Tuesday, August 9, 2011

அச்சம் தவிருங்கள்... இந்தியா எதையும் சமாளிக்கும்! - பிரணாப்.



அமெரிக்க பொருளாதார பிரச்னைகள் காரணமாக எழுந்துள்ள அச்சத்தை தவிர்க்குமாறும், எதையும் சமாளிக்கும் அளவு இந்தியப் பொருளாதாரம் உறுதியாக உள்ளதாகவும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்வதேச கடன் தர வரிசையில் அமெரிக்கா வீழ்ச்சியடைந்துள்ளதால், அதன் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இன்றும் இந்த வீழ்ச்சி தொடர்ந்தது.

இன்னொரு பக்கம் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இந்த மோசமான மாறுதல்கள் இந்தியாவை எந்த அளவு பாதிக்கப் போகிறதோ என்ற கவலை எழுந்துள்ளது. இந்தக் கவலையைப் போக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் இன்று சில விளக்கங்களையும்உறுதியையும் அளித்தது.

இந்தியாவின் அடித்தளம் உறுதியாக உள்ளதாகவும், பாதிப்புகளை எதிர்கொள்வதில் இதர நாடுகளைவிட இந்தியா வலுவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிகழ்ந்துவரும் சமீபகால நிகழ்வுகள் உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பது உண்மைதான். குறிப்பாக மூலதன இடப்பெயர்வு போன்றவை சற்றே பாதிக்கக் கூடும். 2008-ம் ஆண்டு இதை விட மோசமான கட்டத்தை வெற்றிகரமாக கடந்து வந்தது இந்தியா. முன்னிலும் அதிவேக வளர்ச்சியை கடந்த ஆண்டு சந்தித்தது நினைவிருக்கலாம்.

அந்த வகையில் இந்தியா இன்றுள்ள நெருக்கடியையும் தாங்கும். நாட்டின் வளர்ச்சி அப்படியே உள்ளது. அதன் அடித்தளம் மிகவும் உறுதியானது. சிக்கலான தருணங்களில் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்வதில் மற்ற நாடுகளைவிட நாம் சிறந்த இடத்தில் இருக்கிறோம்.

No comments: