Friday, June 24, 2011

இளங்கோவனுக்கு கொம்பு சீவும் காங்கிரஸ்.“தி.மு.க. தலைவரே, காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகக் குத்திக் காட்டிப் பேசலாம் என்றால், நாங்கள் பேச முடியாதா? பேசக் கூடாதா?” இந்தக் கேள்வியுடன் கொந்தளித்துக் கொண்டிருந்த சில தமிழக காங்கிரஸ் புள்ளிகளுக்கு, டில்லியிலிருந்து சிக்னல் வந்தேவிட்டது!

“நீங்களும் பேசலாம். ஆனால் ஆளாளுக்குப் பேசி, சிக்கலை உருவாக்க வேண்டாம். நாங்கள் சொல்லும் ஒரு நபர் மாத்திரம் தி.மு.க.வுக்கு எதிராகப் பேசட்டும்” என்று டில்லி, ஒருவரை நோக்கி கையைக் காட்டிவிட்டது.

அந்த ஒருவர், இளங்கோவன்!

மகள் கனிமொழியை திகார் ஜெயிலில் பார்த்துவிட்டுத் திரும்பியபின், பத்திரிகையாளர்களிடம் கருணாநிதி, “காங்கிரஸ் – தி.மு.க. உறவில் விரிசல் ஏதுமில்லை” என்று கூறியிருந்தார். அது, வெறும் வார்த்தைகள்தான் என்பது அவருக்கே நன்றாகத் தெரியும்.

உறவு, ஏதோ போனால் போகிறது என்று இன்னமும் முறியாமல் இருக்கிறது. எந்த நிமிடத்திலும் முறியலாம்.

இளங்கோவனையும் அதற்காகவே தயார் பண்ணிவிட்டது.

இளங்கோவனுக்கு இது ஒன்றும் புதிய அசைன்மென்ட் கிடையாது. ஏற்கனவே இதில் அனுபவசாலி அவர்.

2006-11ல் தி.மு.க. ஆட்சி செய்தபோது, அவர்களுக்கு ஆப்சலியூட் மெஜாரிட்டி கிடையாது. இது காங்கிரஸைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு சாதகமான அம்சம். ஆனால் தி.மு.க., மசியவில்லை.

அதுகூடப் பரவாயில்லை. காங்கிரஸ் கட்சியினரை ஆளுங்கட்சியினர் மதிக்கக்கூட இல்லை. இதனால், தி.மு.க.,வினர் மீது காங்கிரசார் கடும் அதிருப்தியில் இருந்தனர். அந்த நிலையில், தி.மு.க.,வையும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சிப்பதில், முன்னாள் மத்தியமைச்சர் இளங்கோவன்தான் முன்னணியில் இருந்தார்.

சில சமயங்களில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய அவரது விமர்சனம் அ.தி.மு.க.வினரைவிட உக்கிரமாகவும் இருந்திருக்கிறது.

ஆனால், சட்டசபை தேர்தல் வந்தது. அதிலும் தி.மு.க.வுடனான கூட்டணிதான் தொடர்ந்தது. டில்லித் தலைமையின் அறிவுறுத்தல்படி தேர்தல் நேரத்தில், தி.மு.க. மீதான விமர்சனத்தை நிறுத்தினார் இளங்கோவன்.

இப்போது காட்சிகள் தலைகீழாக மாறிவிட்டன.

காங்கிரஸ் கட்சியுடனான உறவை, ‘கூடா நட்பு’ என, கருணாநிதியும் விமர்சனம் செய்தார். இந்த விமர்சனம் டில்லியை கோபப்படச் செய்தது. ஆனால், கருணாநிதியின் விமர்சனத்துக்கு டில்லியிலிருந்து பதில் வரவில்லை.

இந்த விளையாட்டை சாதுர்யமாக விளையாட விரும்பியது டில்லி. மாநில அளவில் கருணாநிதி முன்வைத்த விமர்சனங்களுக்கு, மாநில அளவிலேயே பதில் கொடுப்பதென முடிவானது. அதற்குத்தான் இருக்கவே இருக்கிறாரே, இளங்கோவன்.

அது ஒரு அழகிய நிலாக் காலம்!

ஈரோட்டில் நடைபெற்ற தென்னக ரயில்வே ஊழியர் சங்க மாநாட்டில் இளங்கோவன் பேசும்போது, “ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்தவர், கூடா நட்பு பற்றி பேசுகிறார். மகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரைகளை மற்றவர்களுக்கு கூறுகிறார். இந்த கூடா நட்புதான், அவரது மகளை சிறையில் தள்ளியது” என்று அதிரடியாகப் பேசினார்.

அன்றுடன் நிறுத்தவில்லை அவர்.

கருணாநிதி காங்கிரஸ் கட்சியை ஒருபுறமாக விமர்சித்துக் கொண்டு, மறுபுறமாக அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உடைக்காமல் இருப்பதையும் கிண்டலடிக்கத் தொடங்கியுள்ளார்.

“கருணாநிதிக்கு காங்கிரசுடன் கூட்டணி இல்லையெனில் என்ன நடக்கும்? கூண்டோடு சிறைக்குள் செல்ல வேண்டியிருக்கும். அதனால்தான், காங்கிரஸ் கூட்டணி தொடருமென பேசி வருகிறார்” என நேரடியாகவே அடித்திருக்கிறார்.

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதியும், இளங்கோவனும் ஒரே மேடையில் காட்சியளித்தனர். அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசும்போது, “இளங்கோவன் என் மடியில்தவழ்ந்து வளர்ந்த பிள்ளை” என்று பேசினார். அருகிலிருந்த இளங்கோவன் உணர்ச்சி வசப்பட்டு, கருணாநிதியின் மடியைத் தொட்டு வணங்கினார்.

இப்போது?

கருணாநிதியின் மடியில் தவழ்ந்து வளர்ந்த மகள் திகார் ஜெயிலில். மகளை ஜெயிலுக்கு அனுப்பாமல் காப்பாற்றிக் கொடுக்கவில்லையே என்ற கோபம் காங்கிரஸ்மீது. “கூடா நட்பு” என்கிறார்.

இதற்குப் பதிலடி கொடுக்க காங்கிரஸ், கருணாநிதியின் ‘மடியில் தவழ்ந்து வளர்ந்த பிள்ளை’ இளங்கோவனை தேர்ந்தெடுத்திருப்பதுதான் பிளாக் ஹியூமர்.

டில்லியின் கண்ணசைவு இல்லாமல் இளங்கோவன் இப்படிப் பேசத் தொடங்க மாட்டார் என்பது, கருணாநிதிக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், என்ன செய்வது? இளங்கோவனையோ, காங்கிரஸ் கட்சியையோ எதிர்த்துக் கொள்ளும் நிலையிலா அவர் இப்போது இருக்கிறார்?

திகார் ஜெயில் காவலாளியைக்கூட முறைத்துக் கொள்ள முடியாத நிலையில் அல்லவா இருக்கிறார், முன்னாள் முதல்வர்!

ரங்கநாயகி ! - கவிஞர் வாலி.
இலங்கையில்


இது காறும் நடந்தது -
போர் அல்ல;

தீவிரவாதப்
போக்கினை அறவே...
தூர்க்கவேண்டித்

துப்பாக்கிகளில் -
ரவைகளை நிரப்பியதாம்
ராணுவம்!
சொல்கிறார்

'சோ’ ;
நாம் நாணுவம்!

குலைகள் நடுங்கத் -
தம்
குடில்கள் வாயிலில்...

சம்மணம் இட்டுச்

சாதாரணமாய் இருந்தோரை -


அம்மணம் ஆக்கினான்; அதன்பின்

அவர்தம் ஆவி போக்கினான்;

முலை உரித்து - மதுரை
மூதூரெரித்த மரபினரின்-

கலை உரித்தான்;

கற்பை உரித்தான்; உயிர்

கவர்ந்து கொடுங்

காலனெனச் சிரித்தான்!...


இத்துணை

இழிசெயல்களை இயற்றியோன் -

சிங்களக் காடை; இராணுவச்
சீருடையணிந்த பேடை!

தீர்த்தம் குறையாத்
தேம்சு நதித்-
தீரத்திலிருந்து...

செயல்படும்

'CHANNEL 4’எனும்
தொலைக்காட்சி -
ஆவணப் படுத்தி
அகில மெங்கும் காட்டியது-

கொடுமை மலிந்த - மேற்சொன்ன
கோரம் மிகுந்த கொலைக்காட்சி!


இதுகண்டு
இதயம் கனத்து-
இங்கிலாந்துப் பிரதமரும்;
இதர பிரஜைகளும்...

'அச்சோ!’ என
அலறுவதை அறியாதவரா என்ன
இச் 'சோ’?

'சோ’ வைப்போல் - இச்
சோகத்தை...
அறிந்தும்
அறியாததுபோல்-
அறிதுயிலில்
அயர்ந்திருப்பவர்...


ஸ்ரீரங்கம் - அருள்மிகு
ஸ்ரீரங்க நாதர்; அவர்-

படுத்தபடி - இலங்கையைப்
பார்த்திருக்கிறார் என்று-

பாடுகிறார் - தொண்டரடிப்
பொடிகள் என்னும் தாதர்!

ஸ்ரீரங்கம் - தீவு;
ஸ்ரீலங்கா - தீவு;
தீவைப் பார்க்கிறது
தீவு;
ஆனால்
அக்கிரமத்திற்கொரு-
தீர்வைப் பார்க்க வேண்டாமா
தேவு?

அய்யா!
அரங்கநாதரே! - நீர்
பாம்பின்மேல்
படுத்து - வெறுமனே
பார்த்திருந்தால்
பயப்படுமா இலங்கை? அதன்காலில்-
பூட்டவேண்டாமா
'போர்க்குற்றம்’ எனும் விலங்கை?

'அருளாதாரம் இன்றித் - தமிழரை
அழித்தொழித்தார்க்குப்-

பொருளாதாரம் இன்றிப்
போகக் கடவது!’ - என்று...

விரைந்து - நீர்
விதித்திருக்க வேண்டாமா தடை?
தூங்கிக்கிடக்கவா - உமக்கு

தோசை; நெய்ப்பொங்கல்; வடை?

ரங்க நாதரே! - உங்கள்
ரங்க நாயகி...

உலக
உயிர்க்கெலாம் தாய்;
ஈழத் தமிழனும் -
அவள்
ஈன்றெடுத்த சேய்!

'பொறுத்தது போதும்’ எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் - இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!


சான்றோர்
சபையைக் கூட்டி-
'போர்க்குற்றம்’ எனக் கூறினாள்;
பொருளாதாரத் தடை கோரினாள்!

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று-
'எங்க நாயகி’தான் -
அந்த
ரங்க நாயகி என்று!

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்ன? அரசின் மோசடி - ஒரு விரிவான அலசல்.பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்களும் நேற்றைய தினம் (ஜூன் 23) ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த ஒராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது.

விலை உயர்வுக்கு ஆட்சியாளர்கள் சொல்கின்ற காரணங்கள் மூன்று.

1. உலகச்சந்தையில் கச்சா எண்ணைவிலை உயர்ந்து விட்டது.

2. கச்சா எண்ணை விலை உயர்வால் எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.

3. பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுக்கப்படும் மானியங்களால் அரசுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமை.

எனவே விலை உயர்வை தவிர்க்கமுடியாதது என்கிறார்கள்.

இவைகள் உண்மை என்றால் கடந்த 2008ம் ஆண்டு கச்சாஎண்ணைவிலை பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 135 டாலருக்கு மேல் விற்றபோது 1லீட்டர் பெட்ரோல் விலை ரூ.54 மட்டுமே.தற்போது 94 டாலர் மட்டுமே,

ஆனால் 1லீட்டர் பெட்ரோல் விலை ரூ.67.22 ஆக உள்ளது. இது போக பீப்பாய் 80டாலருக்கு விற்றபோது பெட்ரோல் விலை குறையவில்லையே அது ஏன் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.

எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன என்பது தவறான செய்தியாகும்.

இந்தியாவின் பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு 2010 - 11ம் நிதியாண்டில் வரி போக கிடைத்த நிகரலாபம் :

IOC க்கு 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.5294 கோடி,

HPCL 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.2142.22 கோடி,

BPCL 2010 - 11ல் வரி போக கிடைத்த நிகரலாபம் ரூ.2148 கோடி,

இதன் மூலம் அரசுக்கு கிடைத்து வரி ரூ.2340.22 கோடி ஆகும்.

ஆக 2010 - 11ல் அரசுக்கும் எண்ணெய் நிறுவணங்களுக்கும் கிடைத்த நிகர இலாபம் ரூ.11,924.44 கோடி ஆகும்.

எனவே எண்ணை நிறுவனங்கள் கூறும் நஷ்டம் என்பது எதிர்பார்த்த லாபத்தில் குறைவு என்பதை நஷ்டம் என்கின்றன. பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுக்கப்படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் பொருளாதாரச்சுமை ஏற்படுவதாக கூறுவது தனியார் எண்ணை நிறுவனங்களை வளர்த்து விடுவதற்காக சொல்லப்படுகின்ற காரணமாகும்.

உண்மையில் அரசு பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுக்கும் மானியம் என்பது அதற்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து ஒருசிறுபகுதிதான். உதரணமாக 2009- 10ம் ஆண்டுக்கான மானியமாக கொடுக்கபட்டதொகை ரூ.23.325கோடி.இதே காலகட்டத்தில் வரிகள் மூலம் அரசுக்கு கிடைத்த லாபம் ரூ.4,10, 842கோடி.

உண்மையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு என்னதான் காரணம்?. அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் பொருட்களின் விலை நிர்ணய உரிமை கடந்த 2010 ஆண்டு ஜூலை 25 முதல் எண்ணை நிறுவனங்களே உலக சந்தைக்கேற்ப இந்திய சந்தையிலும் விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற கொள்கை முடிவை இந்திய அரசு எடுத்தது.

இதன்படி ரிலையன்ஸ், எஸ்ஸார் மற்றும் ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்களின் கையில் தான் விலை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது.அதனால் அவை நேர்மையற்ற முறையில் லாபநோக்கத்தோடு விலைகளை மாற்றிக் கொண்டு இருக்கின்றன.

மற்றொரு காரணம் மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு.

தற்போதைய பெட்ரோல் விலையான ரூ. 67.22ல் 31சதம் எக்சைஸ் வரியும், 17சதம் விற்பனை வரியும் போக பொட்ரோலின் அடக்க விலை ரூ.35 தான். இதில் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபமும் அடங்குகிறது. அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ரூ.67.22 க்கு பெட்ரோல் விலை விற்க்கப்படுகிறது.

உள்நாட்டுபோரும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ள பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.26க்கும், வங்கதேசத்தில் ரூ.22க்கும், சின்னசிறிய நேபாளநாட்டில் ரூ.34க்கும் விற்க்கப்படுகிறது.

இந்தியாவின் அண்டிய நாடுகளில் விலை குறைவாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அதிக விற்க்கபடுவது ஆளும் கட்சியின் பொறுப்பற்ற செயல்காரணமாகும்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசின் தோல்விகான காரணங்களில் ஒன்றாக மின்வெட்டு இருந்ததை போல மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை ஏற்படுத்த போகும் காரணங்களில் ஒன்றாக அமையும்.

பெட்ரோல் விலை உயர்வில் மற்றொரு புதிர் தேர்தல் நேரங்களில் மட்டும் விலை உயர்வேயில்லை என்பது.

4தமிழ்மீடியாவுக்காக அ.தமிழ்ச்செல்வன்

+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் !தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் பிரபாகரன், +2 தேர்வில் 1200க்கு 585 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் பட்ட படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.

பிரபாகரனின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கல்லூரி நிர்வாகம் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.

இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் கல்லூரி முதல்வர் அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜை சந்தித்து, இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் விளக்கம் அளிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஹீரோவாக ஆசைப்பட்ட பிரபாகரன், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆசையில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் படிக்க ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இழுத்து மூடப்பட்டது.
சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மூடு விழா கண்டது.

அவசரகதியில் திறப்பு விழா கண்ட சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைக்கு, தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க, மத்திய அரசு கை விரித்து விட்ட நிலையில், மாநில அரசும் கண்டு கொள்ளதால் அதே அவசர கதியில் மூடு விழா கண்டது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் கருணாநிதியால், 2007 செப்.,14ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2010 ஆக.,20ல் திறப்பு விழா காணப்பட்டது. திறப்பு விழா நடந்து முடிந்து ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், மே 12ல் சேலம் வந்த சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ், "மருத்துவமனை இன்னும் மூன்று மாதங்களில் முழுமையாக செயல்படும்' என, தெரிவித்தார்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மத்திய, மாநில அரசுகளின் சார்பில் 149 கோடியில் கட்டப்பட்டது. மருத்துவமனைக்கு மாநில அரசை விட, மத்திய அரசின் நிதியே அதிகம். திறப்பு விழாவில் மத்திய அரசின் சார்பில் அமைச்சர்களோ, அதிகாரிகளுக்கோ அழைப்பு இல்லை. அத்துடன் திறப்பு விழா கல்வெட்டிலும் மத்திய அரசுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை.

இதன் காரணமாக மத்திய அரசு, கூடுதல் நிதியை ஒதுக்கி தர மறுத்து விட்டது. மருத்துவமனை முற்றிலும் குளிர்சான வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியில் ஏ.சி., செயல்படாவிட்டாலும், மருத்துவமனையின் அனைத்து பகுதியும் முழுமையாக செயல்பட முடியாது.

அந்த வகையில் மருத்துவமனைக்கு மாதத்துக்கு மின்சார செலவு, ஜெனரேட்டருக்கான டீஸல் செலவுகளுக்கு மட்டும், 80 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது.

இந்த நிதியை மத்திய அரசு வழங்க மறுத்து விட்டது. அதே நேரத்தில் மாநில அரசும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி இதற்கு அனுமதி வழங்க வில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பாட்டை துவக்குவதில் சிக்கல் நீடித்தது.

மருத்துவமனை கட்டடத்தில் பொறுத்தப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ., - சி.டி.,ஸ்கேன், செயற்கை சுவாச கருவிகள் (வென்டி லேட்டர்) டையாலிஸிஸ் மெஷீன், கேத்லாக், சிறந்த இருதய அறுவை சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது.

சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு செயல்படாததால், பல கோடி முதலீடு செய்து வாங்கப்பட்ட இந்த கருவிகள் அனைத்தும் வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக தமிழகத்தின் பல்வேறு மருத்துவ மனைகளில் இருந்து, இருதய சிகிச்சை பிரிவு உட்பட, 32 முக்கிய பிரிவுகளுக்கு தலா மூன்று சிறப்பு டாக்டர்கள் உட்பட மொத்தம், 102 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர்.

கருவிகள் செயல்படாத காரணத்தால் இவர்களுக்கு பணி இல்லாமல் உள்ளனர். அத்துடன் இவர்களுக்கு மத்திய அரசின், பி.எஸ்.எஸ்.எஸ்.ஓய்., திட்டத்தின் கீழ் தான் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் போதிய நிதி இல்லாததால், பணி மாற்றம் செய்யப்பட்ட டாக்டர்களுக்கு, கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் அறுவை சிகிச்சை அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் அனைத்தும் முறையாக பொருத்தப்பட வில்லை என புகார் எழுந்துள்ளது.

மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், மருத்துவமனையை இயக்க மாதத்துக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தேவை உள்ள நிலையில், அதை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வராததால், 149 கோடி ரூபாயில் மக்கள் வரிப்பணத்தில், கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பாட்டை துவக்க முடியாமல் உள்ளது.

போதிய மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையும் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டது.

நேற்று இரவு விபத்து மற்றும் அவசர சிகிச்சிப்பிரிவில் இருந்த 16 நோயாளிகளை அவசர அவசரமாக மோகன் குமாரமங்களம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து விட்டனர்.

மின்சார நாற்காலியில் அமர வைத்துக் கொல்லத் துடிக்கிறார்கள் - ராஜபக்சே.போர்க்குற்றம் என்ற பெயரில் எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து மின்சார நாற்காலியில் அமர வைக்க சிலர் துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் சர்வாதிகாரி ராஜபக்சே.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில்,

பல்வேறு அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்களின் மூலம் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுகிறது.

அரசுக்கு எதிராக தூக்கப்படும் கரங்கள் இறுதியில் பொதுமக்களின் தலைகளின் மேல் விழுகின்றன. இன்று இலங்கை மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படைவீரர்களைப் போன்றே விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன்.

இன்று சிலர் என்னை மின்சார நாற்காலியில் அமர வைத்து தண்டனை கொடுக்க துடிக்கின்றனர், தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்றார் அவர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : 3-வது குற்றப்பத்திரிகை 7-ந்தேதி தாக்கல்; சி.பி.ஐ. ஆதாரங்களை திரட்டுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: 3-வது குற்றப்பத்திரிகை 7-ந்தேதி தாக்கல்;  சி.பி.ஐ. ஆதாரங்களை திரட்டுகிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீட்டில், முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கைத்துறை அறிவித்தது. இந்த முறைகேடுகளுக்கு யார்-யார்? காரணம் என்று சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, பாராளுமன்ற பொது கணக்கு குழு மற்றும் கூட்டுக்குழு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஏராளமான ஆதாரங்கள் சிக்கின. அதன் மூலம் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதை சி.பி.ஐ. உறுதி செய்தது.

இந்த இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, சுவான் டெலிகாமின் ஷாகித் பல்வா ஆகிய 4 பேர் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகை சுமார் 80 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டிருந்தது. 654ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ரிலையன்ஸ், யுனிடெக், சுவான் டெலிகாம் ஆகிய 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த வினோம் கோயங்கா (டி.பி.ரியாலிட்டி) சஞ்சய் சந்திரா (யுனிடெக் வயர்லஸ்), அரிநாயர், கவுதம் ஜோஷி, சுரேந்திர பிபாரா (மூவரும் ரிலையன்ஸ்) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. 125 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பண பரிமாற்றங்கள் எப்படி மேற்கொள்ளப்பட்டன என்பது தெரிய வந்தது.

பண பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி இரண்டாவதுகுற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதை துணை குற்றப்பத்திரிகை என்கிறார்கள். அதில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், சுவான் டெலிகாமை சேர்ந்த ஆசீப் பல்வா, குசேகான், பழம்-காய்கறி நிறுவன இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கரீம் மொராலி ஆகிய 5 பேர் பெயர் இடம் பெற்றிருந்தது.

இவர்கள் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் சதிக்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் சம்பாதிக்கப்பட்ட பணம் வெளிநாடுகளில் உள்ள வங்கிகள், தனியார் அமைப்புகள் மூலம் ஹவாலா மோசடி அடிப்படையில் பெறப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கலைஞர் தொலைக்காட்சிக்கும் இப்படித்தான் பணம் கை மாறி உள்ளதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறி உள்ளது. எனவே தான் கனிமொழி மீது ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7 மற்றும் 11 ஆகியவை கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பண பரிமாற்றத்துக்கான ஆதாரங்களை சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி சேகரித்துள்ளது.

மொரிசியஸ், இங்கிலாந்து உள்பட பல வெளிநாடுகளுக்கு குழுக்களை அனுப்பி பண பரிமாற்ற ஆவணங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் பல முக்கிய ஆவணங்கள் அடுத்த வாரம் வெளிநாடுகளில் இருந்து வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 3-வது குற்றப்பத்திரிகையை வரும் 7-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆவணங்களில் 80 சதவீதம் தயாராக உள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் மேலும் சிலரது பெயர் இடம் பெறும் என்று தெரிகிறது. அதோடு சில தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களிடம் நடந்த விசாரணை விபரங்களும் தெரிய வரும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தகுந்த ஆதாரங்களுடன், இந்த குற்றப்பத்திரிகையில் அம்பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இந்திய மாலுமிகள் டெல்லி திரும்பினார்கள்: பாகிஸ்தான் உதவிக்கு இந்தியா நன்றி.

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இந்திய மாலுமிகள் டெல்லி திரும்பினார்கள்: பாகிஸ்தான் உதவிக்கு இந்தியா நன்றி

எகிப்து நாட்டுக்கு சொந்தமான எம்.வி. சூயஸ் என்ற சரக்கு கப்பல், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அதில் இருந்த 6 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 22 மாலுமிகளும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடல் கொள்ளையர்கள் கேட்ட பணயத் தொகையை தர, கப்பல் உரிமையாளர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாலுமிகள் 22 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானின் பி.என்.எஸ். சுல்பிகர் கப்பல் மூலம், நேற்று கராச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி சோகைல் இஜாஸ்கான் தலைமையில் அங்கு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்திய மாலுமிகள் 6 பேரும், டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று காலையில் அவர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர். சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களை, அதிகாரிகளும், மாலுமிகளின் குடும்பத்தினரும் வரவேற்றனர். மாலுமிகள் குடும்பத்தினர், அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். 10 மாதங்கள் கடல் கொள்ளையர் பிடியில் இருந்ததால், மாலுமிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது.

மாலுமிகளை பத்திரமாக மீட்க உதவி புரிந்ததற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில், இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளை மீட்டுக்கொண்டு வர தகுந்த நேரத்தில் பாகிஸ்தான் உதவி செய்தது. இதற்காக அந்நாட்டுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு - திருச்சி மாணவி திவ்யா முதலிடம், 18 பேர் 200-க்கு 200 எடுத்து சாதனை.


பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது.

திருச்சி மாணவி திவ்யா முதலிடத்தையும்,

ராசிபுரம் மாணவர் யோக பரசுகன் 2வது இடத்தையும்,


சென்னை மாணவர் சுரேஷ் பால்ராஜ் 3வது இடத்தையும் பெற்றனர்.


பிஇ, பிடெக் படிப்புகளில் சேருவதற்காக மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 355 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இவற்றில் சரிவர நிரப்பப்படாத 5246 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 1 லட்சத்து 43 ஆயிரத்து 109 பேருக்கு தரவரிசை இன்று வெளியிடப்பட்டது.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பொது “கவுன்சிலிங்” சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

ஒரே மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான “ரேண்டம்” எண் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட்டது. இன்று தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். ரேங்க் பட்டியல் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.

பின்னர் அமைச்சர் பழனியப்பன், ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்த மாணவ- மாணவிகளின் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேருவதற்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், 3,492 பேர் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.

விண்ணப்பித்தவர்களில் “கட்-ஆப்” மார்க் அடிப்படையில் திருச்சி திருவெறும்பூர் பிரகாஷ் நகர் மாணவி திவ்யா முதல் இடம் பிடித்துள்ளார். ராசிபுரம் யோகபரசுகன் 2-வது இடம் பிடித்திருக்கிறார். பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த சுரேஷ்பால்ராஜ் 3-வது இடம் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ஒதுக்கீட்டில் இவருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

சின்னசேலம் ஹரிநிவாஸ் 4-வது இடமும்,
ஈரோடு பவானி அகிலா 5-வது இடமும்,
நாமக்கல் ஜீவிதா 6-வது இடமும்,
அரூர் விக்னேஷ் 7-வது இடமும்,
சென்னை மடிப்பாக்கம் மகாலெட்சுமி 8-வது இடமும்,
சிவகாசி ஆகாஷ் 9-வது இடமும்,
நாமக்கல் அபிநயா 10-வது இடமும்,
கோவை கள்ளப்பாளையம் கவுதம் பிரகாஷ் 11-வது இடமும்,
பெருந்துறை சபீதா 12-வது இடமும்,
நாமக்கல் அருண்பிரசாத் 13-வது இடமும்,
சிவகங்கை கல்லல் சிதம்பரம் 14-வது இடமும்,
கோவை கே.கே.புதூர் அர்ச்சனா 15-வது இடமும்,
மோகனூர் பூவிழி 16-வது இடமும், பெற்றுள்ளனர்.

இதுதவிர ஈரோடு விக்னேஷ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முதல் இடமும், ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 29-வது இடமும் பிடித்திருக்கிறார்.

ஈரோடு ஷானாபீர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் முதல் இடமும் ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 44-வது இடத்தை யும் பிடித்துள்ளார்.

மொத்தம் 18 பேர் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட பிரிவில் பெரம்பலூர் செல்வபிரபாத் 199.75 “கட்-ஆப்” மதிப்பெண்கள் பெற்று அந்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவில் திருச்செங்கோடு நவீனா 199.50 எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

பழங்குடியினர் பிரிவில் நாமக்கல் கொல்லிமலை வேலவன் 197.75 “கட்-ஆப்” மார்க் வாங்கி அந்த பிரிவில் முதல் இடத்துக்கு வந்திருக்கிறார்.

பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் `சூயிங்கம்` உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்; அத்வானி வற்புறுத்தல்..மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் உளவு பார்க்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான சர்ச்சை, பெரிதாகின்றது. பாரதீய ஜனதாக் கட்சி இதை இப்போது கையில் எடுத்துள்ளது.

நம்பமுடியாத, சிரிப்புக்கிடமான கதைகளைக் கூறி, மக்களை முட்டாள்களாக்க முயன்றால், அதை மக்கள் இலகுவில் புரிந்து கொள்வார்கள்.” என்றும் கூறியிருக்கிறது அந்தக் கட்சி.

இவர்கள் குறிப்பிடுவது, நிதியமைச்சரின் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தது சூயிங்கம் என்ற கதையைப் பற்றித்தான்!

மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அலுவலகம் உளவு பார்க்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் உளவு பார்த்து இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். வெளிநாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், இதை செய்திருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும், இது மிகவும் சீரியசான விஷயம். அதனால்தான், இதுபற்றி ரகசிய விசாரணை நடத்துமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதி உள்ளார். இதன்மூலம் அவர் இதை சீரியசாக கருதுவது தெரிகிறது.

இதை சாதாரண விஷயமாக கருதி இருந்தால், பிரதமரிடம் அவர் புகார் தெரிவித்திருக்க மாட்டார். இந்த விவகாரத்தை விசாரணை செய்த அதிகாரிகள், பிரணாப் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த பசை போன்ற பொருளை `சூயிங்கம்` என்று கூறுகிறார்கள். சூயிங்கத்தை விழுங்க முடியாது என்பதால், அதை யாரோ ஆங்காங்கே ஒட்டி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

பிரணாப் முகர்ஜி, மிகவும் புத்திசாலி. அவர் இதை நம்பக்கூடாது. ஒரு குழந்தை சூயிங்கம் சாப்பிட்டால், அதை ஒன்றிரண்டு இடங்களில் ஒட்டி வைக்கும். 16 இடங்களிலா ஒட்டி வைக்கும்? புத்திசாலியான பிரணாப் முகர்ஜி, நாட்டு மக்களும் புத்திசாலிகள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்.

இந்த வெட்கக்கேடான விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய முழு உண்மைகளையும் பிரதமர் மன்மோகன்சிங் தெளிவுபடுத்த வேண்டும். இப்பிரச்சினையை பா.ஜனதா கூட்டணி, வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பும்.

இவ்வாறு அத்வானி கூறினார்.

கலைஞர் டி.விக்கு பணம் : இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்-விஜய் மல்லையாவிடம் விசாரிக்க சிபிஐ முடிவு.கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு பணம் கொடுத்தது ஏன் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் மல்லையாவிடம் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி தந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் டி.வியின் பங்குதாரரும், திமுக எம்பியுமான கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு தந்த பணத்தை, வட்டியுடன் திருப்பித் தந்துவிட்டது கலைஞர் டிவி. ஆனால், அவ்வாறு அந்தப் பணத்தைத் திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் விஜய் மல்லையாவும் உதவியதாக இப்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், யு.பி. குரூப் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணத்தை கலைஞர் டிவி செலவு செய்துவிட்ட நிலையில், அந்தப் பணத்தை திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ், யுபி குரூப் நிறுவனம் ஆகியவை கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவரான சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராகவும் உள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், சிபிஐ எங்களிடம் விளக்கம் கேட்கவுள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றார்.

யுபி நிறுவனத்தின் துணைத் தலைவரான பிரகாஷ் மிர்பூரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் டிவிக்கு விளம்பரம் தந்த வகையில்தான் யுபி குரூப் நிறுவனம் பணம் கொடுத்துள்ளது. இதுதவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கும் எங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை. இது தொடர்பாக சிபிஐ எங்களிடம் தொடர்பு கொண்டால், விளக்கம் தருவோம் என்று கூறியுள்ளார்.

இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்.

இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர்களும், மலையாளிகளும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஈழத்தில் தமிழின அழிப்புக்கான திட்டங்களைத் தீட்டி, சோனியாவின் தலைமையின் கீழ், ரகசியமாக அமுல்படுத்தியது, மலையாள அதிகாரிகள் குழுதான். பார்ப்பனர்களைப் போலவே மலையாளிகளும் எப்போதும் தமிழினத்தைப் பகையாகக் கருதுவோரே! எனவேதான் சோனியா, மலையாளிகளிடம் இந்தப் படுகொலைத் திட்டத்தை ஒப்படைத்தார்.

மத்திய அரசினை சூழ்ந்து நிற்கும் மலையாள அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கம் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

இதோ, இந்தப் பட்டியலைப் பாருங்கள்:


என். பெர்னான்டஸ் (ஜனாதிபதியின் செயலாளர்)

வி.கே. தாஸ் (ஜனாதிபதியின் தனிச் செயலாளர்)


டி.கே.ஏ. நாயர் (பிரதமரின் முதன்மைச் செயலாளர்)


என்.நாராயணன் (பிரதமரின் பிரதான ஆலோசகர்)


பி. ஸ்ரீதரன் (நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்)


கே.எம். சந்திரசேகர் (அமைச்சரவைச் செயலாளர்)


ருத்ர கங்காதரன் (விவசாயத்துறைச் செயலாளர்)

மாதவன் நம்பியார் (விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்)

நிருபமா மேனன் ராவ் (வெளியுறவுத்துறைச் செயலாளர்)


சத்திய நாராயணன் தாஸ் (கனரகத் தொழில்துறை செயலாளர்)

ஜி.கே. பிள்ளை (உள்துறைச் செயலாளர்)

சுந்தரேசன் (பெட்ரோலியத் துறைச் செயலாளர்)

கே. மோகன்தாஸ் (கப்பல் துறைச் செயலாளர்)

பி.ஜே. தாமஸ் (மத்திய கண் காணிப்பு ஆணையத்தின் தலைவர்)

சிவசங்கர மேனன் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்)

சுதா பிள்ளை (திட்டக் கமிஷன் செயலாளர்)

வி.கே. சங்கம்மா (வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்)

ஆர். கோபாலன் (நிதிப் பணிகள் துறை இயக்குநர்)


கே.பி.வி. நாயகர் (செலவீனங்கள் துறைச் செயலாளர்)

கே. ஜோஸ் சிரியாக் (வருவாய்த் துறைச் செயலாளர்)

ஆர். தாமஸ் (வருமான வரித்துறைச் செயலாளர்)


வி. ஸ்ரீதர் (சுங்கத் துறைச் செயலாளர்)

பி.கே.தாஸ் (அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்)


ஏ.சி. ஜோஸ் (கதர் வாரியம்)

சி.வி. வேணுகோபால் (பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்)

ஸ்ரீகுமார் (இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்)

கோபாலகிருஷ்ணன். (பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தபடியாக செயல்படும் மூத்த அதிகாரி இவரும் கேரளாவை சேர்ந்தவர்)


கே.எம். சந்திரசேகர் (அமைச்சரவை செயலாளர்)


சி.கே. பிள்ளை (உள்துறைச் செயலாளர்)

நந்தகுமார் (கூட்டுறவுத் துறைச் செயலாளர்)

பி.கே.தாமஸ் (தகவல் தொழில் நுட்பத் துறைச் செயலர்)


ரகுமேனன் (செய்தி ஒலிபரப்புத் துறை செயலர்)

ராமச்சந்திரன் (நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர்)

ரீட்டா மேனன் (ஜவுளித் துறைச் செயலாளர்)

கங்காதரன் (கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்)


சாந்தா ஷீலா நாயர் (குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்)

விசுவநாதன் (சட்டத் துறை செயலாளர்)

மாதவன் நாயகர் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்).

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால் இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி

வெளிவிவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி

விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி.தாமஸ்

உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

ரயில்வே துறை இணையமைச்சர் அகமது.

வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்த சசிதரூரையும் (பதவி விலகியவர்) சேர்த்தால் ஆறு பேர்.

சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.

சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங்குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லோருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் கேந்திரமான நிர்வாகப் பகுதிகளை கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள்.

இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர் வேறு மாநிலங்களில் பணியாற்றி மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது!


விடுதலை இராசேந்திரன்.

லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ளத் தயார் : அன்னா ஹசாரே.

லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ள தயார்: அன்னா ஹசாரே

கடுமையான விதிகளுடன் கூடிய லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே உறுதிபட தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் புனே நகரில் அவர் பேட்டியளித்தார். அப்போது, ஹசாரே கூறுகையில், சாவைக் கண்டு அன்னா ஹசாரே பயப்படவில்லை. எங்கள் போராட்டத்தை நசுக்குவதற்காக தடியடி மட்டுமல்ல துப்பாக்கிக் குண்டுகளையும் பயன்படுத்தட்டும். அதை நாங்கள் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஆனால், இந்தியாவில் ஜனநாயக ஆட்சி தேவையா? சர்வாதிகார ஆட்சி தேவையா? என மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.