Saturday, April 30, 2011

நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் : தபால் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்.

நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம்: தபால் ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

தபால் துறை நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, சென்னையில் உள்ள பொது தலைமை தபால் நிலைய (ஜி.பி.ஓ.) தபால் பட்டுவாடா ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாணவர்களின் ரிசல்ட், அனுமதி கடிதங்கள் மலைபோல் குவிந்துள்ளன.

சென்னை ராஜாஜி சாலையில் கடற்கரை ரெயில் நிலையத்துக்கு எதிரே பொது தபால் நிலையம் (ஜி.பி.ஓ.) செயல்படுகிறது. இது நூறு ஆண்டுகளுக்குமேல் தபால் சேவையில் ஈடுபட்டுள்ளது.

தற்போது, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், துறைமுகம், ரிசர்வ் வங்கி, வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட தபால் சேவை ஜி.பி.ஓ.வின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன.

இங்கு சாதாரண தபால், துரித தபால் (ஸ்பீடு போஸ்டு), பதிவுத்தபால், மணியார்டர் பட்டுவாடாவில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். கடந்த 26-ந் தேதி வரையில் தபால் பட்டுவாடாவில் எந்த தொய்வும் ஏற்படவில்லை.

28-ந் தேதியில் இருந்து பட்டுவாடா ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, ஜி.பி.ஓ.வில், தபால்கள், குறிப்பாக மாணவர்களின் தேர்வு முடிவுகள், புதிய சேர்க்கைக்கான அனுமதிக்கடிதங்கள், திருமண பத்திரிகைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தபால்கள், வங்கிகளுக்கான தபால்கள் மலை போல் குவிந்துள்ளன. முதியோர் பென்சன் தொகைக்கான மணியார்டர்களும் தேங்கி கிடக்கின்றன.

No comments: