Friday, August 5, 2011

சேலத்தில் 45 சப் - இன்ஸ்பெக்டர்கள் - ஏட்டுக்கள் திடீர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்.

சேலத்தில் 45 சப்- இன்ஸ்பெக்டர்கள்- ஏட்டுக்கள் திடீர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்

சேலம் டவுன் மற்றும் செவ்வாய்பேட்டை உள்பட பல போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த சப் - இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் 45பேர் திடீரென நெல்லைக்கு மாற்றப்பட்டனர்.

இதனால் போலீசார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மாற்றப்பட்ட அனைவரும் உடனே நெல்லைக்கு சென்று பணியில் சேர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவிட்டுள்ளார். ஏன் இவர்கள் அனைவரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மற்ற போலீசாரும், பொதுமக்களும் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.

நில அபகரிப்பு வழக்கில் சேலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தார். அப்போது அவர் திடீரென கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சேலம் டவுன் காவல்நிலையம், பழைய பஸ்நிலைய பகுதிகளில் சில தி.மு.கவினர் முதலமைச்சர் ஜெயலலிதாவை கண்டித்து கோஷம் போட்டனர். இதுபோல் அம்மாப்பேட்டையை சேர்ந்த 3பேர் முதலமைச்சர் ஜெயலலிதாவை கிண்டல் கேலிசெய்து ஆட்டம் போட்டனர்.

ஒரு வாலிபர் சேலை கட்டிக்கொண்டு நடனம் ஆடினார். இவரை மற்ற 2பேர் கட்டிப்பிடித்து கிண்டல் கேலி செய்தனர். இதை பார்த்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து போலீசாரும் வேடிக்கை பார்த்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் புகார் தெரிவித்து இருந்தனர்.

இதன் பேரில்தான் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா போல் வேடம் போட்டு ஆட்டம் போட்ட சேலம் அம்மாப்பேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்த அருள்மணி(வயது 40), அம்மாப்பேட்டையை சேர்ந்த சம்பத் (வயது 55), அம்மாப்பேட்டையை சேர்ந்த கேசவன்(வயது 45) ஆகியோரை சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் தி.மு.கவினர். இவர்கள் மீது அனுமதி இல்லாமல் கூடியது, ஆபாசமாக திட்டியது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இவர்களை போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

மன அழுத்தத்தால் தோல் நோய் ஏற்படும் : ஆய்வில் புதிய தகவல்.

மன அழுத்தத்தால் தோல் நோய் ஏற்படும்:    ஆய்வில் புதிய தகவல்

மன அழுத்தம் காரணமாக தோல் நோய் ஏற்படும் என்று ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ வல்லுனர்கள் மனஅழுத்தமும், தோல் நோய்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டனர். இதில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:-

மன அழுத்தம், விரக்தி, மற்றும் தோல் நோய் ஆகிய வற்றுக்கு இடையே ஒரு கலவையான தொடர்பு இருக்கிறது. மனிதர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் போது, உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது ஒரு வகை ரசாயனம் தோலினால் வெளியேற்றப்படுகிறது. அதன் பிறகு இந்த ரசாயன பொருள் தோலின் மேல் பகுதியில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் தோலில் கொப்புளங்கள், தடிப்புகள், படர் தாமரை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் : நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்  இருப்பதற்கான ஆதாரம்: நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டனர்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2006-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியது. அது செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து, அதன் அமைப்பை பல கோணங்களில் படம் எடுத்து நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்புகிறது.மேலும், அங்கு நிலவும் வெப்ப நிலை, ஈரப்பதம், போன்ற விபரங்களையும் அனுப்பி வருகிறது.

இதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்த்த போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரிய வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருந்து பெறப்படட மாதிரிகளில் ஈரப்பதம் காணப்படுவதால், அங்கு நிச்சயம் தண்ணீர் இருக்க வேண்டும் என்று, விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதுபற்றி செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான மைக்கேல் மெய்யர் கூறியதாவது:-

செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பல தடவை பரிசோதனை செய்தோம். அந்த ஆய்வுகளின் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவந்துள்ளன. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் இதை உறுதிப் படுத்துகின்றன. இதுபற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்? - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.



தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதியான டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்தபோது ஏன் கைது செய்யவில்லை என்று மத்திய அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

சென்னையில் கடந்த 1986ம் ஆண்டு தங்கியிருந்த டக்ளஸ், நவம்பர் 1ம் தேதி சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தின் போது நான்கு பேர் காயமடந்தனர். இதில் கைதான டக்ளஸ் பி்ன்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், 1988ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பத்து வயது சிறுவன் ஒருவனைக் கடத்திய டக்ளஸ் ரூ. 7 லட்சம் பணம் கேட்டுமிரட்டினார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார்.

பிறகு 1989ம் ஆண்டு அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் இலங்கைக்கு ஓடி விட்டார். இதையடுத்து அவரை சென்னை கோர்ட் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்தப் பின்னணியில் கடந்த ஆண்டு டெல்லி வந்த ராஜபக்சேவுடன் சேர்ந்து டக்ளஸும் இந்தியா வந்தார். அவருக்கு மத்திய அரசு ராஜ வரவேற்பு அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங், டக்ளஸை வரவேற்று கை குலுக்கி மகிழ்ச்சியுடன் பேசினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

மேலும் தேடப்படும் குற்றவாளியுடன் எப்படி பிரதமர் இப்படி விருந்துபசாரம் செய்து பாராட்டிப் பேசலாம் என்று மீடியாக்கள் கேள்வி கேட்டன.

இந்த நிலையில், டக்ளஸை நாடு கடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஆன் லைனில் விண்ணப்பித்தால் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட்.



கோவையில் பாஸ் போர்ட் சேவை கேந்திரா மையத்தின் துவக்கவிழா நேற்று நடந்தது, அதில் கலந்துகொண்டு (பி.எஸ்.கே) மூலமாக விண்ணப்பித்த ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் பெறமுடியும் என்று கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் தெரிவித்தார்.

சாதாரண முறையில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம செய்பவர்களுக்கு, காவல்துறையின் விசாரணை சான்றிதல் கிடைத்த இரண்டு அல்லது மூன்று நாளில் பாஸ்போர்ட் அனுப்பப்பாட்டு விடும், அதிகபட்சம் ஒரு மாதத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும்.

அதே நேரத்தில், ஆன்லைனில் தங்களது விண்ணப்ப பதிவு, விரல்ரேகை பதிவு, டிஜிட்டல் புகைப்படம் ஆகியவற்றை அனுப்புவத்தின் மூலம் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்.

“தக்கல்” முறையில் விண்ணப்பம் செய்வபவர்களுக்கு, மூன்று நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும், இந்த புதிய முறைக்கு எந்தவித கட்டண உயர்வும் கிடையாது. சாதாரண முறையில் பெற கட்டணம் 1000, ரூபாய் ஆகும், தக்கல் முறையில் பெற கட்டணம் 2500, ரூபாய் ஆகும்.

உடனடியாக பாஸ்போர்ட் வாங்கித்தருகிறேன், கூடுதலாக பணம் கொடுங்கள் என்று வரும் இடைத்தரகர்களை யாரும் நம்பி ஏமாறவேண்டாம், உங்களது சந்தேகங்களை 18002581800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

கல்வி கற்பதற்கு அமெரிக்கா லாயக்கில்லை : மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ்.



கல்வி கற்பதற்கு அமெரிக்கா உகந்த இடமில்லை என்று மூத்த இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கத் தான் விரும்புகின்றனர். இந்நிலையில் கல்வி கற்பதற்கு அமெரி்ககா சிறந்த இடமில்லை என்று பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் சி. என். ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராவ் பேசியதாவது,

அமெரிக்காவில் அனைத்துமே நன்றாக இருப்பதில்லை. இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருக்கும் இரண்டாம் தரமான கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். நீங்கள் வெளிநாட்டுக்கு செல்கிறீர்கள் என்பதால், அங்கு சிறந்த கல்வி கிடைக்கிறது என்று அர்த்தமில்லை. தற்போது இந்தியாவிலேயே அருமையான கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ஏராளமான பொற்றோர்கள் பணத்தைக் கொட்டி தங்கள் பிள்ளைகளை அமெரி்க்கப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இந்தியாவிலேயே சிறந்த பள்ளிக் கூடங்களை அமைத்தால் தான் அவர்கள் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கமாட்டார்கள் என்றார்.

அமெரிக்க மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர புற்று நோய் சிகிச்சை - டெஹல்கா தகவல். .



காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்பட்டுள்ள உடல் நலப் பிரச்சினை குறித்து சோனியா குடும்பத்தாரோ அல்லது காங்கிரஸ் கட்சியோ அல்லது மத்திய அரசோ எந்தத் தகவலையும் முழுமையாக வெளியிடாமல் ரகசியம் காப்பதால் காங்கிரஸ் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

நியூயார்க் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார் சோனியா காந்தி. அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளதாக தெரிகிறது. இது நடந்ததா இல்லையா என்பதையே காங்கிரஸ் கட்சி தெளிவாகத் தெரிவிக்கவில்லை. முதலில் ஆபரேஷன் நடந்தது என்றார்கள், பின்னர் நடக்கப் போகிறது என்றார்கள்.

கடந்த வாரத்தில் காய்ச்சலால் அவதி

கடந்த ஒரு வாரமாகவே சோனியா காந்தியைக் காணவில்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக முதலில் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை அளவுக்கு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக திடீரென தகவல்கள் வந்துள்ளது, அதுவும் அமெரிக்காவில் போய் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு நிலைமை போயுள்ளதை திடீரென காங்கிரஸ் தரப்பு கூறியிருப்பதால் காங்கிரஸார் குழப்பமடைந்துள்ளனர்.

அவரது உடலுக்கு என்ன பிரச்சினை என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப் படவில்லை. இதற்கிடையே டெஹல்கா இணையதளம் தனது ட்விட்டர் தகவலில் கூறுகையில், சோனியா காந்தி நியூயார்க் ஸ்லோவன் கேட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மிகப் பெரிய புற்றுநோய் மருத்துவமனை இது என்று தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸார் மத்தியில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

மேலும், புகழ் பெற்ற புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் தத்தாத்ரேயுடு நோரி என்பவர் தான் சோனியாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கவலைக்கிடமான நிலைக்குப் போன சோனியா

சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து தெளிவான தகவல்கள் தெரியவில்லை என்றபோதிலும் அவர் சில நாட்களுக்கு முன்பு கவலைக்கிடமான நிலைக்குப் போய் விட்டதால்தான் உடனடியாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.

உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டிய நிலைக்கு சோனியா காந்தியின் நிலை இருந்ததாகவும், இதையடுத்தே அவர் நியூயார்க் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து இங்கிலாந்தின் டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சோனியா காந்தியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக அவர் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. இருப்பினும் அவரது குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் நோரி உலகப் புகழ் பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஆவார். குறிப்பாக பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சையில் அவர் மிகவும் திறமையானவர். உலகளவில் புகழ் பெற்ற வெகு சில பெண்கள் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் நோரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.

2 ஆண்டுக்கு முன்பே சிகிச்சை பெற்றார் சோனியா

ரகசியமாக டெல்லியை விட்டு சோனியா காந்தி மருத்துவ காரணங்களுக்காக செல்வது கடந்த 2 மாதங்களில் 2வது முறையாகும். இதற்கு முன்பு அவர் மருத்துவப் பரிசோதனைக்காக யாருக்கும் தெரிவிக்காமல் அமெரிக்கா சென்றிருந்தார். தற்போது சிகிச்சைக்காக அவர் சென்றுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அப்போது கூட அவருக்கு என்ன பிரச்சினை என்பது தெரிவிக்கப்படவில்லை.

காங்கிரஸார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்றுள்ளார் என்று நேற்று காங்கிரஸ் தரப்பில் வெறுமனே ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அவர் திரும்பி வரும் வரை ராகுல் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் குழு காங்கிரஸ் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சோனியா காந்தியுடன் அவரது பிள்ளைகளான ராகுல் காந்தியும், பிரியங்காவும் உடன் உள்ளனர். இருப்பினும் ராகுல் காந்தி இன்று திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியாகாந்தியின் உடல்நலம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகாமல் இருப்பதாலும், புற்றுநோய் மருத்துவமனையில அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாலும் காங்கிரஸார் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

காய் கனிகளின் மருத்துவ குணம்.



ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.

பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்

ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்

எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

பால் + கசகசா : தூக்கம் வரும்

கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்

கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்

மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்

ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்

வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்

வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்

ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்

மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்

ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்

புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்

சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்

குப்பை மேனி : மலேரியா தீரும்.

பேரிச்சை : கொழுப்பை நீக்கும்

டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்

கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்

செம்பருத்தி : உடல் சூடு தணியும்

காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.

முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்

மருதாணிப்பூ : சுகமானதூக்கம் தரும்

நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்


dinaex.blogspot.com

பரிவர்த்தனாசனம், பிறையாசனம், ஏகபாதாசனம்.

பரிவர்த்தனாசனம்.
பரிவர்த்தனாசனம்

செய்முறை:

வலது, இடது கால்களை முன்பின்னாக சுமார் 3 அடி இடைவெளியில் நேர்க்கோட்டில் நிறுத்துங்கள். இரண்டு கைகளும் படத்தில் இருப்பது போல, தலைக்கு மேல் கோர்த்திருக்கட்டும். இடுப்பை மட்டும் வலப்பக்கம் திருப்பி பின்பக்கம் பார்க்கவும்.

அடுத்தபடியாக, கால்களை மாற்றி இடப்பக்கம் திருப்பி, பின்பக்கம் பார்க்கவும். ஒரு முறை வலம், இடம் செய்தால் ஆசனம் பூர்த்தியாகி விடும். இப்படியாக-இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள் இருந்து ஆசனத்தை முடியுங்கள்.

பயன்கள்:

இடுப்பு, அடிவயிற்று தசைகள் பலம் பெறும். மல-ஜல உறுப்புகள், நன்கு இயங்கும். மாதர்களுக்கு மாதவிடாய், கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். பக்கவாதம், இளம்பிள்ளை வாதம் குணமாகும். தொடை சதை குறையும். ஈசனோபீலியா, சயம், ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்கள் நீங்கும்.


பிறையாசனம்.
பிறையாசனம்

செய்முறை:

இரண்டு காலையும் பக்கவாட்டில் 3 அடி தூரம் விரித்து வையுங்கள். இருகைகளும் முதுகில் இருக்கட்டும். தலையை அப்படியே பின்னால் சாய்த்து, பின்புற முழங்காலைத் தொடுங்கள். இயல்பான மூச்சில் 10 வினாடிகள் இருந்தபிறகு, மெதுவாக நிமிரவும்.

பயன்கள்:

சர்க்கரை நோய், தொந்தி, மூத்திரக்காய் கோளாறு, மலச்சிக்கல், இடுப்புவலி குணமாகும். பாதஹஸ்தாசனத்துக்கு மாற்று ஆசனமிது.


ஏகபாதாசனம்.
ஏகபாதாசனம்

செய்முறை:

நேராக நிமிர்ந்து நில்லுங்கள். வலதுகாலை அப்படியே மடக்கி, இடதுபக்கத்தில் சேர்க்கவும். இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, உடம்பு சமநிலைக்கு வந்ததும், தலைக்கு மேல் கும்பிட்டநிலையில் நிலைநிறுத்திவிடுங்கள்.

உங்களின் பார்வை, நெற்றிக்கு நேராக உள்ள ஏதாவதொரு புள்ளியில் 15 விநாடிகள் ஒன்று குவியட்டும். கடைசியாக பழைய நிலைக்கு வந்து, இடதுகாலை மாற்றி, மறுபடியும் அதேபோல செய்யவும்.

பயன்கள் :

பக்கவாதம், மூட்டுவலி, கை-கால் வீக்கம் ஆகிய நோய்கள் நீங்கும். உடலின் வளர்சிதை மாற்றம், கழிவுப் பொருட்களின் வெளியேற்றம் சீராக இருக்கும். குண்டானோருக்கு மெலிந்த அழகு கிட்டும்.