Saturday, April 30, 2011

அருணாச்சலப் பிரதேச முதல் அமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயம் - பூடானில் தரையிறங்கியது..


அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளது.

தவாங் நகரில் இருந்து தலைநகர் இடாநகர் நோக்கி புறப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் முதல்வரின் தனிச்செயலர்கள் இருவர் மற்றும் பைலட்டுகள் இருவர் உடன் பயணம் செய்தனர்.

காலை 10 மணியளவில் தவாங்கில் புறப்பட்ட ஹெலிகாப்டரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் அருணாசலப் பிரதேசத்தில் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பில் இருந்து விலகியது. கடைசியாக தவாங் அடுத்த செலா பாஸ் பகுதியில் வந்த ஹெலிகாப்டர் ராடரில் தெரிந்தது. அதன் பிறகு ஹெலிகாப்டர் இருக்கும் இடம் தெரியவில்லை.

இந்நிலையில், முதல்வரின் ஹெலிகாப்டரை தேடும் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. முதல்வர் டோர்ஜி காண்டு இந்திய ராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றியவர். கடந்த 2007ல் அவர் அருணாசலப் பிரதேச முதல்வராக பதவி ஏற்றார்.

பத்திரமாக பூடானில் தரையிங்கியுள்ளது.

அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜீ காண்டூவை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போன நிலையில் அது பத்திரமாக பூடானில் தரையிறங்கியுள்ளது.

No comments: