Saturday, April 30, 2011

அதிக மைலேஜ் தரும் கார் - வாயடைக்க வருகிறது நானோ டீசல்.


பைக்குகளுக்கு குட்பை சொல்லும் காலம் விரைவில் வரப்போகிறது. ஆம், லிட்டருக்கு 40 கி.மீ., செல்லும் நானோ டீசல் காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது டாடா மோட்டார்ஸ்.

உதிரிபாகங்கள் மற்றும் எஞ்சின் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்ற போஸ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானோவுக்கான டீசல் எஞ்சினை உருவாக்கி வருகிறது டாடா. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் டீசல நானோ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டீசல் நானோ குறித்து போஸ்ச் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

"நானோவுக்கான பெட்ரோல் எஞ்சின் தயாரிப்பதில் டாடாவுடன் இணைந்து பணியாற்றினோம். அதேபோன்று, நானோவுக்கான டீசல் எஞ்சின் தயாரிப்பதிலும் டாடாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த எஞ்சின் 700 சிசி கொண்டதாக இருக்கும்.

மேலும், ஒரு லிட்டருக்கு 40 கி.மீ., செல்லும் வகையில் இந்த எஞ்சின் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேவளை, செயல்திறனிலும் இது சிறப்பாக இருக்கும். நானோ டீசலில் மாடலில் ஒரு கி.மீ., பயணம் செய்ய வெறும் ஒரு ரூபாய்தான் செலவாகும்.

180 சிசி மோட்டார்சைக்கிளில் ஒரு கி.மீ., பயணம் செய்வதற்கு ஆகும் செலவும், நானோவில் செல்வதற்கான செலவும் சமமாக இருக்கும். எனவே, மார்க்கெட்டில் டீசல் நானோ புதிய புரட்சியை ஏற்படுத்தும்," என்றார்.

இதை டாடா மோட்டார்ஸ் செய்திதொடர்பாளர் கூறுகையில்,"அதிக மைலேஜ் தரும் கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில் நானோ டீசல் மாடல் புதிய சகாப்தம் படைக்கும்," என்று கூறினார்.

No comments: