Saturday, April 30, 2011

என்டோ சல்பானை ஒழிக்க கேரளாவில் போராட்டம்.


இயற்க்கை எழில் கொஞ்சும் கேரளாவில் மக்கள் அதிகமாக வளர்ப்பது தென்னை மரங்களைத் தான்.

அந்த தென்னை மரங்கள் மற்றும் பயிர்களில் பூச்சிக்கொல்லியாக என்டோ சல்பான் என்னும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டது.

இதனால் விவசாயிகள் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு என்டோ சல்பான் பூச்சிக்கொல்லி மருந்தே காரணம் என்றும் கேரள அரசு கூறியது.

மேலும் இந்த மருந்தை விவசாயிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இதை வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் கடந்த 15-ந்திகதி முதல் மந்திரி அச்சுதானந்தன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. அடுத்த கட்டமாக இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது.

அதன்படி கேரளா முழுவதும் இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதனால் கேரளாவில் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. வர்த்தக நிறுவனங்களும் மூடிக்கிடந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஆங்காங்கே ஒருசில பெட்டி கடைகளும் திறந்திருந்தது.

முழு அடைப்பு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள் சிலவும் இன்று மூடப்பட்டது. திறந்திருந்த ஒரு சில நிறுவனங்களிலும் குறைந்த அளவே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தன.

No comments: