சேலம் அங்கம்மாள் காலனி மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை, அபகரித்ததாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 13 பேர் மீது, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்புக் குழு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அது போல பிரிமியர் ரோலர் மில் வழக்கிலும், வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலம் அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அ.தி.மு.க., அரசு பொய் வழக்கு போட்டிருக்கிறது என்றும் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த போதிலும் முதலில் விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்று நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டிருந்தார்.
மேலும் அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவர் தொடர்ந்து 3 தினங்கள் போலீஸ் காவலிலேயே இருப்பார்.
இதையடுத்து இன்று காலை 10 மணி அளவில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜரானார்.
அங்கு, ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அதனால் பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக, முன்னெச்சரிக்கை கருதி பஜார் பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
வீரபாண்டி ஆறுமுகம் இன்னும் 3 தினங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுவார். 6 மணி நேரத்துக்கு ஒருமுறை அவர் உடல்நிலையைப் பரிசோதித்து சிகிச்சை வழங்க 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அவரிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிச்சை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். விசாரணை விவரங்களை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வர்.
6 மணி நேரத்துக்கு ஒருமுறை அவரது உடல்நிலையைப் பரிசோதித்து சிகிச்சை வழங்க 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவரை சேலம் 5வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அப்போது அவர் ரூ. 25,000 சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து வெளியில் வரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment