Tuesday, August 9, 2011

எச்.ஐ.வி. பாதிப்பை 15 நிமிடத்தில் கண்டறிய புதிய கருவி.



அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிவதற்காக பிளாஸ்டிக்கால் ஆன கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி 100 சதவீதம் துல்லியமாக செயல்படுவதுடன் 15 நிமிடங்களில் முடிவை தெரிவித்து விடுகிறது. இதற்காகும் செலவும் மிக குறைவாகும்.

எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளதா? என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. அதற்காக பல நாட்கள் காத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் பயமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. தற்போது அதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை.

ஏனெனில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை அறிய முடியும். “எம் சிப்” மூலம் இதை கண்டறிய முடியும். இது “கிரீடிட்” கார்டு போன்று இருக்கும். அதில் ரத்தம் செலுத்துப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதன்மூலம் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். எய்ட்ஸ் நோய் மட்டுமின்றி பால்வினை நோய் பாதித்துள்ளதா எனவும் தெரிந்து கொள்ளலாம்.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கிசாலி, சுவாண்டா நகரங்களில் இந்த “எம் சிப்” மூலம் எய்ட்ஸ் பரிசோதனை நடத்தினார்கள். அதில் 100 சதவீதம் பேரிடம் “எய்ட்ஸ்” நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒரு “சிப்”பின் விலை ரூ.45தான். இதை எங்கும் எளிதாக எடுத்து செல்ல முடியும். இந்த பரிசோதனையை கர்ப்பிணி பெண்களிடம் நடத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments: