Thursday, April 21, 2011

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான்டேவிட், சிவகங்கையில் பாதிரியாராக உள்ளாரா? உளவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற  ஜான்டேவிட், சிவகங்கையில்  பாதிரியாராக உள்ளாரா?; உளவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஜான்டேவிட்டுக்கு கடலூர் செசன்சு கோர்ட்டு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்தது.

மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைக்கும்படியும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஜான்டேவிட்டை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமறைவாகிவிட்ட ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்று விட்டதாகவும், அங்கு அவர் பாதிரியாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தலைமறைவாக இருக்கும் ஜான்டேவிட் சிவகங்கை மாவட்டத்தில் பதுங்கி இருந்து பாதிரியாராக இருப்பதாக உளவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நேற்று உளவு பிரிவு போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் சல்லடை போட்டு தேடிபார்த்தனர். அவர் எந்த ஊரில் உள்ளார்? எங்கு பாதிரியாராக பணியாற்றி வருகிறார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


No comments: