Tuesday, June 14, 2011

சிதம்பரம் சும்மா விடுவாரா ஜெயலலிதாவை?




தமிழக முதல்வர் தன்னைப் பற்றி அடித்த காமென்ட்டுக்கு உடனே சுடச்சுடப் பதில் கொடுத்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். “செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. எப்போதும் தவறான காலை வைத்துத்தான் நடக்கத் தொடங்குவார் அவர்” என்று கிண்டலாகப் பதிலடி கொடுத்திருக்கிறார் அவர்.

கடந்த மாதம் சட்டசபைத் தேர்தலில் வெற்றியடைந்து முதல்வரான பின்னர், நேற்றுதான் முதல் தடவையாகத் தலைநகருக்கு வருகை மேற்கொண்டிருந்தார் ஜெயலலிதா.

டில்லியில் கருத்துத் தெரிவித்தபோது, “நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் ப. சிதம்பரம் ஜெயித்ததாகக் கூறுவது மோசடியானது. அங்கு ஜெயித்தவர் அ.தி.மு.க. வேட்பாளர்தான். சிதம்பரம் இந்தத் தேசத்தையே மோசடி செய்திருக்கிறார்” என்ற அதிரடிக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா, இவரைப் பற்றி டில்லியில் வைத்துக் கூறினால், சிதம்பரம் இருப்பதும், டில்லியில்தானே.. சும்மா விடுவாரா அவர்?

“நான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதுபற்றி, தமிழக முதல்வர் கருத்துக் கூறியிருக்கிறார் என அறிந்தேன்” என்று தொடங்கும் அறிக்கை ஒன்றை, சுடச்சுட வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “அவரது (ஜெயலலிதா) கட்சியின் வேட்பாளரான ராஜ கண்ணப்பன் இது குறித்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறார் என்பதும் முதல்வருக்குத் தெரியும். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் நிற்கிறது என்பதும் அவருக்குத் தெரியும்.

அப்படியிருக்கையில் அதுபற்றி அவர் கருத்துக் கூறுவது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

பொதுவாகவே முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்ற மரபுகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டவர். இதனால், அவரது நடவடிக்கை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை” என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார் அமைச்சர் சிதம்பரம்.

சபாஷ் சரியான போட்டி!

3 comments:

மதுரை சரவணன் said...

சரியான பதில் தான்.. இதில் என்ன நாம் ருத்து சொல்ல.. பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

Samy said...

Human has only two legs. Which is the wrong one Sidhamparam. Samy

ராவணன் said...

சிதம்பரம் செட்டியார் ஜெயித்தது எப்படி?

ஒழுக்கமானவர்கள் யாரும் இப்படியான வெற்றியில் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

சிதம்பரம் செட்டியாருக்கு உண்மை சுடுகின்றது.

மானம் ரோசம் இருந்தால் வழக்கில் வென்ற பின்பு பதவியில் சேரவேண்டும்.

சிதம்பரம் செட்டியாருக்கு ஒன்றுமே இல்லையே. சோனியாவின் முந்தானையில் தொங்குவதே அந்த ஆளுக்குத் தெரியும்