Wednesday, September 28, 2011

சென்னையில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண் ; காதலுக்காக நூதன போராட்டம்.

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நேற்று நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓட்டமும் நடையுமாக வந்தார். இதனை பார்த்தவர்கள் பேய் என்று நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் வெளியே வர பயந்து மறைவான இடங்களில் பதுங்கி இருந்தனர்.

இதனால் அந்த இடமே மயான அமைதியாக காணப்பட்டது. அந்த நேரத்தில் ரோந்து வந்த பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த், இளம்பெண் நிர்வாணமாக வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணிற்கு ஆடை அணிவித்தனர். பின்னர் அவரை பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:- எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள தென்கல்பாக்கம் கிராமம். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம். பல இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்தோம். 10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து கேட்டபோது அவர் என்னிடம் பேச மறுத்து விட்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனவேதனையால் வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்தேன். எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.

காதலன் ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இளம்பெண் சொல்வது உண்மைதானா? அல்லது மனரீதியாக பாதிக்கப் பட்டுள்ளரா? என்று போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது அவர் பரங்கிமலை பெண்கள் போலீஸ் நிலையத்தில் உள்ளார். இளம்பெண் நிர்வாணமாக நடந்து வந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெக்ட்ரம் கேஸ் : திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம் !திருப்பம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘திடீர் திருப்பம்’ என்றுகூட கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘குபீர் திருப்பம்’ இது! ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்றுவரை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த ஆ.ராசா தரப்பு, இன்று திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதன் பெயர்தான், குபீர் திருப்பம்!

இன்று சி.பி.ஐ. தனிகோர்ட்டில் ஆஜராகிய ஆ.ராசாவின் வக்கீல் சுசீல்குமார், “அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று எனது கட்சிக்காரர் கருதுகிறார்” என்றார்.

சி.பி.ஐ. தனி கோர்ட்டில் தினமும் நடைபெற்றுவரும் வழக்கு இது. இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக பார்வையாளர்கள் முன்பை விட கூர்மையாக கவனம் செலுத்த தொடங்கியிருந்தார்கள். காரணம், அமைச்சர் சிதம்பரத்தில் பெயர் வழக்கில் கண்ணாமூச்சி காட்டத் தொடங்கியிருந்தது.

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, சில வாரங்களுக்கு முன்னர்தான், இந்த வழக்கில் முதலில் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் பெயரை உச்சரித்தார்.

“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தெரியும். நான் என்ன செய்யப் போகின்றேன் என்பதை அவர் அறிந்திருந்தார். இது தவறு என்றால், அவர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அவரைக் கூப்பிட்டு விசாரியுங்கள்” என்றார் ஆ.ராசா. தனக்காக தானே வாதாடுகிறேன் என்று கூறிக்கொண்டு அவர் நேரடியாக நீதிபதியிடம் கூறிய கூற்று இது.

அதன் பிறது, அவரது வக்கீல் சுசீல்குமார், அதே விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இதற்கிடையே கனிமொழியின் வக்கீலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயம் பற்றி அப்போதைய அமைச்சரவைக்கு எல்லாமே தெரிந்திருந்தது என்று கொளுத்திப் போட்டார்.

அவர் தனது வாதத்தில், “அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், மற்றும் பிரதமரின் முன்னிலையில், ராசா இதுபற்றி விலாவாரியாகவே தெரிவித்து விட்டார். ஆ.ராசா செய்தது தவறு என்றால், பிரதமரும், சிதம்பரமும் அதற்கு உடந்தையாக ஏன் இருக்கக்கூடாது?” என்ற ரீதியில் கூறத் தொடங்கினார்.

கனிமொழியும், ராசாவும் சொல்லி வைத்தால்போல சிதம்பரத்தையும், பிரதமரையும் வழக்குக்குள் இழுக்கத் தொடங்கவே, கேஸ் திரும்பப் போகின்றது என்பது விஷயம் அறிந்தவர்களுக்கு புரிந்து விட்டது. மத்திய அரசும் ஓரளவுக்கு அலர்ட் ஆகியது. ஆனால், அதற்குள் காரியங்கள், அனைவரது கைகளையும் மீறிச் செல்லத் தொடங்கிவிட்டன.

இந்த விவகாரத்தில், நிதி அமைச்சகம், பிரதமரின் அலுவலகத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று பற்றிய தகவல் ‘எப்படியோ’ லீக் ஆகியது.

அப்படியொரு கடிதம் இருக்கும் விஷயத்தை, தெரிய வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டாலே போதும். தகவல் அறியும் சட்டத்தின்படி விண்ணப்பித்து, குறிப்பிட்ட கடிதத்தை வெளியே கொண்டுவந்து விட்டார்கள். அந்தக் கடிதம், அரசியல் ரீதியாக ஒரு உலுப்பு உலுப்பிவிட்டது.

அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த ஊழல் நடக்காமல் தடுத்திருக்கலாம் என்பதுபோன்ற வார்த்தை அமைப்புகளுடன் இருந்தது, நிதி அமைச்சின் கடிதம். அது ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக நிற்கின்றன.

நிலைமை மோசமானால், அமைச்சர் சிதம்பரத்தின் பதவி பறிபோகும் (அல்லது அவராகவே ராஜினாமா செய்யலாம்) என்ற நிலையில் வந்து நிற்கிறது அந்த விவகாரம். (இந்தக் கட்டுரையைப் படித்து முடித்தபின், கீழே ‘தொடர்புடையவை’ என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்ட 3 டாபிக்களையும் முடிந்தால் ஒருமுறை படித்து விடுங்கள். வழக்கின் பேக்ரவுண்ட் புரியும்)

இப்படியான சூழ்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஆ.ராசாவின் வக்கீல் கொஞ்சம் வில்லங்கமான விதத்தில் வழக்கைத் திருப்பினார். சிதம்பரம் கோர்ட்டுக்கு இழுக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையை சாதுர்யமாக ஏற்படுத்தினார்.

ஆ.ராசாவின் வக்கீல், அடி மடியில் எப்படி கையை வைத்தார்? இதோ, இப்படித்தான்:

“ஆ.ராசாவுக்கும், சிதம்பரத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வித கருத்து வேறுபாடும் எழவில்லை என்பதையே நான் அழுத்திக் கூறுகிறேன். அதாவது, அப்போதைய நிதி அமைச்சருக்கு நன்கு தெரிந்திருந்தும், அவரால் தடுக்கப்படாத ஒரு நடவடிக்கையே ஆ.ராசாவால் எடுக்கப்பட்டது. எனவே, செக்க்ஷன் 311 படி சிதம்பரத்தை ஒரு சாட்சியாக கூப்பிட்டு விசாரியுங்கள். இந்த விவகாரத்தில் தனக்குத் தெரிந்ததை அவரே கோர்ட்டில் தெரிவிக்கட்டும். பிரதமரின் முன்னிலையில் வைத்து இந்த விவகாரம் பற்றி பேசப்பட்டதா என்பதை அவர் தெளிவு படுத்தட்டும். அதன் பின்னர் பிரதமரை அழைக்க வேண்டுமா இல்லையா என்பதை கோர்ட்டே முடிவு செய்யட்டும்”

உண்மை, பொய், நேர்மை எல்லாவற்றுக்கும் மேலாக, வக்கீலின் சாதுரியமாக திறமை ஸ்கோர் பண்ணிய இடம் அது.

24 மணி நேரத்துக்குள், பலன் கைமேல் தெரிந்திருக்கிறது! இன்று காலை விடிந்தது. கோர்ட் தொடங்கியது. ஆ.ராசாவின் வக்கீல் சுசீல்குமார், “அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று எனது கட்சிக்காரர் கருதுகிறார்” என்றார்.

இதற்கு அவர் என்ன காரணம் கூறுகிறார்? “அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கத் தொடங்கினால், வழக்கு மேலும் இழுத்துச் செல்லும். எனது கட்சிக்காரர் ஜாமீன் பெறுவதில் கால தாமதம் ஏற்படும். அதனால்தான், அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டியது அவசியமில்லை என்று கூறுகிறோம்”

சுருக்கமாகச் சொன்னால், நேற்று நீதிமன்றத்தில், ஆ.ராசா தரப்பு வக்கீல் திறமையாக தூண்டில் போட்டுவிட்டுச் சென்றார். இரவோடு இரவாக தூண்டிலில் போடப்பட்ட இரையை மீன் கவ்வியிருக்கிறது.

கொஞ்சம் தலைகீழாக யோசித்துப் பாருங்கள்.

“நீங்கள் தேவையில்லாமல் ‘அவரை’ கேஸில் இழுக்காமல் விட்டால், உங்கள் ஜாமீன் கோரிக்கை வரும்போது, நாங்களும் பெரிதாக எதிர்ப்பு காட்ட மாட்டோம்” என்பதற்கு மேல், ஒரு வார்த்தைகூட நாங்கள் எழுதக்கூடாது!

விறுவிறுப்பு.காம்.

பள்ளிகளில் இனி மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறை.2012-13ஆம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-

தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.

அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.

55 முதல் 60 மார்க் வரை - ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)

49 முதல் 54 வரை - ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)

43 முதல் 48 வரை - பி 1 கிரேடு (பாயிண்ட் 8)

37 முதல் 42 வரை - பி 2 கிரேடு (பாயிண்ட் 7)

31 முதல் 36 வரை - சி 1 கிரேடு (பாயிண்ட் 6)

25 முதல் 30 வரை - சி 2 கிரேடு (பாயிண்ட் 5)

19 முதல் 24 வரை - டி கிரேடு (பாயிண்ட் 4)

13 முதல் 18 வரை - இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)

12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் - இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)

மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.

நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான் - பிரதமர்.2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு விலையை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட அமைச்சர் குழுவுக்கு, அந்த அதிகாரத்தைத் தர மறுத்து நெருக்கடி தந்த, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனால் தான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே வித்திடப்பட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய மன்மோகன் சிங், 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு விலையை நிர்ணயிக்க அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தத் குழுவுக்கு தயாநிதி மாறன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஸ்பெரக்ட்ரம் விலை நிர்ணயம் என்பது தொலைத் தொடர்புத்துறையின் அடிப்படையான உரிமை என்றும், அதில் ஏராளமான தொழில்நுட்ப-பொருளாதார விஷயங்கள் அடங்கியுள்ளதால், அமைச்சரவைக் குழுவால் அதில் முடிவை எடுக்க முடியாது என்றும், அதை தொலைத் தொடர்புத் துறையால் தான் சிறப்பாக கையாள முடியும் என்றும் வாதிட்டார்.

ஒரு கட்டத்தில் அவரது வாதத்தை நானும் ஏற்றுக் கொண்டேன். ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தேவையில்லாத பிரச்சனைகள் வரக் கூடாது என்று நினைத்துத் தான் தயாநிதியின் கருத்தை ஒப்புக் கொண்டேன் என்றார்.

ஆனால், அமைச்சரவைக் குழுவின் தலையீடு இல்லாததால் பின்னர் தொலைத் தொடர்புத்துறை நினைத்தபடியெல்லாம் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கி பெரும் ஊழலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

உலகமே கொண்டாடும் தமிழன் போதி தர்மனைப் பற்றி உள்ளூரில் யாருக்கும் தெரியவில்லையே ! - ஏ ஆர் முருகதாஸ் வேதனை.

உலகமே கொண்டாடும் தமிழ் சாதனையாளர் போதி தர்மனைப் பற்றி உள்ளூர் தமிழர்கள் ஒருவருக்கும் தெரியவில்லையே, என வேதனைப்பட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

"1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த போதி தர்மன் என்ற பல்லவ மன்னர் பரம்பரை இளவரசன், பின்னாளில் உலகம் முழுக்க பயணித்தான். அவனே பின் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை அங்கே நிறுவினான்.

அங்கே எங்கே பார்த்தாலும் போதிதர்மனுக்கு சிலைகள் உள்ளன. சீனாவின் புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் தமிழரான போதி தர்மனின் சிலையைப் பார்த்து சிலிர்த்துவிட்டேன்.

சீன மாணவர்கள் போதியை பாடமாகவே படிக்கிறார்கள். புத்த சமயத்தின் குருவாக அவரை மதிக்கிறார்கள். அவர் படைத்த சாதனைகள் கொஞ்சமல்ல. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி அவன் பிறந்த காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

இனி வரும் தலைமுறையினர் போதி தர்மன் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட வேண்டும். இவ்வளவு பெரிய சாதனையாளனுக்கு சிலை எழுப்பி அவன் புகழைப் பரப்ப வேண்டும்.

சூர்யா

7-ஆம் அறிவு படத்தின் நாயகன் சூர்யா கூறுகையில், "போதி தர்மனை, பாதி உலகம் கடவுளாக கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போதி தர்மனை பற்றிய தடயங்களே அழிக்கப்பட்டு விட்டன. அவருடைய புகழ் மறக்கடிக்கப்பட்டு விட்டதால், யாரும் இதுபற்றி படம் எடுக்கவில்லை.

அவரை பற்றிய புத்தகங்களை படித்துவிட்டு, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கமின்றி தவித்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, சில தற்காப்பு கலை பற்றிய பயிற்சி பெறுவதற்காக வியட்நாம் சென்றேன். அங்கே 80 வயது பாட்டி, சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார். மிரண்டு போனேன்.

அங்கே சர்க்கரை நோய் மருந்து விற்பதில்லை என்று கேள்விப்பட்டேன். அந்த மருந்து அங்கே தேவைப்படவில்லை.

7-ஆம் அறிவு படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


'போதி தர்மன்'... சில குறிப்புகள்!


கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.

புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... இப்படிப் போகிறது போதியின் கதை.

வாயு முத்திரை, சூன்ய முத்திரை, சூரிய முத்திரை.

வாயு முத்திரை.

வாயு முத்திரை

ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும்.
தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.


சூன்ய முத்திரை.
சூன்ய முத்திரை

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.


சூரிய முத்திரை.
சூரிய முத்திரை

மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.