நான் அமைதியாக இருப்பதும், தொடர்ந்து தீவிரமாக பேச ஆரம்பிப்பதும் விஜயகாந்த் ஆட்கள் கையில்தான் இருக்கிறது என்று பேச ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. இப்பவும் வீட்டுக்கும் ஆபிசுக்கும் முன்பாக நின்று கொண்டு ஆபாசமாக திட்டுகிறார்களாம் வடிவேலுவை. நானும் பொறுத்து பொறுத்து போறேன்.

அவருடைய ஆட்கள் கண்ணித்தோடு நடந்து கொள்ள மாட்டேங்கிறாங்க. அவங்க இப்படியே பண்ணிகிட்டு இருந்தா நான் வேற முடிவு எடுக்க வேண்டி வரும் என்று கூறி வருகிறார் வடிவேலு. யாரும் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதற்காக சும்மாயில்லாமல், தனது கனவு படைப்பான உலகம் பட வேலைகளில் பிசியாக இருக்கிறாராம் இப்போது.

25 கெட்டப்புகளில் நடிக்கவிருக்கும் அவர், அந்த கெட்டப்புகளை போட்டு பயிற்சி எடுத்துக் கொண்டும் இருக்கிறாராம். தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்தால் திமுக வில் இணைந்துவிடும் முடிவை எடுப்பாராம்.