
1996-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு பயின்ற மாணவன் நாவரசு. அவனது சீனியரான ஜான்டேவிட் என்ற மாணவன் நாவரசுவை ராகிங் செய்து, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு படுகொலை செய்து, தலையை துண்டித்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பஸ்சில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான்டேவிட் கைது செய்யப்பட்டான்
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றம் அன்று வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
மாணவர் நாவரசு கொலை வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதி மன்றத்தின் செயல்பாடு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள்அதிருப்தி தெரிவித்தனர்.
வழக்கை சரியாக விசாரிக்காமல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என்றும் ஜான்டேவிட்டுக்கு கடலூர் நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர்
இட்டை ஆயுளை, உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேலும் ஜான்டேவிட் உடனடியாக கடலூர் சிறைச்சாலை கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைய வேண்டும் என்று்ம் உத்தரவிட்டனர்.
இத் தீர்ப்பினை அடுத்து ஜான்டேவிட்டை பிடிக்க கடலூர், சிதம்பரம் போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
ஜான்டேவிட் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாக தெறியவருகிறது.
உச்சநீதி மன்ற மேல்முறையீட்டிற்கு இடைப்பட்ட காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பாஸ்போர்ட் பெற்று ஜான்டேவிட் ஆஸ்திரேலியா சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அங்கு அவன் கிறித்துவ மதபோதகராக பணியாற்றி வருகிறான். என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக போலீஸ் ஜான்டேவிட்டின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கவும், எந்த நாட்டு விமான நிலையத்தில் அவன் இறங்கினாலும் கைது செய்திடவும், இன்டர்போல் போலீஸ் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
No comments:
Post a Comment