Thursday, April 21, 2011

ஜான் டேவிட் - தகவல்களை சேகரிக்க, இரண்டு தனிப்படைகள்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு. இவரை, 1996ல், சகமாணவர் ஜான் டேவிட் கொலை செய்தார். கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில், ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


ஜான் டேவிட், ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ததன் பேரில், விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. தற்போது, கடலூர் செஷன்ஸ் கோர்ட் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தது.


இது குறித்து கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் கேட்டபோது, "இந்த வழக்கில் ஜான் டேவிட்டிற்கு கடலூர் கோர்ட் அளித்த தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதற்கான உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை.

இருந்தாலும் ஜான் டேவிட் தற்போது எங்குள்ளார் என்பது குறித்த தகவல்களை சேகரிக்க அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


கோர்ட் உத்தரவு கிடைத்த பின் ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

உச்சநீதி மன்ற மேல்முறையீட்டிற்கு இடைப்பட்ட காலத்தில்
செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்பின் அடிப்படையில் பாஸ்போர்ட் பெற்று ஜா‌ன்டே‌வி‌‌ட் ஆஸ்திரேலியா சென்று விட்டதாக கூறப்படுகிறது.

நக்கீரன்

No comments: