Monday, August 8, 2011

அணு பொருள் பற்றிய ஹிக்சின் கோட்பாட்டிற்கு அடுத்த வருட இறுதிக்குள் தீர்வு.



ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ். இவர் கடந்த 1964-ம் ஆண்டு, இயற்பியலின் ஸ்டாண்டர்டு மாடல் என்ற பகுதியை அடிப்படையாக கொண்டு ஓர் அணுவிற்கு நிறையை தரும் கண்ணுக்கு புலப்படாத பொருள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அந்த பொருள் அறிவியல் உலகில் கடவுள் பொருள் (காட் பார்டிகிள்) என அழைக்கப்படுகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட தியரியை, செய்முறை விளக்கத்தின்படி செயல்படுத்திட கடந்த 2008ல் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையே பூமியில் 300 அடி ஆழத்தில், அணு துகள்களை இரு கற்றைகளாக ஒளியின் வேகத்திற்கு ஈடாக அதிக சக்தி வாய்ந்த காந்தங்களின் வழியே பாய்ச்சினர். பின்னர் அவை ஒன்றுடன் ஒன்று மோதச்செய்யப்பட்டன. ஆனால் இச்சோதனையில் ஹீலியம் கசிவு மற்றும் பிற காரணங்களால் ஆய்வு தடைபட்டது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

தற்போது, ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் ரால்ப் & டையடர் ஹியூர், "இது பற்றி அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான தீர்வினை நெருங்கியுள்ளோம். அடுத்த வருட இறுதிக்குள் ஹிக்சின் தியரிக்கு சரியான விடை கிடைத்து விடும் என்றார்.

இதனால் அண்டத்தில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விண்வெளியின் கருப்பொருள் ஆகியவற்றுக்கு விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: