Saturday, April 30, 2011

நடுநிலையோடு செயல்பட வேண்டும் : சி.பி.ஐ. யாருக்கும் பயப்படக்கூடாது ; பிரதமர் மன்மோகன்சிங்.

நடுநிலையோடு செயல்பட வேண்டும்:    சி.பி.ஐ. யாருக்கும்    பயப்படக்கூடாது;    பிரதமர் மன்மோகன்சிங் அறிவுரை

டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை இன்று பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கிவைத்தார். அப் போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள புலனாய்வு துறைகளில் சி.பி.ஐ. முதன்மை துறையாக விளங்குகிறது. இதன் பணிகள் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும். தங்கள் பணிகளில் எந்த குறுக்கீடு வந்தாலும் அதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் பயப்படக் கூடாது. தங்கள் கடமைகளை சரியாக செய்ய வேண்டும். அதே நேரத்தில் செய்யும் பணிகள் நடுநிலை தவறக் கூடாது. யார் தவறு செய்தாலும், அவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் அவர்கள் எந்த உயர் அந்தஸ்தில் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது.

சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமம். இந்தியா சட்டத்தின் படி நடக்கும் நாடு. இங்கு சட்டத்தை மீறுபவர்கள் அதற்குரிய தண்டனை பெற்றே ஆக வேண்டும். அதே நேரத்தில் யாரையும் பழிவாங்கும் வகையில் நடவடிக்கை இருக்க கூடாது. அப்பாவிகளை துன்புறுத்தவும் கூடாது. பத்திரிகைகளின் விமர்சனங்கள் போன்றவற்றுக்கு கலங்காமல் உங்கள் கடமைகளை செய்யுங்கள்.

நமது சமுதாயம் வெளிப்படையானது. எனவே ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களை சொல்வார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் எது சரியானதோ அதை செய்ய வேண்டும். சி.பி.ஐ. மிகவும் முக்கியமான வழக்கு விவகாரங்களை கவனிப்பதால் இந்த பணிகள் சவால் நிறைந்ததாக இருக்கலாம். இதை சரியாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சி.பி.ஐ.க்கு தேவையான நிதி உதவி, தொழில் நுட்ப உதவி, மற்றும் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

No comments: