Sunday, April 24, 2011

கன்னிமாரா நூலகத்தில் அரிய புத்தகங்கள் டிஜிட்டல் மயம்.சென்னை கன்னிமாரா நூலகத்தில் அரிய நூல்கள் கண்காட்சியை சனிக்கிழமை தொடங்கிவைத்துப் பார்வையிடுகிறார் பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.சபிதா.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அரிய, பழமையான புத்தகங்கள் அனைத்தும் விரைவில் டிஜிட்டல்மயமாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் டி.சபிதா கூறினார்.

உலகப் புத்தக தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் அரிய, பழமையான புத்தகங்களின் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. கி.பி. 1608-ல் பதிப்பிக்கப்பட்ட பைபிள் முதல் நூறாண்டுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட நூல் வரை ஏறத்தாழ 400 புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து சபிதா கூறியது:

கன்னிமாரா நூலகத்தில் 1.25 லட்சம் அரிய நூல்கள் உள்ளன. இந்த நூல்களை குறிப்பெடுக்கப் பயன்படுத்தும்போது சேதமடைய வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில், நூலகத்துக்கு வருவோருக்கும் அதிக நேரம் செலவாகிறது. இதைத் தவிர்ப்பதற்காக அரிய நூல்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உதவியுடன் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 ஆயிரம் நூல்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஒரு மாதத்துக்குள் மீதமுள்ள புத்தகங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு, இணையத்தில் டிஜிட்டல் பதிப்புகள் வெளியிடப்படும்.

எஸ்.எம்.எஸ். சேவை அறிமுகம்: கன்னிமாரா நூலக வாசகர்களுக்காக புதிய எஸ்.எம்.எஸ். சேவையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, கன்னிமாரா நூலக இணையதளத்தில் தங்களது செல்போன் எண்களைப் பதிவு செய்த பிறகு, எஸ்.எம்.எஸ். மூலமே புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்கும் தேதியை நீட்டிக்கலாம்.

இதன் மூலம் நூலகத்தின் பணிச் சுமையைக் குறைக்கலாம் என்றார் அவர்.

ஃபயர் ஃபாக்ஸ்ஸில் யூ டியூப் வீடியோக்களை மிக எளிதாக டவுன் லோட் செய்யம் வழி முறை.


ஃபயர் ஃபாக்ஸ்ஸில் யூ டியூப் வீடியோக்களை மிக எளிதாக டவுன் லோட் செய்ய கீழ் கண்ட வழி முறையை உங்கள் ஃபயர் ஃபாக்ஸ் உலாவியில் நிறுவினால் YOU TUBE வீடியோக்களை mp4,flv,mp3,HD flv முறைகளில் Download செய்யலாம் .

ADD ON ஐ நிறுவ இங்கே கிளிக் செய்யவும் .
https://addons.mozilla.org/en-US/firefox/addon/easy-youtube-video-downl-10137/

பயன்படுத்திப் பார்த்தேன் மிகச் சிறப்பாய் இருந்தது.

எனவே நீங்களும் பயன்படுத்திப் பாருங்களேன்.

koodalbala.blogspot.com

குரூப் -2 தேர்வு தள்ளிவைப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த டிசம்பர் மாதம் குரூப் -2 தேர்வை அறிவித்தது.

இதில், உதவி வணிக வரி அலுவலர், சப்&ரிஜிஸ்டர் கிரேடு 2, உதவி தொழிலாளர் ஆய்வாளர், நகராட்சி கமிஷனர் (கிரேடு 2), பைனான்ஸ் அசிஸ்டென்ட் ஆபிசர், டிஎன்பிஎஸ்சி அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர், ஜுனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபிசர், கோ-ஆப்ரெட்டிவ் சொஸைட்டி சீனியர் இன்ஸ்பெக்டர், ஜூனியர் கோ-ஆப்ரெட்டிவ் ஆடிட்டர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட 37 பதவிகள் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் 4,384 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 10 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கிடையில் இந்த குரூப்-2 தேர்வு நடைபெறும் அதே நாளில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தும் பட்டதாரிகளுக்கான போட்டி எழுத்து தேர்வு மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தகுதி (ஸ்லெட்) தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

எனவே, அன்றைய தினத்தில் நடக்க இருந்த குரூப்-2 தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று பட்டதாரிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஏற்று குரூப்-2 தேர்வு தேதியை தள்ளி வைத்துள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணியாளர் தேர்வாணையக் குழுமம் (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மற்றும் ஸ்லெட் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வேண்டுகோளின் அடிப்படையில், அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான (குரூப்-2) போட்டி தேர்வு ஜூன் 19ம் தேதிக்கு பதிலாக, ஜூலை 3ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ATM இல் நமக்கு தெரியாத ஒரு செய்தி.


நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது எதிர்பாராதவிதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய வேண்டும்.

நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -ய் தலைகீழ் மார்க்கமாக Enter செய்யுங்கள்.

எடுத்துகாட்டாக:

உங்களுடைய PINNumber 1234 என்றால் 4321 என்று Enter செய்யுங்கள்.

இவ்வாறு உங்கள் PINNumber type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு மட்டுமில்லாமல் ஓசைபடாமல் போலீஸ்-க்கும் தகவல் அளித்துவிடும் .

அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று.

தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள்.

நன்றி-inayamthahir.blogspot.com

எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்துக்கு உலகளவில் தடை வருமா?


உடல் நலனுக்கு பெரும் கேடு விளைவிக்கும் எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்துக்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்க ஜெனீவாவி்ல் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி பன்னாட்டு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

ஸ்டாக்ஹோம் கன்வென்சன் என்று அழைக்கப்படும் இக் கூட்டத்தில் இந்த மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டால், உலகம் முழுவதும் இந்த மருந்து உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் இந்த மருந்துக்கு தடை விதிப்பதை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மிகச் சிறந்த பூச்சிக் கொல்லியான இந்த மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டால் தங்கள் நாட்டு விவசாயமே அடியோடு பாதிக்கப்படும் என இந்த நாடுகள் கூறுகின்றன.

இதனால் இந்த மருந்துக்குத் தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. உலகில் 70 சதவீத எண்டோசல்பான் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மிச்சமுள்ள 30 சதவீதத்தை பிரேசிலும் இஸ்ரேலும் தயாரிக்கின்றன.

இந் நிலையில் இந்த மருந்தை ஒழித்துக் கட்டிவிட்டு, தங்கள் நாட்டு விலை உயர்ந்த மருந்துகளை வளரும் நாடுகளின் தலையில் கட்ட ஐரோப்பிய நாடுகள் முயல்வதாகவும், இதனால் தான் இந்த மருத்துக்கு தடை விதிக்க முயல்வதாகவும் இந்திய எண்டோசல்பான் மருந்து உற்பத்தியாளர்கள் புகார் கூறுகின்றனர்.

எண்டோசல்பான் மருந்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான். ஆனால், அந்த நிறுவனம் இப்போது இந்த மருந்தை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. காரணம், அந்த நிறுவனத்தைவிட விலை குறைவாக இந்தியா இந்த மருந்தைத் தயாரிப்பது தான். இப்போது அந்த நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. அதை வளரும் நாடுகள் மீது திணிக்கவே, எண்டோசல்பான் மீதான தடையை அந்த நிறுவனமே ஆதரித்து வருகிறது என்று இந்திய பூச்சி மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் தாவே கூறியுள்ளார்.

ஒரு லிட்டர் எண்டோசல்பானில் விலை ரூ. 286 ஆகும். ஆனால், இதற்குப் பதிலாக ஐரோப்பிய நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பூச்சி மருந்தின் விலை லிட்டர் ரூ. 2,000ல் இருந்து ரூ. 13,000 வரை இருக்கும் என்கிறார்கள்.

தடை விதிக்க கேரள முதல்வர் கோரிக்கை:

இந் நிலையில் எண்டோசல்பானுக்கு தடை விதிப்பதில் பிரதமர் மன்மோகன் சிங் மெத்தனமாக செயல்படுவதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், எண்டோசல்பான் பூச்சி மருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கண்களைக் மூடிக்கொண்டுள்ளது. அந்த மருந்துக்கு தடை விதிக்க உடனடியாக அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டும்.

எண்டோசல்பானுக்கு தடை விதிக்க கூடுதல் ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் கருத்துக்களையே பிரதமரும் தெரிவித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச்சூழலுக்கு எதிரானவர் மட்டுமல்ல மக்களுக்கும் எதிரானவர்.

இந்த பூச்சி மருந்து தெளிக்கப்பட்டதில், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். ஏராளமானோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் 11 பஞ்சாயத்து பகுதிகளும், கர்நாடகத்தில் 96 கிராமங்களும் இந்த பூச்சி மருந்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு பூச்சி மருந்து நிறுவனத்துக்கு குரல் கொடுக்காமல் உடனடியாக மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.

எண்டோசல்பானுக்கு தடை விதிக்குமாறு கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

thatstamil.oneindia.in

சாய்பாபா சில குறிப்புகள்.


சாய்பாபாவின் சரித்திரம்: சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன.

சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

பொன் மொழிகள்

அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.

படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.

தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.

பாபாவின் சேவைகள்...

பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.

உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

இது தினமலரின் கருத்து.

சாய்பாபா இன்று காலை காலமானார்.


உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 85 .

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத் திணறல், இருதயக் கோளாறு காரணமாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார்.

அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர். பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அவரது சுவாச உறுப்புகள் செயலிழந்ததால், 7.40 மணிக்கு பாபாவின் உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக சாய் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர். அதற்கு முன்பாகவே ஆந்திரப் பிரதேச முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஏற்பாடு செய்த பிறகே, அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

பாபாவின் மரணம் குறித்த செய்திகள் முன்கூட்டியே பரவ ஆரம்பித்ததால், புட்டபர்த்தி மற்றும் அனந்தபூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 6,000க்கும் அதிகமான போலீசார் புட்டபர்த்தியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் யாரும் சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சாய்ட்ரஸ்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே அனுமதிக்கப்படவில்லை. யாரும் மருத்துவமனை அருகில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரசாந்தி நிலையத்தில் மரியாதை செலுத்த...

'பாபாவின் உடலை விட்டு உயிர் பிரிந்துள்ளது. ஆனால் அவரது ஆன்மா இந்த மக்களிடையேதான் உள்ளது', பிரசாந்தி நிலையம் அறிவித்துள்ளது.

சாய்பாபாவின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் பிரசாந்தி நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாட்கள் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது.

பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான விவிஐபிக்கள் புட்டபர்த்திக்கு வரவிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நான்கு லட்சம் பக்தர்கள்

உலகம் முழுவதிலுமிருந்து 4 லட்சம் பக்தர்கள் பாபாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

சாய்பாபாவின் மரணத்தையடுத்து ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.


மாணவிகளுக்கு பில்லி சூனியம் வைத்ததாக 6 பெண்களை மனித கழிவு சாப்பிட வைத்து தண்டனை.

மாணவிகளுக்கு பில்லி சூனியம் வைத்ததாக 6 பெண்களை மனித கழிவு சாப்பிட வைத்து தண்டனை: 2 நாட்களாக நிற்க வைத்து சித்ரவதை

ஒரிசா மாநிலத்தில் உள்ள குக்கிராமமான சுனா முண்டாவில் உயர்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பரீட்சை நடந்தபோது சுனா முண்டா மற்றும் பல்சா குதார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 13 மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. அந்த மாணவிகளுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் போல் அவர்கள் நடந்து கொண்டனர்.

இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோர் டாக்டர்களிடம் அழைத்துச்சென்று மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். என்றாலும் அவர்கள் குணமடையாததால் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். அவர் மாணவிகளுக்கு சிலர் பில்லி சூனியம் வைத்து இருப்பதால் பேய் பிடித்து இருப்பதாகவும் மந்திர கட்டில் மூலம் யார் சூனியம் வைத்தார்கள் என்பதை கண்டுபிடித்து விடுவதாகவும் கூறினார்.

இதையடுத்து கட்டாக் நகரில் இருந்து அந்த மந்திரவாதி ஒரு கட்டில் வாங்கி வந்து இதுதான் மந்திரகட்டில் என்று கூறி மாணவிகளின் பெற்றோரை நம்ப வைத்தார். 13 மாணவிகளையும் வரவழைத்து மந்திரவாதி பூஜை செய்தார். டாக்டர்களால் முடியாததை மந்திரவாதி செய்து விடுவார் என்று நம்பிய பெற்றோருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

மாணவிகளுக்கு உடல்நலம் குணமாகவில்லை. மேலும் அதே ஊரைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் மீது பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள்தான் பில்லி சூனியம் வைத்து இருக்கலாம் என்று கருதி கிராமமக்கள் திரண்டு சென்றனர்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த மதுசூதன் ரானா, அவரது மனைவி நிர்மலா, மகள் சந்தியா, ஈஸ்வர் அவரது மனைவி தலிம்பா, மகள்கள் கமலா, ஹேமலதா, துகி ஆகிய 8 பேரை பிடித்து வந்து ஊருக்கு நடுவில் நிற்க வைத்தனர். அவர்களை பன்றி மற்றும் மனித கழிவுகளை சாப்பிட வைத்து சித்ரவதை செய்தனர்.

2 நாட்களாக அங்கேயே நிற்க வைத்து கொடுமைப்படுத்தினார்கள். இதன்மூலம் அவர்கள் வைத்த பில்லிசூனியத்தின் சக்தி குறைந்து விடும் என்று நம்பினார்கள்.

கிராம மக்களிடம் இருந்து தப்பிய ரானா இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று கிராமமக்களிடம் இருந்து 2 குடும்பத்தினரையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தப்பி ஓடியபோது போலீஸ்நிலையத்தில் தவறுதலாக புகுந்து சிக்கிய திருடர்கள்.

தப்பி ஓடியபோது போலீஸ்நிலையத்தில் தவறுதலாக புகுந்து சிக்கிய திருடர்கள்

டெல்லியில் வழிப்பறி திருடர்கள் தப்பி ஓடிய போது தவறுதலாக போலீஸ் நிலையத்தில் புகுந்ததால் சிக்கினார்கள். டெல்லியைச் சேர்ந்த வழிப்பறி திருடர்கள் தீபக், ரவீந்தர். இருவரும் நண்பர்கள். தனியாக வருவோரை குறிபார்த்து இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டனர். இவர்களை டெல்லி முழுவதும் போலீசார் தேடி வந்தனர்.

நேற்று மாலை இருவரும் டெல்லி பஞ்சாபிபாக் பகுதியில் நோட்டமிட்டபடி சென்றனர். அங்கு சிவாஜி பார்க் என்ற பூங்காவில் ஹீராபால் (20) என்பவர் தனியாக சென்று கொண்டிருப்பதை பார்த்தனர். உடனே தீபக்கும், ரவீந்தரும் அவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். உடனே ஹீராலால் அடிதாங்க முடியாமல் கீழே விழுந்து படுத்து இறந்த வர்போல் நடித்தார்.

இதனால் பயந்து போன வழிப்பறி திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் ஹீராலால் எழுந்து அங்கிருந்த பொது மக்களுடன் சேர்ந்து வழிப்பறி திருடர்களை துரத்தினார். இருவரும் நீண்ட தூரம் ஓடியபின்பு களைத்துப்போய் ஒரு தெருவில் நுழைந்தனர். அது ஒரு முட்டுச் சந்தில் முடிந்தது. அப்போது பின்னால் ஹீராலாலும், பொதுமக்களும் துரத்தி வருவதை பார்த்தனர்.

அவர்கள் கையில் சிக்கினால் ஆபத்து என்று கருதிய வழிப்பறி திருடர்கள் எதிரில் இருந்த பெரிய சுவரில் தாவி ஏறி குதித்தனர். குதித்த பிறகுதான் தெரிந்தது அது டெல்லி மேற்கு பகுதி போலீஸ் நிலையம் என்று. உடனே அங்கிருந்த போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டனர். விசாரணையில் அவர்கள் போலீஸ் தேடும் வழிப்பறி திருடர்கள் என்று தெரியவந்தது. இதற்குள் ஹீராலாலும், பொதுமக்களும் அங்கு வந்து நடந்த விவரத்தை போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பெண்கள் சாப்பிடும் “கருத்தடை மாத்திரைகள் ரத்தத்தை உறைய செய்யும்”

பெண்கள் சாப்பிடும் “கருத்தடை மாத்திரைகள் ரத்தத்தை உறைய செய்யும்”

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1980-ம் ஆண்டில் புதிய கருத்தடை மாத்திரைகளை தயாரித்தனர். அவை “மூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை” என அழைக்கப்படுகிறது.

இவை இதற்கு முன்பு பெண்களால் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைவிட ஆபத்தானது. இது ரத்தத்தை உறைய செய்யக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நிபுணர்கள் 2 ஆய்வுகள் நடத்தினர். அதில் மேற்கண்ட தகவல் தெரிய வந்துள்ளது.

ரத்தம் உறைவதால் சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே டாக்டர்கள் பரிந்துரையின் பேரில்தான் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மாமரத்தில் காய்கள்.


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்திருக்கோவில் அமைந்துள்ள இடத்துக்கு சிவகாஞ்சி என்ற சிறப்பு பெயரும் உண்டு. இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் திருநாமம்-ஏகாம்பரநாதர், இறைவியின் திருநாமம்-ஏலவார்குழலி.

ஏகம் என்றால் ஒன்றானவன். தன்னிகரற்ற தலைவன். ஆம்பரம் என்றால் மாமரம். ஒற்றை மாவின் மூலத்திலிருந்து தோன்றியவன் என்பதால் இப்பெயர் வழங்கலாயிற்று.

இக்கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள மாமரம் 3,500 ஆண்டுகளுக்கு மேலானதாகும். இந்த மரத்தின் 4 கிளைகளிலும் 4 விதமான ருசியும் (இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு), 4 உருவ வடிவங்களும் கொண்ட மாங்கனிகள் கிடைத்து வந்தன.

இந்த மரத்தின் அடியில்தான் காமாட்சியம்மன் தவம் செய்து, மண்ணால் சிவலிங்கத்தை செய்து, அவரையே திருமணம் செய்தார் என்பது ஐதீகம். இதனால் இந்த புண்ணிய மாமரம் அருகே பல ஆண்டுகளாக பொதுமக்கள் தங்களது வீட்டு திருமணங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மாமரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப் போனது. அரசு உத்தரவின்படி வேளாண்மைத் துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர், இக்கோவிலில் முகாமிட்டு பட்டுப் போன மாமரத்திற்கு உயிர் கொடுக்க கடும் முயற்சி செய்தனர்.

கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி இதற்கான முயற்சிகள் தொடங்கின. அந்த முயற்சி வெற்றியடைந்து, அதே மரத்தினுடைய உயிரணுக்கள் மூலம் மாமரம் உருவாக்கப்பட்டது. அந்த மரம் தற்போது பச்சைப் பசேல் என மீண்டும் வளர்ந்து புத்துயிர் பெற்று காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இந்த மாமரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கின. தற்போது மாங்காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. ஒரு சில காய்கள் கனியத் தொடங்கியுள்ளது.

3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த அதிசய மாமரத்தில் பல்வேறு ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் காய்க்கத் தொடங்கியுள்ள மாங்கனிகளை பார்ப்பதற்காக இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் திரளான பக்தர்கள் இக் கோவிலுக்கு வந்திருந்து, ஏகாம்பரநாதரையும், ஏலவார் குழலியையும் தரிசித்து, அதிசய மாமரத்தை கண்டு களித்து செல்கின்றனர்.