Sunday, April 10, 2011

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை.

எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க வெளிநாட்டு இலாகா ஆண்டுதோறும் உலக நாடுகள் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிடும். அதுபோல ஒரு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் சீனாவில் மனித உரிமை நிலைமை மோசமாகி வருவதாகவும், மனித உரிமைக்காக போராடுபவர்களை சீன அதிகாரிகள் தன் விருப்பம் போல கைது செய்து வருவதாகவும், புகழ் பெற்ற கலைஞர்களை கூட விடாமல் கைது செய்து வருவதாகவும், பேச்சு உரிமை கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. மனித உரிமை பிரச்சினைகளை எழுப்புகிறோம் என்ற பெயரில் எங்கள் நாட்டு உள்விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்கக்கூடாது என்றும் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து போதனை செய்வதையும் அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சீனா எச்சரித்து உள்ளது.


உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றது போல் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்; நடிகை குஷ்பு பேச்சு.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றது போல் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்; நடிகை குஷ்பு பேச்சு
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம் அருகில் நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டாக்டர் கலைஞர், சோனியாகாந்தி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வெற்றிக்கூட்டணியில் மாம்பழம் சின்னத்தில் அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். வருகிற 13-ந் தேதி அவரை ஜெயிக்கவைக்கவேண்டும். 6-வது முறையாக வெற்றிக் கூட்டணியில் கலைஞர் போட்டியிடுகிறார். அவரை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும்.

கடந்த வாரம் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையில் யுவராஜ்சிங், காம்பீர் ஆகியோர் எப்படி பக்கபலமாக இருந்து அணியை வெற்றி பெற செய்தார்களோ, அதேபோல் தேர்தலில் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். இந்த அணி நிச்சயம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சர் ஆவார். அதற்கு இந்த தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அறிவுச் செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

ஜெ., மீது வழக்கு தொடருவேன் : வீரபாண்டி ஆறுமுகம் பரபரப்பு பேட்டி


"பொது வாழ்வுக்கு தகுதியில்லாதவர் ஜெயலலிதா. தி.மு.க., தலைவர் மீதும், என் மீதும் அவதூறு பரப்பும் அவர் மீது, நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன்,'' என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

சேலத்தில், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, அவரது கட்சி வேட்பாளர்கள் மன சாட்சியை அடகு வைத்து விட்டு, தி.மு.க., தலைவர் மீதும், என் மீதும், உண்மைக்கு மாறான பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். சங்ககிரி மற்றும் வீரபாண்டி அ.தி.மு.க., வேட்பாளர்கள், தேர்தல் விதிமுறைக்கு மாறாக, எனக்கும், தி.மு.க.,வுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், "சிடி' ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக, கடந்த 8ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டரிடத்தில் மனு அளித்துள்ளேன்.

"சிடி'க்கும், எனக்கும் துளி அளவும் சம்பந்தமில்லை. தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்கிறது என்றால், உடனடியாக இரண்டு வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு இல்லாவிடில், சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வேன். ஏற்கனவே, இதுபோல் பிரசாரம் நடக்க உள்ளது குறித்து, கடந்த 28ம் தேதி, கலெக்டரிடம் புகார் செய்துள்ளேன்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்ததாக கூறுகிறார். அவர் பிழைப்பு தேடி வந்த இடம் அது. கலைத்துறையில் அவர் எப்படியெல்லாம், யாருடனெல்லாம் நடித்தார் என்பதை கூறும் கட்டாயத்துக்கு என்னை ஆளாக்கி விடவேண்டாம். 14 வயதில் பள்ளி படித்துக் கொண்டிருந்தபோதே, தமிழ் மொழி பாதுகாவலராகவும், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி, தமிழுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி.

அவரைப் பற்றி அவதூறு பரப்பினால், மானமுள்ள எந்த தி.மு.க.,வினரும் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க மாட்டான். இரண்டு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, டான்சி நில ஊழல் வழக்கில், தான் கையெழுத்திடவில்லை எனக் கூறி ஏமாற்றினார். 64 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து மீளமுடியாமல் உள்ளார். தமிழகத்தை ஆளும் யோக்கியதை அவருக்கு இல்லை. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,வை புறக்கணித்து, சேலத்தில், 11 சட்டசபை தொகுதியிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். வெற்றியை தாங்க முடியாததால் தான் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சேலம் அங்கம்மாள் காலனி பிரச்னை, ஆறு பேர் கொலையில் எனக்கும், இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. ஆனால், அதை தொடர்புபடுத்தி பொய் பிரசாரம் செய்கின்றனர். உண்மையை கூற வேண்டுமென்றால், குப்புராஜுக்கும், அவரது மகன் சிவகுருவுக்கும் சொத்தில் பாகப்பிரிவினை ஏற்பட்டு, 10 ஆண்டுகளாக, நீதிமன்றத்தில் சிவில் வழக்கு இருந்தது. அதனால் ஏற்பட்ட மனக்கசப்பால், கொலை நடந்ததாக சிவகுரு வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

சம்பவம் நடப்பதற்கு முன்னால், தந்தை சொத்து தராமல் ஏமாற்றி விட்டார். அந்த பிரச்னையில் எனக்கு உதவ வேண்டும் என, வக்கீல் அய்யப்பமணியை தொடர்பு கொண்டுள்ளார். வீடு ஒன்றை தாதகாப்பட்டியில் உள்ள சேலம் மாநகர எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் சுகுமாறனிடம் விற்று, அந்த பணத்தை மருமகனிடம் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து கொலை சம்பவம் நடந்துள்ளது. அய்யப்பமணியிடம் என்ன செய்வது, எந்த வக்கீலை பார்ப்பது என்று கேட்டுள்ளார், அவரும் ஒரு வக்கீலை கூறியுள்ளார். அதன்பின், சிவகுரு, நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவருக்கு அதில் தொடர்பு இருக்கும் நிலையில், அதை மறைத்து விட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். நான் சிறையில் சென்று பார்த்தது தவறு என்கின்றனர். நீதிமன்றத்தில், எப்.ஐ.ஆர்., இருக்கும் நிலையில், அவர் குற்றவாளியாகிவிடமாட்டார்.

தர்மபுரி பைத்தூரில், மூன்று மாணவியர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் ஜெயகுமாரும், செங்கோட்டையனும் போய் அவர்களை பார்த்துள்ளனர். அதற்கு யார் அனுமதி கொடுத்தது ஜெயலலிதா தானே. பொது வாழ்வுக்கு தகுதியில்லாதவர் ஜெயலலிதா. தி.மு.க., தலைவர் மீதும், என் மீதும் அவதூறு பரப்பும் அவர் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். இவ்வாறு பேட்டியின்போது அமைச்சர் கூறினார்.

என் மீது அவதூறு அ.தி.மு.க., வக்கீல் பதில் : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறிய குற்றச்சாட்டு குறித்து, அ.தி.மு.க., சேலம் வடக்கு தொகுதி செயலரும், வக்கீலுமான அய்யப்பமணி கூறியதாவது: ஆறு பேர் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, 2010 அக்., 24ம் தேதி கவர்னருக்கு மனு அனுப்பி உள்ளேன். அந்த கொலைக்கு எனக்கும் சம்பந்தமில்லை. பார் கவுன்சில் தேர்தலில் ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வாங்கியிருந்தேன். அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தேர்தலில் வெற்றி பெற்றதை பொறுக்காமல், என் மீது அவதூறு பரப்புகின்றனர். நானும் சட்டப்படி அவர்களை சந்திப்பேன். இவ்வாறு அய்யப்பமணி கூறினார்.



எம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24ஆம் தேதி 23ஆம் ஆண்டு நினைவு நாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா... உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு... என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்...

1987 டிசம்பர் 2...

ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.

டிசம்பர் 5...

அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.


டிசம்பர் 6...

சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 15..

எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.

டிசம்பர் 20...

ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா... நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்...’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்...’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச் சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 22...

சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 23...

மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்...’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்... கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.

டிசம்பர் 24...

அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்...’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை.

எம்.குணா


ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி - வடிவேலு.


கடலூர் விருத்தாச்சலத்தில் தேனாறு ஓடும், பாலாறு ஓடும் என்றார் விஜயகாந்த். ஆனால் ஒரு ஆறும் ஓடவில்லை. அதற்குத்தான் மக்களவைத் தேர்தலில் தேமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுத்து விட்டார்கள். இப்போது ரிஷிவந்தியத்தில் நிற்கிறார், அங்கும் சுத்தமாக துடைத்தெடுத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

திமுக வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரசாரம் செய்து, விஜயகாந்த்தை மட்டும் குறி வைத்து தாறுமாறாகப் பேசி விமர்சனம் செய்து வருகிறார் வடிவேலு. இதனால் தேமுதிகவினர் கடும் கொதிப்புடன் உள்ளனர். இருப்பினும் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிவினர் ஒட்டுமொத்தமாக அமைதி காத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை சிதம்பரம் சென்ற வடிவேலு அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், என்னை வெடிகுண்டு வைத்துக் கொன்று விடுவார்கள் என பயமுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. அய்யா கலைஞர் போட்டுள்ள திட்டங்கள்தான் அவர்களுகக்கு வெடிகுண்டுகள். அதில் அவர்கள்தான் சிக்கிக் கொள்ளப் போகிறார்கள்.

அய்யா கலைஞரும், பொதுமக்களும் எனக்குத் துணையாக, பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் இருக்கும் வரை எந்த பாமும் என்னை ஒன்றும் செய்யாது. எனது நிழலைக் கூட அவர்களால் தொட முடியாது.

ரிஷிவந்தியத்தில் இப்போது நிற்கிறார் அவர். இனிமேல்தான் அங்கு சூடு பிடிக்கப் போகிறது. விருத்தாச்சலத்தில் ஏற்கனவே போட்டியிட்டபோது பாலாறு ஓடும், தேனாறு ஓடும் என்றார். ஆனால் ஒரு ஆறும் ஓடவில்லை.

சட்டசபைத் தேர்தலில் வாங்கிய 61,000 ஓட்டுக்களில் பாதியைக் கூட கடந்த லோக்சபா தேர்தலில்அங்கு தேமுதிக வேட்பாளர் வாங்கவில்லை. தேமுதிக 13,000 ஓட்டுகள் வாங்கியது. இப்போது ரிஷிவந்தியத்தில் சுத்தமாக துடைத்தெடுக்கப் போகிறார்கள். ஒன்றும் கிடைக்காது. டெபாசிட் கூட மிஞ்சாது.

அண்ணா, காமராஜர், பெரியார் ஆகியோரின் ஒட்டுமொத்த உருவம்தான் கலைஞர். அவரை மக்கள் மீண்டும் முதல்வராக்குவது உறுதி என்றார் வடிவேலு.

பின்னர் காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், புவனகிரியில் பிரசாரம் மேற்கொண்டார் வடிவேலு.


ஜெயலலிதாவை வெளியே தள்ளுகிற வலிமை மதிமுகவிற்கு உண்டு - நாஞ்சில்சம்பத்.



திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் மதிமுக சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய மதிமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்,

தங்களை கூட்டணியில் இருந்து விரட்டிய ஜெயலலிதாவை தேர்தலில் மக்கள் விரட்டியடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நாங்கள் உழைப்பை தந்தோம். உதிரத்தை தந்தோம். மதிமுகவின் உழைப்பை, உதிரத்தை எல்லாம் உறிஞ்சி, உண்டு கொழுத்து கொழுத்து, கழுத்து வரை கொழுத்து திரிந்த மூளி, கடைசி நேரத்தில் எங்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினால், உன்னை வெளியே தள்ளுகிற வலிமை, வல்லமை வைகோவின் சகாக்களுக்கு உண்டு.

அதிமுக மேடையில் எம்ஜிஆரை புகழ முடியாத நிலை உள்ளது. போராட்ட களத்தில் துணை நின்ற மதிமுகவினரை வெளியேற்றிவிட்டு, உருவபொம்மையை எரித்தவர்களை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளார். தேர்தலில் மதிமுகவினர் துரோகத்தை வீழ்த்துவார்கள் என்றார்.


வெடிகுண்டு மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: விஜயகாந்த டெபாசிட் இழப்பார்: வடிவேலு.


வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்படமாட்டேன் என, நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வடிவேலு ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மிரட்டல் குறித்த புகாரை அடுத்து நடிகர் வடிவேலுவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் தொடர்வது பற்றி திமுக தலைவர் கலைஞருடன் வடிவேலு சிதம்பரத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர், பொதுமக்கள் தயவால் எனக்கு எந்த பயமும் இல்லை. ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த டெபாசிட் இழப்பார். வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்படமாட்டேன். உச்சக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.

டெல்லியில் “சூப்பர்பக்ஸ்” பாக்டீரியா பரவும் அபாயம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை.



புதுடெல்லி, உடலில் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியா வகைகளில் சூப்பர்பக்ஸ் என்ற பாக்டீரியா மிகவும் அபாயகரமானது. இந்த பாக்டீரியா உடலில் உள்ள ஜீன்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. சூப்பர்பக்ஸ் பாக்டீரியா முதன் முதலாக இந்தியாவில் இருந்து பரவியதாக முன்பு கூறப்பட்டது.

இந்த பாக்டீரியா குடிதண்ணீரில் மூலம்தான் பரவும். சூப்பர்பக்ஸ் கலந்த குடி தண்ணீரை குடிப்பவர்களுக்கு காலரா போன்ற நோய்கள் ஏற்படும். சூப்பர் பக்சுக்கு முழுமையான தடுப்பு மருந்து இல்லாததால், இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டால் மரணம் ஏற்படலாம்.

பயங்கர விளைவை ஏற்படுத்தும் சூப்பர்பக்ஸ் பாக்டீரியா தற்போது டெல்லியில் பரவி உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே குடி நீர் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்கும்படி விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சூப்பர்பக்ஸ் பாக்டீரியாவால் சுமார் 14 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்

இலங்கையை வீழ்த்திய இந்திய வீரர்களுக்கு பரிசு கொடுக்கத் தடை., ஜெயலலிதா ஆட்சியில் தேர்தல் கமிஷனரின் நிலை - கலைஞர்


கடலூர் மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

இலங்கையை வீழ்த்திய இந்திய வீரர்களுக்கு பரிசு கொடுக்கத் தடை.

உங்களுக்கு தெரியும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகத்தான வெற்றிபெற்றது. வெற்றியை பெற்றிருக்கிறது என்று சொல்கிறபோதே இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறீர்களே, நாள்தோறும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளைப் பார்த்து பூரிப்படைகிறேன் நான். எந்த ராத்திரியிலும் டி.வி.யின் முன்னால் அமர்ந்து கிரிக்கெட்டை நான் பார்த்து மகிழ்வேன். இந்தியாவுக்கு மகத்தான வெற்றி. அதுவும் எப்படிபட்ட வெற்றி இலங்கையை முறியடித்து பெற்ற வெற்றி. அந்த வெற்றியை இந்திய அரசு கொண்டாடுகிறது. பரிசு கொடுக்கிறது. மாநில அரசுகள் பல அவர்களுக்கு பரிசு வழங்குகிறது.

இதையெல்லாம் பார்த்தபோது எனக்கு, இயல்பாகவே கிரிக்கெட் பிரியன் நான். அதிலே இந்தியா வெற்றிபெற்று இருக்கிறது என்று சொல்லும்போது நானும் அந்த கிரிக்கெட் அணிக்கு ரூ.3 கோடி ரூபாய், அதிலே ஆடி வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி என மொத்தம் ரூ.4 கோடியை அரசின் சார்பில் தருகிறோம் என்ற செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்தேன்.

இந்த 4 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் கிரிக்கெட் அணிக்கும், ஒரு கோடி ரூபாயை அஸ்வினுக்கும் தருகிற கோப்பை நான் தலைமை செயலாளருக்கு அனுப்பினேன். என்னுடைய கையெழுத்தை போட்டு, தலைமை செயலாளர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உத்தரவையும் போட்டேன்.

அவர்கள் தேர்தல் கமிஷனை கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், கொடுப்பது சரி, ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை, முதல் அமைச்சர் அழைத்து, அவர் அதை தன் கையால் கொடுக்கக்கூடாது, நான் கொடுத்தால், அது தேர்தல் பிரசாரம் ஆகி விடுமாம். அப்படியானால், உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் பார்த்ததை, கைகொட்டி, வாழ்த்தி, அவர்களை பாராட்டிய அந்த செய்தியை, நான் சொல்லக் கூடாதாம். அப்படி நான் கொடுத்தலும் அதை யாரும் போட்டோ எடுக்கக் கூடாதாம். இப்படி ஒரு ஆணையம். இதுபோல தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது என்றால் எனக்கே சந்தேகம்? யார் முதல் அமைச்சர்?, நான் தானா? என்று எனக்கே ஒரு பிரச்சனை வந்து விட்டது.

ஜெயலலிதா ஆட்சியில் தேர்தல் கமிஷனரின் நிலை.

எனக்கு முன்பு தமிழக அரசை ஆண்டு கொண்டு இருந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் தேர்தல் கமிஷனை எப்படி மதித்தார்கள் என்பது தெரியும். தேர்தல் கமிஷனில் இருந்த அந்த பெரிய அதிகாரி, இவருக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என்பதற்காக விமான நிலையத்திலே அவர்களை அடித்து உதைத்தார்கள், யாரை, தேர்தல் கமிஷனரை, அந்த தேர்தல் கமிஷனர் யார்?, டி.என்.சேஷன், அவரை விமான நிலையத்தில் ஓடஓட விரட்டி அடித்தார்கள்.

அவர் பதுங்குவதற்கு இடம் இல்லாமல் ஒரு காருக்குள் ஓடி புகுந்து கொண்டு, அந்த காரில் சென்று ஒரு ஓட்டலில் இறங்கி, அந்த ஓட்டலில் ஒரு ரூமுக்குள் புகுந்த கொள்ள, அந்த ரூமுக்குள்ளேயும் போய் அடித்து உதைத்தார்கள், அந்த ஓட்டலையும் நொறுக்கினார்கள். இதெல்லாம் தேர்தல் கமிஷனருக்கு ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற உபசாரங்கள், அவர் நடத்திய திருவிளையாடல், நாம் அப்படியெல்லாம் நடக்கவும் இல்லை, அதை ஏற்கவும் இல்லை, அதை ஆதரிக்கவும் இல்லை, அதை அப்போதே எதிர்த்து அறிக்கை விட்டோம். தேர்தல் கமிஷனரை அப்படி நடத்தி இருக்கக்கூடாது என்று அப்போதே சொல்லி இருக்கிறோம்.

ஆனால் இன்றைக்கு நாம் முறைப்படி தேர்தல் கமிஷனோடு சுமுகமாக போனாலும், ஒவ்வொன்றையும் அவர்களை வைத்து செய்ய வேண்டும், என்ற நிலைமையில் இருந்தாலும் கூட, வெளிப்படையாக, முதல் அமைச்சராக நாம் ஆகிவிடுவோமோ என்ற நம்பிக்கையில், மமதையில், அந்த தெம்பில், இப்போதே உத்தரவிடுகிறார். நல்லவேளை, உடனடியாக கருணாநிதியை முதல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விடு என்று சொல்லவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை இன்றறைக்கு தேர்தல் கமிஷனால் ஏற்பட்டு இருக்கும் போது, தேர்தல் கமிஷன், இந்த குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

நான் மத்திய சர்க்காருக்கு சொல்கிறேன். தேர்தல் கமிஷன் நினைத்தால் பிரதமரைக்கூட கண்டிக்கலாம். பிரதமர் கூட தேர்தல் கமிஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியது தான், அதன் விதிமுறை அது தான்.

ஆனால் அப்படிப்பட்ட விதிமுறைகளை அப்படிப்பட்ட அதிகாரங்களை அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை பெற்று இருக்கிற ஒரு மகத்தான நிறுவனம், புனிதமான நிறுவனம், என்று சொல்லப்படுகின்ற, அந்த தேர்தல் கமிஷனை எப்படி அமைப்பது? யார் யாரைக்கொண்டு அமைப்பது, எந்த வகையில் அமைப்பது, அதற்குரிய அதிகாரங்களை எப்படி அமல்படுத்துவது என்பதையெல்லாம் கொண்ட ஒரு நிலையை இனியாவது ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று இந்த மாபெரும் கூட்டத்தின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் பேசினார்.

ஜெயலலிதா ஆட்சியில் சாதனை ஏதும் இல்லை: சிதம்பரம்.


ஜெயலலிதா ஆட்சியில் சாதனை ஏதும் இல்லை: சிதம்பரம்.

விருத்தாசலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தி.நீதிராஜனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதா ஆட்சியில் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய சாதனைகள் ஏதும் செய்யவில்லை என, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு பல சலுகைகளை வழங்கி இருக்கிறது. இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 8.5 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. 21 ம் நூற்றாண்டின் 11 வது ஆண்டில் இருக்கிறோம். இந்த 11 ஆண்டுகளில் 2 அரசுகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. இதில் 2006 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய எல்லா வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றி இருக்கிறது. விவசாய கடன் ரத்து, கிலோ அரிசி 2 ரூபாய், வீட்டுமனை பட்டா வழங்கியது, இலவச வண்ணத் தொலைக்காட்சி என அத்தனையும் கலைஞர் வழங்கி இருக்கிறார்.

தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது ஜெயலலிதா, கலைஞர் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என கிண்டல் செய்தார். அதிமுகவினர் கூட வியந்து பார்த்தனர். 1 கோடியே 85 லட்சம் பேருக்கு அரிசி, 28 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என அனைத்தையும் வழங்கினார் கலைஞர்.

கலைஞர் தமிழகத்தில் ஆட்சி ஏற்கும்போது ஆண்டுதிட்டமாக ரூ.9600 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கலைஞர் பதவியேற்றதும் முதல் கையழுத்தாக ரூ.7600 கோடி விவசாய கடன்தள்ளுபடி செய்தார். இதைப் பார்த்த மத்திய அரசு தன்பங்குக்கு ரூ.72 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தது. மத்திய அரசுக்கு கலைஞர் வழிகாட்டியாக அமைந்தார்.

கலைஞர் சொல்லாததையும் செய்தார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் கலைஞர் சொல்லாததையும் செய்தார். அதுதான் கலைஞர் வீடுவழங்கும் திட்டம். இதில் தற்போது 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 21 லட்சம் வீடுகள். அடுத்த 6 ஆண்டுகளில் மீதம் உள்ள வீடுகள் கட்டித்தர உறுதி பத்திரம் வழங்கியுள்ளார். 108 ஆம்புலன்ஸ் திட்டம். இது எல்லாம் கருணாநிதியின் சரித்திரம் போற்றும் சாதனைகள்.

ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் என்ன நடந்தது. மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய சாதனைகளை ஏதேனும் செய்திருக்கிறாரா? கடந்த சில நாள்களாக நடைபெறும் கூட்டத்தில் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகிறேன். இதுவரை பதில் இல்லை.

மேலும், 1.5 லட்சம் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தது, எஸ்மா, டெஸ்மாவில் கைது செய்தது, திருமண உதவித்தொகை நிறுத்தியது, மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தது, குல சாமி கோயில்களில் "ஆட்டுக் கிடா' வெட்டுவதற்கு தடைசெய்தது. இதைத்தவிர ஜெயலலிதா ஆட்சியில் வேறு சாதனை நினைவுக்கு வரவில்லை என்றார்.

காப்பியடித்த ஜெயலலிதா.: ப.சிதம்பரம்.

கரூர் தொகுதிகளில் நடந்த பொதுக்கூட்டத்தில், காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா என, ப.சிதம்பரம் பேசினார்.

கடந்த 2009ல் லோக்சபா தேர்தலில் சாதனை முன்னிறுத்தி ஓட்டு கேட்டோம். அப்போது, ஆளும்கட்சியாக உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராது என்று ஆரூடம் கூறினர். முடிவில், ஆரூடம் பலிக்கவில்லை. சாதனைதான் பலித்தது. பணத்துக்கு ஓட்டில்லை; குணத்துக்கு தான் ஓட்டு. ஐந்து ஆண்டு கழித்து திரும்பி பார்த்தால் ஜாதி, மதம், பணம், குடும்பம் எதுவும் தேர்தலில் எடுபடாது.

கடந்த தேர்தலில் தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதி, "அரசியல் ஆத்திச்சூடி' போன்றது. 9,600 கோடி ரூபாய் பட்ஜெட் போடும் தமிழக அரசு, 7,500 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்தது. இதைக்கண்டு, மத்திய அரசும், 72 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை நாடு முழுவதும் தள்ளுபடி செய்தது. அரசு என்றால் வளர்ச்சியும், வசதியும் இருக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சி ஓர் இருண்டகாலம்.

இப்போதைய தேர்தல் அறிக்கையில் அம்மிக்கல்லுக்கும், ஆட்டுக்கல்லுக்கும் டாட்டா காட்டியவர் கலைஞர். இதை காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. கிரைண்டர் அல்லது மிக்சி தருவதாக கலைஞர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும், "அல்லது' என்பதை நீக்கி, இரண்டுமே தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.