையே விலை கொடுத்து வாங்குவதை நம் கண்ணால் கண்டும் வருகிறோம்.

நில மோசடிப் புகாரில் சிக்கி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறும் வாய்ப்பை இழந்த கர்நாடக மாநில முன்னாள் தலைமை நீதிபதி தினகரன் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். தினகரனைச் சிக்கிம் மாநிலத் தலைமை நீதிபதியாக நியமித்தது தினகரனுக்கான தண்டனையா அல்லது சிக்கிம் மாநில மக்களுக்கான தண்டனையா எனத் தெரிய வில்லை. இது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டு வெளிவராமல் எத்தனை நீதிபதிகள் உள்ளனரோ?

வழக்கறிஞர்கள் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பை விலைக்கு வாங்கி அந்தப் பணத்தில் விலை உயர்ந்த சொகுசு கார்கள், ஆடம்பர பங்களாக்கள் என வாங்கி உல்லாசமாக வாழ்ந்து வருவதாக அலஹாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச் மீது உச்ச நீதிமன்றம் பரபரப்புக் குற்றசாட்டைக் கூறி இருப்பது தீர்ப்புகள் விலைக்கு விற்கப்படுவதை உறுதி செய்துள்ளது

நீதித் துறையில் பல கருப்பு ஆடுகள், அரசு தரும் வீட்டு மனைக்காகவும் சில அற்ப ஆதாயங்களுக்காகவும் தம் பதவியின் கண்ணியத்தை பணத்திடம் அடகு வைத்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால் நீதிமன்றம் சென்று முறையிடலாம். நீதிமன்றமே தவறு செய்தால் எங்கு சென்று முறையிடுவது? கறை படிந்த நீதிமன்றங்கள் கழுவப்பட வேண்டும். கருப்பு ஆடுகள் அகற்றப் பட வேண்டும். இல்லையேல் தீர்ப்புகள் பகிரங்கமாக விலை கூவி விற்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இது அவ்வளவும் அவுட்லுக் ஆங்கில இதழில் சந்தி சிரித்ததாகும்.


நன்றி: சமூகநீதி முரசு

திமுக, காங்கிரஸ், பாமக, வி.சி. - அதிமுகவோடு நேருக்கு நேர் மோதும் தொகுதிகள்.


தி.மு.க - அ.தி.மு.க. நேருக்கு நேர் மோதும் 83 தொகுதிகள் :-


1. ஸ்ரீரங்கம், 2. பொன்னேரி, 3. திருவள்ளூர், 4.அம்பத்தூர்,
5. மாதவரம், 6. திருவொற்றியூர், 7.டாக்டர்ராதாகிருஷ்ணன்நகர்,
8. வில்லிவாக்கம், 9. ஆயிரம் விளக்கு, 10. விருகம்பாக்கம்.
11. சைதாப்பேட்டை, 12. பல்லாவரம், 13.தாம்பரம், 14. உத்திரமேரூர்,
15. காட்பாடி, 16. ராணிப்பேட்டை, 17. விழுப்புரம், 18. விக்கிரவாண்டி,
19. சங்கராபுரம், 20. ஏற்காடு. 21. சேலம் மேற்கு, 22. சேலம் தெற்கு,
23. வீரபாண்டி, 24. ராசிபுபரம், 25. குமாரபாளையம், 26. ஈரோடு கிழக்கு,
27. தாராபுரம், 28. அந்தியூர், 29. மேட்டுப்பாளையம், 30. கோவை வடக்கு
31. திருப்பூர் வடக்கு. 32. கவுண்டம்பாளையம், 33. கோவை தெற்கு,
34.கிணத்துக்கடவு, 35. மடத்துக்குளம், 36. பழனி, 37. ஒட்டன்சத்திரம்,
38. நத்தம், 39. கடலூர், 40. அரவக்குறிச்சி, 41. கிருஷ்ணராயபுரம்.
42. குளித்தலை, 43. திருச்சி மேற்கு, 44. திருச்சி கிழக்கு,
45. திருவெறும்பூர், 46. பெரம்பலூர், 47. குறிஞ்சிப்பாடி, 48. கீழ்வேலூர்,
49. மன்னார்குடி, 50. திருவாரூர். 51. நன்னிலம், 52. கம்பம்,
53. கும்பகோணம், 54. திருவையாறு, 55. ஒரத்தநாடு, 56. கந்தவர் கோட்டை
56. விராலிமலை, 57. புதுக்கோட்டை, 58. திருப்பத்தூர், 59. மானாமதுரை,
60. மதுரை மத்தி. 61. மதுரை மேற்கு, 62. திருமங்கலம், 63. உசிலம் பட்டி,
64. ஆண்டிப்பட்டி, 65. பெரியகுளம், 66. போடி நாயக்கனூர், 68. ராஜபாளையம்,
69. ஸ்ரீவில்லிபுத்தூர், 70. சாத்தூர். 71. சிவகாசி, 72. அருப்புக்கோட்டை,
73. முதுகுளத்தூர், 74. தூத்துக்குடி, 75. திருச்செந்தூர், 7 6. ஒட்டப்பிடாரம்,
77. சங்கரன்கோவில், 78. தென் காசி, 79. ஆலங்குளம், 80. திருநெல்வேலி.
81. அம்பாசமுத்திரம், 82. கன்னியாகுமரி, 83.நாகர்கோவில்.


அதிமுக - காங்கிரஸ் : நேருக்கு நேர் மோதும் 42 தொகுதிகள்

1. பூந்தமல்லி, 2. ஆவடி, 3. திரு. வி. க. நகர், 4. ராயபுரம், 5. அண்ணாநகர், 6.ஆலந்தூர், 7. மயிலாப்பூர், 8. தியாகராய நகர், 9. கிருஷ்ணகிரி10.ஸ்ரீபெரும்புதூர் 11 மதுராந்தகம். 12. வேலூர், 13.கலசப்பாக்கம், 14.சேலம் வடக்கு, 15.ஈரோடு மேற்கு 16. ஊட்டி, 17.மொடக்குறிச்சி,1 8.தொண்டாமுத்தூர், 19.சிங்காநல்லூர், 20. திருப்பூர்தெற்கு 21.காங்கேயம், 22. அவினாசி, 23. வேடசந்தூர், 24.கரூர், 25. மணப்பாறை, 26. முசிறி, 27. திருத்துறைப்பூண்டி, 28. பாபநாசம்,29.திருமயம், 30. காரைக்குடி. 31. சிவகங்கை, 32. மதுரை தெற்கு, 33 . திருப்பரங்குன்றம் 34. விருதுநகர், 35.பரமக்குடி, 36.விளாத்திக்குளம், 37. குளச்சல் 38. ராதாபுரம், 39. ஸ்ரீவைகுண்டம், 40. நாங்குநேரி, 41. கடையநல்லூர், 42.வாசுதேவநல்லூர்.


அதிமுக - பா.ம.க. : நேருக்கு நேர் மோதும் 19 தொகுதிகள்

1. திருப்போரூர், 2. செங்கல்பட்டு, 3. காஞ்சீபுரம்,4.ஜோலார்பேட்டை,
5.செஞ்சி, 6.மயிலம், 7.ஒமலூர், 8. எடப்பாடி, 9. பவானி, 10. பூம்புபுகார்,
11. திண்டுக்கல், 12. ஆலங்குடி, 13. பர்கூர், 14. வேளச்சேரி,
15. கும்மிடிப்பூண்டி, 16.கோவில்பட்டி, 17. திண்டுக்கல், 18. சோழவந்தான்,
19. பால்கோடு.


அதிமுக - வி.சி. : நேருக்கு நேர் மோதும் 7 தொகுதிகள்

1.சோழிங்கநல்லூர், 2.உளுந்தூர்பேட்டை, 3.செய்யூர், 4. ஊத்தங்கரை
5. கள்ளக்குறிச்சி, 6. சீர்காழி, 7. அரூர்,.