Sunday, August 7, 2011

விலைவாசி உயர்வை எதிர்த்து 3 லட்சம் பேர் திரண்டனர் ; இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் .

விலைவாசி உயர்வை எதிர்த்து இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம்;    3 லட்சம் பேர் திரண்டனர்

இஸ்ரேல் நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் குறைந்து விட்டது. எனவே, அன்றாட வாழ்க்கையை நடத்த பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று போராட்டம் தீவிரம் அடைந்தது. தலைநகர் டெல்அவிவ், ஜெருசலேம் மற்றும் பல நகரங்களில் நேற்று பொது மக்கள் திரண்டனர். வீதிகளில் இறங்கி பேரணி நடத்தினார்கள். டெல்அவிவ் நகரில் 2 லட்சம் பேரும், ஜெருசலேமில் 30 ஆயிரம் பேரும் பங்கேற்றனர். இவை தவிர மற்ற நகரங்களிலும் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

நாடு முழுவதும் மொத்தம் 3 லட்சம் பேர் திரண்டு போராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே விலை வாசியை குறைக்க தீவிர நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு உறுதி அளித்துள்ளார். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேலிலும் பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: