Thursday, April 28, 2011

மரபணு கத்தரிக்காயை பாதியளவு அனுமதிக்கலாம் ; தர மதிப்பீட்டு குழு ஆலோசனை.


மேலும் ஆய்வு வேண்டாம்:  மரபணு கத்தரிக்காயை  பாதியளவு அனுமதிக்கலாம்;  தர மதிப்பீட்டு குழு ஆலோசனை

மரபணு கத்தரிக்காயை பாதியளவு அனுமதிக்கலாம் என்று தர மதிப்பீட்டுக்குழு யோசனை கூறி உள்ளது. கத்தரிக்காயில் “பேசிலியம் பிரிஞ்சோசிஸ் என்ற வைரசை பயன்படுத்தி உருவாக்கப்படுவது மரபணு கத்தரிக்காய். இந்த கத்தரிக்காயை பயிரிட்டால் நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழுக்களை அழித்து விடும். இதில் உள்ள இலைகளை ஆடு-மாடுகள் சாப்பிட்டால் இறந்து விடும். மரபணு கத்தரிக்காயில் உள்ள விதைகள் மீண்டும் முளைக்காது.

விவசாயிகள் ஒவ்வொரு முறையும் சர்வதேச கம்பெனிகளிடம் சென்று அதிக விலை கொடுத்து விதைகளை வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். மரபணு கத்தரிக்காய் பயிரிட்டால் நமது நாட்டில் உள்ள கத்திரிக்காய் ரகங்கள் அனைத்தும் அழியும் ஆபத்து உள்ளது. இதனால் மரபணு கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் திருத்தணிகாசலம் வழக்கு தொடர்ந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுச் சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மரபணு கத்தரிக்காய்க்கு தற்காலிக தடை விதித்தார். அப்போது அவர் கூறும் போது, “மரபணு கத்தரிக்காய் பற்றி மேலும் சில ஆய்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு அதை அறிமுகப்படுத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.

இந் நிலையில் டெல்லியில் மரபணு மாற்று தரமதிப் பீட்டு குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பேசிய பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு கத்தரிக்காயை முதலில் பாதியளவு பயிரிட அனுமதி அளிக்கலாம். ஏற்கனவே மரபணு கத்தரிக்காய் பற்றி மேற்கண்ட ஆய்வுகளே போதுமானது. மேலும் அது பற்றி ஆய்வு நடத்த தேவையில்லை என்று கருத்து தெரிவித்தனர். இது பற்றி மரபணு மாற்று தரமதிப்பீட்டு குழு இணை தலைவர் அர்ஜுனா ரெட்டி கூறும் போது, “இந்த ஆலோசனை கூட்டத்தில் 30 விஞ்ஞானிகன் பங்கேற்றனர்.

இதில் பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு கத்தரிக்காய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் நடைபெறும் கூட் டத்தில் இறுதி முடிவு எடுத்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார். மரபணு மாற்று தர மதிப்பீட்டு குழுவில் சுப்ரீம் கோர்ட்டு,பார்கவா என்பரை நியமித்துள்ளது. அவர் கூறும் போது, “மரபணு கத்தரிக்காய் பற்றி மேலும் பல ஆய்வுகள் நடத்த வேண்டும். ஆய்வு நடத்தாமல் அதற்கு பாதியளவு கூட அனுமதி தர கூடாது. தர மதிப்பீட்டு குழுவில் உள்ள பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு தொழில் நுட்ப நிறுவனங்களை சேர்ந்தவர்கள், இதனால் தான் அவர்கள் மரபணு கத்தரிக்காயை ஆதரிக்கிறார்கள்” என்றார்.

மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் மரபணு கத்தரிக்காய் பயிரிட அனுமதி அளிக்க கூடாது என்று சென்னையில் உள்ள தூளிகள் சுற்றுச் சூழல் அமைப்பு தலைவர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறி உள்ளார். அவர் கூறும் போது, ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் மரபணு கத்தரிக்காய்க்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தோம். அதன் பிறகு தான் மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. “மீண்டும் சர்வதேச மரபணு மாற்று நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் மறைமுகமாக மரபணு கத்தரிக்காயை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். மரபணு மாற்று காய்கறி, பழங்களை இந்திய மண்ணில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். விரைவில் மரபணு மாற்று காய்கறி, பழங்களால் ஏற்படும் தீமைகள் பற்றி சென்னையில் கருத்தரங்கம் நடத்துவோம்” என்று டாக்டர் திருத்தணிகாசலம் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : பிஏசி தலைவர் ஜோஷியின் அறிக்கை நிராகரிப்பு - சைபுதீன் சோஸ் பிஏசி தலைவரானார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டும் வகையில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவரான பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உருவாக்கிய அறிக்கையை அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர்.

இதையடுத்து இந்த அறிக்கையை வெளியிடுவது குறித்து நடந்த ஓட்டெடுப்பில் ஜோஷியின் அறிக்கைக்கு எதிராக திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 11 பேரும், ஆதரவாக பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுகவைச் சேர்ந்த 10 எம்பிக்களும் வாக்களித்தனர்.

இதனால் 1 ஓட்டு வித்தியாசத்தால் ஜோஷியின் அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஜோஷி தலைமையிலான இந்த 22 பேர் குழுவில், காங்கிரஸ் சார்பில் 7 எம்.பிக்களும், திமுக சார்பில் 2 எம்பிக்களும், பாஜக சார்பில் 4 பேரும், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 2 எம்பிக்களும் உள்ளனர்.

இவர்கள் தவிர சமாஜ்வாடிக் கட்சி சார்பில் 2 பேரும், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை சார்பில் தலா ஒருவர் என 3 பேர் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தி வந்தது. ஆனால்,
பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரியிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற திமுக-காங்கிரஸ் கோரிக்கையை ஜோஷி ஏற்கவில்லை.

மாறாக அவர் அவசரமாக வரைவு அறிக்கை தயாரித்து அதை மீடியாக்களுக்கும் நேற்று 'லீக்'செய்துவிட்டதாக திமுக-காங்கிரஸ் ஆகியவை குற்றம் சாட்டின.

இந் நிலையில் ஜோஷியின் செயலுக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி ஆகியவையும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசிக்காமல் ஜோஷி ஏன் அறிக்கையை வெளியிட்டார் என்று அந்தக் கட்சிகள் கேள்வி எழுப்பின. இது குறித்து இன்று நடக்கும் இக் குழுவில் கூட்டத்திலும் பிரச்சனை கிளப்புவோம் என்று அறிவித்தன.

ஏற்கனவே திமுக-காங்கிரசும் இந்த அறிக்கைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நிலையில் பகுஜன், சமாஜ்வாடிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால், இந்த அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் ஜோஷியால் இறுதி செய்ய முடியாத நிலை உருவானது.

இந் நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது தங்களிடம் ஆலோசிக்காமல் ஜோஷி உருவாக்கிய இந்த அறிக்கைக்கும், அதை மீடியாக்களுக்கு 'லீக்' செய்ததற்கும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஜோஷி உடனே பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்தது. உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த அறிக்கையை வெளியிடுவதா வேண்டாமா என்பது குறித்து ஓட்டெடுப்பு நடத்தலாம் என திமுக-காங்கிரஸ் ஆகியவை கோரின.

ஆனால், திடீரென கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு முரளி மனோகர் ஜோஷி வெளிநடப்பு செய்தார்.

பிஏசி தலைவரானார் சைபுதீன் சோஸ்:

இதையடுத்து ஜோஷிக்குப் பதிலாக மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ் கமிட்டியின் தலைவராக திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடிக் கட்சி எம்பிக்கள் வாக்களித்தனர்.

கூட்டத்தில் அவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், இதை பாஜக-அதிமுகவால் தடுக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து ஜோஷியின் அறிக்கை மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் 11 பேர் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.

பாஜக, அதிமுக, மார்க்சிஸ்ட் எம்பிக்கள் 10 பேர் ஆதரித்து வாக்களித்தனர். இதையடுத்து அந்த அறிக்கை தோற்கடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே ஓட்டெடுப்புக்கு முன்பே கூட்டத்தை முரளி மனோகர் ஜோஷி ஒத்திவைத்துவிட்டு வெளியேறிவிட்டாதால், அவர் தோற்கடிக்கப்படவில்லை என்றும், அவர் தான் மீண்டும் இக் கூட்டத்தைக் கூட்ட முடியும் என்றும் பாஜக கூறியுள்ளது.

இதனால் பிஏசியின் கதி என்னவாகும் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

முன்னதாக நாளை பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர், கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் ஆகியோரை இந்தக் குழு நாளை விசாரிக்க இருந்தது.

நாளை மறுதினம் தனது அறிக்கையை முறைப்படி சபாநாயகர் மீராகுமாரிடம் வழங்கவும் ஜோஷி திட்டமிட்டிருந்தார்.

இந் நிலையில், காங்கிரஸ் இந்த வரைவு அறிக்கையை நிராகரிக்க வைத்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கை மந்திரி திமிர் பேச்சு : ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்.


இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு அங்கு போர் குற்றம் நடந்ததாகவும், 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டதாகவும் தனது அறிக்கையில் கூறிஉள்ளது.

இதனால் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதிகள் சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் ஐ.நா. குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்த அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம் என்றும் இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஐ.நா. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். இது சட்டவிரோதமானது. விசாரணை செய்ய அவருக்கு அனுமதி வழங்கியவர் யார்? இலங்கையில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துமாறு அதிகாரப்பூர்வமாக கோரியவர் யார்? இலங்கை ஜனாதிபதியோ, மக்களோ, வேறு நிறுவனங்களோ விசாரணை நடத்துமாறு கோரவில்லை.

தன்னிச்சையாக நடவடிக்கையை எடுப்பதற்கு பான்கீமூனுக்கு உரிமை இல்லை. இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். ஐ.நா. நிபுணர் குழு என்று இதனைப் பலர் குறிப்பிடுகின்றனர். இது நிபுணர் குழுவல்ல. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு. பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு ஆரம்பம் முதலே அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

இந்த குழுவுடன் நாம் எந்தவொரு நடவடிக்கையையும் ஒரு போதும் மேற்கொள்ளவில்லை. இவர்கள் இலங்கைக்கு வரவில்லை. சானல் 4 காட்சிகளையும் இலங்கையில் உள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளரான கோர்டன் வைஸ் தெரிவித்த கருத்துக்களையுமே அவர்கள் சாட்சியங்களாக பதிவு செய்துள்ளனர். கோர்டன் வைஸ் இலங்கையில் இருந்தபோது தாம் வடக்குக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாயின் அவரின் சாட்சியங்கள் உண்மையென ஏற்றுக் கொள்வது எப்படி? இவ்வாறான அறிக்கை ஒன்றை நாடொன்று நிராகரித்த பின்னர் சர்வதேச அமைப்புகள் அதாவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, அல்லது மனித உரிமை பேரவை போன்றன விசாரணையில் ஈடுபடாது.

அவ்வாறு ஈடுபடும் சம்பிரதாயமும் கிடையாது. அவ்வாறு அந்த நிறுவனங்கள் கோரும் பட்சத்தில் மாத்திரமே பான் கீ மூனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை கிடப்பிலே போட்டு முடிக்க வேண்டியதுதான் மிச்சம். அரசாங்கம் என்ற ரீதியில் இதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனவே அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது வரும். இவ்வாறு இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறியுள்ளார்.

vizhiyepesu.blogspot.com

2ஜி விவகாரம்: ஜோஷியின் அறிக்கைக்கு காங்-திமுக பிஏசி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு.


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரித்து வரும் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக திமுக, காங்கிரஸ் ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன.

பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரியிடம் முழுமையாக விசாரணை நடத்தாமலேயே ஜோஷி அவசர அவசரமாக அறிக்கை தயாரித்துவிட்டதாக இந்தக் கட்சிகள் புகார் கூறியுள்ளன.

2ஜி வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதே போலல நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது. மேலும் இதே விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாஜக, அதிமுகவின் நெருக்குதலால் இது குறித்து பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கும் உத்தரவிட்டது மத்திய அரசு. இந்தக் குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷி உள்ளார். இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் இடம் பெற்றுள்ளனர்.

21 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமமான எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்தக் குழு சிபிஐ இயக்குனர் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. ஆனால், அருண் ஷோரியை விசாரணைக்கு அழைக்க ஜோஷி மறுத்துவிட்டார்.

வரும் 30ம் தேதியுடன் இந்தக் குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து, அதற்கு முன்பாகவே விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய முரளி மனோகர் ஜோஷி திட்டமிட்டார். ஆனால், முழுமையாக விசாரிக்காமல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு திமுக, காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தன.

பிஏசி என்பது நிரந்தரக் குழு என்பதால், பதவிக்காலம் முடிந்த பிறகும், அடுத்த குழு அமைக்கப்பட்ட பின்னரும் அறிக்கையை தாக்கல் செய்யலாம் என அவர்கள் கூறிவந்தனர்.

இந் தனது குழுவின் வரைவு அறிக்கை நகல்களை முரளி மனோகர் ஜோஷி திடீரென டெல்லியில் நேற்று வெளியிட்டார். அதில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம் மீதும் இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதமரும் துரதிருஷ்டவசமான சில தவறுகளை செய்திருப்பதாகவும், பிரதமர் அலுவலகம் செயல்படாமல் இருந்ததே தன்னிச்சையாகவும், நேர்மையற்ற முறையிலும் ஆ.ராசா செயல்படுவதற்கு வசதியாகப் போய்விட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை ஒருதலைப்பட்சமானது என்று முரளி மனோகர் ஜோஷிக்கு காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

வரைவு அறிக்கை வெளியானதும் இந்தக் குழுவில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்களான கே.எஸ்.ராவ், சைபுதீன் சோஸ், நவீன் ஜிண்டால், திருச்சி சிவா ஆகியோர் நிருபர்களி்டம் பேசுகையில்,

பாஜகவின் அரசியல் ஆதாயத்துக்காக முரளி மனோகர் ஜோஷி, அவசர அவசரமாக இந்த அறிக்கையைத் தயார் செய்திருக்கிறார். இந்த அறிக்கையை பிஏசியின் கூட்டத்தில் ஏற்கவிட மாட்டோம். கூட்டத்துக்கு ஒருவாரம் முன்பே தங்களுக்கு வரைவு அறிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வியாழக்கிழமை (இன்று) இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், புதன்கிழமைதான் நகல்கள் வழங்கப்பட்டன.

அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க வேண்டும் என்கிற தவறான உள்நோக்கம் குழுவின் தலைவராக இருக்கும் முரளி மனோகர் ஜோஷிக்கு உள்ளது. இதனால் முரளி மனோகர் ஜோஷி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றனர்.

பொதுகணக்கு குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.ராவ் கூறுகையில், அறிக்கையில் பல விஷயங்கள் தவறானவை, தீய எண்ணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.

மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், பொதுகணக்கு குழு அறிக்கை முறைப்படி வெளியிடுவதற்கு முன்பே சில செய்தி நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது. இது எப்படி வெளியானது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இந்த அறிக்கை குறித்து இன்னொரு மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகையில், இது பொதுக்கணக்கு குழுவின் அறிக்கை அல்ல, பாஜகவின் அறிக்கை. முரளி மனோகர் ஜோஷி பொதுக்கணக்கு குழுவின் தலைவராக அல்லாமல், பாஜக உறுப்பினர் போல் செயல்படுகிறார் என்றார்.

இந் நிலையில் இன்று இந்தக் குழுவின் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் கடும் மோதல் நடக்கும் என்று தெரிகிறது. 21 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் இந்த அறிக்கை ஏற்கப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது.

இந்த அறிக்கை ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும்.

ஸ்பெக்ட்ரம்: 5 செல்போன் நிறுவனங்களின் ரூ.10,000 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க பிரிவு நடவடிக்கை.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரூ. 10,000 கோடி சொத்துக்கள் விரைவில் முடக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், அந்த நிறுவனங்கள் எவை என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றன.

அமலாக்கப் பிரிவு நடத்திய விசாரணைகள் குறித்த லேட்டஸ்ட் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவு சார்பில் அதன் வழக்கறிஞர் வேணுகோபால் இந்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்ட 5 செல்போன் நிறுவனங்கள் பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளன. இதன்மூலம் ஒவ்வொரு நிறுவனமும் தலா ரூ. 2,000 கோடி அளவுக்கு முறைகேடாக லாபம் அடைந்துள்ளன. இதில் முதல் கட்டமாக 2 நிறுவனங்களின் தலா ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை (மொத்தம் ரூ. 4,000 கோடி) முடக்க உள்ளோம் என்றார்.

இந்த சொத்துக்களில் அசையும், அசையா சொத்துக்கள் அடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் அமலாக்கப் பிரிவு சொத்துக்களை முடக்கவுள்ள அந்த 5 நிறுவனங்கள் எவை எவை என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த நடவடிக்கை மூலம் ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அந்ததந்த நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையை அமலாக்கப் பிரிவினர் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த நிறுவனங்கள் குற்றம் செய்ததாக நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய பின்னரே அந்த சொத்துக்களை அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ள 5 நிறுவனங்களில் தலா ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டால் அரசுக்கு ரூ. 10,000 கோடி திரும்பி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அமலாக்கப் பிரிவினர் சொத்துக்களை முடக்கவுள்ள முதல் இரண்டு நிறுவனங்கள், யுனினார் செல்போன் நிறுவனத்தை நடத்தி வரும் 'யுனிடெக் வயர்லெஸ்' மற்றும் ஷாகித் உசேன் பல்வாவின் 'ஸ்வான் டெலிகாம்' என்று தெரிகிறது.

இதில் யுனிடெக் நிறுவனம் ரூ.2,480 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ரூ.138 கோடி மட்டும் தந்து அடிமாட்டு விலைக்கு வாங்கியது.

இந்த இரு நிறுவனங்கள் தவிர, சொத்துக்கள் முடக்கப்படவுள்ள பிற நிறுவனங்கள், லூப்டெலிகாம், லூப் மொபைல், எஸ்.டெல் ஆகியவை என்று தெரிகிறது.

இந் நிலையில் தொழில் தரகர் நீரா ராடியா தனது சகோதரி தனது பெயரில் விர்ஜின் தீவில் உள்ள வங்கிகளில் பல்லாயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதையும் அமலாக்கப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதற்காக அந்த நாட்டில் 5 நிறுவனங்களை ஆரம்பித்துள்ளார் ராடியா.

2ஜி முறைகேடு : ' மெளனச் சாமி ' மன்மோகன் - உண்மைகளை மறைத்த ராசா - ப.சிதம்பரத்தின் அலட்சியம் ! - பிஏசி குற்றச்சாட்டு.


ஆ.ராசா நியாயமற்ற முறையில் சட்ட விரோதமாக தனது விருப்பம் போல் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்ய பிரதமர் பச்சைக் கொடி காட்டியதாகவே தெரிகிறது என்று நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தனது வரைவு அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக்கணக்கு குழுவின் விசாரணை வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் முறையான ஆலோசனைகளை வழங்க வில்லை. தவறு நடக்க இருப்பதை பிரதமர் அலுவலகம் முன்கூட்டியே அறிந்து சொல்ல தவறி விட்டதாகவும், அமைதியாக இருந்து நடந்த தவறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் கருத வேண்டி உள்ளது.

அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த சில பிரச்சனைகள் குறித்த தனது உண்மையான கவலைகளையும், அதே சமயத்தில் கண்டிப்பான சில ஆலோசனைகளையும் தெரிவித்து 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தை தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா அலட்சியப்படுத்திவிட்டார்.

உண்மைகளை மறைத்த ராசா:

ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப் பட்டதாகவும், ஆனால் அப்படி ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது பற்றி தொலைத் தொடர்பு கமிஷனோ அல்லது தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமோ சிபாரிசு செய்யவில்லை என்றும் பிரதமருக்கு ஆ.ராசா தகவல் தெரிவித்ததன் மூலம் அவர் பாதி உண்மையை தெரிவித்து பாதி உண்மையை மறைத்திருக்கிறார். தனது நோக்கத்தை அவர் மறைத்து விட்டார். இதன் மூலம் அவர் பிரதமரை தவறாக வழி நடத்தி இருக்கிறார்.

இந்தப் பிரச்சனையில் பிரதமர் அலுவலகம் தலையிடுவது இல்லை என்று பிரதமர் அலுவலகம் முடிவு செய்ததன் மூலம் ஆ.ராசா நியாயமற்ற முறையில் சட்ட விரோதமாக தனது விருப்பம் போல் அலைவரிசையை ஒதுக்கீடு செய்ய பிரதமர் பச்சைக்கொடி காட்டியதாகவே தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பற்றி முடிவு செய்வதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை அமைக்குமாறு சட்ட அமைச்சர் யோசனை தெரிவித்ததை பிரதமர் அலுவலகம் அறிந்திருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அப்படி குழு அமைப்பதை ராசா விரும்பவில்லை. இதனால்தான் அந்தக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் அலுவலகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மொத்தத்தில் பிரதமர் அலுவலகம் முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த தவறி, வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய குறிப்பில், அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான கொள்கையை மாற்றி அமைப்பது பற்றியும், புதிய வரைமுறைகளை வகுத்து அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர், ராசாவுக்கு தவறான யோசனை எதுவும் வழங்கவில்லை என்று தெரிகிறது.

ஆனால் ராசா சில உண்மைகளை மறைத்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பற்றாக்குறை காரணமாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறும் கடைசி தேதியை 2007ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி என்று நிர்ணயித்ததாக பிரதமருக்கு கடிதம் எழுதிய ராசா, மற்றொரு சந்தர்ப்பத்தில் சில புதிய நிறுவனங்களுக்கு போதிய அலைவரிசை ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ப.சிதம்பரத்தின் அலட்சியம்:

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த சில தகவல்கள் மிகவும் துரதிருஷ்ட மானவை என்று பொதுக்கணக்கு குழு கருதுகிறது.

அரசு கஜானாவுக்கு பணத்தை கொண்டு வந்து அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் நிதியமைச்சர். அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டிய இடத்தில் இருந்த ப.சிதம்பரம், இது முடிந்து போன பிரச்சனை என்று விட்டு விடுமாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசு கஜானாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது அம்பலத்துக்கு வந்த பிறகு கூட பொருளாதார விவகார துறையின் செயலாளர் இந்த பிரச்சனையை மத்திய கேபினட் செயலாளரின் கவனத்துக்கோ அல்லது நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கோ கொண்டு செல்லத் தவறி விட்டார். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் பொதுக் கணக்கு குழு விசாரணை நடத்திய போது அவர்களில் சிலர் பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தனர். சிலர் இந்த பிரச்சனையை முடிந்த விவகாரமாக கருதி மறந்து விடுமாறு கேட்டுக்கொண்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கைக்கு திமுக, காங்கிரஸ் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பொதுக்கணக்கு குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் இந்த அறிக்கை குறித்து கடும் மோதல் நடக்கும் என்று தெரிகிறது.

21உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் உள்ளனர்.

தமிழர்கள் மீது பற்று இருப்பதை இந்தியா நிரூபிக்க வேண்டிய நேரம் இது! - விஜயகாந்த்.

ஐ.நா. சபையின் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதன் மூலம் தமிழர்கள் மீது பற்று இருக்கிறது என்பதை இந்தியா நிரூபித்து காட்ட வேண்டும்; விஜயகாந்த் அறிக்கை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள அதிபர் ராஜபக்சேயையும், அவரது ராணுவமும் போர் குற்றம் புரிந்தவர்களாக வழக்கு தொடுக்க வேண்டி ஐ.நா.சபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்போதே ஆதரவளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆயுதம் தாங்காத சாதாரண பொது மக்கள் மீது சிங்கள ராணுவம் வெடிகுண்டுகள் வீசிக் கொன்றது எனவும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள் போன்ற பொதுமக்கள் கூடியுள்ள இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன எனவும், காயமுற்றோருக்கு மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டன என்றும், உள்நாட்டில் அகதிகளாக உள்ள தமிழர்களும், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற சந்தேகத்திற்குரியவர்களும் கொடுமைப்படுத்தப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன எனவும், ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தந்துள்ளது.

இலங்கை அரசு எவ்வளவோ முயற்சித்தும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க முடியவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன் அவர்கள் இந்த போர்க் குற்றம் பற்றி சர்வதேச குற்ற விசாரணை மன்றத்திற்கு உறுப்பு நாடுகள் அல்லது ஐ.நா. பாதுகாப்பு குழுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். இலங்கையில் தமிழினப்படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம்.

தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் மகிந்தா ராஜபக்சே போர்க் குற்றவாளி என்றும் ஐ.நா. மன்றமே அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சிங்கள அரசின் இனவெறி அதிபர் ராஜபக்சேயையும், அதன் ராணுவத்தையும் போர்க் குற்றம் புரிந்தவர்களாக வழக்குத் தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவளித்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை இந்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்தியாவிலேயே அதன் ஒரு பகுதியாகி உள்ள தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.

இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மே தின நன்னாளை தே.மு.தி.க.வும், அதனைச் சார்ந்த தொழிற்சங்கப் பேரவையும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு தேர்தல் காலம் ஆதலால், மே தின விழாவை கொண்டாட நமது இயக்கத் தோழர்கள் அரசாங்க அதிகாரிகளை அணுகி முறையான அனுமதி பெற்று கொண்டாட வேண்டும். நமது தோழர்கள் எந்தெந்த பகுதியில் எத்தகைய விழாக்களை எடுக்க வேண்டுமோ, அதற்கான அனுமதியை முன்கூட்டியே முறையாக அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற்று நடத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன். மே மாதம் முதல் தேதியில் இருந்து மே மாதம் 8-ம் தேதி வரை மே தின விழாவை கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதல் : மேலும் 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பு - அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிகை.

மும்பை தாக்குதல்: மேலும் 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பு- அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிகை

மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்து கொடுத்த டேவிட் ஹேட்லி, தவூர் ராணா ஆகிய தீவிரவாதிகளை அமெரிக்க போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.

இதில் தவூர் ராணா மீதான வழக்கில் அமெரிக்க போலீசார் சிகாகோ கோர்ட் டில் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்தனர். அதில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சாஜித்மிர், அபுகுபா, மசார் இக்பால், மேஜர் இக்பால் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மும்பை தாக்குதல் தொடர் பான திட்டங்கள் அனைத் தையும் மேஜர் இக்பால்தான் வகுத்து கொடுத் தார். அபுகுவா தொழில்நுட்ப பயிற்சி அளித்தார். டேவிட் ஹேட்லி இவர்கள் அனை வரையும் மேற்பார்வை செய்தார் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.

தகவல் இல்லை இந்த 4 தீவிரவாதிகளும் தற்போது எங்கு இருக் கிறார்கள். அவர்களை அமெரிக்க போலீசோ அல்லது மற்றவர்களோ கைது செய்து இருக்கிறார்களா? போன்ற எந்த விவரங்களும் அதில் குறிப்பிடப்படவில்லை.

தாவூர்ராணா கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த 4 பேர் பற்றிய விவரங் களையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.

பொழுதுபோக்கு பூங்காவில் கணவன் கண் எதிரே மனைவி கற்பழிப்பு ; 7 பேர் கும்பல் அட்டகாசம்.

பொழுதுபோக்கு பூங்காவில் கணவன் கண் எதிரே  மனைவி கற்பழிப்பு;  7 பேர் கும்பல் அட்டகாசம்

மேற்கு வங்காள மாநிலம் புருலியாவைச் சேர்ந்தவர் ஷேக்அலி. இவரது மனைவி ஷப்னம் (30). இவர்கள் இருவரும் ஜார் கண்ட் மாநிலம் ஜாம்ஷெட் பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். ஜாம்ஷெட்பூரில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது.

இதை சுற்றி பார்க்க இருவரும் சென்றிருந்தனர். பூங்காவின் ஒதுக்குபுற பகுதி ஒன்றை அவர்கள் சுற்றி பார்த்து கொண்டிருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. ஷேக்அலியை தாக்கி விட்டு ஷப்னத்தை மறைவான இடத்துக்கு தூக்கி சென்றனர். கணவர் கண் எதிரே ஷப்னத்தை 7 பேரும் மாறி மாறி கற்பழித்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது பற்றி போலீசில் புகார் தெரிவித்தால் இருவரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். ஆனாலும் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். ஷப்னத்தை போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மேலும் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மற்றவர்களை தேடி வருகின்றனர்.

போலீஸ் பயிற்சி பள்ளியில் 11 பெண் போலீசாரை கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர் வீடியோ படம் எடுத்து மிரட்டினார்.

போலீஸ் பயிற்சி பள்ளியில்  11 பெண் போலீசாரை  கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர்  வீடியோ படம் எடுத்து மிரட்டினார்

மராட்டிய மாநிலம் கொல்காபூரில் போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு புதிதாக தேர்வு பெற்ற 70 பெண் போலீசார் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அனைவருமே திருமணம் ஆகாதவர்கள். அவர்களுக்கு பயிற்சி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதனால் அனைத்து பெண் போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 11 பெண் போலீசார் கர்ப்பமாக இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் காம்ளி வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக கூறினார்கள். யுவராஜ்காம்ளியின் வீடு போலீஸ் பயிற்சி பள்ளி அருகே உள்ளது. தினமும் பெண் போலீசாரை வர வழைத்து அவர்களிடம் உறவு வைத்துள்ளார். ஆசைக்கு இணங்குபவர்களை மட்டுமே பயிற்சியில் வெற்றி பெற்றதாக அறிவிப்பேன் என மிரட்டி அனைவரையும் அவர் கற்பழித்து வந்துள்ளார்.

மேலும் அவர்களோடு உல்லாசமாக இருந்ததை வீடியோ படமும் எடுத்துள்ளார். இங்கு நடந்ததை வெளியே சொன்னால் வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். கர்ப்பமான போலீசார் மட்டும் அல்லாமல் மேலும் ஏராளமான பெண் போலீசாரையும் அவர் கற்பழித்து இருப்பதாக தெரிகிறது.

இதையடுத்து யுவராஜ் காம்ளியை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் இதுபற்றி கூறும் போது நான் பெண் போலீஸ் யாரையும் கற்பழிக்க வில்லை. எனது உயர் அதிகாரிகள் தான் கற்பழித்து கர்ப்பமாக்கிவிட்டு என் மீது பழி போட்டு விட்டனர் என்று கூறினார்.

இந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுபற்றி விசாரணை நடத்த உள்துறை மந்திரி ஆர்.ஆர். பட்டீல் உத்தரவிட்டு உள்ளார். எதிர்கட்சியினர் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

மும்பை - உலகின் கடைசி டைப் ரைட்டர் தொழிற்சாலை மூடப்பட்டது.

மும்பையில் செயல்பட்டு வந்த உலகின் கடைசி டைப் ரைட்டர்  தொழிற்சாலை மூடப்பட்டது;  கம்ப்யூட்டர் பயன்பாட்டால் விற்பனை இல்லை

கடந்த காலங்களில் அலுவலக பணிகளில் டைப் ரைட்டர் முக்கிய பங்கு வகித்தது. இப்போது அந்த இடத்தை கம்ப்யூட்டர்கள் பிடித்து விட்டன. இதனால் டைப்ரைட்டர் தேவை குறைந்து போனது. உலகில் பல நாடுகளில் டைப்ரைட்டர் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.

ரைப்டைட்டரை வாங்க ஆள் இல்லாமல் போனதால் அந்த தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டன. கடைசியாக உலகிலேயே மும்பையில் மட்டும் ஒரே ஒரு டைப்ரைட்டர் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. கோத்ரேஜ் மற்றும் போய்சி நிறுவனம் மூலம் இந்த தொழிற்சாலை நடத்தப்பட்டு வந்தது. டைப் ரைட்டர் விற்பனை ஆகாததால் இப்போது தொழிற் சாலையை மூடி விட்டனர். கடைசியாக 500 டைப் ரைட்டரை மட்டும் உற்பத்தி செய்து விட்டு மூடி விட்டார்கள். இந்த தொழிற்சாலை 1900-ம் ஆண்டு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சமாதியின் மேல் பகுதியில் சாய்பாபாவுக்கு தங்கச் சிலை ; தரிசனத்திற்கு அலைமோதிய கூட்டம்.

சமாதியின் மேல் பகுதியில்  சாய்பாபாவுக்கு  தங்க சிலை;  சமாதி தரிசனத்திற்கு  அலைமோதிய கூட்டம்

உலக மக்களின் உள்ளம் கவர்ந்த சாய்பாபாவின் உடல் அடக்கம் இன்று புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது. பண் டிதர்கள் வேதங்கள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு இருந்த அனைவரும் “பாபா” என்ற படி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சாய்பாபா உடலை அடக்கம் செய்வதை பெண்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக சுற்றிலும் பெரிய திரை போட்டு மூடி இருந்தனர். அடக்கத்திற்கு பிறகு திரை விலக்கப்பட்டது. சாய்பாபா அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் தங்கசிலை வைக்க வேண்டும் என்று ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஏற்று அவரது சமாதியின் மேல் பகுதியில் சாய்பாபாவின் தங்க சிலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு நிதி தர ஏராளமான தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு சமாதி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் விடிய விடிய வரிசையில் காத்திருந்தனர். அவர்களும் இன்று சமாதி தரிசனம் செய்தனர். இதற்காக பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது.

சில இடங்களில் பக்தர்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்ற அதிரடி படையினர் லேசான தடியடி நடத்தி பக்தர்கள் வரிசையாக செல்ல வழிவகை செய்தனர். பக்தர்கள் 2 நாட்கள் சாய் பாபா சமாதியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

முன்கூட்டியே சவப்பெட்டி: சாய்பாபா சாவில் மர்மம்.

முன்கூட்டியே சவப்பெட்டி: சாய்பாபா சாவில் மர்மம்

கடந்த 24 ம் தேதி சாய்பாபா மரணம் அடைந்தார்.ஆனால் அவரது உடல் வைக்க பயன்படுத்திய குளிர் சாதன பெட்டி ஏப்ரல் 5-ல் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 20 நாட்கள் முன்னதாக வாங்கப்பட்டது.

இந்த சவப் பெட்டி குமார் அன் கோ நிறுவனம் வழங்கியுள்ளது. ராஜு என்பவர் ரூ 1,07,000 கொடுத்து வாங்கியதும் தெரியவந்துள்ளது.

அசன்அலி பாஸ்போர்ட் விவகாரம் : கவர்னர் பதவி விலக கோரி புதுவையில் முழு அடைப்பு .

அசன்அலிக்கு பாஸ்போர்ட் விவகாரம்:  கவர்னர் பதவி விலக கோரி  புதுவையில்  முழு அடைப்பு;  தனியார் பஸ்கள் ஓடவில்லை; கடைகள் அடைப்பு

குதிரைப்பண்ணை அதிபர் அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க புதுவை கவர்னர் இக்பால்சிங் சிபாரிசு செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கவர்னர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் புதுவை கவர்னர் இக்பால்சிங் மீது மேலும் 2 புதிய புகார்கள் எழுந்தது.

மகன்களை உறுப்பினராக கொண்ட சவுத் எஜூகேசனல் டிரஸ்ட்டுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று கொடுத்தார் என்றும், புதுவையில் சொற்ப எண்ணிக்கையில் வசிக்கும் சீக்கிய மதத்தினருக்கு குருத் வாரா கட்ட அரசு நிலம் ஒதுக்கினார் என்றும் புகார் கூறப்பட்டது.

இது எதிர்க்கட்சிகளின் குரலை மேலும் வலுவடைய செய்தது. கவர்னரை பதவி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா, மார்க்சிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு (பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. இதனால் அதிகாலையில் இருந்தே தனியார் பஸ்கள் ஓடவில்லை.

தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடியது. புதுவை எல்லையில் இருந்து தமிழக அரசு பஸ்கள் பஸ் நிலையம் வரை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டன. பின்னர், மீண்டும் எல்லை வரை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. பந்த் போராட்டத்தையொட்டி புதுவையில் பெரும் பாலான டெம்போக்களும், ஆட்டோக்களும் ஓட வில்லை. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

கோடை விடுமுறை என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிந்தது. ஒரு சில தனியார் கல்லூரிகள் மட்டும் இயங்கின. கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியுற்றனர். நகரம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சின்ன மார்க்கெட், பெரிய மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவை இயங்க வில்லை. பஸ் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : அமலாக்கப் பிரிவு.

2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் :அமலாக்கப் பிரிவு


அமலாக்கப் பிரிவு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின் போது கூறிய செய்தியில் 2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், 2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின், 2ஜி ஊழலில் பெற்ற நாலாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் அமலாக்கப் பிரிவு 2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் பெயரை வெளிபடுத்தாமல் தகவல் அடங்கிய முத்திரை இடப்பட்ட உறையை வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளிடம் அளித்தது.

ஸ்பெகட்ரம் வழக்கு சட்டப்படி சந்திப்போம் : கனிமொழி எம்.பி. பேட்டி.

ஸ்பெகட்ரம் வழக்கு சட்டப்படி சந்திப்போம்; கனிமொழி எம்.பி. பேட்டி

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த கனிமொழி எம்.பி.யை நிருபர்கள் பேட்டி கண்டனர்.

அப்போது ஒரு நிருபர் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான குற்றப் பத்திரிக்கையில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதே? இது குறித்து என்ன கருத்து சொல்கிறீர்கள் என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கனிமொழி, வழக்கு கோர்ட்டில் உள்ளது, அதை சட்டப்படி சந்திப்போம் என்று கூறினார்.