பாதஹஸ்தாசனம்.
செய்முறை:
நேராக நிமிர்ந்து நில்லுங்கள். இரண்டு கால்களும் சேர்ந்திருக்கட்டும். இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கி, அப்படியே குனிந்து தரையை தொடுங்கள். முழங்கால்கள் வளையலாகாது. உங்களின் தலைப்பகுதி, இலகுவாக தொங்கட்டும். இப்படியாக இயல்பான சுவாசத்தில், 5 தடவை செய்யவும்.
பயன்கள்:
* இடுப்பு, மூத்திரக்காய்கள், சிறுகுடல், பெருங்குடல், விந்துப்பை போன்றவை நன்கு இயங்கி, நோய்களை விரட்டும்.
* பெண்களுக்கு மாதவிடாய் தொல்லை, கர்ப்பப்பை கோளாறு நீங்கும். கால்கள் பலம்பெறும்.
* இடுப்பின் மேற்புற பகுதி பாதியாய் மடங்குவதால் இருதயம், நுரையீரல், தலை உறுப்புகளுக்கு, குறிப்பிடத்தக்க பலன் கிட்டும்.
பரிவர்த்தன திரிகோணாசனம்.
செய்முறை:
இரு காலையும் பக்கவாட்டில் 3 அடி தூரம் அகட்டி வையுங்கள். இரு கைகளையும் தோள் பட்டைக்கு முன்பாக உயர்த்தவும். அப்படியே முன்னோக்கி குனிந்து, வலதுகையால் இடதுகால் கட்டைவிரலைத் தொடவும். இப்போது உங்களின் இடதுகை செங்குத்தாக மேல்நோக்கி உயர்ந்திருக்கட்டும்.
தலையை அப்படியே பின்னோக்கி திருப்பி, இடதுகை கட்டைவிரலை பாருங்கள். அடுத்தபடியாக-இடதுகையால், வலது காலின் விரல்களைத் தொடவும். இப்போது உங்களின் கண்கள், வலதுகை கட்டைவிரலை பார்த்திருக்கட்டும்.
பயன்கள்:
கால் நரம்புகள் வலுப்பெறும். ஊளைச்சதை குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அகலும். பக்கவாதம் பக்கத்தில் வராது. உடம்பு கட்டுறுதியாகும். செரிமானகோளாறு நீங்கும். மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
வீராசனம்.
செய்முறை:
வலதுகாலை 2 அடி தூரம் முன்னோக்கி வையுங்கள். இதில் உங்களின் ஒட்டுமொத்த உடல் எடையும் குவிந்திருக்கட்டும். இரு கைகளும் தலை மேல் குவிந்திருக்கும் நிலையில், உடம்பை மட்டும் அப்படியே முடிந்தவரையில் பின் னோக்கி சாய்க்கவும். பின்னங்கால்கள் வளையலாகாது. அடுத்தபடியாக இடதுகாலை முன் வைத்து, இதேபோல செய்யவும்.
பயன்கள்:
தொடைச்சதை குறையும். அடிவயிறு வலுப்பெறும் ஜனன உறுப்புகள் நன்கு இயங்கும். பெண்களுக்கு, மகப்பேறுக்கு பின் வரும் அடிவயிற்று சதை குறையும். செரிமான கோளாறு, மலச்சிக்கல் நீங்கும். ஆண்களுக்கு விந்து கெட்டிப்படும். உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.
மருந்து-மாத்திரை தேவையிராது. நீடித்த- திருப்தியான தாம்பத்திய உறவை கைவரப் பெறுவீர்கள். ஓட்டப்பந்தய வீரர்களுக்கு தேவையான நீண்டநேர உழைப்புத்திறனை பெற வீராசனம் உதவும்.
No comments:
Post a Comment