மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதியமைச்சர் அமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள தேவையால் அதிகரித்து வரும் இறக்குமதியின் காரணமாக, இறக்குமதித் வரி மூலம் இந்திய அரசுக்கு கிடைத்து வரும் வருவாய் கிட்டத்தட்டஇரட்டிப்பாகியுள்ளது என்றார்.
மேலும் ,2009-10ஆம் ஆண்டில் தங்கம் இறக்குமதியின் மீது விதிக்கப்பட்ட சுங்கத் வரியால் ரூ.1,567.64 கோடி வருவாய் கிடைத்தது என்றும், 2010-11ஆம் ஆண்டில் இது ரூ.2,553.52 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகத் தங்கப் அமைப்பின் மதிப்பீட்டின் படி, சீனாவிற்குப் பிறகு இந்தியாவே அதிகமாக தங்கம் இறக்குமதி செய்வதாகவும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்த விலையை விட, தங்கத்தின் விலை 78.11 விழுக்காடு உயர்ந்துள்ளது என்றும், வெள்ளியின் விலை இதே காலகட்டத்தில் 152.79 விழுக்காடு உயர்ந்துள்ளது அதே போல், 2008 ஏப்ரல் 1ஆம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.11,656 ஆக இருந்தது.
2011 மார்ச் 31ஆம் தேதி ரூ.20,760 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment