Saturday, April 30, 2011

இன்போசிஸ் நிறுவனத்துக்கு கே.வி.காமத் புதிய தலைவர்.


இந்தியாவில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ்.

மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கிய இடத்தை
இந்நிறுவனம் பிடித்திருக்கிறது.

ஜூலை2, 1981-ம் ஆணடு நாராயணமூர்த்தியால் இந்நிறுவனம் தொடங்கப்ட்டது.

தற்பொழுது இன்போசிஸ் நிறுவனதலைவர் நாராயணமூர்த்தி பதவிக்காலம் முடிவடைகிறது.


இதனால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பெங்களூரில் இன்போசிஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இந்நிர்வாக்குழு ஆலோசனை கூட்டத்தில் அடுத்த இன்போசிஸ் தலைவராக கே.வி.காமத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நாராயணமூர்த்தி, கே.வி.காமத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.


இன்போசிஸ் துணை தலைவராக கிருஷ் கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்போசிஸ் புதிய நிர்வாக குழு ஆகஸ்ட் 21ஆம் தேதி பொறுப்பேற்கிறது.

அதிரவைக்கும் விலை உயர்வு : சவரன் ரூ 17000க்கு விற்பனையானது .


கோவையில் சவரன் விலை ரூ 17000க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை இன்றும் தாறுமாறாக உயர்ந்தது. பிற்பகலுக்குள் ஒரு சவரனுக்கு ரூ 320 உயர்ந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ந்துவிட்டனர்.

நேற்று தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரூ.15 ஆயிரத்தை தாண்டிய ஒரு பவுன் தங்கம் படிப்படியாக உயர்ந்து தற்போது 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சென்னையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.15 ஆயிரத்து 464-க்கு விற்றது. நேற்று ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்து 544 ஆக இருந்தது. இதன் மூலம் ஒரு மாதத்தில் பவுனுக்கு ரூ.1080 அதிகரித்தது.

இன்று மட்டும் ரூ 320...

இந்நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு மேலும் ரூ.320 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு பவுன், ரூ.16 ஆயிரத்து 864-க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் ரூ.2108 ஆக உள்ளது. ஒரு பவுன் ரு.17 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.

தங்கம் என்பது தமிழர் கலாச்சாரத்தின் அடையாளமாகிவிட்டதால், ஏழை மக்களே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வருகிற 8-ந்தேதி அட்சய திருதியை வருகிறது. மேலும் திருமண முகூர்த்த நாட்களும் வர உள்ளன. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் உயர்ந்து வருவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வு மற்றும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு போன்றவையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது போல இப்போது தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து உள்ளது. தனி நபர்கள் தவிர உலகம் முழுவதும் இருந்து பல நிதி நிறுவனங்கள் இவ்வாறு முதலீடு செய்து வருகின்றன.

ஆன்லைன் வர்த்தகம் நிறுத்தப்படுமா...

தங்கத்தை நேரடியாக வாங்குவது தவிர ஆன்லைன் வர்த்தகம் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வதும் இப்போது அதிகரித்து வருகிறது. இது போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே தங்கத்தை ஆன்லைனில் வாங்கி விற்க தடை விதிப்பது பற்றியும் யோசித்து வருகின்றனர்.

சேலத்தில் ரூ 416 உயர்வு:

சேலத்தில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 2068 ஆகவும், ஒரு பவுனின் விலை ரூ16 ஆயிரத்து 544 ஆகவும் இருந்தது. இன்று ஒரு கிராம் ரூ 2120ஆகவும், ஒரு பவுன் ரூ16 ஆயிரத்து 960 ஆகவும் விற்றது. ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு ரூ52-ம், பவுனுக்கு ரூ416-ம் உயர்ந்து உள்ளது.

கோவையில் சவரன் விலை ரூ 17000க்கு விற்பனையானது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு : இந்திய விண்வெளி கமிஷன் இன்று கூடுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு: இந்திய விண்வெளி கமிஷன் இன்று கூடுகிறது

எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட புகாரை தொடர்ந்து, இஸ்ரோவின் ஆன்டிரிக்ஸ் நிறுவனம் மாற்றி அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய விண்வெளி கமிஷனின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) வர்த்தக பிரிவான ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துக்கும், தேவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கும் இடையே எஸ் பாண்டு அலைகற்றை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, எஸ் பாண்டு அலைகற்றை ஒதுக்கீட்டை 20 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த தேவாஸ் நிறுவனம் அதற்காக ஆண்டுக்கு ரூ.50 கோடி செலுத்தினால் போதும். இதனால் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதனால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் சட்டபூர்வமானது என்றும், அதை ரத்து செய்ய முடியாது என்றும் தேவாஸ் நிறுவனம் கூறியிருந்தது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று முன்தினம் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த கூட்டத்தில் இஸ்ரோவின் தலைவரும், விண்வெளி துறையின் செயலாளருமான கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, எஸ் பாண்டு அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துக்கும், தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் சாராம்சம் பற்றி விளக்கி கூறினார்.

பின்னர் மந்திரிசபை கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சர்ச்சைக்குரிய எஸ் பாண்டு அலைக்கற்றை ஒப்பந்தம் பற்றி விசாரணை நடத்த முன்னாள் மந்திரிசபை செயலாளரும், மத்திய திட்டக்கமிஷன் உறுப்பினருமான பி.கே.சதுர்வேதி, பிரபல விண்வெளி விஞ்ஞானியும் விண்வெளி கமிஷன் உறுப்பினருமான ரோத்தம் நரசிம்மா ஆகியோர் அடங்கிய உயர்மட்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.

இந்த இரு நபர் கமிட்டி, மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள தொழில்நுட்பம், வர்த்தகம், விதிமுறைகள், நிதி தொடர்பான விளைவுகள் போன்றவற்றை ஆய்வு செய்கிறது. மேலும் அலைக்கற்றை ஒப்பந்தத்தை ஒரு மாதத்துக்குள் இந்த கமிட்டி ஆய்வு செய்து, விண்வெளி துறை அமைச்சகத்தை கவனித்து வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது.

இந்நிலையில் இஸ்ரோவின் ஆன்டிரிக்ஸ் நிறுவனம் மாற்றி அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய விண்வெளி கமிஷனின் ஆலோசனை கூட்டம் விண்வெளி துறையின் செயலரான ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று டில்லியில் நடைபெறுகிறது

இக்கூட்டத்தில், ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் ஒப்பந்தம் பற்றி விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பபட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

நடுநிலையோடு செயல்பட வேண்டும் : சி.பி.ஐ. யாருக்கும் பயப்படக்கூடாது ; பிரதமர் மன்மோகன்சிங்.

நடுநிலையோடு செயல்பட வேண்டும்:    சி.பி.ஐ. யாருக்கும்    பயப்படக்கூடாது;    பிரதமர் மன்மோகன்சிங் அறிவுரை

டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை இன்று பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கிவைத்தார். அப் போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள புலனாய்வு துறைகளில் சி.பி.ஐ. முதன்மை துறையாக விளங்குகிறது. இதன் பணிகள் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும். தங்கள் பணிகளில் எந்த குறுக்கீடு வந்தாலும் அதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் பயப்படக் கூடாது. தங்கள் கடமைகளை சரியாக செய்ய வேண்டும். அதே நேரத்தில் செய்யும் பணிகள் நடுநிலை தவறக் கூடாது. யார் தவறு செய்தாலும், அவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் அவர்கள் எந்த உயர் அந்தஸ்தில் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது.

சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமம். இந்தியா சட்டத்தின் படி நடக்கும் நாடு. இங்கு சட்டத்தை மீறுபவர்கள் அதற்குரிய தண்டனை பெற்றே ஆக வேண்டும். அதே நேரத்தில் யாரையும் பழிவாங்கும் வகையில் நடவடிக்கை இருக்க கூடாது. அப்பாவிகளை துன்புறுத்தவும் கூடாது. பத்திரிகைகளின் விமர்சனங்கள் போன்றவற்றுக்கு கலங்காமல் உங்கள் கடமைகளை செய்யுங்கள்.

நமது சமுதாயம் வெளிப்படையானது. எனவே ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களை சொல்வார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் எது சரியானதோ அதை செய்ய வேண்டும். சி.பி.ஐ. மிகவும் முக்கியமான வழக்கு விவகாரங்களை கவனிப்பதால் இந்த பணிகள் சவால் நிறைந்ததாக இருக்கலாம். இதை சரியாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சி.பி.ஐ.க்கு தேவையான நிதி உதவி, தொழில் நுட்ப உதவி, மற்றும் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

கற்பழிப்பு முயற்சியில் மாணவி கொலை - உடலை தூக்கில் தொங்கவிட்டு வாலிபர் ஓட்டம்.

பிளஸ்-2 மாணவியை கற்பழிக்க முயன்ற அவரது உறவுக்கார வாலிபர், அந்தப் பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

கோவையை அடுத்துள்ள துடியலூர் நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் மகள் தீபிகா (16). ஆர்.வி.நகரில் பாட்டி கனகலதா வீட்டில் தங்கி இருந்து பிளஸ்-2 படித்து வந்தார். தீபிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சதீஷ் குமாருக்கும் (24) பழக்கம் இருந்து வந்தது.

முதலில் அத்தை மகன் என்ற உறவு இருப்பதாக நினைத்து சதீஷ்குமாருடன் தீபிகா பழகியுள்ளார். ஆனால், அவர் அத்தை மகன் அல்ல என்றும் உங்கள் இருவருக்கும் இடையே அண்ணன்- தங்கை உறவுதான் என்றும் தீபிகாவிடம் கூறிய கனகலதா, தகாத உறவை துண்டிக்குமாறு எச்சரித்திருந்தார்.

இந் நிலையில் நேற்றிரவு தீபிகாவின் அறைக்குள் நுழைந்த சதீஷ்குமார் தீபிகாவை கற்பழிக்க முயன்றுள்ளார். அவர் உடன்படாததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கொலையை மறைப்பதற்காக தீபிகாவை தூக்கில் தொங்க விட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அந்த அறைக்கு ஓடிய கனகலதாவை தள்ளி விட்டுவிட்டு அறைக்கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு அங்கிருந்து சதீஷ்குமார் தப்பி ஓடிவிட்டார்.

அறைக்குள் சிக்கிய கனகலதா போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தப்பியோவிட்ட சதீஷ்குமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேச முதல் அமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயம் - பூடானில் தரையிறங்கியது..


அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளது.

தவாங் நகரில் இருந்து தலைநகர் இடாநகர் நோக்கி புறப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் முதல்வரின் தனிச்செயலர்கள் இருவர் மற்றும் பைலட்டுகள் இருவர் உடன் பயணம் செய்தனர்.

காலை 10 மணியளவில் தவாங்கில் புறப்பட்ட ஹெலிகாப்டரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் அருணாசலப் பிரதேசத்தில் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பில் இருந்து விலகியது. கடைசியாக தவாங் அடுத்த செலா பாஸ் பகுதியில் வந்த ஹெலிகாப்டர் ராடரில் தெரிந்தது. அதன் பிறகு ஹெலிகாப்டர் இருக்கும் இடம் தெரியவில்லை.

இந்நிலையில், முதல்வரின் ஹெலிகாப்டரை தேடும் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. முதல்வர் டோர்ஜி காண்டு இந்திய ராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றியவர். கடந்த 2007ல் அவர் அருணாசலப் பிரதேச முதல்வராக பதவி ஏற்றார்.

பத்திரமாக பூடானில் தரையிங்கியுள்ளது.

அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜீ காண்டூவை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போன நிலையில் அது பத்திரமாக பூடானில் தரையிறங்கியுள்ளது.

12 மணிநேரம் உழைப்பு ! - சீமான் மே தினச் செய்தி.


12 மணி நேரம் உழைத்தால்தான் வயிற்றைக் கழுவ முடியும் என்ற நிர்பந்தம் வந்துவிட்டது இன்றைக்கு, என தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சீமான்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள மே தின செய்தி:

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை.

ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும் தான் தொடங்கியது.

இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள் எட்டுமணிநேரவேலை என்ற உரிமைக்காக போராடினார்கள்.

1886 ம் ஆண்டு மே 1ஆம் நாள் எட்டுமணி நேர வேலைக்காக அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்த நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டமே மே நாள் என்ற உழைப்பாளர் உரிமை தினத்தின் தொடக்கம்.

அந்த உரிமைப்போரில் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியும், தூக்குமேடை ஏறியும் உயிர்தந்த ஈகியரை இந்த நாளில் நினைவில் ஏந்துவோம்.

அந்த உரிமை தினத்தை ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கு முறைக்கு அஞ்சாமல், 1923ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் செங்கொடி ஏற்றி இந்த துணைக் கண்டத்திற்கே அறிமுகம் செய்து வைத்தவர் எங்கள் பாட்டன் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்.

நவீன காலத்தின் தொடக்கத்தில் உலகெங்கும் உழைப்பாளர்களும்அவர்களின் உரிமைப்போரும் தோன்றிய காலத்தில்தான், தமிழினமும் நாடுதோறும் கூலிகளாய் சென்றது.

தமிழர்கள் உலகிற்கு உழைப்பையும், அதன் வழி கூலி என்ற சொல்லையும் உலக மொழிகளுக்கெல்லாம் தந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எம் முப்பாட்டனின் பொதுமைக்கு உயிர்கொடுத்தான்.

தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் உலகமுதலாளிகள் கற்றுக் கொண்ட பாடம். இன ஒடுக்குமுறை. அதனால்தான் உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று முழங்கிய மாமேதை லெனின், ஒடுக்கும் இனத்தின் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கு போராடவேண்டும் என்றார்.

எம் தமிழினத்திற்கு வந்த சாபக்கேடோ என்னவோ இந்திய பொதுவுடைமையாளர்கள் இதை வாய்ப்பாக மறந்துபோனார்கள்.

அதன்விளைவுதான் 30 கடல் மைல் தொலைவில் எம் உறவுகள் இன ஒடுக்கு முறையால் மண்ணின் மைந்தர்கள் என்ற உரிமையை மட்டுமல்ல உழைப்பாளர்கள் என்ற தகுதியையும் இழந்து பிச்சைக்காரர்களாய் கையேந்தி நிற்கிற கொடுமை.

தாய்த்தமிழகத்திலோ தொழில் வாய்ப்புகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏராளமான தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு, தமிழர்களை அத்தக் கூலிகளாக மட்டுமே ஏற்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் பெருகியுள்ளன.

பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமையற்ற உதிரிகளாய் மாற்றப்பட்டிருக்கின்றனர். கொஞ்சநஞ்சம் உள்ள ஆலைகளிலும், 12 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால் தான் வயிற்றைக் கழுவ முடியும் என்ற நிலை.

உழவுத்தொழில் தன் இறுதிக்காலத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது, உழவுக்கு அடுத்த நிலையில் இருந்த நெசவுத்தொழில் அழிந்து விட்டது. பட்டினிச் சாவுகளும், குடும்பமாய் தற்கொலை செய்து கொள்வதும் தமிழர்களின் தலைவிதியாகிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கும், இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட்டு உழைப்பாளர்கள் உரிமைக்காய் ஒன்று சேர்வதற்கும், மேதின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம்.

இவ்வாறு மே தின செய்தி அறிக்கை வெளியி்டப்பட்டுள்ளது.

காதலிக்க மறுத்த பெண்ணை விபசார அழகியாக சித்தரித்து இன்டர்நெட்டில் ஆபாச தகவல் - சாப்ட்வேர் நிறுவன ஊழியர் கைது.


தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணை விபச்சாரப் பெண்ணாக சித்தரித்து, இணையத்தளங்களில் அவர் குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட சென்னை சாப்ட்வேர் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஸ்ருதி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில், எனக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் எனக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் ஆபாச தகவல்கள் ஒரு இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. எனது தோழிகளுக்கும், எனது உறவினர்களுக்கும் இந்த ஆபாச தகவல்கள் இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

என்னை ஒரு விபசார அழகியாக சித்தரித்து எனது செல்போன் நம்பரையும், எனது போட்டோவையும் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளன. இந்தத் தகவல்களை பார்த்து எனது உறவினர்களும் தோழிகளும் துக்கம் விசாரிப்பது போல என்னிடம் விசாரிக்கிறார்கள்.

இதனால் நான் மிகுந்த அவமானத்துக்குள்ளாகி கடுமையான மன உளைச்சலில் உள்ளேன். இந்த ஆபாச தகவல்களை அனுப்பிய நபர் யார் என்று கண்டுபிடித்து அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இது குறித்து `சைபர் கிரைம்' போலீசார் நடத்திய விசாரணையில் விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்து இந்த ஆபாச தகவல்கள் இணையத்தளத்தில் அப்லோட் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

அந்த நிறுவனத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு ஹெச்.ஆர். பிரிவில் வேலை பார்க்கும் பாலமுருகன் (32) என்பவர் தான் இதைச் செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் தந்த வாக்குமூலத்தில்,

நானும் அந்தப் பெண்ணும் அண்ணாநகரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் முதலில் வேலை பார்த்தோம். அப்போது அவரை நான் ஒருதலைபட்சமாக காதலித்தேன். ஆனால், எனது காதலை அவர் நிராகரித்துவிட்டார். வேலையில் இருந்தும் நின்று விட்டார். அவர் நடந்து கொண்ட விதம் எனது மனதில் மிகப் பெரிய காயத்தை உண்டாக்கியது.

அதற்கு பழிவாங்கும் வகையில் அவரைப் பற்றி ஆபாச தகவல்களை இணையத் தளத்தில் வெளியிட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

பாலமுருகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். பாலமுருகன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மே 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.


மே 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்தார்.

தேர்வு முடிவுகளை இணையத் தளங்களிலும் எஸ்எம்எஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பத்தம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மே 14ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்திருந்தார். மே 13ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், அடுத்த நாளே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவது குழப்பமான நிலையை உருவாக்கும் என பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து கல்வித்துறை செயலாளர் சபீதா தன்னுடனோ அரசிடமோ ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையான முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.

வழக்கமாக கல்வித்துறை அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பிறகே பிளஸ் தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் திமுக அரசு காபந்து அரசு தான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட சபீதா தானாகவே தேதியை அறிவித்தார். அவர் மீது ஜெயலலிதா ஆதரவாளர் என்ற புகாரும் கூறப்பட்டு வருகிறது.

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவுவதாக ஏற்கனவே பேச்சு உள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வரும் பல்வேறு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி சபீதா உள்ளிட்ட சில அதிகாரிகள் சிலர் தன்னிச்சையாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இந் நிலையில் மே 9ம் தேதியே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைபச்சர் தங்கம் தென்னரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

அதிக மைலேஜ் தரும் கார் - வாயடைக்க வருகிறது நானோ டீசல்.


பைக்குகளுக்கு குட்பை சொல்லும் காலம் விரைவில் வரப்போகிறது. ஆம், லிட்டருக்கு 40 கி.மீ., செல்லும் நானோ டீசல் காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது டாடா மோட்டார்ஸ்.

உதிரிபாகங்கள் மற்றும் எஞ்சின் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்ற போஸ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானோவுக்கான டீசல் எஞ்சினை உருவாக்கி வருகிறது டாடா. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் டீசல நானோ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டீசல் நானோ குறித்து போஸ்ச் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

"நானோவுக்கான பெட்ரோல் எஞ்சின் தயாரிப்பதில் டாடாவுடன் இணைந்து பணியாற்றினோம். அதேபோன்று, நானோவுக்கான டீசல் எஞ்சின் தயாரிப்பதிலும் டாடாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த எஞ்சின் 700 சிசி கொண்டதாக இருக்கும்.

மேலும், ஒரு லிட்டருக்கு 40 கி.மீ., செல்லும் வகையில் இந்த எஞ்சின் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேவளை, செயல்திறனிலும் இது சிறப்பாக இருக்கும். நானோ டீசலில் மாடலில் ஒரு கி.மீ., பயணம் செய்ய வெறும் ஒரு ரூபாய்தான் செலவாகும்.

180 சிசி மோட்டார்சைக்கிளில் ஒரு கி.மீ., பயணம் செய்வதற்கு ஆகும் செலவும், நானோவில் செல்வதற்கான செலவும் சமமாக இருக்கும். எனவே, மார்க்கெட்டில் டீசல் நானோ புதிய புரட்சியை ஏற்படுத்தும்," என்றார்.

இதை டாடா மோட்டார்ஸ் செய்திதொடர்பாளர் கூறுகையில்,"அதிக மைலேஜ் தரும் கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில் நானோ டீசல் மாடல் புதிய சகாப்தம் படைக்கும்," என்று கூறினார்.

'சராசரி அறிவு'... ஜோஷி மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி எழுதிய அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, உண்மையைத் திரித்து எழுதப்பட்டுள்ளது. லைசென்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக பிரதமருக்கு நான் அளித்த யோசனைகளை ஜோஷி வேண்டுமென்றே குறிப்பிடப்படாமல் தவிர்த்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 15.1.2008ம் தேதி பிரதமர் மன்மோகனுக்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான நுழைவுக் கட்டணம் பற்றி நான் எதுவும் தெரிவிக்கவில்லை, பயன்பாட்டுக் கட்டணம் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.

இதை சராசரி அறிவுள்ள ("average intelligence") எவரும் கவனத்தில் கொள்ள முடியும். ஆனால், முரளி மனோகர் ஜோஷியின் அறிக்கையில் 2008ல் பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில் கூறப்பட்ட விஷயங்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளன.

மாறாக நான் இந்த விஷயம் முடிந்தபோன விஷயம் (matter as closed) , இதை இத்துடன் விட்டுவிடலாம் என்று பிரதமரிடம் கூறியதாக தவறான வகையில் குறிப்பிட்டுள்ளார் ஜோஷி.

அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விற்பனை மூலம் கூடுதலாக அரசுக்கு பணம் ஈட்டுவது எப்படி என்று நான் எனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 3 யோசனைகளை ஜோஷி திட்டமிட்டு மறைத்துள்ளார்.

ஜோஷியின் வரைவு அறிக்கையில் என்ன விஷயம் இடம் பெற வேண்டுமோ அது இடம் பெறவில்லை. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களுக்கு முறையாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, நிதி அமைச்சர் என்ற முறையில் நான் தெரிவித்த யோசனைகள் எல்லாம் குறிப்பிடப்படவில்லை.

ஸ்பெக்ட்ரம் என்பது மிகவும் அரியதானது, அதனால் அதன் மதிப்பை உணர்ந்து விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இதை யெல்லாம் ஜோஷி வேண்டுமென்றே மறைத்துவிட்டு அறிக்கையை தயார் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இதே விவரங்களை நிருபர்களிடமும் சிதம்பரம் விளக்கினார். அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எனக்கு நேரடித் தொடர்பு என்று முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறியதற்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? என்றார்.

"சராசரி அறிவுள்ள எவரும் என் கருத்தைப் புரிந்து கொள்வர்'' என்று நீங்கள் கூறியது, முரளி மனோகர் ஜோஷியைக் குறிப்பிடுவதாக கருதலாமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் அப்படி கூறவில்லை. என்னை போல சராசரி ஆள் புரிந்து கொள்ளலாம் என்று என்னையே நான் கூறிக் கொண்டேன் என்றார் பதிலடியாக.

அறிக்கையை சபாநாயகரிடம் தர ஜோஷி:

பொதுக் கணக்குத் தலைவராக இருந்து கொண்டு தனது குழுவில் உள்ளவர் களிடமே முழுமையாக ஆலோசிக்காமல் பிரதமர், சிதம்பரம் மீது கடும் குற்றங்களை சுமத்தி தானே எழுதிய அறிக்கையை மக்களவை சபாநாயகர் மீரா குமாரிடம் அளிக்க அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி முடிவு செய்துள்ளார்.

ஜோஷி தலைமையிலான பிஏசி குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஜோஷியை நீக்கி, அவருக்குப் பதிலாக சைபுதீன் சோஸ் தலைவராக நியமித்தும், ஜோஷி எழுதிய அறிக்கையை நிராகரித்தும் பொதுக் கணக்குக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், இந்த அறிக்கையே செல்லுபடியாக ஒன்றாக விட்டதாகவே கருதப்படுகிறது.

காங்கிரஸை மாட்டிவிடுகிறேன் பேர்வழி என்ற அவசரத்திலும் பாஜகவுக்கு ஆதாயம் தேடவும் ஜோஷி காட்டிய அவசரம், அவருக்கே எதிராகத் திரும்பி விட்டது. இதன்மூலம் ஆதாயம் தேட முயன்ற பாஜகவுக்கும் காங்கிரஸ் செக் வைத்துவிட்டது.

இந் நிலையில் அறிக்கையை சட்டப்பூர்வமாக தாக்கல் செய்வது குறித்து ஜோஷி அதிமுக, பிஜு ஜனதா தளம், இடதுசாரி உறுப்பினர்களுடன் நேற்று ஜோஷி ஆலோசனை நடத்தினார். அதில், அறிக்கையை சபாநாயகரிடம் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜப்பான் புகுஷிமா அணு உலை குளிர்விக்கப்பட்டது.

புகுஷிமா அணு உலை குளிர்விக்கப்பட்டது

கடந்த மாதம் ஜப்பானில் ஆழிப்பேரலை, நிலநடுக்கம் தாக்கியது. இதில் ஜப்பானே நிலைகுழைந்து போனது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சுனாமி, நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு உலைகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

இதில் அணு உலைகளை குளிர்விக்கும் குழாய்கள் வெடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கதிர் வீச்சு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் அணுஉலை பாதுகாப்பு அமைப்பு கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும், அதனை சரி செய்யவும் மும்முரமாக இறங்கியது.


இதற்கு ஜப்பான் மேலை நாடுகளின் உதவியை நாடியது. இந்நிலையில் அணு உலைக்கு குளிர்விக்கும் குழாயை சரிசெய்து தற்பொழுது அணு உலைக்கு குளிர்விக்கு டன் கணக்கான தண்ணீரை குளிர்விக்கும் குழாய் மூலம் தண்ணீரை செலுத்தி வருகின்றது.

இதனால் புகுஷிமாவின் முதல் அணு உலை மீண்டும் வெற்றிகரமாக செயல்படுகின்றது என அணு உலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் ; ஏர் இந்தியா நிர்வாகம் விமானிகளுக்கு கெடு.

மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்;ஏர் இந்தியா நிர்வாகம் விமானிகளுக்கு கெடு.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள் ஊதிய உயர்வு, நிர்வாக குளறுபடிகளை சீர்செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் 320 விமானங்களில் 270 விமானங்கள் இயங்கவில்லை. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை தடைபட்டது.

இதனைத் தொடர்ந்து விமானிகள் உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு கூறியது. ஆனால் தங்கள் கோரிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுகப் போவதாக விமானிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

இன்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஏர் இந்தியா முன்பதிவு டிக்கெட் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் கெடு விடுவித்துள்ளது.

சாய்பாபா மறைந்த புட்டபர்த்தி புண்ணிய தலமாக மாற்றப்படும் ; ஆந்திர மந்திரி அறிவிப்பு.

சாய்பாபா மறைந்த புட்டபர்த்தி புண்ணிய தலமாக மாற்றப்படும்; ஆந்திர மந்திரி அறிவிப்பு

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணிகளில் ஈடுபட்ட சாய்பாபா கடந்த 24-ந்தேதி மரணம் அடைந்தார். கடந்த புதன்கிழமை அவரது உடல் அங்குள்ள பிரசாந்தி நிலையத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அவரது சமாதியை தரிசனம் செய்ய பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாய்பாபா சமாதியை தரிசனம் செய்தனர். இன்றுடன் சமாதி தரிசனம் முடிவடைகிறது. சாய்பாபா மறைந்த புட்டபர்த்தி புண்ணிய தலமாக மாற்றப்படும் என்று ஆந்திர மந்திரி ரகுவீரா ரெட்டி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

சாய்பாபா வாழ்ந்து மறைந்த புட்டபர்த்தி மிகவும் புனிதமான தலம். இதை உலகின் மிகப் பெரிய புண்ணிய தலமாக மாற்ற ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கும். சாய்பாபா ஆசிரமத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படும்.

சாய்பாபா தனது காலத்தில் ஏழை, எளியோர் நலம் பெற இலவச மருத்துவமனை, கல்வி கூடங்களை ஏற்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்தினார். அவரது பணி தொடர மாநில அரசு அத்தனை உதவிகளையும் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

என்டோ சல்பானை ஒழிக்க கேரளாவில் போராட்டம்.


இயற்க்கை எழில் கொஞ்சும் கேரளாவில் மக்கள் அதிகமாக வளர்ப்பது தென்னை மரங்களைத் தான்.

அந்த தென்னை மரங்கள் மற்றும் பயிர்களில் பூச்சிக்கொல்லியாக என்டோ சல்பான் என்னும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டது.

இதனால் விவசாயிகள் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு என்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தே காரணம் என்றும் கேரள அரசு கூறியது.

மேலும் இந்த மருந்தை விவசாயிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இதை வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் கடந்த 15-ந்திகதி முதல் மந்திரி அச்சுதானந்தன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. அடுத்த கட்டமாக இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது.

அதன்படி கேரளா முழுவதும் இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதனால் கேரளாவில் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. வர்த்தக நிறுவனங்களும் மூடிக்கிடந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஆங்காங்கே ஒருசில பெட்டி கடைகளும் திறந்திருந்தது.

முழு அடைப்பு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள் சிலவும் இன்று மூடப்பட்டது. திறந்திருந்த ஒரு சில நிறுவனங்களிலும் குறைந்த அளவே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தன.

வெளிநாடுவாழ் இந்தியர் அமைச்சக தலைமையகம் கட்டும்பணி தொடக்கம் : அமைச்சர் வயலார் ரவி.



வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சகத்திற்கான தலைமை அலுவலகம் கட்டும்பணி வியாழக்கிழமை தில்லியில் தொடங்கிவைக்கப்பட்டது.

மத்திய வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி இந்த கட்டுமானப்பணியை தொடங்கிவைத்து பேசினார் - அவர் பேசியது :

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இணைப்புப் பாலமாக இந்த தலைமை அலுவலகம் திகழும். இதன் கட்டுமானப்பணிகள் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடையும்.

இந்த கட்டத்தை கட்டுவதற்கு நிதி ஒரு பிரச்னையாக இராது. இக்கட்டடம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிகவும் பயனளிக்கும்வகையில் சகல வசதிகளும் கொண்டதாக கட்டப்படும். இதில் நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், விருந்தினர் விடுதி, நிரந்தர கண்காட்சிக்கூடம், விற்பனை மையங்கள் போன்றன மிக நவீனமான முறையில் அமைக்கப்படும்.

தேசிய கட்டுமான நிறுவனத்திடம் இந்த கட்டடத்தைக் கட்டும்பணி ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இந்த தலைமையக கட்டடம் உருவாக்கப்படும் என்று 2004-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. ரூ.80 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்த தலைமையகத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார் இப்போது கட்டடம் கட்டும்பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த தலைமையகம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.

பின்லேடன் மகன் 2002-ல் பாகிஸ்தானில் வசித்தார் : விக்கி லீக்ஸ்.

ஒசாமா பின்லேடனின் மகன்களில் ஒருவரான சயீது பின்லேடன் 2002-ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்பாக வசித்து வந்ததாக விக்கி லீக்ஸ் இணைய தளம் தெரிவித்துள்ளது.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நிகழ்த்தப்பட்ட நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் கராச்சி நகரில் வசித்துள்ளார். இந்தத் தகவலை அவருக்கு நெருக்கமானவரும் நியூயார்க் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவருமான அப்துல் ரப்பானி அபு ரஹ்மான் தெரிவித்ததாக அந்தத் தகவல் கூறுகிறது.

அபு ரஹ்மான் 2002-ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக அமெரிக்காவின் குவான்தனாமோ தடுப்பு காவல் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் கராச்சியிலும் பிற பகுதிகளிலும் அல் காய்தா முக்கிய தீவிரவாதிகள் பதுங்குவதற்கு உருவாக்கப்பட்ட பாதுகாப்பான இல்லங்களை நிர்வகிப்பது, அல் காய்தாவின் முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு சதித் திட்டங்களை தீட்டுவது உள்ளிட்டவை இவரது வேலைகளாக இருந்துள்ளன. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்படும் 19 பேரில் 17 பேருக்கு அவர் நேரடியாக உதவி செய்துள்ளார். பல முறை இவர் ஒசாமா பின் லேடனை நேரில் சந்தித்துள்ளார்.

2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பாகிஸ்தானில் பாதுகாப்பாக சயீது பின்லேடன் வசித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் 2008-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது.

எண்டோ சல்ஃபானுக்கு தடை : இந்தியா சம்மதம்


சுற்றுச் சூழல், உடல் நலத்துக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் பூச்சிக் கொல்லி மருந்தான எண்டோ சல்ஃபானைத் தடை செய்வதற்கு சர்வதேச மாநாட்டில் இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு இந்தத் தடையில் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எண்டோ சல்ஃபானை முற்றிலுமாக தடை செய்வதற்கு 11 ஆண்டு அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது இதில் முக்கியமானதாகும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கரிமவேதிப் பொருள்கள் தொடர்பான ஸ்டாக்ஹோம் தீர்மானம் குறித்த சர்வதேச மாநாடு கடந்த 5 நாள்களாக ஜெனீவாவில் நடந்தது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், எண்டோ சல்ஃபானை முழுமையாகத் தடை செய்வதற்கு நீண்டகால அவகாசம் வழங்குவது, பாதுகாப்பான, குறைந்த விலையிலான மாற்றுப் பொருளை கண்டறிவது போன்ற கோரிக்கைகள் வளரும் நாடுகள் சார்பில் வைக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் மாநாட்டில் ஏற்கப்பட்டிருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எண்டோ சல்ஃபானை தடை செய்யும்போது, உரிய நிதிஉதவி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கோரியிருப்பதாகத் தெரிகிறது. இதற்கு இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எண்டோ சல்ஃபானுக்கு விதிமுறைகளுடன் கூடிய தடை விதிக்கப்பட வேண்டும் என்று சீனா சார்பில் கோர்ப்பட்டது.

எனினும், எண்டோ சல்ஃபானுக்குத் தடை விதிப்பதற்கு அனைத்து நாடுகளும் சம்மதித்தன. இதையடுத்து, மாநாட்டு தீர்மான வரைவில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்கள் பட்டியலில் எண்டோ சல்ஃபானும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவுத் தீர்மானம் ஏற்கப்பட்டால் உலகம் முழுவதும் என்டோ சல்ஃபானுக்கு முறைப்படி தடை விதிக்கப்படும்.

என் படத்துக்கே தியேட்டர் இல்லை : கருணாநிதி.



தான் எழுதி வெளிவந்துள்ள "பொன்னர்-சங்கர்' திரைப்படத்துக்கே தியேட்டர் கிடைக்கவில்லை' என்று முதல்வர் கருணாநிதி புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை யென்று சினிமா வட்டாரங்களில் விமர்சிக்கிறார்கள். என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். இப்போது படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

நான் எழுதி வெளிவந்துள்ள "பொன்னர் சங்கர்' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அலையாய் அலைந்துதான் தியேட்டர்களைப் பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர்விட்ட நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும்.

கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டாம் நாளே அந்தத் திரைப்படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்டார்கள் என்றார் அவர்.

வாரிசுகளின் வளர்ச்சியில் அர்த்தம் கற்பிப்பது ஏன்? கருணாநிதி கேள்வி.



என்னுடைய வாரிசுகளின் வளர்ச்சியில் மட்டும் அர்த்தம் கற்பிப்பது ஏன்? என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தொண்டாற்றியும், தொடர்ந்து தியாகங்கள் செய்தும் கட்சியின் தருக்களாக என்னுடைய பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் வளர்ந்துள்ளனர். அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகில் பொருளீட்டி புகழ் ஈட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக் கணைகள் பாய்ச்சுவதால் உரிய விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறேன். இதில் அபிமன்யூ, ராஜகுமாரி, பராசக்தி உள்ளிட்ட ஏராளமான படங்களும் அடக்கம். எனக்கும், திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் அனைவருடனும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகத்தினர் தெளிவாகப் புரிந்தவர்கள் என்பதை மறந்திருக்க முடியாது.

"கருணாநிதியின் பேரன், பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?' எனக் கேள்வி எழுப்பி ஒரு புத்தகத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து, பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம். முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம், ஏ.வி.எம்.சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும்,

நடிகர் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, ராம்குமாரின் மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும், நடிகர் ரஜினி, அவருடைய மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும், நடிகர் கமல், அவருடைய சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டு இருப்பதும், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் அவருடைய பிள்ளைகள், ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவக்குமார், அவருடைய பிள்ளைகள் சூர்யா, கார்த்தி ஆகியோர் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கை. அதுமாத்திரம் அல்ல; கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதனை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள்; எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாகி தெருவிலே நின்றார்கள் என்பதையெல்லாம் கவிஞர் கண்ணதாசன் புத்தகமாக எழுதியுள்ளார்.

என் குடும்பத்தில்...:

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும்-திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்கேன் பரிசோதனையில் சிக்கினார் : 220 கிராம் தங்க பிஸ்கெட்டை வயிற்றில் விழுங்கி கடத்தல் ; விமான நிலையத்தில் வாலிபர் கைது.

ஸ்கேன் பரிசோதனையில் சிக்கினார்:   220 கிராம் தங்க பிஸ்கெட்டை    வயிற்றில் விழுங்கி கடத்தல்;    விமான நிலையத்தில் வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு கொழும் பில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பரூக் காந்தர் சித்திக் (35) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடலை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் சில பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு “இனிமா” மருந்து கொடுக்கப்பட்டு வயிற்றில் இருந்த பொருட்கள் எடுக்கப்பட்டன. அதிகாரிகள் அதை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். ஆணுறையில் 220 கிராம் எடையுள்ள 5 தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும். இதையடுத்து விமான நிலைய போலீசார் சித்திக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தை கைவிட மறுப்பு.

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தை கைவிட மறுப்பு


ஏர் இந்தியா விமானிகள் வேலைநிறுத்தம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதனால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 320 விமானங்களில் 50 விமானங்கள் மட்டுமே இன்று இயக்கப்படுகிறது. இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் விமானிகள் உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு கூறியது. ஆனால் தங்கள் கோரிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுகப் போவதாக விமானிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே விமானிகள் வேலைநிறுத்தத்தால் இன்று முதல் 5 நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிக்கெட் முன்பதிவு மே 4-ந்தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்படி இன்று மாலை 5 மணிக்குள் விமானிகள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் கெடு விதித்திருந்தது ஆனால் விமானிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்

இதனைதொடர்ந்து வேலை நிறுத்தத்தை கைவிடாத விமானிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று டெல்லி ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டது. ஆனால், தாங்கள் வேலை நிறுத்தத்தை கைவிடப்போவதில்லை என்றும், கோர்ட்டு தங்களுக்கு தண்டனை வழங்கினால் அதை ஏற்று சிறைக்கு செல்லவும் தயார் என்றும் விமானிகள் சங்க நிர்வாகிகள் இன்று மாலை அறிவித்தனர்.

தங்கம் விலை : ஒரே மாதத்தில் ரூ. 1,080 உயர்வு.


ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 1,080 உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த மார்ச் 30-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 15 ஆயிரத்து 464 என்ற விலையில் விற்பனை ஆனது. அடுத்த 30 நாள்களில் ரூ. 1,080 விலை அதிகரித்து, ஏப்ரல் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு பவுன் ரூ. 16, 544 என்ற விலையில் விற்பனையானது. ஒரு கிராம் ரூ.2,068.

வியாழக்கிழமை விலை:

ஒரு பவுன்: ரூ.16,552.

ஒரு கிராம்: ரூ.2,069.

பறவைகள் சரணாலயம், தர்காவில் சூரிய ஆற்றல் மின்சாரம்.


சூரிய ஆற்றல் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் ராஜஸ்தான் மாநிலம் முன்னோடியாக வளர்ந்து வருகிறது. முதல் கட்டமாக மாநிலத்தில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்திலும், ஹஜ்ரத் மொய்னுதீன் கிஸ்தி தர்காவிலும் சூரிய மின்னாற்றலைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

மாநிலத்தில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய ஆற்றலை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே ஆஜ்மீரில் உள்ள ஹஜ்ரத் மொய்னுதீன் தர்காவில் இதற்கான சூரிய ஒளிப் பலகைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதேபோல பரத்பூரில் உள்ள கியோலெடோ தேசிய பூங்காவிலும் சூரிய ஒளி மூலமான மின் பலகைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் சித்தூர்கர் கோட்டையிலும் சூரிய மின்னாற்றல் பலகைகள் நிறுவ மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

ஆஜ்மீர் தர்காவில் 20 கிலோவாட் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் சூரியன் மறைந்தபிறகு 6 மணி நேரத்திற்கு இங்குள்ள மின் விளக்குகள் செயல்படும். அத்துடன் இங்கு வரும் பக்தர்களுக்கு வெந்நீர் அளிப்பதற்கு சூரிய ஒளியில் இயங்கும் 500 லிட்டர் மற்றும் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் ஹீட்டர்களும் நிறுவப்பட்டுள்ளன. முன்னர் வெந்நீருக்கு மின்சார வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்ன. சிலசமயங்களில் மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக மரபுசாரா எரிசக்தித்துறை நிறுவன அதிகாரி ஆர்.ஆர். செüத்ரி தெரிவித்தார்.

பரத்பூரில் உள்ள தேசிய பூங்கா, உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் நீர் இறைக்கப் பயன்படும் மோட்டாருக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஆற்றல் மூலம் கிடைக்கிறது. இங்குள்ள குளத்தில் நீர் எப்போதும் இருப்பதால் பறவைகள் எப்போதும் இங்கு இருந்துகொண்டேயிருக்கும். குளத்திலிருந்து நீரை இறைக்கும் மோட்டார்களும் சூரிய ஆற்றளில் செயல்படுபவையாகும். இவை தவிர, அலுவலகம், கண்காட்சியகம் ஆகியவற்றில் உள்ள மின் சாதனங்களுக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஆற்றல் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக 8 கிலோவாட் சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பரத்பூர் சரணாலயத்தில் ரூ. 1 கோடி செலவிலான பணிகள் இந்த ஆண்டு அக்டோபரில் நிறைவடையும்.

இந்த சரணாலயத்துக்கு மிகவும் அரிய வகை பறவைகளான சைபீரிய கொக்கு உள்ளிட்ட 230 வகை பறவைகள் வந்து செல்கின்றன. இந்த பூங்காவைச் சுற்றிப் பார்க்க பேட்டரியில் இயங்கும் 2 கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. ராஜஸ்தானில் பல்வேறு பகுதிகளில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் : தபால் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்.

நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம்: தபால் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

தபால் துறை நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, சென்னையில் உள்ள பொது தலைமை தபால் நிலைய (ஜி.பி.ஓ.) தபால் பட்டுவாடா ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாணவர்களின் ரிசல்ட், அனுமதி கடிதங்கள் மலைபோல் குவிந்துள்ளன.

சென்னை ராஜாஜி சாலையில் கடற்கரை ரெயில் நிலையத்துக்கு எதிரே பொது தபால் நிலையம் (ஜி.பி.ஓ.) செயல்படுகிறது. இது நூறு ஆண்டுகளுக்குமேல் தபால் சேவையில் ஈடுபட்டுள்ளது.

தற்போது, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், துறைமுகம், ரிசர்வ் வங்கி, வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட தபால் சேவை ஜி.பி.ஓ.வின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன.

இங்கு சாதாரண தபால், துரித தபால் (ஸ்பீடு போஸ்டு), பதிவுத்தபால், மணியார்டர் பட்டுவாடாவில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். கடந்த 26-ந் தேதி வரையில் தபால் பட்டுவாடாவில் எந்த தொய்வும் ஏற்படவில்லை.

28-ந் தேதியில் இருந்து பட்டுவாடா ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, ஜி.பி.ஓ.வில், தபால்கள், குறிப்பாக மாணவர்களின் தேர்வு முடிவுகள், புதிய சேர்க்கைக்கான அனுமதிக்கடிதங்கள், திருமண பத்திரிகைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தபால்கள், வங்கிகளுக்கான தபால்கள் மலை போல் குவிந்துள்ளன. முதியோர் பென்சன் தொகைக்கான மணியார்டர்களும் தேங்கி கிடக்கின்றன.