Tuesday, June 14, 2011

சிதம்பரம் சும்மா விடுவாரா ஜெயலலிதாவை?




தமிழக முதல்வர் தன்னைப் பற்றி அடித்த காமென்ட்டுக்கு உடனே சுடச்சுடப் பதில் கொடுத்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். “செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் தவறான காலை வைத்துத்தான் நடக்கத் தொடங்குவார் அவர்” என்று கிண்டலாகப் பதிலடி கொடுத்திருக்கிறார் அவர்.

கடந்த மாதம் சட்டசபைத் தேர்தலில் வெற்றியடைந்து முதல்வரான பின்னர், நேற்றுதான் முதல் தடவையாகத் தலைநகருக்கு வருகை மேற்கொண்டிருந்தார் ஜெயலலிதா.

டில்லியில் கருத்துத் தெரிவித்தபோது, “நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் ப. சிதம்பரம் ஜெயித்ததாகக் கூறுவது மோசடியானது. அங்கு ஜெயித்தவர் அ.தி.மு.க. வேட்பாளர்தான். சிதம்பரம் இந்தத் தேசத்தையே மோசடி செய்திருக்கிறார்” என்ற அதிரடிக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா, இவரைப் பற்றி டில்லியில் வைத்துக் கூறினால், சிதம்பரம் இருப்பதும், டில்லியில்தானே.. சும்மா விடுவாரா அவர்?

“நான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதுபற்றி, தமிழக முதல்வர் கருத்துக் கூறியிருக்கிறார் என அறிந்தேன்” என்று தொடங்கும் அறிக்கை ஒன்றை, சுடச்சுட வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “அவரது (ஜெயலலிதா) கட்சியின் வேட்பாளரான ராஜ கண்ணப்பன் இது குறித்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறார் என்பதும் முதல்வருக்குத் தெரியும். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் நிற்கிறது என்பதும் அவருக்குத் தெரியும்.

அப்படியிருக்கையில் அதுபற்றி அவர் கருத்துக் கூறுவது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

பொதுவாகவே முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்ற மரபுகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டவர். இதனால், அவரது நடவடிக்கை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை” என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார் அமைச்சர் சிதம்பரம்.

சபாஷ் சரியான போட்டி!

“நான் ரெடி.. நீங்க ரெடியா?” - காங்கிரஸ் உடனடியாக “ரெடியில்லை”



“அ.தி.மு.க.விடம் ஒன்பது எம்.பி.க்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைக்கு நாம் கைகொடுக்க விரும்புகிறோம். அதற்காக ஒன்பது எம்.பி.க்களின் நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரசுக்கு அளிக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு கூறியவர், அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதா!

காங்கிரஸ் கட்சி, மத்தியில் தைரியமான சில முடிவுகளை எடுப்பதற்கு, அ.தி.மு.க. ஆதரவை காங்கிரஸ் தயக்கமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் என ஜெயலலிதா நினைக்கிறார். அந்த நினைப்பே, “ஆதரவு தரத் தயார்” என்று வார்த்தைகளாக வெளியாகியிருக்கின்றது.

டில்லியில் இன்று பிரதமரைச் சந்திக்கும் சூழ்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரிய வேண்டியதெல்லாம், ஒரேயொரு கேள்விக்குப் பதில்தான். “காங்கிரஸ், தி.மு.க.வைக் கழட்டிவிட்டு வருவதற்கு உடனே தயாராக இருக்கிறதா?”

ஜெயலலிதா டில்லி வந்திறங்கி ஒரு நாளாகிவிட்டது. இந்தக் கேள்விக்கான பதில் இன்னமும் அவருக்குக் கிடைக்கவில்லை.

இதே கேள்வியை, டில்லியிலுள்ள எமது அரசியல் தொடர்பாளர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தோம். அதற்கு அவர்கள் கூறும் பதில்- “இல்லை”

“காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வைக் கழட்டிவிடத்தான் நினைக்கிறது. ஆனால், அதை உடனடியாகச் செய்வதாக உத்தேசமில்லை. அ.தி.மு.க.வை மாத்திரமல்ல, தி.மு.க.வையும் இன்னமும் சிறிது காலத்துக்கு ஓடவிட்டுப் பார்க்க விரும்புகிறது காங்கிரஸ். இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இரு கட்சிகளையும், நிச்சயமற்ற நிலையில் இன்னமும் சிறிதுகாலம் வைத்திருக்க விரும்புகிறது டில்லி” என்கிறார், டில்லியில் காங்கிரஸ் விவகாரங்களுடன் அதிகம் பரிச்சயமுடைய ஒருவர்.

காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க.வை ஸ்டான்ட்-பை நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறது. ஒருவேளை கலைஞர், தாமாகவே காங்கிரஸ் உறவை முறித்துக்கொள்ள முன்வந்தால், அப்போது அ.தி.மு.க. பக்கமாகக் கையை நீட்ட அது உதவும்.

இதற்குள் மற்றொரு வேடிக்கையும் அதுபாட்டுக்கு நடந்துகொண்டிருக்கிறது.

தி.மு.க., தமக்காக காங்கிரஸிடம் லாபி செய்ய சிலரை டில்லியில் இறக்கிவிட்டிருக்கிறது. “தி.மு.க.வுடன் உறவை முறித்துக்கொள்ளக் கூடாது” என்று லாபி பண்ணுவதல்ல இவர்களது வேலை. “அ.தி.மு.க.வுடன் உறவு வேண்டாம். ஜெயலலிதாவை நம்ப முடியாது” என்றே இந்த தி.மு.க. லாபிக்காரர்கள் ஓடியோடி பிரசாரம் செய்கிறார்கள்.

தி.மு.க. டில்லியில் இறக்கிவிட்டுள்ள இந்த லாபி குழு பற்றிய சோகம் என்னவென்றால், இந்தக் குழுவில் ஒரேயொருவர்தான் தேசிய அரசியலில் ஈடுபடும் வட இந்தியத் தலைவர். மற்றைய அனைவருமே தமிழக காங்கிரஸின் குட்டி தெய்வங்கள்.

அ.தி.மு.க.வை நம்ப முடியாது என இவர்கள் செய்யும் லாபிக்கு இவர்கள் இழுப்பது பழைய கதை ஒன்றை.

1998ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆதரவளித்து, வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். திடீரென பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டார். அதையடுத்து வாஜ்பாய் அரசே 1999ம் ஆண்டு ஏப்ரலில் கவிழ்ந்தது.

இந்தச் சம்பவத்தைக் கூறும் தி.மு.க. லாபி குழு, “இப்படியான ஒருவருடன் உறவு வைத்துக் கொள்வது எவ்வளவு ரிஸ்க்கானது என்று புரிகிறதா” என்று லாபி செய்கிறது.

காங்கிரஸ் தலைமைக்கு இந்த விடயம் தெரியாதது இல்லை.அவர்கள் இதுபற்றிக் கவலைப்படவுமில்லை.

வாஜ்பாய்க்கும், காங்கிரஸ் கட்சிக்குமிடையே பெரிய வித்தியாசம் இருக்கின்றது. வாஜ்பாய் போலில்லாமல், காங்கிரஸ் கட்சி தமது கூட்டாளிகளிடமும் ஒரு ‘பிடி’ வைத்தே டீல் பண்ணுவது வழக்கம். இதனால், வாஜ்பாய்க்கு செய்ததுபோல காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் எதுவும் செய்ய முடியாது.

காங்கிரஸைப் பொறுத்தவரை அவர்கள் உடனடியாக அவசரப்பட வேண்டிய தேவை எதுவும் கிடையாது. தி.மு.க.வை உடனடியாக விரட்டுவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.

ஜெயலலிதா டில்லிக்குச் செல்கிறார் என்பது உறுதியானவுடனேயே, “இருந்து பாருங்கள், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற அறிவிப்போடுதான் தலைவி திரும்பி வருவார்” என்று அ.தி.மு.க. தலைவர்கள் பரபரத்துக் கொண்டிருக் கிறார்கள்.

அதற்கெல்லாம், உடனடியாக சான்சே இல்லை என்பதுதான் டில்லி நிலைமை.

டில்லிவரை சென்றுள்ள தமிழக முதல்வர், கூட்டணி உறவுக்கு வெளிப்படை யாகவே கையை நீட்டியிருக்கிறார். அவரது, “நான் ரெடி.. நீங்க ரெடியா?” கேள்விக்கு காங்கிரஸ் உடனடியாகப் பதில் கூற “ரெடியில்லை”

ஜெயலலிதா பிரதமரிடம் சொல்லி அதிரவைத்த, இரண்டு சொற்கள் !



இன்று பிரதமருடன் சந்திப்பை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தயாநிதி மாறன் விசயம் பற்றியே அதிகம் பேசினார் எனத் தெரியவருகின்றது. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தயாநிதி, பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை முதல்வர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரியவருகின்றது.

அப்போது முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய இரண்டு சொற்கள், பிரதமரை அதிரச் செய்தன என்கிறார்கள்.

ஜெயலலிதா பயன்படுத்திய இரண்டு சொற்கள் – “Sack him” (ஆளைத் துரத்தி விடுங்கள்)

பிரதமரைச் சந்திக்க ஜெயலலிதா சென்றபோதே மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். உற்சாகத்துக்குக் காரணம், அவருக்கு பிரதமர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்தான்.

அவரை அழைத்துச்செல்ல, பிரதமரின் அலுவலகமே காரை அனுப்பி வைத்திருந்தது என்பதிலிருந்து, அங்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை ஊகித்துக் கொள்ளலாம். முதல்வரின் வாகனம் ஒன்று தயாராக இருந்தபோதிலும், அவர் பிரதமரின் அலுவலகத்திலிருந்து வந்த காரில்தான் பிரதமரைச் சந்திக்கச் சென்றிருந்தார்.

பிரதமருடனான சந்திப்பில், தயாநிதி மாறன் விசயம் பற்றிப் பேச்சு வந்தபோது, தயாநிதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜெயலலிதா. இதற்கு பிரதமரிடமிருந்து உறுதியான பதில் ஏதும் வரவில்லை.

அதையடுத்து மீண்டும் ஒருமுறை, தான் கூறியதையே வலியுறுத்திக் கூறினார் முதல்வர்.

சாஃப்ட்டான வார்த்தைகளில் பேசும் வழக்கமுடைய பிரதமர், “இதைப்பற்றி நாங்கள் ஓரளவுக்குமேல் வற்புறுத்த முடியாது. அவராக (தயாநிதி) முடிவெடுக்க வேண்டிய விசயம் இது. ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துவது நன்றாக இருக்காது” என்று இழுத்திருக்கிறார்.

“ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்த முடியாது என்றால், அடுத்த வழி ஒன்றுதான் இருக்கிறது” என்று கூறிய ஜெயலலிதா, அதன்பின் கூறிய இரண்டு சொற்கள்தான், “Sack him”

பிரதமருடனான சந்திப்பு முடிந்து வெளியேவந்த ஜெயலலிதா, “பிரதமர் அலுவலகத்தின் கார் தேவையில்லை. நான் எனது சொந்த வாகனத்திலேயே சென்றுவிடுவேன்” என்று கூறிவிட்டார். அவர் பிரதமரின் அலுவலகம் அனுப்பிய காரில் வந்தபோது, அவரது காரும், அதைப் பின்தொடர்ந்து வந்து காத்திருந்தது.

பிரதமர் அலுவலகக் காரை ஒதுக்கிவிட்டுத் தனது காரில் ஏறச்சென்ற முதல்வர், உயரம் காரணமாக அதில் ஏறமுடியாது தடுமாறினார். உடனே முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி, ஒரு ஸ்டூலை எடுத்துப் போடவே, அதில் ஏறித்தான் தனது காருக்குள் ஏறமுடிந்தது அவரால்.

ஸ்ரீதேவி மகள் தமிழில் கதாநாயகியாகிறார்!



முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இப்போது கதாநாயகி ஆகிறார்.

1970 மற்றும் 80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்திப் படங்களிலும் நடித்தார். 1996-ல் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு ஜான்வி, குஷி என இருமகள்கள் உள்ளனர்.

ஜான்வி வளர்ந்து விட்டபடியால் கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு அல்லது தமிழ் படத்தில் அறிமுகம் செய்கிறார். இதற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் தெலுங்கில்தான் தன் மகளை அறிமுகப்படுத்துவேன் என்று கூறிவந்தவர் ஸ்ரீதேவி.

ஏற்கெனவே இப்படிக் கூறி தெலுங்கில் தன் மகள் கார்த்திகாவை அறிமுகப்படுத்தி படுதோல்வி கண்டவர் ராதா. பின்னர் கார்த்திகாவை 'கோ' தமிழ் படத்தில் அறிமுகம் செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது.

இதைப் பார்த்தபிறகு, தனது முடிவை மாற்றிக் கொண்ட ஸ்ரீதேவி, ஜான்வியை தமிழில் முதலில் நடிக்க வைக்க விரும்புகிறார்.

1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு.



திமுக ஆட்சியில் கடந்த கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் விரிவாக்கப்படவிருந்தது. இதற்காக சுமார் 6கோடி புத்தகங்கள் 210கோடி ரூபாய் செலவில் அச்சிட்டு தயாராய் உள்ளது.

ஆனால், அதிமுக அரசு அமைந்ததும், இந்தத் திட்டம் தரமானதாக இல்லை, எனவே நடப்பு ஆண்டில் இது நிறுத்தி வைக்கப்படுகிறது. நிபுணர் குழு அமைத்து இதை சீரமைத்த பின்னர் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தது.

இதுதொடர்பாக சட்டத் திருத்த மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்து விட்டது. மேலும், நடப்பு ஆண்டிலும் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், கடந்த திமுக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. சமச்சீர் கல்வித் திட்டம் என்ற பெயரில் அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அவரது மகள் கனிமொழி ஆகியோர் எழுதிய பாடல்களை பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

கருணாநிதியின் புகழ் பாடும் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தங்களது பாடல்களைப் படிக்கும்படியான கட்டாய நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவேதான் இவற்றை நீக்கி தரமான பாடங்களை குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு முடிவு செய்தது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.செளகான், ஸ்வதேந்திர குமார் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

தமிழகத்தில் இந்த ஆண்டு 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

இந்தக் குழு தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் இடம் பெற வேண்டும். இவர்கள் தவிர பள்ளிக் கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 பேரும் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.

மேலும் 2 வாரத்திற்குள் இந்நிபுணர் குழு அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையின் மீது 1 வாரத்திற்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில் உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கும் வரை 2, 3, 4, 5, 7, 8, 9, 10 - ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தவேண்டாம் எனவும், உயர்நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு மற்ற வகுப்புகளுக்கு பாடம் நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் : பிரதமரிடம் ஜெயலலிதா மனு .

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும்: பிரதமரிடம் ஜெயலலிதா மனு

பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 30 பக்க மனு கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில் இலங்கை ராணுவம் போர்க் குற்றங்களை புரிந்துள்ளது. மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுள்ளது. இதில் ஏராளமான தமிழர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மனிதாபிமான உதவிகளும் மறுக்கப்பட்டுள்ளன. ஐ.நா.சபை நியமித்த நிபுணர் குழு விசாரணையில் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, இந்த விவகாரத்தை ஐ.நா. சபைக்கு எடுத்து செல்ல வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் வரை, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு அளிக்கப்படும் சமூக நலத் திட்டங்களை, இலங்கை அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

கச்சத்தீவு திரும்பப் பெற வேண்டும், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை அங்கு நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்நாடு நீண்ட கடற்கரையை தன்னகத்தே கொண்டுள்ளது. 10 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 54 ஆயிரம் பழமையான படகுகளையும், 6 ஆயிரத்து 200 நவீன படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். மீனவர்களின் சுமூக- பொருளாதார அந்தஸ்தை உயர்த்த, மீன்பிடித்துறையை நவீனமயமாக்க சிறப்பு உதவிகள் அளிக்க வேண்டும். அதாவது புதிய மீன்பிடி துறைமுகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

“நடுக்கடல் மீன் உலர்த்தல் பூங்கா” அமைக்க உதவி அளிக்க வேண்டும். பழமையான படகுகளை புதுப்பிக்க ஆண்டுதோறும் மத்திய அரசு அளித்து வரும் ரூ.3 கோடி நிதியை ரூ.15 கோடியாக அதிகரித்து வழங்க வேண்டும். சில ஆண்டுகளாக தமிழகத்தின் மின்தேவை அதீதமாக அதிகரித்துள்ளது.

உடனடியான மின் உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை. தற்போது, மொத்த மின்சார தேவை 11 ஆயிரத்து 500 மெகா வாட் ஆகும். ஆனால், 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. தனியாரிடம் இருந்து 1,800 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இதை சரிக்கட்ட மத்திய அரசு சிறப்பு சலுகை உதவியாக ரூ.40 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும். “சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு ரூ.45 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

இந்த திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் பணிகளை விரைந்து முடித்து வரும் ஆண்டில் மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும். சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ பாலிட்டன் நகரமான சென்னை மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி அடைந்து இன்னும் 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 1 கோடி ஆக உயரும் என எதிர்க்கப்படுகிறது. எனவே சென்னையில் நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது.

வருகிற 2026-ம் ஆண்டில் இந்த கட்டமைப்பை 46 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். அதற்காக சென்னையில் “மோனோ ரெயில்” திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. தொடக்கத்தில் இந்த திட்டம் 111 கி.மீட்டர் தூரம் செயல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக 300 கி.மீட்டர் தூரத்துக்கு விரிவு படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள 111 கி.மீட்டர் தூர திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 1 கி.மீட்டருக்கு ரூ. 150 கோடி வீதம் ரூ. 16,650 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்கு தேசிய நகர்ப்புற போக்குவரத்து திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை (ஐ.டி.) தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். அவர்களின் அறிவு திறனை வளர்க்க மேல்நிலைப் பள்ளிகள், என்ஜினீயரிங், பாலி டெக்னிக் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்கள் (மடிக்கணினி) வழங்கப்பட உள்ளது. வர இருக்கின்ற 5 ஆண்டுகளில் 68 லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க உள்ளோம்.

அதற்காக ரூ. 10,200 கோடி தேவைப்படுகிறது. முதலாம் ஆண்டில் 9.12 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 10,200 கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும். தமிழக அரசு காவிரி ஆற்றுடன் அக்னியார், தெற்கு வெள்ளார், பம்பார், மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாலறு போன்றவற்றை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள வறட்சி மாவட்டங்கள் வளம் பெறும். இதற்கான திட்டம் ரூ. 4 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே நதிகள் இணைப்புக்கு ரூ. 4 ஆயிரம் கோடியும், உள்நாட்டு நீர்வழிச் சாலை திட்டத்துக்கு ரூ. 650 கோடியும் வழங்க வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்க்க சுப்ரீம் கோர்ட்டு நடுவர் மன்றத்தை அமைத்தது. பின்னர் 5-2-2007-ம் ஆண்டில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட பிரதமர் நட வடிக்கை எடுக்க வேண்டும். முல்லைபெரியாறு அணை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. எனவே கேரள அரசு புதிய அணை கட்ட எந்தவித ஆய்வோ அல்லது தொடக்க நிலை பணிகளோ மேற் கொள்ளக் கூடாது. ஆகவே தமிழக அரசின் வழக்கு முடியும் வரை கேரள அரசு மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்க கூடாது என அறிவுரை வழங்க வேண்டும்.

ஆந்திர அரசு பாலாறு குறுக்கே அணை கட்ட முயற்சித்து வருகிறது. அதை நிறுத்தும்படி பிரதமர் அறிவுறுத்த வேண்டும். இந்த அரசு கிராமப்புறத் தில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக சூரிய ஒளியில் பசுமை வீடு திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. 300 சதுர அடியில் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.80 லட்சம் செலவாகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். இந்த அரசு நடப்பாண்டில் 115 லட்சம் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்வதே இலக்காக கொண்டுள்ளது. இதற்கு உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு மொத்தம் 26 லட்சம் டன் உரம் தேவைப்படுகிறது.

11.12 லட்சம் டன் யூரியா, 3.66 லட்சம் டன் டி.ஏ.பி., 4.80 லட்சம் டன் எம்.ஒ.பி., 6.52 லட்சம் காம்ப்ளக்ஸ் உரம் இதில் அடங்கும். இதனால் போதுமான உரத்தை மத்திய அரசு தமிழக அரசுக்கு அளிக்கவேண்டும். தமிழ்நாட்டில் விவசாயத்தை நவீன தொழில்நுட்ப மூலம் பயன்படுத்துவதற்கான நிதி அளிக்கவேண்டும். உள்ளூரில் ஜவுளி தொழிலை காப்பாற்ற வெளி நாட்டுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய தடை செய்யவேண்டும்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு, புதிதாக குறைந்த பட்ச தகுதி வரம்பை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வகுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியான பிரிவு மாணவர்கள் பாதிக்கப்படுவார். எனவே, முந்தைய தகுதி வரம்பையே மீண்டும் கொண்டு வரவேண்டும். கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இலங்கை- தூத்துக்குடி இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, நேற்று மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை துவங்கும் முன்பு மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்பட வில்லை. சாத்தியமற்ற சூழ்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என்பதால், தூத்துக்குடி- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைக்க வேண்டும். சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்துக்கு மாதம் ஒன்றுக்கு 65,140 கிலோ லிட்டர் மண்எண்ணெய் தேவைப்படுகிறது. எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு போதுமான மண்எண்ணை வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் மோசடி செய்து வென்று நாட்டை ஏமாற்றியவர் ப.சிதம்பரம் : ஜெயலலிதா தாக்கு.


டெல்லியில் பிரதமரை சந்தித்தபின் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு உதவுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க மத்திய தொகுப்பில் இருந்து தற்காலிகமாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. தலைவரின் குடும்பத்தினர் சிக்கி உள்ளனர். சிலர் ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இப்போது தயாநிதி மாறனும் சிக்கி உள்ளார். அவர் மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லையெனில் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கேள்வி:- சோனியா நடத்தும் தேநீர் விருந்தில் நீங்கள் பங்கேற்பதாக பேசப்பட்டதே, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே, கூட்டணிக்கு முயற்சி நடக்கிறதா?

பதில்:- காங்கிரஸ் இப்போதுவரை தி.மு.க. வுடன் கூட்டணியில் இருக்கிறது. எனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கும் கேள்வி எழவில்லை.

கேள்வி: காங்கிரஸ்- அ.தி.மு.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

பதில்:- காங்கிரசும், தி.மு.க.வும் இப்போதுவரை கூட்டணியில் நீடிக்கிறார்கள்.

கேள்வி:-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகினால் நீங்கள் ஆதரிப்பீர்களா?

பதில்:- கற்பனையான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. மத்திய மந்திரிசபைக்கு ஆதரவு தேவை என்றால் அவர்கள்தான் கேட்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரத்தின் வெற்றி மோசடியானது. கம்ப்யூட்டரில் டேட்டா எண்ட்ரி¬யை திருத்தி அவர் எம்.பி. ஆகி உள்ளார். பண பலத்தால் தேர்தலை சந்தித்தார். அவரது வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மோசடி செய்து வெற்றி பெற்ற ப.சிதம்பரம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். முல்லைபெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசு அணை கட்டுவதை தமிழகம் எதிர்த்து வருகிறது. ஆனால் கேரள அரசு அதை கண்டு கொள்வதாக இல்லை.

எனவே தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும். புதிய தலைமை செயலகம் புதிய தலைமை செயலக கட்டிடத்தில் அரசு இயந்திர பணிகளுக்கு கட்டிட அளவு குறைவாக உள்ளது. மாநாடு கூட்ட அரங்கு பகுதியில் மீன்தொட்டி பெரிய அளவில் உள்ளது. அந்த கட்டிடத்தில் தலைமை செயலகம் இயங்க முடியுமா? என்பதை பத்திரிகையாளராகிய நீங்களே பார்த்து முடிவு செய்ய அழைப்பு விடுக்கிறேன்.

இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை பிரச்சினையில் அங்குள்ள முகாம்களில் எவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. இலங்கை சொல்வதை முழுமையாக நம்பும்படி இல்லை. எனவே அங்குள்ள தமிழர்களின் நிலையை தெரிந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

தி்முக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டிருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கியக் காரணம் என்று ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. மேலும் டெல்லி வந்த ஜெயலலிதாவை சோனியா சந்திக்காமல் தவிர்த்ததற்கும் சிதம்பரம் தான் காரணம் என்று ஜெயலலிதா கருதுகிறார்.

இதனால் தான் அவர் மீது ஜெயலலிதா பாய்ச்சல் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகளை திருடிய கும்பல் - பெண் ஊழியர் உடந்தை !



மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திருடி விற்ற புரோக்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த புரோக்கர் சுப்பிரமணி போலீசிடம் சிக்கினார். விசாரணையில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி கற்பகம் என்ற பெண்ணிடம் ஆண் குழந்தை திருடி தருவதாக கூறி, ரூ.7 ஆயிரம் வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அமுதவல்லி என்பவருக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

25 ஆண்டுகளாக திருட்டு

குழந்தை கடத்தல் பற்றி சுப்பிரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் குழந்தைகளை திருடி விற்று வந்து உள்ளேன். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகளை வார்டில் இருந்து திருடி விற்றுள்ளேன்.

என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தையை திருடி கூடல்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கு விற்றேன். சமீபத்தில் அந்த டாக்டர் இறந்து விட்டார். அதன்பின் அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

யார் யார் சிக்குவார்கள் ?

புரோக்கர் சுப்பிரமணியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது வாக்குமூலத்தையடுத்து குழந்தைகளை வாங்கியவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

புரோக்கர்கள் ஓட்டம்

போலீசார் தரப்பில் கூறும் போது, `இவர் ஒரு நபராக இத்தனை குழந்தைகளை கடத்தி விற்று இருக்க முடியாது. இவருக்கு உதவியவர்கள் யார், யார்? பின்னணி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர். இதற்கிடையில், குழந்தைகள் திருட்டை ஒழிக்கவும், புரோக்கர்களை தடுக்கவும் ஆயுதப்படை போலீசார் 10 பேர் தினமும் மதுரை பெரிய மருத்துவமனையில் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஜெயலலிதா சந்திப்பு.


முதல் அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்ற பின் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். தேர்தல் வெற்றிக்குப்பின் முதல் முறையாக டெல்லி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்கினார். அங்கு அவரை டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்கள்.

தேர்தல் வெற்றிக்காக அவர்கள் ஜெயலலிதாவுக்கு பூச் செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று காலை 12 மணியளவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரினார்.

20 கிலோ இலவச அரிசி திட்டத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்கவும், தமிழ்நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்க உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்துக்கான வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும், நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணியை துரிதப்படுத்தவும், வேண்டுகோள் விடுத்தார். இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும் பிரதமருடன், ஜெயலலிதா முக்கிய பேச்சு நடத்தினார்.

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து அந்நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்பது சம்பந்தமாகவும் தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தினார். ஜெயலலிதாவுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ராமமோகன் ராவ், ஷீலாபிரியா, நிதித் துறை செயலாளர் கே.சண்முகம் உள்பட தமிழக அரசு உயர் அதிகாரிகளும் டெல்லி சென்றனர். அவர்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.

பிரதமரை சந்தித்தபின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லியில் பத்திரிகை யாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார். அதன் பிறகு இன்று மாலையே சென்னை திரும்புகிறார்.

மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா?


கடந்த மக்களவைத் தேர்தலிலும், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் படுதோல்வியை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றாக இணைக்க இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எதற்காக தனித்தனியாக கட்சி நடத்துகிறோம் என்ற காரணமே தெரியாத கட்சிகள் இவை இரண்டும். வழக்கமாக எல்லா பிரச்சனைகளிலும் இரு கட்சிகளுக்கும் ஒரே நிலை தான். தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எந்த முடிவை எடுத்தாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்கும்.

அதே நேரத்தில் தமிழகம் போன்ற சில மாநிலங்களில் மாநிலத் தலைவர்கள்- மாநில நிர்வாகிகளின் நிலையைப் பொறுத்து எப்போதாவது கூட்டணி விஷயத்தில் இவை இரண்டும் தனித்தனியான நிலையை எடுக்கும். மற்றபடி கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள் எல்லாமே இரு கட்சிகளுக்கும் பொதுவானவையே.

மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் திரிபுராவிலும் இந்த இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தே ஆட்சியை அமைத்து வந்தன. மக்களவைத் தேர்தல்களையும் கூட்டாகவே சந்தித்தன.

இந் நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முதல் இரு கட்சிகளும் மிக வேகமான சரிவுப் பாதையில் சென்று கொண்டுள்ளன. 2004 மக்களவைத் தேர்தலில் 55 இடங்களில் வென்று வரலாறு காணாத புரட்சியை ஏற்படுத்திய இந்தக் கட்சிகள், கடந்த மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தன.

சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை இழந்தன. கேரளத்திலும் தோற்றன. இப்போது திரிபுராவில் மட்டுமே இந்தக் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

உலகத்தின் பாதி நாடுகளை ஆண்ட கம்யூனிஸம் இப்போது கியூபாவிலும் சில தென் அமெரிக்க நாடுகளிலும் இந்தியாவில் திரிபுராவிலும் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

இந் நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆராய இக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் ஆந்திர பத்திரிகையாளர் சங்கத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி கூறுகையில், கம்யூனிஸ்ட் கொள்கைகள் மீது ஆர்வமுள்ளவர்கள் இரு கட்சிகளும் ஒன்றாக இணைக்கப்படுவதை தொண்டர்களும் இரு கட்சிகளின் தலைவர்களும் விரும்புகிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பு விரைவில் பூர்த்தியாகும். விரைவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைக்கப்படும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவதை நாங்கள் எப்போதுமே ஆதரித்தே வந்துள்ளோம். ஆனால், இணைப்பு ஏற்பட மேலும் பல காலமாகும் என்றார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு : தூக்குதண்டனை விதிக்கப்பட்ட சென்னை பெண் ; காப்பாற்றக்கோரி தமிழக அரசிடம் மனு.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு:  தூக்குதண்டனை விதிக்கப்பட்ட சென்னை பெண் தவிப்பு;  காப்பாற்றக்கோரி உறவினர்கள் தமிழக அரசிடம் மனு

சென்னையை அடுத்த பட்டூர் மாங்காடு பஜார் தெருவைச் சேர்ந்தவர் பசிலாபீ வயது 62. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். குடும்பம் வறுமையில் வாடியதால், வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற பசிலாபீ முடிவு செய்தார்.

இதற்காக திருவல்லிக்கேணியை சேர்ந்த டிராவல் ஏஜெண்டு ஒருவரை அணுகினார். கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பசிலாபீ மலேசியா புறப்பட்டார். அவரை வழியனுப்ப விமான நிலையம் வந்த டிராவல் ஏஜெண்டு உரிமையாளர், பசிலாபீயிடம் ஒரு சூட்கேசை கொடுத்தார்.

ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டு மலேசியாவில் போய் இறங்கியதும் சூட்கேசை அந்த நபரிடம் கொடுக்குமாறு கூறினார். பசிலாபீ மலேசியா போய் இறங்கியதும் கோலாலம்பூர் விமான நிலையத்தில அவரது உடமைகளையும், சூட்கேசையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது அந்த சூட்கேசில் 3 கிலோ எடை கொண்ட “கேட்டமின்” என்ற கொடிய போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை மலேசிய போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தியதாக அவர் மீது அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பசீலாபீக்கு மரண தண்டனை (தூக்கு) விதிக்கப்பட்டது. இந்த தகவல் அங்குள்ள டிராவல்ஸ் ஏஜெண்டு மூலமாக சென்னையில் உள்ள பசிலாபீ குடும்பத்துக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டது.

பசிலாபீக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்ததும் அவரது குழந்தைகளும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்ற பல்வேறு வழிகளிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை.பசிலாபீயை மலேசியாவுக்கு அனுப்பி வைத்த சென்னை டிராவல் ஏஜெண்டும் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டார்.

இதனால் பசிலாபீயின் மகள்களும், உறவினர்களும் முதல்-அமைச்சரின் குறைதீர்ப்பு பிரிவிலும், சென்னை போலீஸ் கமிஷனரிடமும் தங்களது தாயாரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுபற்றி பசிலாபீயின் மூத்தமகள் நூர்ஜகான் கூறியதாவது:-

நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களது தந்தை இறந்த பின்பு குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் எங்களது தாயார் திருவல்லிக்கேணி டிராவல் ஏஜெண்டு மூலம் மலேசியாவுக்கு சென்றார். அந்த ஏஜெண்டு, மலேசியாவில் ரூ.10 ஆயிரம் மாத சம்பளத்தில் வீட்டு வேலைக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.

வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் விற்று ரூ.35 ஆயிரத்தை அந்த ஏஜெண்டிடம் கொடுத்தார். கடந்த 2009-ம் ஆண்டு எங்களது தாயாரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்தோம். அப்போது விமான நிலையத்தில் ஒரு சூட்கேசை கொடுத்து மலேசியா சென்றதும் அதை ஒருவர் வந்து வாங்கிக் கொள்வார் என்று கூறினார்.

சூட்கேசில் என்ன இருக்கிறது என்று அவர் சொல்லவில்லை. அம்மாவும் அதை திறந்து பார்க்கவில்லை. ஆனால் மலேசியா சென்று இறங்கிய பிறகுதான் அந்த சூட்கேசில் போதைப் பொருள் இருந்தது எங்களது தாயாருக்கு தெரிய வந்துள்ளது. தவறான முறையில் எங்களது தாயாருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மலேசியா செல்லும் முன்பு, சில ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். அதன்மூலம் கிடைத்த சம்பளத்தை வைத்துதான் எனக்கும், எனது சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். அங்கு வேலை செய்வதற்கான “விசா” காலம் முடிவடைந்து விட்டதால் மலேசியாவுக்கு செல்ல ஒப்புக் கொண்டார்.

எங்களது தாயார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் டிராவல் ஏஜெண்டை அணுகி முறையிட்டோம். அவர் 2 மாதத்தில் சிறையில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வருவதாக உறுதியளித்தார். 2 மாதங்கள் கழித்து மீண்டும் அவரை சந்தித்த போது மேலும் 2 மாத அவகாசம் கேட்டார். ஆனால் அதன்பிறகும் எதுவும் நடக்கவில்லை.

எங்களது குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ.4 லட்சம் தருவதாக டிராவல் ஏஜெண்டு உறுதியளித்து கடிதம் தந்தார். ஆனால் உறுதியளித்தபடி பணமும் தரவில்லை. எங்களது தாயாரை அவர் ஜாமீனிலும் எடுக்கவில்லை. பின்னர் நாங்கள் ஏஜெண்டை பார்க்க அவரது ஆபீசுக்கு சென்ற போதெல்லாம் எங்களை சந்திப்பதை அவர் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எங்களது தாயாருக்கு மலேசிய கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தெரியவந்தது. இந்த தகவல் எங்கள் குடும்பத்தையே நிலை குலைய செய்து விட்டது. செய்யாத குற்றத்துக்காக தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள எங்கள் தாயாரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நூர்ஜகான் கூறினார்.

கலைஞர் கருணாநிதி பற்றி சில குறிப்புகள்.

டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க.


தமிழ்நாட்டின் நிரந்தரத் தலைப்புச் செய்தி... கலைஞர் கருணாநிதி! ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும் புகழ்க் கடலில் மூழ்கி, விமர்சன முத்தெடுத்து வெளியே வருபவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் தமிழ்த் தேனி.

ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.

தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.

அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! .

ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார். நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும்.

தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை. தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.

சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.

ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.

ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.

பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.

கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.

பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.

சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.

’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.

12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.

புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.

படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.

கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும் கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.

கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.

கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.

தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!.

speedsays.blogspot.com

சமச்சீர் கல்வி - யார் குற்றவாளி ?


சமச்சீர் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் சமமான கல்விமுறை என்பதை ஜெயலலிதா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அனைவருக்கும் பொதுவான அரசு என காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் ‘பாடத்திட்டம் சரியில்லை, குறைகள் இருக்கின்றன, மேம்படுத்துகிறோம்’ என சமச்சீர் கல்வி குறித்து பலவிதமான சால்சாப்புகளை ஜெயலலிதா சொல்கிறார்.

ஆனால் தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு இத்தகைய நிர்பந்தம் இல்லை என்பதால், ‘அதெப்படிங்க எல்லாருக்கும் ஒரேவிதமான கல்விங்குறது சரியா இருக்க முடியும்? அப்புறம் தகுதி, திறமை என்னாகுறது?’ என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர்.

இராம.கோபாலன் மிக திமிர்த்தனமாக ‘சமச்சீர் கல்வி என்பது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்துவிடும்’ என்கிறார். நடப்பில் இருக்கும் கல்விமுறைதான் குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது என்பது இதன் முரண் யதார்த்தம்.

பா.ராகவன் போன்ற அறிவாளி அம்பிகளோ, சமச்சீர் கல்விக்கென தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி இதை நிராகரிக்கிறார்கள். இதில் அச்சம் தரக்கூடிய அம்சம், ஓர் அரசு அனைவருக்கும் சமமான கல்வி என்பதை மறுக்கிறது. இதை பலரும் ஆதரிக்கின்றனர். கல்வியில் இருக்கும் வித்தியாசம் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை மத்திய தரவர்க்க மனநிலையும், பூணூல் பூச்சாண்டிகளும் விரும்புகின்றனர். அதை வெவ்வேறு வாதங்களின் மூலம் நியாயப்படுத்துகின்றனர்.

சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதை விமர்சிக்கும் ஊடகங்கள் பலவும், ஜெயலலிதாவை நோக்கி கோபமான ஒரு கேள்வியை இன்னும் முன்வைக்கவில்லை. மாறாக அ.தி.மு.க. தொண்டனைப் போல ‘அம்மா, நாங்கள் உங்களிடம் இருந்து இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும்’ என்று அமுங்கிய குரலில் பேசுகின்றன. குரல் ஓங்கினால் குரல்வலையிலேயே குத்துவிழும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதேநேரம், சமச்சீர் கல்வியை அமுல்படுத்திய கருணாநிதியை ஒரு வார்த்தை கூட பாராட்டாமல் இருப்பது போகட்டும்… மாறாக, ‘அவர் தப்பு, தப்பா புத்தகத்தை அச்சடிச்சதுனாலதான் இந்தம்மா வந்து சமச்சீர் கல்வியை நிறுத்திடுச்சு. இல்லேன்னா சர்ச்பார்க் கான்வெண்டுல கூட சமச்சீர் கல்வி வந்துடும்’ என்பது போல இதற்கான பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்துவதில் கவனமாக இருக்கின்றனர்.

சமச்சீர் கல்வி ஒன்றும் சர்வரோக நிவாரணி அல்ல. சமமான கல்வியை முன்மொழியும் இந்த திட்டத்திலும் கூட கட்டண விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் ‘சமம்’ என்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இந்த இடத்தில் எனக்கொரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

’நல்லி குப்புசாமி செட்டி’ எனப் பெயரிலேயே செட்டியார் என வருகிறது. ஆனால் அவர் கூட்டங்களில் பேசும்போது கவனித்தால் வலிந்து பார்ப்பன பாஷையைப் பேசுவார். வேறு சில பார்ப்பனர் அல்லாத முதலாளிகள் கூட இப்படி பார்ப்பன பாஷையில் பேச முயற்சிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

இதன் உளவியல் என்னவெனில், தனக்குக் கீழ் பணிபுரிபவனின் பேச்சுமொழியும், தனது பேச்சுமொழியும் ஒரேவிதமாக இருப்பதை இத்தகைய முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இயல்பாகவே அவர்களின் மனம் மேம்பட்ட பேச்சுமொழியாக பொதுவெளியில் பதிவாகியிருக்கும் பார்ப்பன பாஷையைத் தேர்ந்து எடுத்துக் கொள்கிறது.

பேசும் மொழியில் சமமாக இருப்பதை விரும்பாத இந்த மனநிலைதான் கல்வி சமமாக இருக்கக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்துகிறது. கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக மட்டுமே ஜெயலலிதா இந்தத் திட்டத்தை நிறுத்தவில்லை.

மாறாக அவரது அடிமனதில் படிந்திருக்கும் இந்துத்துவ அஜண்டாவில் இருந்தே இத்தகைய செயல்கள் பிறக்கின்றன. அதனால் எல்லா பழியையும் தூக்கி கருணாநிதி மீது சுமத்திவிட்டு சவுகர்யமாக நகர்ந்துகொள்வது சரியல்ல.

இப்படிக்கு,
Barathi Thambi

`செக்ஸ்' சித்ரவதை செய்த கள்ளக்காதலன் கொலை - கள்ளக்காதலி வெறிச்செயல்.

நெல்லை அருகே இன்று `செக்ஸ்' சித்ரவதை செய்த  லாரி டிரைவர் கொலை கள்ளக்காதலி வெறிச்செயல்


நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த நல்லம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகன் ராஜகோபால் (29). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. ராஜகோபாலுக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் 2-வது மனைவி வெள்ளத்தாய் (45) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

வெள்ளத்தாய் அப்பகுதியில் உள்ள பள்ளியின் சத்துணவு கூடத்தில் சமையல்காரராக பணிபுரிந்துவந்தார். மகன் வயது வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை சுட்டடிக்காட்டி அருணாச்சலம் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

இவர்களது விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்து மிகவும் கேவலமாக பேசியிருக்கிறார்கள். ஆகையால் அவமானம் தாங்காமல் அருணாசலம், மனைவி வெள்ளத்தாயை பிரிந்து சென்றார். அருணாசலத்தின் இந்தசெயல் கள்ளக்காத லர்களுக்கு மிகவும் சவுகரியமாகி விட்டது. அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜகோபால் சந்திக்க வரும்போதெல்லாம் உல்லாசமாக இருக்க வெள்ளத்தாயை வலியுறுத்தினார். அதில் வெள்ளையம்மாளுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ராஜகோபால் வலுக்கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்தார். இதனால் வெள்ளத்தாள் கடும் அவதிக்கு ஆளானார். ராஜகோபாலின் `செக்ஸ்' சித்ரவதை தாங்காமல் நல்லம்மாள்புரத்திலிருந்து பாளைக்கு வந்து தனியாக வீடு எடுத்து தங்கினார்.

வாரவேலை நாட்களில் மட்டும் நல்லம்மாள்புரத்திற்கு சென்று தங்கியிருந்து பணிக்கு சென்றுவந்தார். மற்ற நாட்களில் பாளையிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று நல்லம்மாள்புரத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இதனையறிந்த ராஜகோபால் அங்கு சென்றார். குடிபோதையில் இருந்த அவர், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு வெள்ளத்தாயிடம் கூறினார்.

அதற்கு அவர் மறுக்கவே பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். இது வெள்ளத்தாய்க்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே கள்ளக்காதலன் ராஜகோபாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இன்று அதிகாலை ராஜகோபால் அயர்ந்து தூங்கிக்கோண்டிருந்தார்.

அப்போது வீட்டின் வெளியே கிடந்த பாறாங்கல்லை வெள்ளத்தாய் தூக்கிவந்து ராஜகோபாலின் தலையில் போட்டார். இதில் அவர் தலைசிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்பு வெள்ளத்தாய் மானூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அடிக்கடி உல்லாசமாக இருக்க வலியுறுத்தியது மட்டுமின்றி, வலுக்கட்டாயமாக உல்லாசம் அனுபவித்ததால் கள்ளக்காதலனை கொன்றதாக வெள்ளத்தாய் பரபரப்பு வாக்குமூலம் அள்த்துள்ளார்.

“வெப்காமிரா” மூலம் உடல் அழகை ரசிக்கிறார்கள்” : கம்ப்யூட்டர் மையங்களில் அரங்கேறும் ஆபாச லீலைகள்.

“வெப்காமிரா” மூலம் உடல் அழகை  ரசிக்கிறார்கள்” : சேலத்தில் பரவும் புது செக்ஸ் கலாச்சாரம்: கம்ப்யூட்டர் மையங்களில் அரங்கேறும் ஆபாச லீலைகள்

வரலாற்று, ஆய்வு தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் இண்டர்நெட் எனப்படும் இணையதளம் மூலம் மக்கள் பயன்அடைந்து வருகின்றனர். இதன் மூலம் ஒரு புறம் நன்மை இருந்தாலும், மற்றொரு புறம் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீர்கேட்டு வருகின்றனர்.

சேலத்தில் ஏராளமான இண்டர்நெட் மையங்கள் இருக்கிறது. தற்போது பெரும்பாலும் இந்த மையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து விட்டது. காரணம் பெரும்பாலானவர்கள் கம்ப்யூட்டர், வாங்கி வீட்டிலேயே ப்ரவுசிங் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதன் விளைவு ப்ரவுசிங் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் பெரும்பாலும் குறைந்து விட்டது.

முதலீடு போட்டு அதற்கு உண்டான வருமானம் இல்லாமல் பலர் அவதியடைந்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கவர தற்போது பல இண்டர்நெட் மையங்களில் ஆபாச காட்சிகள் தங்கு தடையின்றி பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்பு போலீசார் சோதனை நடத்தி குறிப்பிட்ட சில வெப்சைட்டுகளை முடக்கி வைத்தனர். ஆனால் தற்போது போலீசாரின் கண்காணிப்பு, நடவடிக்கைகள் இல்லாததால் மீண்டும் இண்டர்நெட் மையங்களில் ஆபாசபடம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சேலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இண்டர்நெட் மையத்தில் எப்போது பார்த்தாலும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கூட்டமாகவே அலைமோதுகிறது. பேஸ் புக் மூலம் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்வை ஏற்படுத்தி கொள்கின்றனர். பின்னர் அவர்கள் ஆபாசமாக கலந்துரையாடுகின்றனர்.

இதன் உச்சகட்டமாக சில ஆண்கள் வெப்காமிரா மூலம் பெண்களை தொடர்பு கொண்டு அவர்களை பற்றி ஜாலியாக பேசி கொண்டே செல்கின்றனர். பின்னர் திடீரென அவர்கள் செக்சாக பேசி கொள்கின்றனர். இதன் விளைவு அவர்கள் இருவரும் உடல் உறுப்புகளை வெப்காமிரா மூலம் பார்த்து ரசிக்கின்றனர். அவற்றை சில இளைஞர்கள் ரெக்கார்டிங் செய்து அதை இண்டர்நெட்டில் யூடுப்பில் வெளியிட்டும் வருகின்றனர்.

பள்ளி, மாணவர்கள் முதலே இந்த ஆபாச லீலைகளில் ஈடுபடுகிறார்கள். பள்ளியிலேயே இ-மெயில், சேட்டிங், என பலவும் கற்றுக்கொண்டு வரும் அவர்கள் வீட்டில் ஜாலியாக கம்ப்யூட்டரில் விளையாட முடியாது என்ற காரணத்தினால் கம்ப்யூட்டர் மையங்களை நோக்கி செல்கின்றனர்.

வெப் காமிரா மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆஜராகும் ஜோடிகள் மணிகணக்கில் ஜாலியாக ஆபாச லீலைகளை அரங்கேற்றி வருகின்றனர். அதோடு சில இளைஞர்கள், ஆபாச வார்த்தைகளை பேசி பெண்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களின் போட்டோவை பெற்று அதிலும் மோசடி செய்து வருகின்றனர். ஆண்-பெண் என்று வித்யாசம் இன்றி அனைத்து தரப்பினரும், வெப்காமிரா மூலம் ஆபாசத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

கல்லூரி மாணவிகள், சிலர் ப்ரவுசிங் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு ஜாலியாக பாய்ப்ரண்டுடன் சேட்டிங் செய்கிறார்கள். ஒரு சில கம்ப்யூட்டர் மையங்களில் இது போல் ஆபாச படங்களை பார்ப்பவர்களை எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். ஒரு சில கம்ப்யூட்டர் மையங்களில் இதை கண்டு கொள்வதில்லை.

பொதுவாகவே இண்டர் நெட் மையங்களில் பல கம்ப்யூட்டர்கள் இருந்தாலும் அவற்றின் சர்வர்கள் அனைத்தும் ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும். அதன் மூலம் எந்தெந்த கம்ப்யூட்டரில் யார், யார்? என்னென்ன வெப்சைட்டுகள் பார்க்கிறார்கள் என்று கண்டுபிடித்து விட முடியும்.

சேலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தும் ஒரு வாலிபரிடம் கேட்ட போது, பெரும்பாலும் கல்லூரி மாணவிகள் ப்ராஜெக்ட் பிரிண்டவுட் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு ஆபாசபடங்களை தான் பார்க்கிறார்கள். எங்களுக்கு தெரிந்து பல மாணவிகளை சத்தம் போட்டுள்ளோம். அதற்கு பின்னால் அவர்கள் வருவதே இல்லை என்றார்.

ஆண், பெண் வித்தியாசம் இன்றி அனைவரும் இண்டர்நெட் மையங்களில் இஷ்டம் போல் ஆபாச லீலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெப்காமிரா மூலம் தொடர்பை ஏற்படுத்தும் அவர்கள் ஓகே என்றவுடன் ஒரு இடத்தில் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருக்கிறார்கள். பின்னர் அதோடு அவர்கள் தங்களுக்குள் உள்ள தொடர்பை துண்டித்து கொள்கின்றனர்.

தொடர்ந்து அவர்கள் மீண்டும் வேறு நண்பர்களை அறிமுகம் செய்து கொண்டு இதே போல் செய்கிறார்கள். பிளேபாய்கள் போல பிளே கேள்களும் அதிகளவில் உருவாக இண்டர்நெட் மையங்கள் ஒரு முக்கியமான காரணமாக விளங்கி வருகிறது. எனவே சைபர் கிரைம் போலீசார் இதில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலைநாட்டு கலாச்சாரத்தையும், பின்னுக்கு தள்ளிவிடும் இந்திய கலாச்சாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசங்கரனிடம் கலாநிதிமாறனின் பேரம்.




கடந்த வாரம், கலாநிதி மாறனும், காவேரி கலாநிதியும், திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்றார்கள். இந்தச் செய்தி வெளியில் கசியக் கூடாது என்று அவர்கள் நினைத்தாலும், செய்தி பரவவும், உடல்நலக் குறைவுக்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை சந்திக்கவே சிங்கப்பூர் செல்வதாக, மாறன்கள் தரப்பிலிருந்து தகவல் பரப்பப் பட்டது.

சிங்கப்பூர் சென்று, கலாநிதியும், காவேரி கலாநிதியும், ஏர்செல் சிவசங்கரனுக்கு நெருக்கமான உறவினர்களின் மூலம் சிவசங்கரனிடம் எப்படியாவது எடுத்துச் சொல்லி, புகாரை வாபஸ் பெற கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், மாறன் குடும்பத்தினரால் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்ட, சிவசங்கரன் குடும்பத்தினர் இவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று தெரிகிறது. மேலும், நக்கல் செய்யும் விதமாக, எது வேண்டுமானாலும் செய்வேன் என்றால், சன் டிவியையும், ஸ்பைஸ் ஜெட் விமான சேவையையும் விற்கத் தயாரா என்று கேட்டதும், கலாநிதி அதிர்ந்து போயிருக்கிறார்.

பிறகு, சிவசங்கரன் தரப்பில், சிபிஐயிடம் புகாரும், வாக்குமூலமும் கொடுத்த பிறகு, அதை வாபஸ் வாங்கினால், இந்தியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சிவசங்கரனுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படும் என்பது எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனாலும், சளைக்காத கலாநிதி மாறன், இழப்பீட்டு தொகையாக 2000 கோடி ரூபாய் வரை, (லஞ்சமாக) கொடுக்க முனைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், சிவசங்கரனுக்கு இவர்கள் மீதான கோபம் தணியவில்லை என்று கூறப்படுகிறது. அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு, ஏர்செல் நிறுவனத்தை விற்க வேண்டும் என்று மாறன்கள் நெருக்கடி கொடுத்ததும் விற்க முடிவு செய்த, சிவசங்கரனுக்கு அனந்தகிருஷ்ணன் 500 கோடி ரூபாய் கொடுக்காமல் பாக்கி வைத்திருந்ததாகவும், அந்தத் தொகையை கொடுத்த பிறகே, பங்கு விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், உடனடியாக பங்கு விற்பனையை முடித்து, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த மாறன்கள், இதற்காக சென்னை காவல்துறையை பயன்படுத்தி, சிவசங்கரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்து, சிவசங்கரனையும், அவரது பெற்றோர்களையும், விரட்டியடித்து, மிரட்டியிருக் கிறார்கள். இதன் பின்புதான், சிவசங்கரன் மொத்த ஒப்பந்தத்திலும் கையொப்பம் இட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மாறன்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும், சிவசங்கரனால் புகாரை வாபஸ் வாங்க முடியாத என்பதற்கு, இது மட்டும் காரணமல்ல. சிவசங்கரன் புகாரை வாபஸ் வாங்கினால், சிவசங்கரன் மீது, சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவசங்கரனுக்குச் சொந்தமான ஹைடெக் ஹவுசிங் என்ற நிறுவனம், கலைஞர் டிவிக்கு 50 கோடி ரூபாய் வழங்கியிருப்பதும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சிவசங்கரன் இந்தத் தொகையை நேரடியாக வழங்காமல், சகாரா குழும நிறுவனங்கள் என்ற நிறுவனம் மூலமாகவும், மொரீஷியசைச் சேர்ந்த டெலிகாம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் மூலமாக முதலில் பணத்தை அனுப்பி, அதன் பிறகு, சென்னையைச் சேர்ந்த, வீட்டா டெவலப்பர்ஸ் அன்ட் பில்டர்ஸ் மற்றும், ஸ்கை சிட்டி பவுண்டேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டிவிக்கு இரண்டு தவணைகளில் 50 கோடியை வழங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

சிவசங்கரன் சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் பட்சத்தில், சிபிஐ, கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தாக தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப் பத்திரிக்கை போலவே, மற்றொரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்து, சிவசங்கரனையும் சிறைக்கு அனுப்ப தயங்காது என்று கூறப்படுகிறது.

எஸ்டெல் என்ற நிறுவனம், முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு, சிவசங்கரன் மறைமுகமாக, சென்னையைச் சேர்ந்த வீட்டா டெவலப்பர்ஸ் அன்ட் பில்டர்ஸ் மற்றும், ஸ்கை சிட்டி பவுண்டேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமாக எஸ்டெல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு, உதவி செய்து விட்டு, ஒதுக்கீடு முடிந்ததும், சிவா குழுமம் என்ற சிவசங்கரனின் நிறுவனம் மூலமாக எஸ்டெல் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும் சிபிஐ கவனத்துக்கு வந்திருக்கிறது.

எஸ்டெல் நிறுவனத்துக்கும், குறைந்த விலையில் லைசென்ஸ் ஒதுக்கப் பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கையிலேயே சுட்டிக் காட்டப் பட்டிருந்தது குறிப்பிடித் தக்கது.

இந்த சூழலில், எஸ்டெல் நிறுவனத்தை சிவசங்கரன் வளைத்ததும், அவர் நிறுவனங்கள் கலைஞர் டிவிக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததையும் வைத்து, எளிதாக ஒரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியும்.

ஆனால், பெரிய முதலைகளான மாறன் சகோதரர்களைப் பிடிப்பதற்காக, சிவசங்கரன் மீது, இப்போதைக்கு நடவடிக்கை இருக்காது என்றே சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவசங்கரனிடம் நடத்திய பேச்சுவார்த்தை, எதிர்ப்பார்த்த வெற்றியை தராத காரணத்தால், மாறன்கள் மிகுந்த கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனைத்து பத்திரிக்கைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பும் வழக்கத்தை கொண்டிருந்த மாறன்கள், இப்பொதெல்லாம் நோட்டீஸ் அனுப்பும் பழக்கத்தையும் கைவிட்டு விட்டார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

மாறன்களின் இந்த நிலைக்கு காரணமாக, அவர்கள் தொழில் நடத்துகையில் துளி கூட நியாயம் பார்க்காமல் நடந்து கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது. சிவசங்கரனோடு மோதல் ஏற்பட்டவுடன், அவரது ஸ்டெர்லிங் நிறுவனம் தொடர்பாக எந்தச் செய்தி வந்தாலும், அதை தவறாக சித்தரிக்குமாறு, பல முறை உத்தரவிடப் பட்டிருப்பதாக, சன் டிவி ஊழியர்களே குறிப்பிடுகிறார்கள்.

மாறன்கள் ஈடுபட்ட எந்தத் தொழிலிலும், அவர்கள் நேர்மையாக நடந்து கொண்டதே இல்லை என்று தொழில் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர்களின் இந்த நாணயமற்ற போக்கு எரிச்சலை ஊட்டினாலும், அவர்களின் அரசாங்க செல்வாக்கு காரணமாக, எந்த தொழில் அதிபரும் அவர்கள் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும், ரத்தன் டாடாவே உரிய நேரம் வரும் வரை அமைதியாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

வழக்கமாக, நன்றாக லாபத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால், அந்தத் தொழில் அதிபரை அணுகி, தொழிலை தங்களுக்கு விற்று விடுமாறு கேட்பார்களாம். அவ்வாறு விற்கப்படவில்லை என்றால், சன் டிவியில் அந்த நிறுவனம் தொடர்பாக மோசமாக சித்தரித்து செய்தி வெளியிடுவது இவர்களுக்கு கைவந்த கலை என்றும், சுட்டிக் காட்டப் படுகிறது.

இப்படி அநியாயத் திமிரில் அலைந்து கொண்டிருந்த மாறன் சகோதரர்களுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து இவர்கள் மீளுவது மிக மிக கடினம் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

நன்றி - சவுக்கு.