Saturday, April 30, 2011

வெளிநாடுவாழ் இந்தியர் அமைச்சக தலைமையகம் கட்டும்பணி தொடக்கம் : அமைச்சர் வயலார் ரவி.



வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சகத்திற்கான தலைமை அலுவலகம் கட்டும்பணி வியாழக்கிழமை தில்லியில் தொடங்கிவைக்கப்பட்டது.

மத்திய வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி இந்த கட்டுமானப்பணியை தொடங்கிவைத்து பேசினார் - அவர் பேசியது :

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இணைப்புப் பாலமாக இந்த தலைமை அலுவலகம் திகழும். இதன் கட்டுமானப்பணிகள் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடையும்.

இந்த கட்டத்தை கட்டுவதற்கு நிதி ஒரு பிரச்னையாக இராது. இக்கட்டடம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிகவும் பயனளிக்கும்வகையில் சகல வசதிகளும் கொண்டதாக கட்டப்படும். இதில் நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், விருந்தினர் விடுதி, நிரந்தர கண்காட்சிக்கூடம், விற்பனை மையங்கள் போன்றன மிக நவீனமான முறையில் அமைக்கப்படும்.

தேசிய கட்டுமான நிறுவனத்திடம் இந்த கட்டடத்தைக் கட்டும்பணி ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இந்த தலைமையக கட்டடம் உருவாக்கப்படும் என்று 2004-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. ரூ.80 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்த தலைமையகத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார் இப்போது கட்டடம் கட்டும்பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த தலைமையகம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.

No comments: