அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2006-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியது. அது செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து, அதன் அமைப்பை பல கோணங்களில் படம் எடுத்து நாசா விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்புகிறது.மேலும், அங்கு நிலவும் வெப்ப நிலை, ஈரப்பதம், போன்ற விபரங்களையும் அனுப்பி வருகிறது.
இதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்த்த போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரிய வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருந்து பெறப்படட மாதிரிகளில் ஈரப்பதம் காணப்படுவதால், அங்கு நிச்சயம் தண்ணீர் இருக்க வேண்டும் என்று, விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதுபற்றி செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான மைக்கேல் மெய்யர் கூறியதாவது:-
செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பல தடவை பரிசோதனை செய்தோம். அந்த ஆய்வுகளின் மூலம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவந்துள்ளன. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் இதை உறுதிப் படுத்துகின்றன. இதுபற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment