Saturday, April 30, 2011

மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் ; ஏர் இந்தியா நிர்வாகம் விமானிகளுக்கு கெடு.

மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்;ஏர் இந்தியா நிர்வாகம் விமானிகளுக்கு கெடு.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள் ஊதிய உயர்வு, நிர்வாக குளறுபடிகளை சீர்செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் 320 விமானங்களில் 270 விமானங்கள் இயங்கவில்லை. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை தடைபட்டது.

இதனைத் தொடர்ந்து விமானிகள் உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு கூறியது. ஆனால் தங்கள் கோரிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுகப் போவதாக விமானிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

இன்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஏர் இந்தியா முன்பதிவு டிக்கெட் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் கெடு விடுவித்துள்ளது.

No comments: