Sunday, June 5, 2011

'நாட்டை தவறான பாதைக்குத் திருப்பும் கிரிமினல் ராம்தேவ்'.


நாட்டை தவறான பாதைக்குத் திருப்ப முயலுகிறார் கிரிமினல் ராம்தேவ். அதை அனுமதிக்க முடியாது. ராம்தேவ் கைது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராம்தேவை கடுமையாக விமர்சித்து வருபவருமான திக்விஜய் சிங்.

ராம்தேவ் கைது குறித்து அவர் கூறுகையில், நாட்டை திசை திருப்பும் கிரிமினல் ராம்தேவ். ராம்தேவ் போன்றவர்கள் டெல்லியை வன்முறைக் களமாக்க முயல்வதை அனுமதிக்க முடியாது. யோகா முகாம் நடத்தத்தான் அவருக்கு அனுமதி தரப்பட்டிருந்ததே தவிர, போராட்டம் நடத்த அல்ல. மக்களை தூண்டி விட்டு வருகிறார் ராம்தேவ்.

போராட்டத்தை நிறுத்தினால் அவருடன் பேச அரசு தயாராகவே இருந்தது. ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். பிரணாப் முகர்ஜி போன்ற ஒரு மூத்த தலைவர், இவரைப் போய் விமான நிலையத்தில் வரவேற்று பேச வேண்டிய அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டது கோபத்தை ஏற்படுத்துகிறது என்றார் திக்விஜய் சிங்.

No comments: