Sunday, June 19, 2011

ஸ்டாலின் மகள் நடத்தும் காஸ்ட்லியான நர்சரி ஸ்கூல்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை நடத்தும் நர்சரி ஸ்கூல்தான் சென்னையிலேயே மிகவும் காஸ்ட்லியானது என்ற பெயரைப் பெற்றுள்ளது.

சென்னை வேளச்சேரியில் முன்பு ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த வீட்டை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலிசெய்து விட்டார். தற்போது அந்த வீட்டில், அவருடைய மகள் செந்தாமரை நடத்தும் சன்ஷைன் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூல் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது.

நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி பரிந்துரைத்துள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தில், இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வருடத்திற்கு ரூ. 24,000 கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு.

சென்னையில் உள்ள நர்சரி பள்ளிகளிலேயே மிக அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக செந்தாமரையின் பள்ளிக்கூடம் இதன் மூலம் உருவெடுத்துள்ளது. காரணம், வேறு எந்தப் பள்ளிக்கும் இவ்வளவு அதிக கட்டணம் பரிந்துரைக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துக் கூறிய தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், அதேசமயம், சிலபெரிய தனியார் பள்ளிகளுக்கு, உயர் நிலை வகுப்புகளுக்கு வெறும் ரூ. 4050 கட்டண உயர்வைத்தான் ரவிராஜ பாண்டியன் கமிட்டி அளித்துள்ளது.

ஒரு நர்சரிப் பள்ளிக்கு ரூ. 24,000 கட்டண உயர்வை அளித்துள்ள இந்தக் கமிட்டி, உயர் நிலை வகுப்புகளுக்கு ரூ. 4050 என கட்டணம் நிர்ணயித்திருப்பது மிகவும் பாரபட்சமானது. இது போக்கப்பட வேண்டும் என்றார்.

No comments: