Sunday, April 24, 2011

குரூப் -2 தேர்வு தள்ளிவைப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த டிசம்பர் மாதம் குரூப் -2 தேர்வை அறிவித்தது.

இதில், உதவி வணிக வரி அலுவலர், சப்&ரிஜிஸ்டர் கிரேடு 2, உதவி தொழிலாளர் ஆய்வாளர், நகராட்சி கமிஷனர் (கிரேடு 2), பைனான்ஸ் அசிஸ்டென்ட் ஆபிசர், டிஎன்பிஎஸ்சி அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர், ஜுனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபிசர், கோ-ஆப்ரெட்டிவ் சொஸைட்டி சீனியர் இன்ஸ்பெக்டர், ஜூனியர் கோ-ஆப்ரெட்டிவ் ஆடிட்டர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட 37 பதவிகள் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் 4,384 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 10 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கிடையில் இந்த குரூப்-2 தேர்வு நடைபெறும் அதே நாளில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தும் பட்டதாரிகளுக்கான போட்டி எழுத்து தேர்வு மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தகுதி (ஸ்லெட்) தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

எனவே, அன்றைய தினத்தில் நடக்க இருந்த குரூப்-2 தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று பட்டதாரிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஏற்று குரூப்-2 தேர்வு தேதியை தள்ளி வைத்துள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணியாளர் தேர்வாணையக் குழுமம் (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மற்றும் ஸ்லெட் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வேண்டுகோளின் அடிப்படையில், அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான (குரூப்-2) போட்டி தேர்வு ஜூன் 19ம் தேதிக்கு பதிலாக, ஜூலை 3ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: