
2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர்கள், இலக்கியவாதிகள் என்று பெரும்படையே மேடையிலிருந்தது. அவரவர்கள், அவரவர் பாணியில் பேசி கைதட்டலை பெற்றனர். முத்தாய்ப்பாக அத்தனை ‘தட்டலையும்‘ சேர்த்து மொத்தமா ‘தட்டிகிட்டு’ போக.. வைரமுத்து வந்தார்.
ஒலிவாங்கியின் முன் மிடுக்கோடு வந்த வைரமுத்து, அனைவரையும் ஈர்க்கும் அவர்தம் குரலில் ‘‘நண்பர்களே! நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.. தலைவர் கலைஞர் அவர்களுக்கு நான்கு மகன்கள் என்று! ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா..முத்தமிழறிஞர் கலைஞருக்கு மொத்தம் ஐந்து மகன்கள்!’’ என்று சொல்லி நிறுத்த.. அரங்கமே திடுக்கிட்டு பார்த்தது..கலைஞரும் அடுத்த சொல் என்ன என்ற ஆர்வத்தில் நோக்க.. அரங்கம் அமைதியானது!
‘‘ஆம் நண்பர்களே! கலைஞருக்கு மொத்தம் ஐந்து மகன்கள். மூத்தவர்.. மு.க.முத்து. அடுத்தவர்.. மு.க.அழகிரி. மூன்றாமவர்.. மு.க.ஸ்டாலின். நாலாவது.. மு.க.தமிழரசு. ஆனால் இவர்களுக்கெல்லாம் மூத்த அந்த முதல் மகன் யார் என்று தெரியுமா?’’னு மறுபடியும் கேட்க.. ஆர்வத்தில் சிக்கித் தவித்தது கூட்டம்!
அந்தத் தவிப்பைப் பார்த்து இரசித்த வைரமுத்து, சரி செய்திக்கு வருவோம் என்றவராய்,
‘‘பதினான்காம் வயதிலேர்ந்து கலைஞர் தன்னுடைய தோளில் தூக்கி, மார்பில் தாங்கி வளர்த்த ‘முரசொலி’ பத்திரிகைதான் அவருடைய மூத்தமகன்!’’ முதல்மகன்னு என்று சொல்லி முடிக்க.. ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது.
உணர்ச்சிவசப்பட்ட கலைஞர் கண்ணீர் வடித்தார்.. .
அப்போது வைரமுத்து பாத்த பார்வை இருக்கே.. அதுதான் கவிஞனின் செறுக்கு, வைரமுத்து அடிக்கடி சொல்லும் கர்வமாய் கண்ணிற்குப் பட்டது.
4 comments:
முகஸ்துதி செய்தே கலைஞரை கவிழ்த்ததில் வைரமுத்துவுக்கு பெரும் பங்குண்டு.இந்த ஜால்ராவை இதோ கலைஞர் தனது 88வது வயது பிறந்தநாளில் தனது மகளின் சிறை துயரத்தில் இருக்கும் போது கூட வைரமுத்து போன்ற இலக்கியவாதிகள் விட்டபாடில்லை.
அதற்காகத்தானோ கலைஞர் தொலைக்காட்சியின் உருவாக்கமும் என்ற கேள்வியும் மனதில் எழுவதை தவிர்க்க இயலவில்லை.
இன்னுமொன்று சொல்லத் தோன்றியது.வைரமுத்து கவிஞனாய் இருந்த காலங்கள் கல்லூரி விழாக்களை சுற்றித் திரிந்த காலமும் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய துவக்க தினங்களாய் இருக்ககூடும்.
புகழ் கவிஞனையும் சிதைக்கும் என்பதற்கு வைரமுத்து எடுத்துக்காட்டு.
இது போன்ற வெற்று புகழ்ச்சியும் அதற்கு அவருக்கு வரும் கர்வமும் அருவருக்க வைக்கிறது. இது தான் வைரமுத்துவின் தரம்!
Post a Comment