Friday, June 3, 2011

வைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் !


தேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்தநாள் விழா அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை காமராஜ் அரங்கில் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய வைரமுத்து,

திமுக தலைவர் கருணாநிதி கண்ணாடியை தூக்கி பார்த்து விட்டு பேசினால் கொஞ்சம் கவனமாகப் பேச வேண்டும். காபி அல்ல டீ சாப்பிடுகிறாயா? என்று அவர் கேட்டால் கொஞ்ச நேரம் பேச விரும்புகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்த நேரத்தில் நான் 6வது முறை தேசிய விருது பெற்று விட்டு வாழ்த்து பெற சென்றேன். அப்போது அவர் என்னிடம் இது எத்தனையாவது விருது என்று கேட்டார்.

நான் 6வது விருது என்றேன். உடனே சட்டென்று “எனக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களுக்காவது 6வது முறையாக கிடைத்து இருக்கிறதே” என்று சொல்லிச் சிரித்தார்.

அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்?. அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய போராளியாகவே வாழ்ந்து வருகிறார். இழிவு, அவமானம், துயரம் எல்லாவற்றையும் சந்தித்து விட்டார். அதிகமான அவமானங்களை சந்தித்தவர் அவர் மட்டும்தான். ஆனால், எந்த நிலையிலும் தான் தானாகவே இருப்பவர் கருணாநிதி என்றார்.

கடந்தமுறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கலைஞர் கருணாநிதியை முத்துகருப்பண் தலைமையிலான போலிஸ்படை அராஜகமான முறையில் கைது செய்தது.

இந்நிகழ்வு உடனடியாக சன் டிவி ஒளிபரப்பியது. அரசியல்வாதிகள், மக்கள்கள் கொதித்தெழ அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஒரு நிருபர் கருணாநிதியிடம் உங்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா? என்று கேட்க

அதற்கு அவர், நான் என்ன சுதாகரனா? என்றார்.

காலையில் கைதிலிருந்து, மாலை விடுதலைவரை அவர் அடைந்த துன்பத்தின் சுவடுகூட மாறாத நிலையிலும் அவரின் நகைச்சுவை உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்?.

4 comments:

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Rubbish post better luck next time

Jayadev Das said...

\\“எனக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களுக்காவது 6வது முறையாக கிடைத்து இருக்கிறதே”\\ ஐந்து முறை கொல்லையடிச்சதே போதும், இன்னும் அடிப்பதற்கு ஏங்க கிட்ட ஒன்னும் இல்லை, ஆளை விடுங்க தாத்தா.

\\எந்த நிலையிலும் தான் தானாகவே இருப்பவர் கருணாநிதி\\ மிகச் சரி, திருந்தவே திருந்த மாட்டார்.

\\அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய போராளியாகவே வாழ்ந்து வருகிறார். இழிவு, அவமானம், துயரம் எல்லாவற்றையும் சந்தித்து விட்டார்.\\ இவரு என்ன மக்களுக்காகவா இதையெல்லாம் சந்திச்சாரு? தன் சுயனலத்துக்காகத்தானே? திருடன் கூடத்தான் இழிவு, அவமானம், துயரம் எல்லாவற்றையும் சந்திக்கிறான், அதில் என்ன விசேஷம்?

Jayadev Das said...

88 வயசிலும், எதைக் கொள்ளையடிக்கலாம், மக்கள் நாசமாப் போன என் தலைக்கு மேல் வளராத ஒன்னுக்குச் சமம் என இருக்கும் கருணாநிதி போல செத்தும் கெடுத்தான் கணக்குப் பிள்ளை என்ற கதைக்கு வேறு நல்ல உதாரணம் யாருமில்லை. ஹா...ஹா...ஹா..

நண்பன் said...

மிகப் பெரும் மலைக்கு முன்பு சிறு கற்கள் என்ன செய்ய முடியும்