Saturday, April 30, 2011

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தை கைவிட மறுப்பு.

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தை கைவிட மறுப்பு


ஏர் இந்தியா விமானிகள் வேலைநிறுத்தம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதனால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 320 விமானங்களில் 50 விமானங்கள் மட்டுமே இன்று இயக்கப்படுகிறது. இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் விமானிகள் உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு கூறியது. ஆனால் தங்கள் கோரிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுகப் போவதாக விமானிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே விமானிகள் வேலைநிறுத்தத்தால் இன்று முதல் 5 நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிக்கெட் முன்பதிவு மே 4-ந்தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி ஐகோர்ட்டு அறிவுறுத்தலின்படி இன்று மாலை 5 மணிக்குள் விமானிகள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் கெடு விதித்திருந்தது ஆனால் விமானிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்

இதனைதொடர்ந்து வேலை நிறுத்தத்தை கைவிடாத விமானிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று டெல்லி ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டது. ஆனால், தாங்கள் வேலை நிறுத்தத்தை கைவிடப்போவதில்லை என்றும், கோர்ட்டு தங்களுக்கு தண்டனை வழங்கினால் அதை ஏற்று சிறைக்கு செல்லவும் தயார் என்றும் விமானிகள் சங்க நிர்வாகிகள் இன்று மாலை அறிவித்தனர்.

No comments: