Saturday, April 30, 2011

அதிரவைக்கும் விலை உயர்வு : சவரன் ரூ 17000க்கு விற்பனையானது .


கோவையில் சவரன் விலை ரூ 17000க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை இன்றும் தாறுமாறாக உயர்ந்தது. பிற்பகலுக்குள் ஒரு சவரனுக்கு ரூ 320 உயர்ந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ந்துவிட்டனர்.

நேற்று தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரூ.15 ஆயிரத்தை தாண்டிய ஒரு பவுன் தங்கம் படிப்படியாக உயர்ந்து தற்போது 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சென்னையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.15 ஆயிரத்து 464-க்கு விற்றது. நேற்று ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்து 544 ஆக இருந்தது. இதன் மூலம் ஒரு மாதத்தில் பவுனுக்கு ரூ.1080 அதிகரித்தது.

இன்று மட்டும் ரூ 320...

இந்நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு மேலும் ரூ.320 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு பவுன், ரூ.16 ஆயிரத்து 864-க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் ரூ.2108 ஆக உள்ளது. ஒரு பவுன் ரு.17 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.

தங்கம் என்பது தமிழர் கலாச்சாரத்தின் அடையாளமாகிவிட்டதால், ஏழை மக்களே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வருகிற 8-ந்தேதி அட்சய திருதியை வருகிறது. மேலும் திருமண முகூர்த்த நாட்களும் வர உள்ளன. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் உயர்ந்து வருவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வு மற்றும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு போன்றவையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது போல இப்போது தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து உள்ளது. தனி நபர்கள் தவிர உலகம் முழுவதும் இருந்து பல நிதி நிறுவனங்கள் இவ்வாறு முதலீடு செய்து வருகின்றன.

ஆன்லைன் வர்த்தகம் நிறுத்தப்படுமா...

தங்கத்தை நேரடியாக வாங்குவது தவிர ஆன்லைன் வர்த்தகம் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வதும் இப்போது அதிகரித்து வருகிறது. இது போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே தங்கத்தை ஆன்லைனில் வாங்கி விற்க தடை விதிப்பது பற்றியும் யோசித்து வருகின்றனர்.

சேலத்தில் ரூ 416 உயர்வு:

சேலத்தில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 2068 ஆகவும், ஒரு பவுனின் விலை ரூ16 ஆயிரத்து 544 ஆகவும் இருந்தது. இன்று ஒரு கிராம் ரூ 2120ஆகவும், ஒரு பவுன் ரூ16 ஆயிரத்து 960 ஆகவும் விற்றது. ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு ரூ52-ம், பவுனுக்கு ரூ416-ம் உயர்ந்து உள்ளது.

கோவையில் சவரன் விலை ரூ 17000க்கு விற்பனையானது.

No comments: