Thursday, August 4, 2011

சமையல் கியாஸ் ரூ.642 - எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் சலுகை கிடையாது.



காங்கிரஸ் எம்.பி.அருண்குமார் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்துள்ள பரிந்துரையில், ரூ.6 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கக் கூடாது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் கூட மானிய விலையில் சிலிண்டர் கொடுக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் எண்ணை நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களை மானிய விலையில் கொடுத்து வருகின்றன. இதனால் ஒரு சிலிண்டருக்கு ரூ.247 இழப்பு ஏற்படுகிறது. இதனால் நடப்பாண்டில் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இந்த இழப்பை சரிகட்ட இனி, சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடம் விட்டு விட திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கூறி வருகிறார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.அருண்குமார் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை தாக்கல் செய்துள்ளது. அந்த பரிந்துரையில் ரூ.6 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கக் கூடாது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் கூட மானிய விலையில் சிலிண்டர் கொடுக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

பணக்காரர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் கொடுப்பதை நிறுத்தினால் நாட்டில் வறுமை கோர்ட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக கியாஸ் சிலிண்டர் கொடுக்க முடியும். இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று நிலைக்குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டால் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் மேல் உள்ளவர்கள் சமையல் கியாஸ் பெற சிலிண்டருக்கு ரூ.642 கொடுக்க வேண்டியதிருக்கும்.

தற்போது ஒரு சிலிண்டர் ரூ.395க் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொரு சிலிண்டருக்கும் சந்திக்கும் ரூ.247 இழப்பை சரிகட்ட முடியும்.

No comments: