Saturday, April 30, 2011

ஸ்கேன் பரிசோதனையில் சிக்கினார் : 220 கிராம் தங்க பிஸ்கெட்டை வயிற்றில் விழுங்கி கடத்தல் ; விமான நிலையத்தில் வாலிபர் கைது.

ஸ்கேன் பரிசோதனையில் சிக்கினார்:   220 கிராம் தங்க பிஸ்கெட்டை    வயிற்றில் விழுங்கி கடத்தல்;    விமான நிலையத்தில் வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு கொழும் பில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பரூக் காந்தர் சித்திக் (35) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடலை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் சில பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு “இனிமா” மருந்து கொடுக்கப்பட்டு வயிற்றில் இருந்த பொருட்கள் எடுக்கப்பட்டன. அதிகாரிகள் அதை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். ஆணுறையில் 220 கிராம் எடையுள்ள 5 தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும். இதையடுத்து விமான நிலைய போலீசார் சித்திக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

No comments: