Tuesday, June 14, 2011

ஜெயலலிதா பிரதமரிடம் சொல்லி அதிரவைத்த, இரண்டு சொற்கள் !



இன்று பிரதமருடன் சந்திப்பை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தயாநிதி மாறன் விசயம் பற்றியே அதிகம் பேசினார் எனத் தெரியவருகின்றது. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தயாநிதி, பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை முதல்வர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரியவருகின்றது.

அப்போது முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய இரண்டு சொற்கள், பிரதமரை அதிரச் செய்தன என்கிறார்கள்.

ஜெயலலிதா பயன்படுத்திய இரண்டு சொற்கள் – “Sack him” (ஆளைத் துரத்தி விடுங்கள்)

பிரதமரைச் சந்திக்க ஜெயலலிதா சென்றபோதே மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். உற்சாகத்துக்குக் காரணம், அவருக்கு பிரதமர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்தான்.

அவரை அழைத்துச்செல்ல, பிரதமரின் அலுவலகமே காரை அனுப்பி வைத்திருந்தது என்பதிலிருந்து, அங்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை ஊகித்துக் கொள்ளலாம். முதல்வரின் வாகனம் ஒன்று தயாராக இருந்தபோதிலும், அவர் பிரதமரின் அலுவலகத்திலிருந்து வந்த காரில்தான் பிரதமரைச் சந்திக்கச் சென்றிருந்தார்.

பிரதமருடனான சந்திப்பில், தயாநிதி மாறன் விசயம் பற்றிப் பேச்சு வந்தபோது, தயாநிதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜெயலலிதா. இதற்கு பிரதமரிடமிருந்து உறுதியான பதில் ஏதும் வரவில்லை.

அதையடுத்து மீண்டும் ஒருமுறை, தான் கூறியதையே வலியுறுத்திக் கூறினார் முதல்வர்.

சாஃப்ட்டான வார்த்தைகளில் பேசும் வழக்கமுடைய பிரதமர், “இதைப்பற்றி நாங்கள் ஓரளவுக்குமேல் வற்புறுத்த முடியாது. அவராக (தயாநிதி) முடிவெடுக்க வேண்டிய விசயம் இது. ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துவது நன்றாக இருக்காது” என்று இழுத்திருக்கிறார்.

“ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்த முடியாது என்றால், அடுத்த வழி ஒன்றுதான் இருக்கிறது” என்று கூறிய ஜெயலலிதா, அதன்பின் கூறிய இரண்டு சொற்கள்தான், “Sack him”

பிரதமருடனான சந்திப்பு முடிந்து வெளியேவந்த ஜெயலலிதா, “பிரதமர் அலுவலகத்தின் கார் தேவையில்லை. நான் எனது சொந்த வாகனத்திலேயே சென்றுவிடுவேன்” என்று கூறிவிட்டார். அவர் பிரதமரின் அலுவலகம் அனுப்பிய காரில் வந்தபோது, அவரது காரும், அதைப் பின்தொடர்ந்து வந்து காத்திருந்தது.

பிரதமர் அலுவலகக் காரை ஒதுக்கிவிட்டுத் தனது காரில் ஏறச்சென்ற முதல்வர், உயரம் காரணமாக அதில் ஏறமுடியாது தடுமாறினார். உடனே முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி, ஒரு ஸ்டூலை எடுத்துப் போடவே, அதில் ஏறித்தான் தனது காருக்குள் ஏறமுடிந்தது அவரால்.

2 comments:

Thamizhan said...

பிரதமர் கார் வேண்டாம்.தனது காரிலே ஏற முடிய வில்லை.ஆபிசர் ஏறும் பலகை போட்டார் . தமிழக மக்கள் ஏறும் பலகை போட்டுள்ளனர்.அவர்களது குழந்தைகள் படிப்பில் முதல் அடி !அம்மா, அம்மா என்று கூனிக் குறுகி வணங்கி நிற்கும் ஜென்மங்களுக்கு வரப் போகிறது அடுத்த அடி. அவரவர் தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளா விட்டால் காட்டுத் தர்பார் மும்முரமாக நடக்கும். எல்லாமே
scak him தான்.பாவம், அய்ந்தாண்டுகள் தாங்க வேண்டுமே !

குறும்பன் said...

He said, lady that is not very easy, we have to follow certain procedure (ie,. asking sonia) Don't think central like ur TN