Sunday, August 7, 2011

ஒரு மரம் 20 கிலோ கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கி அழிக்கிறது - அப்துல்கலாம் .

கடல் பாசிகளில் இருந்து பயோடீசல் தயாரிக்க வேண்டும்:    அப்துல்கலாம் யோசனை

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கல்வி நிறுவனங்கள் மாணவ,மாணவிகளின் ஆராயும் மற்றும் சிந்திக்கும்திறனை வளர்க்க வேண்டும். நாம் எல்லோரும் உழைப்பின் மூலம்தான் நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும்.

ஒரு மரம் 20 கிலோ கார்பன்டை ஆக்ஸைடை ஓராண்டுக்கு உள்வாங்கி அழிக்கிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் 10 மரங்கள் நட்டு அதைப்பாதுகாத்தால், 10 பில்லியன் மரங்களை நாம் நடுவோம் என்ற இலங்கை வெகுவாக அடைய முடியும். அவ்வாறு 10 பில்லியன் மரங்களை நாம் நட்டால் மாறி வரும் தட்ப வெப்ப சூழலை சமாளித்து நமது எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த இயலும்.

தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான டன் நிலக்கரியை கொண்டு இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் அதிகம் உள்ளன. தூத்துக்குடி பகுதி சூரிய ஒளி மின் தயாரிப்புக்கு ஏற்ற இடம். எனவே இங்கு சூரிய ஒளி மின்சார பூங்கா அமைக்க வேண்டும்.

கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்த வேண்டும். கடல் பாசிகளில் இருந்து பயோ டீசல் தயாரிக்க வேண்டும். இவற்றின்மூலம் கார்பன் சமநிலை பகுதியாக இப்பகுதியை மாற்ற முடியும் என்றார்.

No comments: