
பாலாறு உள்பட முக்கிய ஆறுகளில் “பொக்லைன்” எந்திரம் மூலம் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் காரணமாக குவாரிகளில் மணல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனவே வெளிச்சந்தையில் மணல் விற்பனை பலமடங்கு உயர்ந்தது. மணல் விற்பனையில் இடைத்தரகர்கள் ஈடுபடுவதால் மணல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் கூறப்பட்டது.
மணல் விலையை குறைக்கவும், தட்டுப்பாடு இல்லாமல் அரசு விலைக்கு மணல் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பொதுப்பணித்துறை மூலம் அரசு மணல் குவாரிகளை திறந்து மணல் விற்கும் பணியை தொடங்கியுள்ளது. மணல் விற்பனையில் இடைத்தரகர்கள் புகுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஒரு யூனிட் மணல் ரூ.680 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. மணல் தேவைப்படுகிறவர்கள் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். அரசு மூலம் மீண்டும் மணல் விற்பனை நடைபெறுகிறது. இடைத்தரகர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மணல் கடத்தலில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எனவே மணல் விலை வெளிமார்க்கட்டில் விரைவில் குறையும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment