Monday, July 25, 2011

அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள் !
மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடைகளின் உறுப்புகள், ரத்தம் மற்றும் திரவங்கள், அவற்றைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு உள்ளிட்ட திடப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த ஆய்வகக் கண்ணாடிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கழிவுகளாக நாள்தோறும் வெளியேறுகின்றன.

மாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியேறும் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவற்றை அழிக்கும் முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மனிதஉள்ளுறுப்புகளின் கழிவுகள், திசுப் பகுதிகள், கால்நடை மருத்துவமனைகளில் வெளியாகும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு பொசுக்க வேண்டும் அல்லது ஆழமான குழியில் புதைக்க வேண்டும்.

நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், மனித மற்றும் விலங்கு செல்களின் “கல்சர்’ பொருள்கள் போன்றவற்றை “ஆட்டோ கிளேவ் அல்லது மைக்ரோ வேவ்’ ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.

கூர்மையான ஊசிகள், கத்திகள், கண்ணாடி- கண்ணாடித் துகள்கள் ஆகியவற்றை உடைத்துத் தூளாக்கி அழிக்க வேண்டும். காலக்கெடு முடிந்த மருந்துப் பொருள்களை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆழமான குழியில் இட்டு அழிக்க வேண்டும்.

ரத்தத்தால் மாசுபட்ட பொருள்கள், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் துடைக்கப்பட்ட பஞ்சு, காரத்துணி, அழுக்கான துணிகள், படுக்கைகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆட்டோகிளேவ், மைக்ரோ வேவ் ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல… மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் திரவக் கழிவுகளையும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கழிவுநீர்க் கால்வாய்களில் வெளியேற்ற வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக எச்சரிக்கின்றன.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் நகராட்சிக் கழிவு உரக் கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் நீள்கின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன? சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகளின்படி, விதிகளை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகும் விதிமீறல் தொடரும் என்றால், ஒவ்வொரு நாளைக்கும் ரூ. 5000 வீதம் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது. ஆனால், மாநிலத்தின் எந்த ஒரு தனியார் மருத்துவமனை மீதும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், எல்லா நகரங்களிலும் குப்பைக் கழிவுகளுக்கிடையே பஞ்சுகளையும், சிரிஞ்சுகளையும் மிகச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறதே எப்படி?

அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை அளிக்கவும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இவை எதுவும் மாநிலத்தின் எந்த மூலையிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

மாநிலத்தின் 5 மையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, கழிவுகளைப் பெற்று, அழிக்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிடையாது. இதற்கென அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை. ஏற்கெனவே இவர்கள் செய்து வந்த அரைகுறை முறையும் சுகாதாரமற்றது என்று தடை செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில், உலக வங்கியின் உதவியுடன் “சுகாதார முறைகளை மேம்படுத்தும் திட்டம்’ தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, மாவட்டத்திலுள்ள அரசு மருத்துமனைக் கழிவுகளை தனியாரிடம் ஒப்படைத்து அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

என்றாலும், திட்டங்கள் தொடங்கப்படும் போது இருக்கும் வேகம் நிறைவு பெறும் போதும் அதே அளவுக்கு வேகத்துடன், எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுத்தப் படுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

தமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கும்போது அப்போதுமட்டும் “மூக்கைப் பொத்திக் கொண்டு’ செல்லும் நம்மவர்களின் மன நிலை மாற வேண்டும்.

சுருங்கச் சொல்லவேண்டுமானால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை.

சா. ஜெயப்பிரகாஷ்.

2 ஜி ஊழல் : ராசாவின் வாதங்களை ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது - கபில்சிபல்.

2 ஜி ஊழல்: ராசாவின் வாதங்களை ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது-கபில்சிபல்

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மாஜி தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா டெல்லி நீதிமன்றத்தில் இன்று வாதாடினார். அப்போது 2 ஜி விவகாரத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை, மேலும் அவர், தான் எடுத்த தொலைத்தொடர்புத் துறை தொடர்பான நடவடிக்கைகள் தவறு என்றால் கடந்த 1993-ஆம் ஆண்டில் இருந்து தொலைத்தொடர்பு மந்திரிகளாக இருந்தவர்கள் அனைவரும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்.

கடந்த பாரதீய ஜனதா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையே நானும் பின்பற்றினேன் என்று கூறினார் ஆ.ராசாவின் வாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில், நாளையும் வாதங்கள் தொடர உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் நீதிமன்றத்தில் ராசா கூறும் வாதங்களை ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் ரூ.11 ஆயிரம் கோடி கறுப்பு பணம் ; வேறு நாட்டு வங்கிகளுக்கு மாற்றம்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் ரூ.11 ஆயிரம் கோடி கறுப்பு பணம்;     பாதுகாப்புக்காக வேறு நாட்டு வங்கிகளுக்கு மாற்றம்

இந்திய அரசியல் தலைவர்கள் பலர் ஊழல் மூலம் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர். இதேபோல் இந்திய தொழில் அதிபர்கள் பலர் வரிஏய்ப்பு செய்த பணத்தை அங்குள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அந்த கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாபா ராம்தேவ், அன்னாஹசாரே போன்ற சமூக சேவகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க கோரி டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய பாபா ராம்தேவை போலீசார் பலவந்தமாக விரட்டி அடித்தனர். இதனால் டெல்லி மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் கறுப்பு பணம் இருப்பது தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சுவிஸ் நேஷனல் வங்கியில் இந்தியர்கள் அதிக அளவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்து உள்ளனர். அந்த வங்கியின் செய்தி தொடர்பாளர் வால்டர்மீர் கூறும்போது, இந்தியர்கள் 2.1 பில்லியன் டாலர்களை சேமிப்பு கணக்கில் போட்டுள்ளனர்.

சுவிட்சர் லாந்தில் உள்ள யு.பி.எஸ். மற்றும் கிரடிட்சூசி ஆகிய வங்கிகளில்தான் அதிக பணம் டெபாசிட் செய்துள்ளனர். இந்திய பத்திரிகைகளில் இந்தியர்கள் பல லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இது துளி அளவு கூட உண்மை இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக எங்களது வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண டெபாசிட் குறைந்து விட்டது என்றார்.

இந்தியாவில் கறுப்பு பணத்தை மீட்கும் போராட்டம் வெடித்திருப்பதால் சுவிஸ் வங்கிகள் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்நாள் வரை இந்திய அரசியல் தலைவர்கள் ஊழல் மூலம் சம்பாதித்த பணம் முழுவதையும் அங்குள்ள வங்கிகளில் டெபாசிட் செய்தனர். அவற்றை அந்த வங்கிகள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய தொழிற்சாலைகள் அமைக்க வட்டிக்கு பணம் வழங்கி வந்தது. இதன்மூலம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்து வந்தன.

தற்போது இந்தியர்கள் பணம் குறைந்து வருவதால் அந்த வங்கிகள் கலக்கம் அடைந்துள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு இந்தியர்கள் 3 பில்லியன் டாலர்களை சுவிஸ் வங்கியில் செலுத்தினர். 2009-ல் அது 2.7 பில்லியன் டாலர்களாக குறைந்தது. 2010-ல் 2.5 பில்லியன் டாலராக (ரூ.11,000 கோடி) குறைந்துள்ளது.

இந்தியர்களின் சுவிஸ் வங்கி கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டால் தாங்கள் பணம் பறிபோய் விடுமே என்று இங்குள்ள தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் அவசர அவசரமாக சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை எடுத்து சிங்கப்பூர், மொரீசியஸ். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். இந்திய தலைவர்கள் கறுப்பு பணத்தை டெபாசிட் செய்ய மொரீசியஸ் நாடு மிகவும் ஆர்வம் காட்டுகிறது.

இந்த கறுப்பு பணத்தை கொண்டு அந்நாட்டில் பல்வேறு தொழில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி முன்னேற முடியும் என்று அந்நாட்டு தலைவர்கள் கருதுகிறார்கள். இதனால் இந்திய தலைவர்களுக்கு சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகள் தொடர்ந்து வலைவிரித்து வருகிறார்கள்.

ராசா சொல்வது பொய்... நான் எந்த அனுமதியும் தரவில்லை ! - ப.சிதம்பரம்.2 ஜி விவகாரத்தில் அனைத்தும் பிரதமர் முன்னிலையில் நடந்ததாகவும், டிபி ரியாலிட்டியின் பங்குகளை மாற்ற அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமே அனுமதி அளித்தார் என்றும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா கூறியுள்ளதை மறுத்துள்ளார் ப.சிதம்பரம்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, இன்றைய விசாரணையின்போது, "யூனிடெக், டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை சட்டப்படியே நடந்தன. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. யூனிடெக் நிறுவனத்தின் பங்குகளை டெலிநார் வாங்கியதும் சட்டப்படிதான்.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளை எடில்சாட் நிறுவனம் வாங்குவதற்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்றார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த வழக்கில் நேரடியாக இழுக்கப்பட்டுள்ளனர்.

ப.சிதம்பரம் மறுப்பு:

இந்த நிலையில், ராசா கூறியது குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், யுனிடெக் மற்றும் ஸ்வான் டெலிகாம் பங்குகளை விற்க நான் அனுமதி தரவில்லை, என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

2007ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது, என் பரிசீலனைக்கு வந்தது டிபி ரியலிட்டி பங்குகள் விற்பனையல்ல. யுனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய இரு புதிய டெலிகாம் நிறுவனங்கள் இருக்கிற பங்குகளை விற்கின்றவா அல்லது புதிய பங்குகளை வெளியிடுகின்றனவா என்பதை மட்டுமே நான் பரிசீலித்தேன்.

மேலும் ஆரம்பத்திலிருந்தே, 2ஜி லைசென்சுக்கான ஆரம்பக் கட்டணம் 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவே இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் நிதியமைச்சகம்தான் ஏலம் விட்டு அதிக நிதியை ஈட்டலாம் என யோசனை கூறி வந்தது.

ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்கள் முதலில் 2ஜி லைசென்ஸ் பெற்றுக் கொண்டன. அதன் பிறகே புதிய/ வெளிநாட்டுப் பங்குதாரரை சேர்த்துக் கொண்டன. இதற்கு அனுமதி தந்தது தொலைத் தொடர்புத் துறையாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி பங்குதாரரை சேர்த்துக் கொண்டது எப்படி என்பதை மட்டுமே நிதியமைச்சகம் பரிசீலித்தது. இதைத் தெரிந்து கொள்ள பிரதமரும் விரும்பினார்.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற பிறகே அந்த நிறுவனங்களில் புதிய கூட்டாளிகள் இணைந்தனர். புதிய பங்குகள் வெளியீடு மூலம் அவர்களைச் சேர்த்துக் கொண்டன ஸ்வான், யூனிடெக் என்பதையும் நான் பிரதமருக்கு விளக்கினேன் என்று கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தனர். வேண்டுமானால் பிரதமர் மறுத்துப் பார்க்கட்டும்.- ஆ.ராசா பரபரப்பு வாதம்.ராசா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து தானே வாடினார். தனக்காக வாதாட அவர் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவில்லை. சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற அவர் தனது சார்பில் தானே வாதாடினார்.

அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன்.

நான் தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து என்னுடன் சிறையில் தள்ள வேண்டும்.

டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தான் ஒப்புதல் அளித்தார். பிரதமரின் முன்னிலையில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா சிபிஐ நீதிமன்றத்தில் வாதாடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன். இதனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு வாதம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. சிபிஐ வழக்கறிஞர் யு.யு. லலித் நேற்று முன்தினம் வாதாடுகையில், குற்றம்சாட்டப் பட்டுள்ள அனைவருமே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி தனது வாதத்தை முடித்தார்.

இதையடுத்து இன்று முதல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்புவாதம் தொடங்கியது.

அப்போது ராசா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார். ராசாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில்குமார் வாதிடுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை ராசா எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே ராசாவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கறையை ஏலம் விட வேண்டாம் என்ற முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. அதையே ராசாவும் தொடர்ந்து பின்பற்றினார். இதனால் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.

ராசா தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.

யூனிடெக், டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை சட்டப்படியே நடந்தன. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும்.

எனக்கு (ராசா) முன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி 26 லைசென்ஸ்களையும், தயாநிதி மாறன் 25 லைசென்ஸ்களையும் விற்றனர். அதி்ல், எதுவுமே ஏலம் விடப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கு முதலில் என்னும் அடிப்படையில் தான் அவை விற்கப்பட்டன. அவர்கள் எந்தக் கொள்கையை பின்பற்றி அவற்றை விற்பனை செய்தனரோ அதே கொள்கையைப் பின்பற்றித் தான் நானும் 122 லைசென்ஸ்களை வழங்கினேன்.

அவர்கள் தவறு செய்யவில்லை என்றால், என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்?. நான் மட்டும் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்?. 2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதை நான் பின்பற்றினேன்.. அவ்வளவு தான்.

முந்தைய பாஜக அரசு வகுத்த கொள்கையின் அடிப்படையில் தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைப்பிடிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

நான் சட்டத்தை பின்பற்றியுள்ளேன். இதனால் என்னை குற்றவாளியாக்குவதே தவறு. உண்மையில் சொன்னால் எனக்கு பரிசு தான் தர வேண்டும்.

செல்போன் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்குக் குறைத்துக் காட்டினேன். ரிக்ஷா ஓட்டுபவரில் இருந்து வீட்டு வேலை செய்பவர்கள் வரை அனைவராலும் தொலைபேசியை உபயோகப்படுத்தும் நிலையை உருவாக்கினேன். இது சமூக நீதியை நிலை நிறுத்தும் எனது கொள்கையின் வெளிப்பாடு தான்.

எனது பதவிக் காலத்தில்தான் தொலைபேசி கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு, நாடு முழுவதும் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டன. தொலைதொடர்புத் துறையில் இது புதிய சாதனை என்றார்.

இந்த விவகாரத்தில் பிரமதரையும் ப.சிதம்பரத்தையும் ராசா இழுத்துவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(மிகக் குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை பெற்ற டிபி ரியாலிட்டி மற்றும் யூனிடெக் ஆகியவை உடனடியாக தங்களது பங்குகளை மிக அதிகமான விலைக்கு விற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அந்த நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்தன.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வைத்திருந்ததால் தான் அந்த நிறுவனங்களின் விலைகள் அவ்வளவு விலைக்கு விற்பனையாயின. இதனால், ஸ்பெக்ட்ரத்தின் விலை உண்மையிலேயே மிக அதிகமாக இருக்க, அதை மிகக் குறைந்த விலைக்கு ராசா ஒதுக்கிக் தந்து இந்த நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவினார் என்பது சிபிஐயின் வாதமாகும். மேலும் இவ்வாறு ராசா செய்த உதவிக்குக் கைமாறாக ராசாவுக்கு இந்த நிறுவனங்கள் ஏராளமான கோடிகளை அள்ளித் தந்தன என்றும், அவை மொரீஷியஸ், ஷெசல்ஸ் தீவுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு, லண்டன், சிங்கப்பூர் வங்கிகள் வழியாக ராசாவின் பினாமிகளுக்கு வந்து சேர்ந்தன என்பதும் சிபிஐயின் வாதமாகும்).

1993லிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்ய வேண்டும் : சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா அதிரடி வாதம்.2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன். இதனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா வாதாடினார்.

இந்த வழக்கில் ராசா உள்பட 14 பேர் கைதாகி திகார் சிறையில் உள்ளனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் ராசா மீது சிபிஐ மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு வாதம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. சிபிஐ வழக்கறிஞர் யு.யு. லலித் நேற்று முன்தினம் வாதாடுகையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவருமே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி தனது வாதத்தை முடித்தார்.

இதையடுத்து இன்று முதல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் தொடங்கியது.

அப்போது ராசா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து தானே வாடினார். தனக்காக வாதாட அவர் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவில்லை. சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற அவர் தனது சார்பில் தானே வாதாடினார்.

அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கறையை ஏலம் விட வேண்டாம் என்ற முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. அதையே நானும் தொடர்ந்து பின்பற்றினேன். இதனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

நான் தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றார்.

பொறுப்பிலாத தபால்காரரால், மருத்துவ படிப்பை இழந்த மாணவி !தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாச்சூர் கிராமம், மழவராச்சி என்ற கிராமத்தில் இருக்கும் கோவிந்தராஜ், மகள் பிரியா. இவர் பாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 வகுப்பு தேர்வில் 1040 மதிப்பெண் பெறுள்ளார்.

மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் பிரியா, பொறியியல் துறையில் சேர்ந்து படிப்பதற்கு வசதியில்லாத காரணத்தால், மருத்துவம் சார்ந்த படிப்பிற்காக பி.எஸ்.ஸி நர்சிங் படித்தால் செலவும் குறைவாக இருக்கும், படித்து முடித்தவுடன் வேலையும் கிடைக்கும் என்று பிரியாவின் குடும்ப நண்பர்கள் பலரும் சொன்னதால் பி.எஸ்.ஸி நர்சிங் படிப்பதற்கு வினப்பித்திருந்தார் பிரியா.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லுரியில் ஜூலை 20ம் தேதி, மதியம் இரண்டு மணிக்கு நடக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்படியும், இரண்டு மணி கலந்தாய்வுக்கு ஒருமணி நேரம் முன்னதாகவே வரும்படி, சென்னை பாராமெடிக்கல் கோர்ஸ் தேர்வு கமிட்டியிடமிருந்து, பிரியாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், தெக்கூர் பஞ்சாயத்து கோட்டைத்தெரு அஞ்சல் அலுவலகத்துக்கு, 18ம் தேதி காலையில் பிரியாவுக்கு போய்ச் சேரவேண்டிய கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதம் 18ம் தேதி மதியம் பிரியாவின் வீட்டில் கொடுத்திருக்க வேண்டும், அல்லது அதற்க்கு அடுத்தநாள் 19௦ம் தேதி கண்டிப்பாக பிரியாவிடம் சேர்பித்திருக்க வேண்டும்.

ஆனால், பொறுப்பில்லாத போஸ்ட்மேன், பிரியாவின் வீட்டுக்கு அந்த கடிதத்தை 22ம் தேதி கொண்டுபோய் கொடுத்துள்ளார். 20ம் தேதி கலந்தாய்வுக்கு வரச்சொன்ன கடிதத்தை 22ம் தேதி கொண்டுபோய் கொடுத்துள்ளார் கடமையுணர்ச்சி இல்லாத தபால்காரர்.

ஏன்..? இப்படி தாமதமாக கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு தபால்காரரிடமும், போஸ்ட்மாஸ்டரிடமும் முறையான பதில் கிடைக்கவில்லை.

நர்சிங் படிப்பதற்கு இருந்த வாய்ப்பை இழந்த பிரியா, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துவிட்டு, அஞ்சல்துறை மீது வழக்கு போட தயாராகி வருகிறார்.

நில அபகரிப்பு வழக்கு : போலீசாரிடம் ஆஜரானார் வீரபாண்டி ஆறுமுகம்.சேலம் அங்கம்மாள் காலனி மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை, அபகரித்ததாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 13 பேர் மீது, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அது போல பிரிமியர் ரோலர் மில் வழக்கிலும், வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலம் அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அ.தி.மு.க., அரசு பொய் வழக்கு போட்டிருக்கிறது என்றும் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த போதிலும் முதலில் விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்று நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டிருந்தார்.

மேலும் அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவர் தொடர்ந்து 3 தினங்கள் போலீஸ் காவலிலேயே இருப்பார்.

இதையடுத்து இன்று காலை 10 மணி அளவில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜரானார்.

அங்கு, ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அதனால் பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக, முன்னெச்சரிக்கை கருதி பஜார் பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

வீரபாண்டி ஆறுமுகம் இன்னும் 3 தினங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுவார். 6 மணி நேரத்துக்கு ஒருமுறை அவர் உடல்நிலையைப் பரிசோதித்து சிகிச்சை வழங்க 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.

அவரிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிச்சை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். விசாரணை விவரங்களை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வர்.

6 மணி நேரத்துக்கு ஒருமுறை அவரது உடல்நிலையைப் பரிசோதித்து சிகிச்சை வழங்க 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவரை சேலம் 5வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அப்போது அவர் ரூ. 25,000 சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து வெளியில் வரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை : வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி.இலங்கை தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வடக்குப் பகுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி உள்ளது.

யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகளுக்கும் 13 பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவில் ஒரு பிரதேச சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி இமெல்டா சுகுமார் அறிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்று அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றது.

வன்னியில் சுமார் 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. படையினரின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் ஆகிய பல முறைப்பாடுகள் பதிவாகி இருந்த நிலையிலும் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது பெரும் ஆதரவையும் வழங்கி உள்ளனர்.

அரச தரப்பினரின் சட்டவிரோத செயல்பாடுகள், கடும் அச்சுறுத்தல்கள், அராஜகங்களின் மத்தியில் வடக்கில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகிறது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து இன்று கிடைத்த தகவலின் படி வடக்கில் 18 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி நெடுந்தீவு பிரதேச சபை தவிர்த்த ஏனையவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகின.

குறாஞ்சாசனம், கோமுக ஆசனம், நீரிழிவைப் போக்கும் ஷலபாசனம்.

குறாஞ்சாசனம்.
குறாஞ்சாசனம்

செய்முறை:

இரு கால்களை நன்றாக நீட்டவும். வலது காலை வலது புட்டத்தின் வெளியே இருக்குமாறு மடித்து வைக்கவும். மூச்சை இழுத்தபடியே இடது காலை நெஞ்சுக்கு நேராக கொண்டு வரவும். கைகளை மேலே பாதத்தை கோர்த்து பிடித்தாற்போல் பிடித்த படி மூச்சை வெளியே விட்டு படத்தில் உள்ளபடி பிடிக்கவும். 20 எண்ணும் வரை இருந்து பின்னர் காலை கீழே போடவும். மூச்சை இழுத்து விட்டு பின் வலது கால் பக்கம் செய்யவும். 4 முதல் 6 தடவைகள் செய்யவும்.

பலன்கள்:

இடுப்பு வலி, வயிற்று வலி அகலும், கால்களின் நரம்புகளின் பலம் அதிகரிக்கும். இதய பலவீனம் அகன்று பலமாகும். வயிற்றினுள் உள்ள உள்உறுப்புகள் அபரிமிதமான பலத்தை பெறுகின்றன.


கோமுக ஆசனம்.
கோமுக ஆசனம்

நினைவாற்றலை அதிகரிக்கும் யோகாசனங்கள் பற்றி டாக்டர் ராஜேஸ்வரி விவரிக்கிறார்.

குத்துகால் இட்டு உட்காரவும். வலது காலை மடித்து இடது கால், தொடையின் மேல் ஆரம்ப பகுதியில் வைக்கவும். அதேபோல் இடது காலை மடித்து வலது தொடையின் அருகில் படத்தில் காட்டியது போல் வைக்கவும். நேராக நிமிர்ந்து இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு சென்று ஒன்றை ஒன்று பிடித்துக் கொள்ளவும். ஆழமாக மூன்று முறை மூச்சை இழுத்து விடவும். இதேபோல வலது காலை மடித்து மறுபக்கம் செய்யவும்.

நன்மைகள்:

கோபம் குறைந்து மன அமைதி ஏற்படும். மூட்டு வலி குணமாகும், ஞாபக சக்தி கிடைக்கும். முதுகு நிமிரும். சுவாசம் சீராகும். தோள்பட்டை மற்றும் மேல் முதுகு வலி நீங்கும்.


நீரிழிவைப் போக்கும் ஷலபாசனம்.
நீரிழிவைப் போக்கும் ஷலபாசனம்


ஷலபாசனம் என்பதற்கு தாமரை நிலை என்று கூறப்படுகிறது. பஷ்சிமோத்தாசனம் மற்றும் ஹாலசனம் ஆகியவற்றிற்கு எதிர்மறை நிலை என்று சுருக்கமாக அழைக்கலாம்.

பலன்கள்:-

நீரிழிவு நோய்க்கு அதிக பலன் தரும். நுரையீரலின் வலிமையை அதிகரிக்கிறது. ஆஸ்துமா நோய்க்கு மிகவும் நல்லது. அடி முதுகு வலியை போக்கும். அஜீரணத்தை போக்கி செரிமானத்தை சரியாக்கி கல்லீரல் பலம் பெறுகிறது. பகலில் தூக்கம் வருவதை தடுக்கிறது. சிறுநீர் கடுப்பு நோய்க்கு நல்ல பலனைத் தருகிறது.

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவை சரியான விகிதாச்சாரத்தில் இருக்க உதவுவதுடன் ரத்த ஓட்டத்தையும் சரி செய்கிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இரைப்பை புண், குடல் புண், ஆஸ்துமா, இருதய பலவீனம், உதர விதான இறக்கம் ஆகிய குறைபாடுகள் ஏற்படுவதில்லை. நுரையீரலை பலப்படுத்துகிறது.

நுரையீரல் நோய், ஆஸ்துமா ஆகிய நோய்களுக்கு அதிக பலனைத் தருகிறது. கூன் முதுகை நிமிர்த்துகிறது. தூக்கமின்மை வியாதியைப் போக்குகிறது. ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. சோம்பல், ஞாபக மறதி, கவனமின்மை ஆகியவற்றை போக்கிவிடும்.

அஜீரணம், பசியின்மை, உடல் சோர்வு மற்றும் மார்பு சளி ஆகியவை இந்த ஆசனத்தை தவறாது செய்ய பழகினால் தீரும். பிரசவித்தபின் ஏற்படும் பெருத்த வயிற்றை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.