பரிவர்த்தனாசனம்.
செய்முறை:
வலது, இடது கால்களை முன்பின்னாக சுமார் 3 அடி இடைவெளியில் நேர்க்கோட்டில் நிறுத்துங்கள். இரண்டு கைகளும் படத்தில் இருப்பது போல, தலைக்கு மேல் கோர்த்திருக்கட்டும். இடுப்பை மட்டும் வலப்பக்கம் திருப்பி பின்பக்கம் பார்க்கவும்.
அடுத்தபடியாக, கால்களை மாற்றி இடப்பக்கம் திருப்பி, பின்பக்கம் பார்க்கவும். ஒரு முறை வலம், இடம் செய்தால் ஆசனம் பூர்த்தியாகி விடும். இப்படியாக-இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள் இருந்து ஆசனத்தை முடியுங்கள்.
பயன்கள்:
இடுப்பு, அடிவயிற்று தசைகள் பலம் பெறும். மல-ஜல உறுப்புகள், நன்கு இயங்கும். மாதர்களுக்கு மாதவிடாய், கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். பக்கவாதம், இளம்பிள்ளை வாதம் குணமாகும். தொடை சதை குறையும். ஈசனோபீலியா, சயம், ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்கள் நீங்கும்.
பிறையாசனம்.
செய்முறை:
இரண்டு காலையும் பக்கவாட்டில் 3 அடி தூரம் விரித்து வையுங்கள். இருகைகளும் முதுகில் இருக்கட்டும். தலையை அப்படியே பின்னால் சாய்த்து, பின்புற முழங்காலைத் தொடுங்கள். இயல்பான மூச்சில் 10 வினாடிகள் இருந்தபிறகு, மெதுவாக நிமிரவும்.
பயன்கள்:
சர்க்கரை நோய், தொந்தி, மூத்திரக்காய் கோளாறு, மலச்சிக்கல், இடுப்புவலி குணமாகும். பாதஹஸ்தாசனத்துக்கு மாற்று ஆசனமிது.
ஏகபாதாசனம்.
செய்முறை:
நேராக நிமிர்ந்து நில்லுங்கள். வலதுகாலை அப்படியே மடக்கி, இடதுபக்கத்தில் சேர்க்கவும். இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, உடம்பு சமநிலைக்கு வந்ததும், தலைக்கு மேல் கும்பிட்டநிலையில் நிலைநிறுத்திவிடுங்கள்.
உங்களின் பார்வை, நெற்றிக்கு நேராக உள்ள ஏதாவதொரு புள்ளியில் 15 விநாடிகள் ஒன்று குவியட்டும். கடைசியாக பழைய நிலைக்கு வந்து, இடதுகாலை மாற்றி, மறுபடியும் அதேபோல செய்யவும்.
பயன்கள் :
பக்கவாதம், மூட்டுவலி, கை-கால் வீக்கம் ஆகிய நோய்கள் நீங்கும். உடலின் வளர்சிதை மாற்றம், கழிவுப் பொருட்களின் வெளியேற்றம் சீராக இருக்கும். குண்டானோருக்கு மெலிந்த அழகு கிட்டும்.
No comments:
Post a Comment