Tuesday, March 29, 2011

விஜயகாந்துக்கு உங்களது ஓட்டா ? - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்


ராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்றி அதற்கு தப்பிப் போகும் சில ஆடுகளை குலையறுக்க இந்த சாதிகளின் தாய்மார்கள் கூட அஞ்ச மாட்டார்கள் என்பது நாடறிந்த செய்தி. இந்த சாதியில்தான் கன்னியாக மாண்டு சிறுதெய்வமான சாமிகள் அதிகம் என்பதுவே அச்சாதியின் பெண்ணடிமைத்தனத்திற்கு தக்க சான்றாகும். தங்கள் வீட்டுக் காவலுக்கு பயன்படுத்தும் நாயைக் கூட மற்ற சாதியினர் வளர்க்கும் நாயுடன் பழக அனுமதிக்காத ஆதிக்க சாதிகளில் ஒன்றுதான் கம்பளத்தவர்.

தமிழகத்தை 14 முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஆண்ட பரம்பரை இது. தெலுங்கு பேசும் வைகோ வின் கம்பா நாயக்கர்கள் அன்று அவர்களிடமும் அதற்கு முன் குப்த பேரர‍சிலும் படை வீரர்களாக இருந்தவர்கள். நாயக்க ஆட்சியில் உருவான 72 பாளையப்பட்டுகளில் கூட கம்பளத்தவர்கள்தான் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர். திருடர்களாக கள்ளர் போன்ற சில சாதிகள் இருந்துவந்த காலத்தில் இத்தகைய ஆண்டைகளின் சாதி அவசியமாக இருந்தது. இன்றோ மதுரை திருமலை நாயக்கர் மகாலில் பருந்துகளின் எச்சம் வெளிப்புறமும் உட்புறமாக புறாக்களின் மாடக் கூண்டுகளும் புதிதாக முளைத்துள்ளன•

கால மாற்றத்தை கையிலெடுத்த வைகோவின் சாதி நாயக்கர்கள் பிரிட்டிஷாரின் நூற்பு ஆலைகளுக்குத் தேவையான பருத்தியை விளைவிக்க தக்காண பீடபூமியை பயன்படுத்திக் கொண்டார்கள். அதன்வழியாக அவர்களில் உயர்வர்க்கமாக இருந்தவர்கள் வெள்ளையனின் பாளையப்பட்டு ஒழிப்பிற்குப் பிறகு ஜமீன்தார்களாக சில இடங்களில் தங்களைத் தாங்களே அறிவித்தும் கொண்டனர். இந்த உயர்குடியாக்கத்தை நீங்கள் வரலாறு முழுதும் காண முடியும்.

ஆனால் கம்பளத்த நாயக்கர்களைக் கண்டு இன்று ஆதிக்க சாதிகளாக மதுரைப் பகுதியில் கோலோச்சும் முக்கலத்தோரே அஞ்சுகிறார்கள். கள்ளன் பெரியவனா காப்பான் பெரியவனா என்று கேட்ட மக்கள் காப்பானே பெரியவன் என்று சொல்ல வைத்த தகிடுதத்தங்களால் நிரம்பியதுதான் நாயக்கர் ஆட்சியின் சிறப்பு. அவர்களது ஏவலாட்களாக அன்று வேலை செய்தவர்கள்தான் தேவர் சாதியினர். இன்று விஜயகாந்த் ம் அவர்களது ஆண்டைகளின் பிரதிநிதிதான். பாண்டியன்கள் நாயக்கர் விஜயகாந்த் இடம் மண்டியிட்டுத்தான் பேச வேண்டியிருக்கும். அந்த சாதி திமிரின் அங்கமாகவே வைகோ வெளியேற்றப்பட்டதும் நடந்துள்ளதாக புரிந்துகொள்ளக் கூடாது. அது சமூக விடுதலையை மாத்திரம் விரும்புவோரது அரசியல்.

சாதிப் பெருமை பேசும் கம்பளத்த நாயக்கர் சமூகத்தில் பிறந்த விஜயகாந்த் தனது தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்கு பலவற்றை வாரி வழங்கினாலும், தனது சொந்த சாதியின் இறுக்கமான கட்டுமானத்தை நெகிழ வைக்க கூட முயல்வதாக மறந்தும் சொல்லவில்லை. அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள சிபிஎம் மதுரைப் பகுதியில்தான் அதிகமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியை கட்டியுள்ளது. அதற்காக மாற்று அணியில் திமுக ஒன்றும் குறைந்த சாதிய கூட்டணி என்று நினைத்து விடாதீர்கள். வன்னியர்களின் பாமக தான் அங்கு வட மாவட்ட ஆதரவு கூட்டணி. ஆனால் இருவருமே தங்களுக்குள் பிரச்சினை போலத்தான் தேர்தலை பார்க்கிறார்கள். ஆதிக்க சாதிகளின் இருவரது சாதிகளுமே தாழ்த்தப்பட்டவர்களை பல இடங்களில் அகமண முறையை மீறியதற்காக கொன்று போட்ட சாதிதான். அதனை விமர்சிப்பது என்பதே இருவருக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

மாறாக இவங்க போராடி மரத்த வெட்டிப் போட்டுவிட்டு இப்போ மரம் வளர்க்கிறார்களாம் என்கிறார் விஜயகாந்த். பதிலுக்கு அவர் இன்னமும் எல்கேஜியே அரசியல்ல படிக்கல என்கிறார். நான் எம்ஜிஆர் கட்சியோடதான் கூட்டணி என்கிறார் கடவுளோடும் மக்களோடும் போனமுறை கூட்டணி போட்ட விஜயகாந்த். தேர்தல் வரைதான் கூட்டணி என தெளிவுபடுத்துகிறார் ராமதாசு. செத்தாலும் வாழ்ந்தாலும் உன்னோடுதான் என்று திமுக விடம் காதலாய் கசிந்துருகிறது விடுதலைச் சிறுத்தைகள்.

அந்தப் பக்கம் தலித் மக்களுக்காக மாமியுடன் சேர்ந்திருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. கவுண்டர் சாதி கட்சியினர் இரண்டு அணிகளிலும் உள்ளனர். தேவர் கட்சியும் இருபுறமும் உள்ளது. வன்னியர் சங்கமும் இருபுறமும் உள்ளது. இதில் ஒருபுறம்தான் ராஜ கம்பளத்தார் மற்றும் கம்மவா நாயுடு போன்ற அடிமைகள் எல்லோரும் அணிவகுத்து நிற்கிறார்கள். ஐரோப்பிய பாணி நாடாளுமன்றங்களில் சித்தாந்த அல்லது வர்க்க அடிப்படையில் கட்சிகள் அமைந்திருப்பதை பார்த்த பிறகும் சூடுபோட்டுக் கொண்ட பூனை தன்னை புலி போல தின்று கொழுத்த உடம்பை தன் கண்ணாடியில் தானே பார்த்து முடிவு கட்டுவது போல ஜனநாயக நாடு பெரிய ஜனநாயகம் என்றெல்லாம் பூசை செய்யத் துவங்குகிறார்கள்.

அம்பேத்கர் இதன் மீது கல்லெறிய முயன்றார். தனது 1932 ஜனவரி 20 முதல் 26 வரையிலான உண்ணாவிரதம் மூலம் இவற்றுக்கு பாடை கட்டினான் தேசப்பிதா காந்தி. அன்று காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாத்திரம் துரோகம் செய்யவில்லை. இந்திய ஜனநாயகத்திற்கும் துரோகம் செய்தான். இதனைப் பற்றி நாளை அல்லது அதற்கடுத்த நாளில் எழுத முயல்கிறேன். இதனைக் கேட்ட பிறகு அதற்காகவும் காங்கிரசை ஒழிக்க நினைக்கிறோம் என ஈழ ஆதரவாளர்கள் சிலர் பேசக் கூடும். அந்த உங்களது விவாத முறைதான் காந்தியின் லாபம். உங்கள் வாயிலிருந்தே ஜனநாயக ஒழிப்பைத் துவக்கி வைக்க முடியும் என்பதை நீங்களே அறியாமல் பின்பற்றும் காந்தீயம் உங்களுக்குள் விதைக்கத் துவங்கியிருக்கும்.

காந்தி இந்திய அரசியல் டால்ஸ்டாய் போல சிலர் கருதும் சூழலும், காங்கிரசை ஒழிப்பது முக்கியம் என்ற கருத்தும் நிலவும் இக்காலத்தில் இவற்றை ஆராய அடுத்த சில பதிவுகளை பயன்படுத்தவுள்ளேன். அந்தப் பதிவுகளின் ஊடாக இந்திய இந்துமத ஆதிக்கசாதியில் பிறந்த விஜயகாந்த் தமிழகத்தில் நின்று கொண்டு திராவிட இயக்கம் என்ற பெயரில் நடத்தும் இந்த தேர்தல் பங்குபற்றுதலைப் புரிந்துகொள்ளவும் இயலும். இதனைத் தெரிந்துகொண்டால்தான் விஜயகாந்த் வர்ணம் பற்றி அடித்த கமாண்டையும் அவனது தற்குறித்தனத்தையும் இந்து ஆதிக்கசாதியின் தற்குறித்தனத்தையும் கொஞ்சம் சுரண்டி முகர்ந்து பார்க்க முடியும்.

நன்றி - powrnamy.blogspot.com

10 comments:

sammil said...


விஜயகாந்தை துரத்திய அண்ணாவின் ஆவி!

Anonymous said...

அது சரி அண்ணாச்சி..

தற்போதைய சங்கதியான 2G Spectrum பத்தி நீங்க ஒன்னுமே பேசலையே..

நீங்க சொல்றபடி பாத்தா நாமெல்லாமே குரங்கிலிருந்துதானே வந்திருக்கிறோம்..கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாங்க அண்ணாச்சி..

இக்பால் செல்வன் said...

விஜயகாந்து போன்றோர் தமிழக அரசியலின் கரும்புள்ளிகள் !!! சிந்திக்கத் தூண்டிய பதிவு !!!

நிலவு said...

இணைத்தமைக்கு நன்றி
அன்புடன்
நிலவு

கோவை நேரம் said...

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஜாதி மனப்பான்மை மிகவும் குறைவாக இருக்கிறது .ஜாதிகளின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம் ..ஒரு சில அரசியல் வாதிகள் தங்களின் சுய நலத்துக்காக மக்களிடையே துவேசத்தை பரப்பி ஆதாயம் பார்க்கின்றனர் ..நம் தமிழ்நாட்டில் உள்ள பெயர்களை கேட்டு பாருங்கள் ஏதாவது ஜாதி அடையாளம் இருக்கிறதா என்று ?இதே கர்நாடகம் , குஜராத், பஞ்சாப் போன்ற மற்ற அனைத்து மாநிலங்களிலும் பெயருக்கு பின்னால் கண்டிப்பா இருக்கும்.

நிலா said...

ஜாதிய பத்தி பேச ................................!
போங்க சார்.
எழுத்தாளர்கள் கூட இது போல ..........!

bpb said...

kadantha kalatha vitutu nigal kalathuku vanga sir...entha ulagathula irukeenga...

uma said...

டேய் , நாங்க ராஜ கம்பளம் டா .. எங்கள எதிர்தவனோட வம்சத்தையே அழிகுற ஜாதி எங்களது .. வீனா எங்க கிட்ட மோதத .. வடிவேலு எந்த ஜாதினே தெரியல .. கண்டிப்பா பள்ளனோ பறையனாவோ தான் இருப்பான் ... அவன் இனிமேல் செத்தாண்டி ... நாங்க மஜோரிட்டி யா இருக்குற எடத்துல வந்து பேசி பாரு .. கை குழந்தை கூட கருவறுக்கும் .... விஜயகாந்த் , வைகோ , இவங்க தான் டா .. நாளைய முதல்வர்கள் .. எல்லா இனமும் வாழனும் .. கம்பளத்து மறவனே ஆளனும்.. நாயக்கர் புகழ் வாழ்க ...

sundar said...

super uma........

Muna Dave said...

சாதி அமைப்பு முற்றிலும் இந்தியாவில் ஒழிக்க வேண்டும். இது எல்லா தீயசக்திகளையும் மூல காரணமாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி சில ஆழமான கருத்துக்களை பாருங்கள் வைத்திருக்கவும்
http://bit.ly/n9GwsR